search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பார்லி உப்புமா
    X
    பார்லி உப்புமா

    பார்லியுடன் காய்கறிகள் சேர்த்து உப்புமா செய்வது எப்படி?

    டயட் இருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள், இதய கோளாறு உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் என அனைவரும் பார்லியை சாப்பிடலாம்.
    தேவையான பொருட்கள் :

    பார்லி - 1 கப்
    பெ.வெங்காயம் - 1
    மிளகாய், கேரட் - 1
    பீன்ஸ் - 100 கிராம்
    தண்ணீர் - 3 கப்
    இஞ்சி - 1 துண்டு
    கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லி  - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    பார்லி உப்புமா

    செய்முறை :

    வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி, கேரட், பீன்ஸ், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பார்லியை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

    அதைத்தொடர்ந்து வெங்காயம், இஞ்சி, மிளகாய் ஆகியவற்றை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட், பீன்ஸ் போன்றவற்றை சேர்த்து வதக்கவும்.

    கேரட், பீன்ஸ் நன்கு வதங்கியதும் பார்லியை கொட்டி வதக்கவும்.

    பின்பு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

    நன்கு கொதித்து பார்லி வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×