search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    பிறந்த குழந்தைக்கு 6 மாதத்திற்கு பிறகு என்ன கொடுக்கலாம்?
    X

    பிறந்த குழந்தைக்கு 6 மாதத்திற்கு பிறகு என்ன கொடுக்கலாம்?

    • குழந்தைகள் நன்கு ஆரோக்கியமாக வளர புரதச்சத்து மிக முக்கியம்.
    • ஹோம்மேட் செர்லாக் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான சத்துகளை தருகிறது.

    பெரும்பாலான தாய்மார்களுக்கு தாய்ப்பாலுக்கு பிறகு குழந்தைக்கு என்ன தர வேண்டும் என்பதில் எப்போதும் குழப்பமே. 6 மாதத்துக்குள் உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பாலை விட சிறந்த உணவு எதுவும் இல்லை. சில குழந்தைகள் 5 மாத முடிந்த உடனே திட உணவுக்குத் தயாராகி விடுவார்கள். ஆனால், திட உணவுக்கு குழந்தைகள் தயாரா என்பதைக் கண்டுபிடிப்பது முக்கியம்.

    6 மாத குழந்தைக்கு தாய் பால் அவசியம். உங்கள் குழந்தை 6 வது மாதத்தை நிறைவு செய்யும் போது பெரும்பாலான உணவு வகைகள் குழந்தைக்கு அறிமுகமாகியிருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்கள் குழந்தைக்கு பல்வேறு புதுவித உணவுகளை கொடுக்க வேண்டியது கட்டாயம்.

    குழந்தைகள் நன்கு ஆரோக்கியமாக வளர புரதச்சத்து மிக முக்கியம். ஆறு மாதம் முடிந்து ஏழாவது மாதம் தொடங்கும் போது கேழ்வரகு கஞ்சி கொடுக்க தொடங்கலாம். அதுவும், நன்கு அரைக்கப்பட்ட மாவை பயன்படுத்தி ஒரு டீஸ்பூன் மாவுக்கு மூன்று டீஸ்பூன் தண்ணீரை கலந்து ஒரு வேளை கொடுக்க தொடங்க வேண்டும். பிறகு அந்த உணவு குழந்தைக்கு செட் ஆக சிறிது நாட்கள் எடுக்கும். அது செட் ஆக ஆக அளவை அதிகரிக்கலாம்.

    செரலாக் தினமும் ஒரு வேளை கொடுக்கலாம். படிப்படியாக இரண்டு வேளையும் சேர்க்கலாம். இதையே குழந்தைக்கான திட உணவு கொடுக்கும் போது வேக வைத்தும் கொடுக்கலாம். புரதம் நிறைந்த இந்த ஹோம்மேட் செர்லாக் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துகளையும் கொண்டிருக்கிறது என்பதை குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியில் அறிய முடியும். அத்தகைய செரலாக் வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்பதை பற்றி பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    அரிசி- 1/2 கிலோ

    உடைத்த கோதுமை- 100 கிராம்

    பாசிபருப்பு- 10 கிராம்

    கருப்பு உளுந்து- 10 கிராம்

    மைசூர் பருப்பு- 10 கிராம்

    கொள்ளு- 10 கிராம்

    பாதாம்- 10

    செய்முறை:

    அரிசியை ஒருமுறைக்கு இருமுறை நன்றாக அலசி அதனை ஒரு வெள்ளை துணியில் போட்டு ஈரம் போகும் வரை நிழலில் உலர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் மேலே கொடுக்கப்பட்டுள்ள அரிசி தவிர மற்ற பொருட்களையும் நீரில் நன்றாக அலசி அதனையும் தனியாக ஒரு துணியில் கொட்டி நிழலில் உலர வைக்க வேண்டும்.

    உலர்ந்த அரியை ஒரு கடாயில் சேர்த்து நன்றாக (நிறம் மாறாமல்) வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோன்று மற்ற பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இவை இரண்டையும் ஒன்றாக கலந்து மிக்சி ஜாரில் சேர்த்து நைசாக பொடித்து அதனை ஜல்லடை கொண்டு சலித்து எடுத்துகொள்ள வேண்டும். இந்த கலவையுடன் சிறிதளவு உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக்கொள்ளலாம். 6 மாதம் வரை இந்த பொடியை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். கெட்டுப்போகாது.

    இந்த பொடியை ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்து அதனை ஒரு டம்ளர் நீர் அல்லது பாலில் கட்டி இல்லாமல் கலந்து அந்த கலவையை அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும். இதனை கட்டிபடாமல் அடுப்பை மிதமான தீயில் வைத்து கெட்டியாகும் வரை கிளிறிக்கொண்டே இருக்க வேண்டும். கூழ் வடிவத்திற்கு இந்த கலவை வந்ததும் தீயை அணைத்து வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி சூடு ஆறியதும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். முதலில் குழந்தைகளுக்கு சிறிது சிறிதாக கொடுத்து பழக்கப்படுத்த வேண்டும்.

    Next Story
    ×