search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கார்ன் பாசிப்பருப்பு அடை
    X
    கார்ன் பாசிப்பருப்பு அடை

    சத்தான காலை டிபன் கார்ன் பாசிப்பருப்பு அடை

    காலை, மாலை வேளைகளில் சத்தான டிபன் சாப்பிட விரும்பினால் கார்ன் பாசிப்பருப்பு அடை செய்து ருசிக்கலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சோள மாவு - ஒரு கப்
    துவரம்பருப்பு - 2 கப்
    கடலைப்பருப்பு - ஒரு கப்
    உளுந்து - கால் கப்
    பயத்தம்பருப்பு - கால் கப்
    வரமிளகாய் - 10
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 50 மி.லி

    கார்ன் பாசிப்பருப்பு அடை

    செய்முறை


    பருப்பு வகைகளை 4 மணிநேரம் ஊறவைத்து வரமிளகாய், உப்பு சேர்த்து கொரகொரவென்று அரைத்து கொள்ளவும்.

    சோளமாவை தண்ணீரில் கரைத்து பருப்பு கலவையுடன் சேர்த்து கலக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும மாவை கனமான அடையாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்துவிடவும்.

    சத்தான கார்ன் பாசிப்பருப்பு அடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×