search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அரேபியன் சிக்கன் மண்டி பிரியாணி
    X
    அரேபியன் சிக்கன் மண்டி பிரியாணி

    அரேபியன் சிக்கன் மண்டி பிரியாணி

    பிரியாணி என்றால் அனைவருக்கும் பிடிக்கும். இன்று அரேபியன் சிக்கன் மண்டி பிரியாணியை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சிக்கன் எலும்புடன் - 500 கிராம் (1 பெரிய துண்டு),
    வெங்காயம் - 1
    தக்காளி - 1,
    பச்சை மிளகாய் - 1,
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்,  
    பிரியாணி இலை - 3,
    நெய் - 1 டீஸ்பூன்,
    ஏலக்காய் - 2,
    பட்டை - 2,
    லவங்கம் - 1,
    மிளகு -  1 டீஸ்பூன்,
    ஆலிவ் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்,
    வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,  
    உப்பு - தேவைக்கு.
    பாஸ்மதி அரிசி - 2 கப்,
    தண்ணீர் - 4 கப்.

    மண்டி பொடி செய்யத் தேவையான பொருட்கள் :

    ஏலக்காய் - 1 டேபிள் ஸ்பூன்,
    லவங்கம் - 1 டேபிள் ஸ்பூன்,
    முழு மிளகு - 1/2 டேபிள் ஸ்பூன்,
    இஞ்சி பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்,
    பிரியாணி இலை - 2.

    அரேபியன் சிக்கன் மண்டி பிரியாணி

    செய்முறை

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றாமல் மண்டிக்கு தேவையான பொருட்களை மிதமான தீயில் வறுத்து எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.

    அரிசியை கழுவி விட்டு 20 நிமிடம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி விட்டு, தவாவில் 10-15 நிமிடம் ஆலிவ் ஆயில் ஊற்றி அரிசியை போட்டு வறுத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி அதில் பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, மிளகு சேர்த்து கிளறவும்.

    பின் அதில் தக்காளி மற்றும் பச்சை மிளகாயை அரைத்து அதில் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

    பின் அதில் சிக்கன், மண்டி பொடி (முக்கால் பாகம் சேர்த்துவிட்டு கால் பாகம் வைக்கவும்) 4 கப் தண்ணீர் ஊற்றி 10-15 நிமிடம் வேக வைக்கவும்.

    பின் அதில் உள்ள சிக்கனை தனியாக எடுத்து வைக்கவும்.

    அடுத்து இதில் வறுத்த வைத்துள்ள அரிசியினை சேர்த்து நன்கு வேகவிடவும்.

    வெந்ததும் சாதத்தின் நடுவில் ஒரு கிண்ணத்தில் நெய்யை ஊற்றி, அதில் கறித்துண்டு (Charcoal hot) ஒன்று போட்டு மூடி வைக்கவும்.

    அதன் பிறகு மீதி உள்ள மண்டி பொடி மற்றும் வெண்ணெயை வேகவைத்துள்ள சிக்கன் மேல் தடவி oven-ல் 20-25 நிமிடம் பொன்னிறமாக வேக வைக்கவும்.

    வேகவைத்த அரிசியுடன் சிக்கனை வைத்து சூடாக பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×