search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கம்பு - பப்பாளி அடை
    X
    கம்பு - பப்பாளி அடை

    சத்தான டிபன் கம்பு - பப்பாளி அடை

    தினமும் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று கம்பு, பப்பாளி துருவல் சேர்த்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பப்பாளிக்காய் துருவல் - அரை கப்,
    தேங்காய் துருவல் - கால் கப்,
    வெங்காயம் - 2,
    கம்பு மாவு - 2 கப்,
    அரிசிமாவு - கால் கப்,
    பச்சை மிளகாய் - 2,
    உப்பு - தேவையான அளவு,
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    நல்லெண்ணெய் - தேவையான அளவு.

    அரைப்பதற்கு:


    துவரம் பருப்பு - ஒரு கைப்பிடி,
    முளைகட்டிய சுண்டல் - ஒரு கைப்பிடி,
    இஞ்சி - சிறுதுண்டு,
    பட்டை, கிராம்பு - 2,
    சோம்பு - ஒரு டீஸ்பூன்,
    மிளகு - ஒரு டீஸ்பூன்.

    கம்பு பப்பாளி அடை

    செய்முறை:

    வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஊறவைத்த துவரம் பருப்பு, முளைவிட்ட சுண்டல் இவற்றுடன் அரைக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பப்பாளி துருவல், தேங்காய் துருவல், கம்பு மாவு, அரிசி மாவு, ப.மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, உப்பு சேர்த்து தேவையான தண்ணீர்விட்டு அடை மாவுப் பதத்தில் கரைத்து கொள்ளவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சுவையான கம்பு - பப்பாளி அடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×