search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    இனியாவது சைக்கிளுக்கு மாறுவோம்
    X

    இனியாவது சைக்கிளுக்கு மாறுவோம்

    • மனிதனை இந்த எந்திரங்கள் சோம்பேறி ஆக்கிவிட்டது.
    • உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன.

    அந்த காலத்தில் சைக்கிள் வைத்திருப்பவர்கள் தான் பெரிய மனிதர்கள். அதாவது பணக்காரர்கள் என்ற நிலை இருந்தது. ஆனால், இப்போது கார்கள், டூவீலர்கள் என்று போக்குவரத்து வசதி பெருகிவிட்டது. இதனால் சொகுசு ஒருபுறம் இருந்தாலும், அதனால் வெளிப்படும் கரியமில வாயுவால் ஏற்படும் பாதிப்புகள் கொஞ்சம், நஞ்சமல்ல.

    மேலும், மனிதனை இந்த எந்திரங்கள் சோம்பேறி ஆக்கிவிட்டது, அவர்களின் உடலில் நச்சுக்களை சேர்க்க வைத்து, கொல்ல ஆரம்பித்துவிட்டது. சைக்கிள் ஓட்டிய காலம் வரையில் மனிதனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இப்போது மருத்துவமனைகளுக்கு செல்லும் கூட்டத்தில் பெரும்பாலானவர்கள் வாகன ஓட்டிகள் தான் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    சைக்கிள் ஓட்டுவதால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன. இதனால் உடலுக்கு நன்மை ஏற்படுகிறது. சீராக சைக்கிளை ஓட்டுவதால், என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது தெரியுமா?

    * ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது.

    * இதய நோய் ஏற்படும் அபாயம் காணாமல் போகிறது.

    * மனதை திசைதிருப்பி பதற்றத்தை தணிக்க உதவுகிறது. சாலையில் பார்க்கும் காட்சிகளால் மன இறுக்கமும் தளர்கிறது.

    * ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரைக்கப்படுகிறது.

    * உடல் எடை சீராக்கப்படுகிறது.

    * தோளின் நிறம் மேம்படுகிறது.

    * உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

    சைக்கிளை ஓட்டுவதால் மேற்கண்ட பலன்கள் கிடைக்கின்றன என்று அமெரிக்க மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்காக தற்போது மேலை நாடுகளில் மக்களின் உடல் நலனை மேம்படுத்துவதுடன், போக்குவரத்தால் ஏற்படும் கார்பன் வெளிப்பாட்டை குறைப்பதற்காக சைக்கிள்களுக்கு பெருமளவில் வரியை குறைத்து அதன் விற்பனையை ஊக்குவித்து வருகின்றன.

    ஏராளமான நிறுவனங்கள் சைக்கிள் வாடகை கடைகளை நவீன முறையில் ஆரம்பித்துள்ளன. அதாவது நாம் வசிக்கும் இடத்தில் இருந்து சைக்கிளை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, செல்லும் இடத்தில் உள்ள கடையில் அதை ஒப்படைத்துவிட்டு, அதற்கான வாடகையை மட்டும் செலுத்திவிட்டு போய்க்கொண்டே இருக்கலாம்.

    இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் சைக்கிள் பரண்களுக்கு போய் நாட்களாகிவிட்டது. இனியாவது அதனை சுத்தம் செய்து பயன்படுத்த ஆரம்பிப்போம்.

    Next Story
    ×