என் மலர்
உடற்பயிற்சி
வஜ்ரா முத்ராவை (சசாங்கசனம்) தொடர்ந்து செய்து வந்தால் நீரிழிவு நோயினை கட்டுப்படுத்தலாம். மலச்சிக்கல் நீங்கும். வாயு சம்பந்தமான பிரச்சினைகள் நீங்கும்.
செய்முறை: விரிப்பில் நேராக உட்கார்ந்து இரு பாதங்களையும் நீட்டவும், பாதங்கள் இணைந்து இருக்கட்டும். உள்ளங்கைகளை புட்டத்திற்கு பக்கவாட்டில் தரையில் ஊன்றவும்.இடது காலை மடக்கி, இடது பாதத்தை இடது புட்டத்திற்கு கீழ் வைக்கவும், வலது காலை மடக்கி, வலது பாதத்தை வலது புட்டத்திற்கு கீழ் வைக்கவும். முழங்கால்கள் இணைந்திருக்க உள்ளங்கைகளை தொடையின் மேல் பாகத்தில் வைக்கவும்.முதுகு தண்டு நேராக இருக்கட்டும்.
வலது மணிக்கட்டை இடது கையினால் முதுகின் பின்புறம் பிடிக்கவும். மூச்சை வெளியிட்டு கொண்டே இடுப்பிலிருந்து முன்னுக்கு குனிந்து நெற்றி தரையை தொடுமாறு முழங்கால்களின் முன்னாள் வைக்கவும். பின்னர் இரு கைகளையும் முன்னுக்கு கொண்டு வரவும்.
மூச்சின் கவனம்: குனியும்போது வெளிமூச்சு. ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும் போது உள்மூச்சு.
உடல் ரீதியான பலன்கள்: காலிலுள்ள மூட்டு தசைகளை தளர்த்துகிறது. வயிற்றின் கீழ்ப்புற பகுத அதிக இரத்தஓட்டம் பெறுகின்றது. சிறுநீரகம் வலிமை அடையும். முதுகெலும்பு நெகிழ்வுத் தன்மை பெறும். தலைப்பகுதியில் இரத்தஓட்டம் மிகும். நினைவாற்றல் கூடும். பிட்யுட்டரி, பீனியல், தைராய்டு பாராதைராய்டு போன்ற சுரப்பிகள் தூண்டி விடப்படும். வாழ்நாளை அதிகரிக்கும். தாது பலவீனத்தை சீராக்கும்.
குணமாகும் நோய்கள் : அதிக இரத்த அழுத்தம், இடுப்பு, வாயுப்பிடிப்பு, இரைப்பை குடல் சம்பந்தமான கோளாறுகளுக்கு மிகவும் நல்லது. நீரிழிவு நோயினைக் கட்டுப்படுத்தும். மலச்சிக்கல் நீங்கும். வாயு சம்பந்தமான பிரச்சினைகள் நீங்கும்.
எச்சரிக்கை : தீவிர முழங்கால் வலி உள்ளவர்கள் கவனமாக செய்யவும். இரத்த அழுத்தம் உள்ளவர்கள், இடுப்பில் வாயுப்பிடிப்பு, கழுத்துவலி உள்ளவர்கள் மற்றும் இதய நோயாளிகள் இந்த ஆசனத்தைச் செய்யக் கூடாது.

இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் இடுப்பெலும்பு நன்கு உறுதியாகும். மேலும், கால் தசைகளை வலுப்படுத்தும். கைகளுக்கு உறுதி தரும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
செய்முறை
விரிப்பில் வலது பக்கத்தில் சாய்ந்து படுக்கவும். வலது முட்டிக்கை தரையில் படும்படி, வலது உள்ளங்கையால் தலையை தாங்கி கொள்ளவும். இடது உள்ளங்கை தரையில் படும்படி, நெஞ்சத்திற்கு அருகில் வைத்துக் கொள்ளவும். கால்களை நன்கு நீட்டி, நேராக வைத்துக் கொள்ளவும். இடது காலை மெல்ல மேலே தூக்கவும். காலை மேலே தூக்கியவாறு, வட்டமிடவும். பின் காலை கீழே கொண்டு வரவும். இவ்வாறு மற்றொரு பக்கம் திரும்பி வலது காலை மேலே தூக்கி, வட்டமிட்டு பின் கீழே கொண்டு வரவும். ஒரு பக்கத்தில் 5-6 முறை செய்யவும்.
பலன்கள்
இந்த ஆசனம் இடுப்பெலும்பை நன்கு உறுதியாக்கும். மேலும், கால் தசைகளை வலுப்படுத்தும். கைகளுக்கு உறுதி தரும்.
கவனம்
இடுப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு உகந்த ஆசனம் அல்ல

இந்த ஆசனம் செய்யும் போது வயிறு இறுக்கப்படுவதால், உடல் எடை குறையும். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
செய்முறை :
விரிப்பில் நிமிர்ந்த நிலையில் படுக்கவும். இரண்டு கால்களையும் மடக்க வேண்டும். கால்களுக்கு இடையே, சற்று இடைவெளி இருக்க வேண்டும். கைகளை பின்புறமாக கொண்டு சென்று, கழுத்தின் பக்கவாட்டில் சிறிது இடைவெளி விட்டு, உள்ளங்கை தரையில் படுமாறு வைக்க வேண்டும்.
உள்ளங்கைகளை அழுத்தியவாறு, மெதுவாக முதுகை உயர்த்தி, பின் தலையை உயர்த்த வேண்டும் (இந்த நிலையில் தலையை கீழே தொங்க விட வேண்டும்.). ஆழ்ந்த சுவாசத்திற்கு பின், மெதுவாக பழைய நிலைக்கு வர வேண்டும்.
வலுவிழந்த மணிக்கட்டு உள்ளோர், இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.
பலன்கள் :
நம் உடம்பிலுள்ள நரம்பு மண்டலம் பலமாகும்.
வயிறு இறுக்கப்படுவதால், உடல் எடை குறையும்.
அஜீரணக் கோளாறு சரியாகும்.
கைகள் மற்றும் மூட்டு வலுப்பெறும்.
பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

மன ஆரோக்கியத்திற்கு வழிவகை செய்யும் இந்த 8 வடிவ நடைபயிற்சியை எப்படி செய்யலாம்? அதனால் ஏற்படும் சிறப்பான நன்மைகள் என்ன? என்பதையே இங்கு தெரிந்து கொள்ளலாம்.
உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஊட்டச்சத்தான உணவுகள் சாப்பிடுவது, சரியான அளவான உடலுழைப்பு மற்றும் உடற்பயிற்சி செய்வது மிகவும் சிறந்த வழிகளாக இருக்கிறது. கடினமாக உடற்பயிற்சி செய்ய விரும்பாதவர்களும், உடலின் ஆரோக்கிய நிலையை மேம்படச் செய்யக்கூடிய ஒரு உடல் நல செயல்பாடாக நடைப்பயிற்சி இருக்கிறது. சமீப காலமாக இந்த நடைப்பயிற்சியில் புது வகையாக 8 வடிவ நடைபயிற்சி அதிக மக்களால் மேற்கொள்ளப்படுகிறது. நமது நாட்டின் சித்தர்கள் கண்டுபிடித்த இந்த 8 வடிவ பயிற்சி முறை மேலை நாடுகளுக்கு சென்று, “இன்பினிட்டி வாக்கிங்” என்ற பெயரில் நம் நாட்டிற்கே திரும்ப வந்துள்ளது. ஒட்டுமொத்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு வழிவகை செய்யும் இந்த 8 வடிவ நடைபயிற்சியை எப்படி செய்யலாம்? அதனால் ஏற்படும் சிறப்பான நன்மைகள் என்ன? என்பதையே இங்கு தெரிந்து கொள்ளலாம்.
எட்டு வடிவ நடைபயிற்சியை காலை 5 முதல் 6 மணி வரையான நேரத்திலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையான நேரத்திலும் மேற்கொள்வதே சிறந்தது. 18 வயதை தாண்டிய எவரும் இந்த எட்டு வடிவ நடை பயிற்சியை மேற்கொள்ளலாம்.
8 வடிவ நடை பயிற்சியின் போதே வயிறு காலியாக இருக்க வேண்டியது அவசியம். உணவு சாப்பிட்ட பிறகு 8 வடிவ நடைபயிற்சியை மேற்கொள்வதாக இருந்தால் உணவு சாப்பிட்டு குறைந்தது 3 முதல் 4 மணி நேரம் கழிந்த பின்பே இந்த எட்டு வடிவ நடை பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
நடைப்பயிற்சியின் போது பலரும் உடற்பயிற்சிக்கு ஏற்ற காலணிகளை அணிந்து செல்கின்றனர். ஆனால் இந்த எட்டு நடைப்பயிற்சியின் போது எந்த வகையான காலணிகளும் இல்லாமல் வெறும் கால்களில் இந்த நடைபயிற்சியை மேற்கொள்வதே முழுமையான பலன்களை கொடுக்கும். கால்களில் காயம் மற்றும் இன்ன பிற பிரச்சனைகள் உள்ளவர்கள் மட்டும் காலணி, ஷூ போன்றவற்றை அணிந்து இந்த நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.
உடலில் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் குறைந்தது ஆறு மாத காலத்திற்கு இந்த 8 வடிவ நடை பயிற்சி மேற்கொள்ளக் கூடாது. ஆறு மாத காலம் கழிந்ததும் மருத்துவரின் ஆலோசனை பெற்று எட்டு வடிவ நடை பயிற்சியை மேற்கொள்ளலாம். கர்ப்பிணி பெண்கள் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது தான் என்றாலும் கர்ப்ப காலத்தில் 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்ள கூடாது.
உயர் இரத்த அழுத்தம், இதய பிரச்சனைகள், சர்க்கரை நோய், நரம்பு பிரச்சனைகள், பக்கவாதம், சிறுநீரக பிரச்சனைகள், உயர் கொலஸ்ட்ரால் போன்றவற்றிற்கு மருந்து மாத்திரைகளை சாப்பிடுபவர், இந்த 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் முன் மருத்துவரிடம் கட்டாயம் ஆலோசனை பெற வேண்டும். 8 வடிவ நடைப்பயிற்சி எப்போதுமே வடக்கு, தெற்கு திசைகளில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். முதலில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி 15 நிமிட நேரம் எட்டு வடிவ நடை பயிற்சியை செய்ய வேண்டும். பிறகு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி எட்டு வடிவில் 15 நிமிட நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இந்த எட்டு வடிவ நடை பயிற்சி செய்வதற்கு மொத்தம் 30 நிமிடங்கள் மட்டுமே போதுமானதாகும்.
உடல் வலி, தலைவலி, செரிமான பிரச்சனைகள், தைராய்டு, உடல் பருமன், மலச்சிக்கல், ருமடாய்டு ஆர்த்ரிடிஸ் முழங்கால் வலி, போன்ற பல நோய்கள், பிரச்சனைகளால் அவதிப்பட்டவர்கள் 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொண்ட சில காலத்திலேயே அவை அனைத்தும் நீங்குவதை அனுபவபூர்வமாக உணரலாம். மேலும் 8 வடிவ நடை பயிற்சி மேற்கொள்வதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு வெகுவாக குறையும். அதிலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் காலை மற்றும் மாலையில் இந்த நடைப்பயிற்சியை மேற்கொண்டு வந்தால் ஒரே வருடத்தில் சர்க்கரை நோய் பிரச்சனையிலிருந்து விடுபடலாம் என கூறப்படுகிறது.
கழுத்து வலி, தோள்பட்டை வலி,முதுகு வலி, இடுப்பு வலி, முழங்கால் வலி, குதிகால் வலி போன்ற உடலின் வலிகள் கருப்பை பிரச்சனை, மன இறுக்கம், முதுகெலும்பு டிஸ்க் பிரச்சனைகள், ஒற்றைத் தலைவலி, எப்லிப்ஸி எனப்படும் கால் – கை வலிப்பு, இரத்த அழுத்த பிரச்சனை, தைராய்டு பிரச்சனை, சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள், ஆஸ்துமா, சைனஸ், மூல நோய்கள், தூக்கமின்மை, இதய நோய், நரம்பு கோளாறுகள், சிறுநீரக பிரச்சனைகள் போன்ற பல்வேறு உடல்நல குறைபாடுகளை 8 வடிவ நடைப்பயிற்சி குணமாக்கும்.
உயர் மற்றும் குறைந்தஇரத்த அழுத்தம் குறையும், காது கேட்கும் திறன் மேம்படும். பாத வெடிப்புகள் போன்றவை குணமாகும். முக்கியமாக இந்த பயிற்சியை தினமும் தவறாமல் செய்து வந்தால் இளமையான தோற்றத்தையும், இளைய வயதினரை போன்ற மன உற்சாகத்தையும் தக்க வைத்துக்கொள்ளலாம். 8 வடிவ நடைப்பயிற்சி மனிதர்களின் கண்களின் பார்வை திறனை மேம்படுத்தும். 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் போது, அந்த கோடுகளை கூர்ந்து கவனித்து நடைப்பயிற்சி மேற்கொள்வதால், கருவிழி அங்கும் இங்கும் அசைந்து, கண்களில் இரத்த ஓட்டம் அதிகரித்து கண்பார்வை மங்குதல், கண் அழுத்தம் போன்ற பிரச்சனைகள் அறவே நீங்கும்.

இந்த ஆசனம் ஆண்மைக்குறைவு, ஆண்மலடு நீங்க உதவி புரியும். உடல் உஷ்ணம் நீங்கி, மன உளைச்சல்கள் நீங்கும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
செய்முறை
விரிப்பின் மீது கால்களை நீட்டியபடி உட்கார்ந்து, பின் இரு பாதங்களையும் உள்பக்கமாக ஒட்டியபடி இணைக்கவும். இரு கைகளாலும் சேர்த்து கால்களை உள்பக்கமாக இழுத்து உடலை உயர்த்தி, கட்டை விரல் தெரிய கால்களில் மேல் சின் முத்திரையிட்டு வைக்கவும்.
ஆசனம் செய்யும் போது நமது சிந்தனையை முதுகுத்தண்டின் மீது செலுத்தவும் காலை, மாலை இரு வேளைகளிலும் செய்யலாம். ஒவ்வொரு தடவையும் 30 விநாடிகள் செய்வது நலம்.
பலன் : ஆண்மைக்குறைவு, ஆண்மலடு நீங்கி பெரிதும் பலனளிக்கும். உடல் உஷ்ணம் நீங்கி, மன உளைச்சல்கள் நீங்கும். யானைக்கால் விரைவில் குணமாகும். பெண்கள் மாதத்தில் 5 நாட்களும், கருவுற்ற காலங்களிலும் செய்யக்கூடாது.

நாம் உணவுக்கு அளிக்கும் முக்கியத்துவம் உடற்பயிற்சிக்கு அளிப்பதில்லை. ஆனால் நடைபயிற்சி (walking) என்பது நோயின்றி வாழ மிகவும் முக்கியமான ஓரு செயல்பாடாகும்.
உடல் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சியும், சரியான உணவுப் பழக்கமும் தேவையானது ஆகும். நாம் உணவுக்கு அளிக்கும் முக்கியத்துவம் உடற்பயிற்சிக்கு அளிப்பதில்லை. ஆனால் நடைபயிற்சி(walking) என்பது நோயின்றி வாழ மிகவும் முக்கியமான ஓரு செயல்பாடாகும். இன்று நாட்டில் பரவலாக உடற்பயிற்சி மையங்கள் துவங்கி செயல்பட்டு வருகிறது.
உடற்பயிற்சிக்கென்றே எல்லா வித கருவிகளுடன் மையங்கள் செயல்பட்டு வருகிறது. நகர்ப்புறங்களில் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் உடற்பயிற்சி பழக்கம் அதிகரித்து வருகிறது. உடற்பயிற்சி என்பது நகரத்து மக்களிடம் ஓரு நவீன பழக்கமாக மாறி வருகிறது.இன்னும் பலர் உடற்பயிற்சி மையம் செல்ல இயலவில்லை எனினும், சைக்கிள் ஓட்டுதல் அல்லது நடந்து செல்வதனையோ கடைபிடிக்கின்றனர்.
* நெஞ்சை நிமிர்த்தி முன்னோக்கிப் பார்த்தவராக (தரையை பார்க்காமல் இருபது அடி முன்னோக்கியவாறு நடக்க வேண்டும்.
* நெஞ்சை உயர்த்தியவாறு தோள்களைச் சாதாரணமாகவும் கைகளை தளர்வாகவும் வைத்து நடத்தல் வேண்டும்.
* கைகளை பக்கவாட்டில் ஆட்டாமல்,முன்னும்-பின்னும் ஓரே சீராக ஆட்டியவாறு நெஞ்சுபகுதியை விட உயர்த்திவிடாமல் நடந்து செல்ல வேண்டும். அதற்கேற்றவாறு கால்களும் பின் தொடரும்.
* அடி வயிற்றை கெட்டியாகவும் உறுதியாகவும் வைத்த நிலையில் முதுகை சமமாக நிமிர்த்தியவாறு உடலைச் சற்றே முன்புறம் சாய்ந்தவாறு நடகக வேண்டும்.
* ஓரே நேர்கோட்டில் நடப்பதை போல கற்பனை செய்து கொண்டு காலடிகளை அருகருகே வைத்து விரைவாக நடக்க வேண்டும்.
* நடக்க காலை உயர்த்தும் போது முன்னங்கால் விரல்களால் உடலை உந்தி தள்ளியவாறும்,காலை பூமியில் வைக்கும் போது குதிகாலை பூமியில் பதித்தவாறும்,இதே முறையால் முன்னங்கால் விரல்களையும் பதியவைத்து முன்னோக்கி செலுத்துங்கள்.
* இயல்பாக சுவாசித்து,ஓரே சீரான வேகத்தில் சுவாசித்து காற்றை அதிக அளவில் உட்செலுத்துங்கள்.வேகமாகவும்,அதேசமயத்தில் மூச்சிறைக்கும் அளவிற்கு இல்லாமலும் பார்த்துக் கொள்ளா வேண்டும்.

மண்டூகம் என்றால் தவளை. இந்த ஆசனம் செய்யும் போது உடல் தவளை போன்ற அமைப்பில் உள்ளதால் இதற்கு மண்டூகாசனம் என்ற பெயர் வந்தது.
செய்முறை :
முதலில் தரையில் குப்புறபடுத்துக் கொண்டு மூச்சை நன்கு இழுத்து வெளி விட வேண்டும். பிறகு இரண்டு கைகளையும் பின் பக்கமாக கொண்டு சென்று வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு இரண்டு கால்களையும் மடக்கி குதிகால்களை தொடைகளுக்கு அருகே கொண்டு வரவும்.
பின்பு வலது உள்ளங்கையை வலது பாதத்தின் மேற்புறத்திலும், இடது உள்ளங்கையை இடது பாதத்தின் மேற்புறத்திலும், வைக்க வேண்டும். இந்த நிலையில் மூச்சை வெளிவிட்டபடி தலையையும், மார்பையும் மேல் நோக்கி உயர்த்தி குதிகால்களைத் தரையை நோக்கி நன்கு அழுத்தவும். முடிந்தால் குதிகால்களைத் தரையில் தொடும்படி செய்யவும்.
இரண்டு முழங்கால்களுக்கு இடையே உள்ள இடைவெளி முடிந்த அளவுக்கு குறைக்கவும்.அடுத்து தலையை நன்றாக உயர்த்தி மேலே பார்க்கவும். இந்த நிலையில் சுமார் 20 விநாடிகளுக்கு சாதாரண சுவாசத்தில் இருந்துவிட்டு பிறகு கால்களை மெதுவாக விடுவிக்கவும்.
பயன்கள் :
மார்பு நன்கு விரிவடைவதால் நுரையீரலுக்கு அதிக மூச்சு காற்று கிடைக்க ஏதுவாகிறது. இதன் மூலம் ஆஸ்துமா குணமடடைகிறது. கழுத்து எலும்பு தேய்வு குணமடைய உதவுகிறது. செரிமான மண்டலத்தை சீர் செய்வதால் உணவு எளிதில் சீரணமாகிறது. மலட்டுதன்மை குணமடையவும், சீறுநீரை வெளிப்படுத்தவும், கல்லடைப்பை குணப்படுத்தவும் உதவுகிறது. மேலும் முதுகு எலும்பை உறுதியடையச் செய்கிறது. குதிகால்களை மிருதுவாக்கி காலில் ஏற்படும் வலியை போக்குகிறது.

உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை சரி செய்யலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
கட்டை விரல்;
உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம். மேலும் இது உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.கட்டை விரலானது, மண்ணீரல் மற்றும் வயிறு பகுதியுடன் இணைப்புள்ளது ஆகும். இது வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த செல்களை ஊக்குவித்து செரிமானத்தை சீராக்குகிறது.
ஆள்காட்டி விரல்;
உங்கள் பலவீனம் மற்றும் பயத்தை குறைக்க கூடியது ஆள்காட்டி விரல். மேலும், ஆள்காட்டி விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களிடம் இருக்கும் அடிமைத்தனத்தினை குறைக்கவல்லது. உங்கள் ஆள்காட்டி விரல் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையுடன் இணைப்புக் கொண்டுள்ளது. சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாமல் இருக்கவும், நீர்வறட்சி ஏற்படாமல் இருக்கவும் பயனளிக்கிறது.
நடுவிரல்;
நடுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களது கோபத்தை குறைக்க உதவும். தலை பகுதியில் இரத்த ஓட்டத்தை சீராக்கி தலைவலி ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது. நடுவிரலானது, கல்லீரல் மற்றும் பித்தப்பையுடன் இணைப்புடையது. இது இந்த பாகங்களின் வலிமையை மேம்படுத்துகிறது மற்றும் உடற்சக்தியை ஊக்குவிக்கிறது.
மோதிரவிரல்;
ஏறத்தாழ கட்டைவிரலுடன் ஒத்துப் போவது தான் இந்த மோதிர விரலும். உங்களில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தீய எண்ணத்தை குறைக்க நீங்கள் மோதிர விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்யலாம்.மேலும், மோதிர விரல் நுரையீரலுடன் இணைப்பு கொண்டுள்ளது. இது சுவாசக் கோளாறுகளை போக்கவல்லது. மேலும், நரம்பு மண்டலம், தசைகளுக்கு வலிமை அளிக்கிறது. இதனால், உங்கள் உடற்சக்தி மேம்படும்.
சிறுவிரல்;
சிறுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது இதயம் மற்றும் இரத்த ஓட்டத்திற்கு நல்லது. இது இரத்த ஓட்டத்தை சீராக்கி இதர உடல் பாகங்களின் செயற்திறனை ஊக்குவிக்கிறது.மேலும் இது மூளையின் செயல்திறனையும் மேம்படுத்துகிறது, இதனால் உங்கள் எண்ணம், சிந்தனை, கவனம் போன்றவையும் மேம்படும்.
உள்ளங்கை;
மன அழுத்தம் தான் அனைவருக்கும் ஏற்படும் கொடிய நோய். இது ஒட்டுமொத்தமாக மனதையும், உடலையும் பாதிக்கக் கூடியது. உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க உதவுகிறது.இது உடல் மற்றும் மனதில் ஏற்படும் சோர்வில் இருந்து விரைவாக விடுபட்டு வெளிவரவும் பயனளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கி, எதிர்ப்பு சக்தியைத் தரும். சோர்வாக இருக்கும்போது இதை செய்தால் சோர்வு நீங்கி உடனடியாகப் புத்தணர்ச்சி கிட்டும்.
செய்முறை :
தந்த்ரா என்பதில் உள்ள "தந்" உடலிலுள்ள சக்தியையும், "த்ரா", அதைக் கடத்தும் தன்மையையும் குறிக்கும். தாந்திரீகத்தில் நாபி முக்கிய இடம்பெற்றது. சிவ சம்ஹிதையில் நாபிச்சக்கரத்தின் முக்கியத்துவம் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
பெருவிரல், சுட்டு விரல், மோதிர விரலின் நுனியை ஒன்றாகச் சேர்த்து, மற்ற விரல்களை நீட்டியபடி வைக்கவும். இவ்வாறு 20 நிமிடம் இந்த முத்திரையை செய்ய வேண்டும்.
பயன்கள் :
இம்முத்திரை தாம்பத்தியத்திற்கு உறுதுணையாய் இருக்கும். உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கி, எதிர்ப்பு சக்தியைத் தரும். குறைந்த ரத்த அழுத்தம்,மயக்கம், இதயக் கோளாறுகளை நீக்கும். சோர்வாக இருக்கும்போது இதை செய்தால் சோர்வு நீங்கி உடனடியாகப் புத்தணர்ச்சி கிட்டும்.

மார்ஜாரி என்றால் பூனை என்று பொருள். பூனை முதுகை மேல் நோக்கியும் கீழ்நோக்கியும் வளைப்பது போல் இந்த ஆசனம் அமைந்திருப்பதால் மார்ஜாரி ஆசனம் என்று அழைக்கப்படுகிறது.
செய்முறை: தரை விரிப்பின் மேல் மண்டியிட்டு அமரவும். (வஜ்ராசனம் பிருஷ்டத்தை தூக்கி முழங்கால்களில் நிற்கவும்).
முன் வளைந்து தோள்களுக்கு நேராக உள்ளங்கைகளை தரையில் பதிக்கவும். கைகளை நேராக்கவும், கை, மணிக்கட்டுகளுக்கு நேராக இருக்கும்படி அகற்றி வைக்கவும். உடல் முன்னோக்கியோ, பின் நோக்கியோ போகாதபடி இடுப்பிலிருந்து புஜம் வரைக்கும் உள்ள உடல் பாகம் சமமாக இருக்கட்டும். இது மார்ஜாரி ஆசனத்தின் முதல் நிலை.
மூச்சை உள்ளுக்குள் இழுத்து, தலையை மேலே உயர்த்தவும். அதே சமயம் முதுகை கீழ்நோக்கி நன்றாக வளைக்கவும். இந்த நிலையில் 35 வினாடி மூச்சை அடக்கி வைக்கவும். மூச்சை வெளியே விட்டு தலையை இரு கைகளுக்கு இடையில் உள் நோக்கி வளைத்து முதுகை மேலே தூக்கவும். இந்த நிலையில் மீண்டும் மூச்சை உள்ளுக்கு இழுக்காமல் 35 வினாடி அப்படியே இருக்கவும்.
இது மார்ஜாரி ஆசனத்தின் ஒரு சுற்று பயிற்சி ஆகிறது. இந்த ஆசனத்தை மேற்கண்ட முறைப்படி 5 முதல் 10 சுற்று பயிற்சி செய்யலாம்.
கவனம் செலுத்த வேண்டிய இடம்: முதுகு, இடுப்பு, கழுத்து, மூச்சு மற்றும் சுவாதிஷ்டான சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.
பயிற்சிக் குறிப்பு: இந்த ஆசனத்தில் மூச்சை அடக்காமல் நிலை 6ல் நிதானமாக மூச்சை உள்ளுக்குள் இழுத்தும் நிலை 7ல் நிதானமாக மூச்சை வெளியே விட்டும் தொடர்ந்து 10 முதல் 20 முறை பயிற்சி செய்யலாம்.
பயன்கள்: நுரையீரல் சம்பந்தமான கோளாறு உள்ளவர்களுக்கு நன்மையளிக்கிறது. கழுத்து, தோள்கள், முதுகு ஆரோக்கியமாக இருக்கும். கழுத்து வலி, முதுகுவலி இடுப்பு வலி நீங்கும்.

உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்திருந்தால், வீட்டிற்கு வெளியே மட்டும்தான் அதை செய்ய முடியும் என்றில்லை, வீட்டில் இருந்தே செய்யலாம்.
கொரோனா 2-வது அலையின் காரணமாக இன்று முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி கூடங்கள், யோகா கூடங்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக உடற்பயிற்சி செய்பவர்கள் கவலை கொள்ள வேண்டாம். வீட்டிலேயே எளிய முறையில் உடற்பயிற்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்...
உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்திருந்தால், வீட்டிற்கு வெளியே மட்டும்தான் அதை செய்ய முடியும் என்றில்லை, வீட்டில் இருந்தே செய்யலாம். சில ஸ்மார்ட் வழிகளில், உங்கள் அன்றாட வேலைகளை கொழுப்பு உடைக்கும் செயல்களாக மாற்றலாம். ஆமாம், எளிமையான வீட்டு வேலைகள் அல்லது பணிகளைச் செய்வது உங்கள் உடலில் இருக்கும் கலோரி எரிப்பதை இரட்டிப்பாகும். இந்த வழி உங்களுக்கு எடை குறைக்கவும் உதவுகிறது. டிராப்மில்லில் ஓடுவதற்கு 15-20 நிமிடங்கள் சமமாக மாப்பிங், வீட்டை சுத்தம் செய்தல் அல்லது தளபாடங்கள் மறுசீரமைத்தல் போன்ற கடுமையான வேலைகளைச் செய்வது நல்லது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
சுய கவனிப்பு, தியானம் அல்லது யோகா செய்வதில் நேரத்தை செலவிடுவது எளிதான வழிகளில் ஒன்று. வழக்கமான யோகா பயிற்சி உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், உங்கள் மனதை மையப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் முடியும். தியானம் சிறப்பாக கவனம் செலுத்த உதவுகிறது மற்றும் எதிர்மறை ஆற்றல்களையும் பதட்டத்தையும் நீக்குகிறது. நல்ல உடற்செயற்பாடுகள் கொண்ட யோகா பயிற்சியை செய்வது நல்லது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது. வைரஸ் தொற்று பரவாமல் இருக்க அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். இது மக்களின் அன்றாட வாழ்க்கைமுறையையே மாற்றியுள்ளது. ஜிம்மில் தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள், பூங்காவில் நடைப்பயிற்சியோ, உடற்பயிற்சியோ செய்பவர்கள் எனப் பலரும் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
பூங்காக்களுக்குச் சென்று நடைப்பயிற்சி செய்ய முடியாத பட்சத்தில் மொட்டை மாடியில் நடைப்பயிற்சி செய்வதும், உடற்பயிற்சி செய்வதும் சரியா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. இந்தக் கேள்விக்கு சமூக வலைதளங்களில் இவ்வாறான பதில்கள் பரவி வருகின்றன. `மொட்டை மாடியில் உலவக் கூடாது. எல்லோரும் வீட்டுக்குள்ளேயே இருங்கள். மொட்டைமாடிக்குச் சென்று உலவினால் நோய்த் தொற்று ஏற்படக்கூடும்' என்றெல்லாம் கருத்துகள் பரவிவருகின்றன.
மாடிப்படி ஏற முடியாதவர்கள் தவிர்த்து மற்றவர்கள் மொட்டைமாடியில் தாராளமாக நடைப்பயிற்சி, உடற்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்ளலாம். வீட்டிலேயே அடைந்து கிடப்பது போலத் தோன்றுபவர்களுக்கும் மொட்டை மாடியில் நடப்பது புத்துணர்வைத் தரும்.
எவ்வித பாதிப்பும் ஏற்படாது. கொரோனா வைரஸ் காற்றில் பரவக்கூடியது அல்ல. வைரஸ் தொற்று உள்ள ஒருவர் மற்றொருவரைத் தொடுவதாலும், அவரது இருமல், எச்சில் போன்றவற்றின் மூலம் வெளியேறும் நீர்த்திவலைகள் மூலமும் மட்டுமே இது பரவுகிறதே தவிர காற்றின் மூலம் பரவாது. எனவே மொட்டை மாடியில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்யலாம். ஒருவேளை, மொட்டை மாடியில் அதிகமானோர், கூட்டம் கூட்டமாக உடற்பயிற்சி செய்ய வருகிறார்கள் என்றால் மட்டும் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கலாம். மற்றபடி பிரச்னை எதுவும் இல்லை.
தினமும் ஜாகிங் அல்லது ஜிம்மிற்கு செல்பவர்கள் தற்போது வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழல் உள்ளது. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சிகளையும் , யோகா போன்றவையும் செய்யலாம். இன்றைய நவீன காலக்கட்டத்தில் வீட்டில் இருந்தபடியே எவ்வாறு ஓர்க்அவுட் செய்யலாம் என்று பல வீடியோக்கள் உங்களுக்கு வழிகாட்டும்.

பெண்களுக்கு மிகவும் பயனுள்ள ஆசனம் இது. மாதவிடாயின் போது ஏற்படும் இடுப்புவலியையும் வயிற்று வலியையும், அதிக இரத்தப்போக்கையும் கட்டுப்படுத்துகிறது.
செய்முறை:
தண்டாசனத்தில் உட்காரவும். இரு முழங்கால்களையும் மடக்கி, உள்ளங்கால்களை ஒன்றாக சேர்த்து இரு குதிகால்களையும் குத, குய்யத்தின் மத்தியில் படும்படி வைக்கவும்.
கை விரல்களை ஒன்றாகச் கோர்த்து உள்ளங்கைகளை சற்று பாதங்களுக்கு அடியில் நகர்த்தி கை விரல்களால் பாதங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு நேராக நிமிரவும். முதுகு, கழுத்து, தலை ஒரே நேர்க்கோட்டில் இருக்கட்டும். இந்த நிலையில் சில முறை மூச்சை இழுத்துவிடவும். மூச்சை வெளியேவிட்டபடி முன்னுக்கு குனிந்து தலையை தரையை நோக்கி கொண்டு வந்து, தாடை தரையை தொடும்படி வைக்கவும். இந்த ஆசன நிலையில் 30 வினாடி முதல் ஒரு நிமிடம் வரை சாதாரண மூச்சுடன் நிலைத்திருக்கவும். பிறகு மூச்சை உள்ளுக்கு இழுத்து நேராக நிமிர்ந்து ஆரம்ப நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை 2 முதல் 4 முறை பயிற்சி செய்யலாம்.
கவனம் செலுத்தவேண்டிய இடம் : தொடைகளின் சந்துப் பகுதியிலும், மூலாதாரம் அல்லது சுவாதிஷ்டான சக்கரத்தின்மீதும் கவனம் செலுத்தவும்.
பயிற்சிக் குறிப்பு: சிலருக்கு இப்பயிற்சியில் உள்ளங்கால்களை ஒன்றாக சேர்த்து வைக்கும்போது கால்கள் இரண்டும் தரையில் படியாமல் மேலே தூக்கிக்கொண்டு நிற்கும். அத்தகையவர்கள் கால்களை மேலும் கீழுமாக ஏற்றி இறக்கி 10 முதல் 15 முறை காலை, மாலை செய்து வந்தால் சில நாட்களில் கால்கள் தரையில் படிந்து விடும். கால்கள் இரண்டும் தரையில் படிந்த பிறகு நிதானமாக முன்குனிந்து எவ்வளவு வளையமுடியுமோ அந்த அளவுக்கு வளைந்து அதே நிலையில் பயிற்சி செய்யவும். நாள் படப்பட வளையும் தன்மை அதிகாத்து தாடையால் தரையை தொடும் நிலை கைகூடும்.
பயன்கள்: விரைவாதத்திற்கு பயனுள்ளது. மலட்டுத்தனம் நீங்கும். ஆண், பெண் பிறப்புறுப்புகளின் குறைபாடுகளை நீக்கி, வலுப்படுத்துகிறது. சிறுநீரகத்தின் செயல்பாடு நன்றாக அமையும். சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை குறைபாடுகள் நீங்கும். பெண்களுக்கு மிகவும் பயனுள்ள ஆசனம் இது. மாதவிடாயின் போது ஏற்படும் இடுப்புவலியையும் வயிற்று வலியையும், அதிக இரத்தப்போக்கையும் கட்டுப்படுத்துகிறது.