search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கேழ்வரகு மாம்பழ ஸ்மூத்தி
    X
    கேழ்வரகு மாம்பழ ஸ்மூத்தி

    கேழ்வரகு மாம்பழ ஸ்மூத்தி

    எலும்புக்கு உறுதியைத் தரும் கேழ்வரகில் கால்சியமும் மாம்பழத்தில் பீட்டா கரோட்டினும் அதிகம் உள்ளன. நார்ச்சத்தும் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனை தவிர்க்கப்படும்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 5 டேபிள்ஸ்பூன்
    மாம்பழம் - 1
    தயிர் - ஒரு கப்
    உப்பு - ஒரு சிட்டிகை
    பால் - கால் கப்.

    கேழ்வரகு மாம்பழம்

    செய்முறை:

    மாம்பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். சிறிது மாம்பழ துண்டுகளை தனியாக எடுத்து வைக்கவும்.

    ராகி மாவை ஒரு டம்ளர் நீரில் கரைத்து கொதிக்கவைத்து கஞ்சியாகத் தயார் செய்யவும்.

    இதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கலக்கவும்.

    மாம்பழத் துண்டுகள், தயிர், ஆறவைத்த ராகி கஞ்சி, பால் சேர்த்து மிக்ஸியில் அடித்து குளிரவைக்கவும்.

    கண்ணாடி டம்ளரில் குளிர்ந்த கலவையை ஊற்றி மாம்பழத் துண்டுகள் சேர்த்துப் பரிமாறவும்.

    சத்தான சுவையான கேழ்வரகு மாம்பழ ஸ்மூத்தி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×