search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நார்த்தங்காய் சாதம்
    X
    நார்த்தங்காய் சாதம்

    புளிப்பும், கசப்பும் நிறைந்த நார்த்தங்காய் சாதம்

    நார்த்தங்காயை கொண்டு கலவை சாதம் செய்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். அதிலும் இது புளிப்பாக மட்டுமின்றி லேசாக கசப்பாகவும் இருக்கும்.
    தேவையான பொருட்கள்:

    சாதம் - 3 கப்
    நார்த்தங்காய் - 1 (பெரியது மற்றும் சாறு எடுத்துக் கொள்ளவும்)

    தாளிப்பதற்கு...

    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
    வேர்க்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
    கடுகு - 1 டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    வரமிளகாய் - 4
    கறிவேப்பிலை - சிறிது
    பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    நார்த்தங்காய் சாதம்

    செய்முறை:

    முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களில் பெருங்காயத் தூள் வரை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக தாளிக்க வேண்டும்.

    பின்னர் அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

    பின்பு வாணலியை அடுப்பில் இருந்து இறக்கி, நார்த்தங்காய் சாற்றினை சேர்த்து நன்கு கிளறி, பின் சாதத்தை சேர்த்து நன்கு பிரட்டினால், நார்த்தங்காய் சாதம் ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×