search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ராகி உருளைக்கிழங்கு ஸ்டப்ஃடு தோசை
    X
    ராகி உருளைக்கிழங்கு ஸ்டப்ஃடு தோசை

    ராகி உருளைக்கிழங்கு ஸ்டப்ஃடு தோசை

    குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று கேழ்வரகுடன் உருளைக்கிழங்கு சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி மாவு, ராகி மாவு - தலா 100 கிராம்,
    உருளைக்கிழங்கு - 2,
    பெரிய வெங்காயம் - 1,
    பச்சை மிளகாய் - ஒன்று,
    கரம் மசாலாத்தூள் - - சிறிதளவு,
    பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு,
    கடுகு - கால் ஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    ராகி உருளைக்கிழங்கு ஸ்டப்ஃடு தோசை

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    ராகி மாவுடன் உப்பு, அரிசி மாவு சேர்த்து நன்றாக கலந்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் கடுகு, இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் மசித்த உருளைக்கிழங்குடன் சேர்க்கவும்.

    அதனுடன் கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து கிளறி இறக்கி வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசையாக ஊற்றி இருபுறமும் எண்ணெய் விட்டு, தோசையின் நடுவில் உருளைக்கிழங்கு மசாலா வைத்து இரண்டாக மடித்து பரிமாறவும்.

    அருமையான ராகி உருளைக்கிழங்கு ஸ்டப்ஃடு தோசை ரெடி.

    குறிப்பு: இதை ரோல் மாதிரியும் சாப்பிடலாம். கேரட் துருவல் சேர்க்கலாம். இதற்கு சைட் டிஷ் தேவை இல்லை.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×