search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பாலக்கீரை சாதம்
    X
    பாலக்கீரை சாதம்

    மலச்சிக்கலை போக்கும் பாலக்கீரை சாதம்

    பாலக்கீரை உடலுக்கு வலுவூட்டும், மலச்சிக்கலைப் போக்கும். குளிர்ச்சியை தரும். குடல் நோய்களுக்கு நல்லது. இன்று பாலக்கீரையில் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    பாலக் கீரை - 2 கட்டு
    பாசுமதி அரிசி - 1 கப்
    மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
    தனியா தூள் - 1 ஸ்பூன்
    கிராம்பு, ஏலக்காய், பட்டை - 3 நம்பர்
    சின்ன வெங்காயம் - 1 கப்
    தக்காளி  - 1
    இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 4 நம்பர்
    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    வெந்தயம் - 1 ஸ்பூன்

    Palak rice

    செய்முறை

    பாலக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளி, சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசுமதி அரிசியை நன்றாக கழுவி 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு குக்கரில் அரிசியை போட்டு தேவையான தண்ணீர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து 1 விசில் வரும் வரை வேகவிடவும்.

    வெந்தயத்தை வாணலியில் சிவக்க வறுத்தெடுத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளித்த பின்னர் அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.
     
    அடுத்து அதில் பொடியாக நறுக்கிய பாலக்கீரையை அதில் சேர்த்து பச்சைவாசனை போகும் வரும் வரை வதக்கவும்.

    அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியாத் தூள் சிறிது உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.

    வதக்கிய பின்பு வேகவைத்த சாதத்தை அதில் சேர்த்து நன்கு கிளறி அதனுடன் அரைத்த வெந்தயத்தையும் சேர்த்து 5 நிமிடம் குறைந்த தணலில் வேக விடவும்.

    சுவையான பாலக் கீரை சாதம் தயார்.

    இதனுடன் கேரட், வெள்ளிரிக்காய், வெங்காய தயிர் பச்சடி செய்து சாப்பிடலாம் சுவையாக இருக்கும். 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×