search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கோங்குரா தொக்கு
    X
    கோங்குரா தொக்கு

    அருமையான கோங்குரா தொக்கு

    சாதம், சப்பாத்தி என்று எல்லாவற்றுடனும் தொட்டுக்கொள்ள கோங்குரா தொக்கு ஜோராக இருக்கும். இன்று இந்த தொக்கு செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோங்குரா (புளிச்ச கீரை) - 2 கட்டு
    கடலைப்பருப்பு - ஒரு மேஜைக்கரண்டி
    வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
    காய்ந்த மிளகாய் - 20
    புளி - லுமிச்சை அளவு
    சீரகம் - ஒரு தேக்கரண்டி
    நல்லெண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    புளிச்ச கீரை

    செய்முறை:

    கோங்குரா (புளிச்ச கீரை) இலைகளை மட்டும் கிள்ளி நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு கடலை பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும்.

     இவை நன்றாக ஆறியதும மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.

    மீண்டும் வாணலியில் எண்ணெய் விட்டு கோங்குராவை நன்கு சுருண்டு வரும் பதம் வரை வதக்கவும்.

    கோங்குரா ஆறியதும் புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.

    இறுதியாகப் பொடித்து வைத்துள்ளவற்றைச் சேர்த்து ஒரு சுற்று சுற்றி இறக்கிவிடவும்.

    சூப்பரான கோங்குரா தொக்கு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×