search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    முருங்கை டீ
    X
    முருங்கை டீ

    சர்க்கரை நோயை விரட்டும் முருங்கை டீ

    முருங்கை இலையினுடைய இலையை உலர்த்தி, பொடி செய்து அதை கிரீன் டீ போல, டீ போட்டுக் குடித்துக் கொள்ளலாம். இந்த டீயை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    முருங்கை இலையினுடைய இலையை உலர்த்தி, பொடி செய்து அதை கிரீன் டீ போல, டீ போட்டுக் குடித்துக் கொள்ளலாம். ஆனால் இந்த பவுடரை ஒரு நாளைக்கு அரை அல்லது ஒரு ஸ்பூன் அளவுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

    தேவையான பொருட்கள்


    முருங்கைக்கீரை பொடி - ஒரு தேக்கரண்டி ,
    கிரீன் டீ பொடி - ஒரு தேக்கரண்டி ,
    புதினா இலைகள் - 4,
    எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி,
    வெல்லம் - 1  தேக்கரண்டி.

    முருங்கை டீ

    செய்முறை

    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் முருங்கைக்கீரை பொடி, கிரீன் டீ பொடி, புதினா இலை, வெல்லம் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

    பின்னர் இந்த டீயை வடிகட்டி எலுமிச்சை சாறு கலந்து பருகவும்.

    சூப்பரான முருங்கை டீ ரெடி.

    குறிப்பு: டயட்டில் இருப்பவர்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி குடிக்கலாம். கர்ப்பிணிகள் இதனை குடிப்பதை தவிர்க்க வேண்டும். நீரிழிவு, இரத்த அழுத்தம், தைராய்டு போன்ற உடல் உபாதைகளுக்கு மருந்துகளை சாப்பிட்டு வந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி குடித்து வரலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×