search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இட்லி முட்டை உப்புமா
    X
    இட்லி முட்டை உப்புமா

    குழந்தைகளுக்கு சத்தான இட்லி முட்டை உப்புமா

    முட்டையில் உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் அடங்கியுள்ளன. ஒரு முட்டையில் அதிகத் தரமான புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது. மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது.
    தேவையான பொருட்கள்

    இட்லி - 4
    கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு
    முட்டை - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு
    வெங்காயம் - 2
    கொத்தமல்லி - சிறிதளவு
    ப.மிளகாய் - 3
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு
    இஞ்சி - சிறிய துண்டு

    இட்லி முட்டை உப்புமா

    செய்முறை :

    முதலில் வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இட்லியை நன்றாக உதிர்த்து கொள்ளவும்.

    பின்னர் கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை போட்டு நன்றாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் அதில் முட்டையை உடைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கைவிடாமல் நன்றாக கிளறவும்.

    முட்டை நன்றாக வெந்து உதிரியாக வந்தவுடன் அதில் உதிர்த்து வைத்துள்ள இட்லியை போட்டு நன்றாக கிளறிக்கொண்டே இருக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறவும்.

    இட்லி நன்றாக உதிர்ந்து உதிரியாக வரும் அப்போது கொத்தமல்லியை போட்டு இறக்கவும்.

    சுவையான இட்லி முட்டை உப்புமா தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×