search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    பெற்றோர்களே குழந்தை தவழ ஆரம்பிக்கும் போது இதை மறக்காதீங்க...
    X
    பெற்றோர்களே குழந்தை தவழ ஆரம்பிக்கும் போது இதை மறக்காதீங்க...

    பெற்றோர்களே குழந்தை தவழ ஆரம்பிக்கும் போது இதை மறக்காதீங்க...

    குழந்தைகள் தவழ போதுமான இடவசதியை பெற்றோர்களாகிய தாங்கள் தான் அமைத்து தர வேண்டும். அப்பொழுதுதான் குழந்தைகள் சுதந்தரமாக உருண்டு, பிரண்டு நன்றாக தவழ ஆரம்பிப்பார்கள்.
    குழந்தையின் தவழ்தல் என்பது மிகவும் முக்கியமான தருணமாகும். குழந்தை தவழும் பழக்கமானது குழந்தைக்கு தானாக வரும் பழக்கமே தவிர எவராலும் வரவைப்பது இல்லை. பொதுவாக குழந்தைகள் தனது ஆறு மாதங்களில் தவழ தொடங்குவார்கள். குழந்தைகள் தவழ ஆரம்பிக்கும் காலத்தில் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் குழந்தைகள் தவழும் காலங்களில் மிகவும் துருதுரு என இருப்பார்கள்.

    அதனால் குழந்தைகளுக்கு அதிக விபத்துக்கள் நேர வாய்ப்புள்ளது. மேலும் குழந்தைகள் தவழும் நேரத்தில் கைகளுக்கு கிடைக்கும் அனைத்து பொருட்களையும் எடுத்து வாயில் வைத்துக்கொள்வார்கள்.

    எனவே பெற்றோர்களாகிய தாங்கள் வீட்டில் எந்த ஒரு ஆபத்தான பொருளையும் குழந்தைகளின் கையில் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி குழந்தைகள் தவழ ஆரம்பித்துவிட்டாள், அவர்கள் நடக்கும் பருவமானது நெருங்கிவிட்டது என்று அர்த்தம்.

    குழந்தைகள் தவழ போதுமான இடவசதியை பெற்றோர்களாகிய தாங்கள் தான் அமைத்து தர வேண்டும். அப்பொழுதுதான் குழந்தைகள் சுதந்தரமாக உருண்டு, பிரண்டு நன்றாக தவழ ஆரம்பிப்பார்கள்.

    குழந்தைகளை எப்பொழுதும் தூக்கிவைத்துக்கொண்டே இருந்தால் அதன் பிறகு குழந்தைகள் தூக்கி வைத்து சொல்வார்கள், இதனால் குழந்தைகள் தவழ்வதற்கு மற்றும் நடப்பதற்கு அதிக காலம் எடுத்து கொள்வார்கள். எனவே யாராக இருந்தாலும் சரி குழந்தைகளை தூக்கியே வைத்துக்கொள்ளும் பழக்கத்தை கைவிடவும்.

    குழந்தைகளை எளிதில் தவழ வைப்பதற்கு இப்பொதுழுது கடைகளில் நிறைய தவழும் மொம்மைகள் விற்கப்படுகிறது.அவற்றை வாங்கி குழந்தைகளுக்கு விளையாட கொடுத்தால் அந்த மொம்மை தவழ்வது போல், தங்கள் குழந்தைகளும் தவழ ஆரம்பிப்பார்கள்.

    உங்கள் வீட்டில் வளரும் குழந்தைகள் இருந்தால், தினமும் தவறாமல்வீட்டை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். அதாவது தரையை நன்கு கூட்டி, தண்ணீர் கொண்டு துடையுங்கள். இதனால் தரையில் தவழும் போது, கையை வாயில் வைத்தாலும் எந்த வித நோய்த்தொற்றுகளும் குழந்தைகளை அண்டாமல் இருக்கும்.
    Next Story
    ×