search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஓட்ஸ் பிடிகொழுக்கட்டை
    X
    ஓட்ஸ் பிடிகொழுக்கட்டை

    ஓட்ஸ் பிடிகொழுக்கட்டை

    டயட்டில் இருப்பவர்கள் ஓட்ஸை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று ஓட்ஸில் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஓட்ஸ் - 1/2 கப்,
    கடுகு - 1/4 டீஸ்பூன்,
    பச்சைமிளகாய் - 1,
    உப்பு - தேவையான அளவு,
    எண்ணெய் - 1 டீஸ்பூன்.

    ஓட்ஸ் பிடிகொழுக்கட்டை

    செய்முறை :

    ஓட்ஸை கடாயில் போட்டு 5 நிமிடங்கள் வறுத்து அடுப்பை அணைத்து விட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்த பின்னர் பச்சைமிளகாயை போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் 1/2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

    தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் பொடித்த ஓட்ஸை போட்டு அடுப்பை சிறிய தீயில் வைத்து கிளறவும்.

    தண்ணீர் வற்றியவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

    ஆறியவுடன் பிடிகொழுக்கட்டைகளாக பிடித்து ஆவியில் 7 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

    சூடாக சட்னியுடன் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×