என் மலர்

  ஆரோக்கியம்

  கல்லீரலை காக்கும் தக்காளி
  X

  கல்லீரலை காக்கும் தக்காளி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தக்காளிக்கு கல்லீரல் புற்றுநோயை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
  தக்காளியை நாம் பெரும்பாலான உணவுப் பதார்த்தங்களில் சேர்க்கிறோம். அதற்கு காரணம் அதில் இருக்கும் சத்துக்கள்தான். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தக்காளிக்கு கல்லீரல் புற்றுநோயை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் நுரையீரல், மார்பக மற்றும் பெருங்குடல் புற்றுநோயை கட்டுப்படுத்தும் சக்தி இருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது.

  இதயநோய், நீரிழிவு நோய் பாதிப்பில் இருந்தும் காக்கவும் உதவுகிறது. தக்காளியில் இருக்கும் லைகோபின் புற்றுநோய்க்கு எதிராக போராடும் வலிமை கொண்டதாக விளங்குகிறது. கல்லீரல் புற்றுநோயை தடுக்கவும் தக்காளி உதவுகிறது.

  இதுபற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட அமெரிக்காவின் டப்ட்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ஜியாங் டங் வாங், ‘‘தக்காளியை சமைத்தோ, ஜூஸாகவோ, சாஸாகவோ தயாரித்து பயன்படுத்தலாம். அதிலிருக்கும் லைகோபின் சிறந்த மருந்து பொருள் போல் செயல்படுகிறது’’ என்கிறார்.

  கொய்யா, தர்பூசணி, திராட்சை, பப்பாளி மற்றும் சிவப்பு குடைமிளகாய் போன்றவற்றிலும் லைகோபின் இருக்கிறது. எனினும் தக்காளியை ஒப்பிடுகையில் அவற்றில் லைகோபினின் அளவு குறைவாகவே இருக்கிறது. மேலும் தக்காளியில் வைட்டமின் இ, சி, தாதுக்கள், போலேட், பீனோலிக் கலவைகள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. அதனால் தினமும் தக்காளியை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  Next Story
  ×