search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    உணவும், மருத்துவமும்
    X

    உணவும், மருத்துவமும்

    • நோய்களில் இருந்து நம் உடலை காக்க உணவு முறைகள் அவசியம்.
    • வாரத்திற்கு ஒரு முறையாவது உண்ணாவிரதம் இருப்பது நல்லது.

    மனிதனுக்கு அடிப்படையான ஆதாரம், உணவு. சித்த மருத்துவ முறைப்படி வாதம், பித்தம் மற்றும் கபம் என்ற மூன்று கூறுகளும், அதேமாதிரி ஏழு உடல் கூறுகளும் எப்பொழுதும் சமநிலையில் இருக்க வேண்டும். உணவு தான் நம் உடலுக்கு ஆற்றலை கொடுப்பதோடு மலம், சிறுநீர் மற்றும் வியர்வை போன்ற கழிவுப் பொருளாகவும் மாறுகிறது. இந்த செயல்பாட்டில் எப்பொழுதும் சமநிலை இருந்தால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். இந்த சமநிலை மாறு பட்டால் உடல்நிலை நோய்களை உருவாக்க ஆரம்பித்து விடும். எனவே நோய்களில் இருந்து நம் உடலை காக்க உணவு முறைகள் அவசியம்.

    உணவு நன்றாக செரிமானம் அடைய வேண்டும் என்றால் வயிற்றில் பாதி பகுதியை காலியாக விட்டு விட வேண்டும். அதேபோல் வாரத்திற்கு ஒரு முறையாவது உண்ணாவிரதம் இருப்பது அல்லது ஒரு நாளைக்கு ஒரு முறையாவது உணவு சாப்பிடுவது செரிமான அமைப்புக்கு நல்லது. இது அஜீரணத்தை குறைக்கிறது.

    பழங்கள், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள், காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள், மீன், இறைச்சி போன்றவை நமது உணவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். மணி சம்பா போன்ற அரிசி வகைகள் நீரிழிவு நோயாளிகளுக்கும், ஜீரக சம்பா மற்றும் குந்திரமணி சம்பா வாத நோய்களுக்கும் நல்லது. அரிசி, கோதுமை, ஓட்ஸ் ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் கூழ்கள் மிகவும் நல்லது.

    சோயா, காலிஃபிளவர், பட்டாணி பருப்புகள், கிரீன் டீ போன்றவை மூட்டு அழற்சியை போக்குகிறது. இதயம், செரிமான அமைப்பு, முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், வயிற்றுக்கோளாறுகள் உள்ளவர்களுக்கு இது நல்லது.

    பாலில் காணப்படும் ஒரு வகை கொழுப்பு கீல்வாதத்தில் காணப்படும் மூட்டுகளில் வீக்கம் மற்றும் சேதத்தை தடுக்கிறது. இதில் காணப்படும் லினோலெனிக் அமிலம் அழற்சியை தடுக்கிறது. இரவில் பால், மோர் குடிப்பது வெப்ப உணர்வு, ரத்த சோகை, வயிற்று வலி போன்றவற்றை நீக்குகிறது. நெய்யை சேர்த்துக் கொள்வதும் நல்லது.

    ரத்த சோகை, பலவீனமாக இருத்தல், மனநல கோளாறுகள் போன்றவற்றுக்கு ஆட்டு இறைச்சி நல்லது. மனநல கோளாறுகள் மற்றும் காசநோய்க்கு முயல் இறைச்சியும் பரிந்துரைக்கப்படுகிறது. கோழி முட்டை வாதம் மற்றும் கபம் நோய்களுக்கு நல்லது.

    ஏலக்காய் வெப்பத்தை குறைத்து செரிமான சக்தியை அதிகரிக்கிறது. சீரக விதைகள் பசி ஏற்படுத்தும் தன்மையை அதிகரிக்கிறது. இஞ்சி கீல்வாதம் மற்றும் முடக்கு வாதத்திற்கு நல்லது. மேலும் கருப்பை புற்றுநோயை தடுக்கிறது. பூண்டு கொழுப்பின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. பெருங்காயம் குடற் புழுத்தொல்லை மற்றும் அஜீரணத்தை போக்க உதவுகிறது.

    வெந்தயம் பித்தத்தை குறைக்கிறது. மிளகு கபம் நோய்களை போக்குகிறது. காது கோளாறுகள், கல்லீரல் நோய்கள், அஜீரணம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, தோல் நோய்கள் போன்ற பல்வேறு நோய்களை சரி செய்கிறது.

    தவிர்க்க வேண்டியவை

    டால்டா, வனஸ்பதி போன்ற எண்ணெய் வித்துக்கள் தவிர்க்க வேண்டும். பலாப் பழம் ஆசைக்கு எடுத்துக்கொள்ளலாம். அளவுக்கு மீறி உண்ண வேண்டாம்.

    செம்மறி, மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியையும் தவிர்க்க வேண்டும். கோழியின் தோல் பகுதி வாத நோய்களை ஏற்படுத்துகிறது மற்றும் மூல நோயை அதிகரிக்க செய்கிறது. எனவே இதனை தவிர்ப்பது நல்லது.

    Next Story
    ×