என் மலர்
உலக கோப்பை கால்பந்து-2022
- 60-வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பில் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ லெக்கி கோல் அடித்தார்.
- பிரான்ஸ் அணி நாக் அவுட் சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறியது.
கத்தார்:
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று குரூப்-டி பிரிவு லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-டென்மார்க் அணிகள் விளையாடின. இப்போட்டியின் முதல் பாதியில் கோல்கள் பதிவாகவில்லை. இதனால் இரண்டாவது பாதி ஆட்டம் மேலும் விறுவிறுப்படைந்தது.
ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பில் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ லெக்கி கோல் அடித்தார். அதன்பின்னர் இறுதி வரை கோல்கள் அடிக்கப்படவில்லை. எனவே, ஆஸ்திரேலிய அணி 1-0 என வெற்றி பெற்றதுடன், நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது. ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகளில் 2 வெற்றியுடன் 6 புள்ளிகளை பெற்றுள்ளது.
குரூப் டி பிரிவில் உள்ள பிரான்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
- பிரான்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று நாக் அவுட் சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறியது.
- 3 போட்டிகளில் விளையாடிய துனிசிய அணி ஒரு வெற்றி, ஒரு டிரா என மொத்தம் 4 புள்ளிகளை பெற்றது.
கத்தார்:
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று குரூப்-டி பிரிவில் உள்ள துனிசியா-பிரான்ஸ் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் துனிசியா அணியின் காஸ்ரி 58வது நிமிடத்தில் கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். அதுவே வெற்றி கோலாகவும் அமைந்தது.
அதன்பின்னர் ஆட்டநேர இறுதி வரை இரு தரப்பிலும் கோல்கள் அடிக்கப்படவில்லை. கூடுதல் நேரத்திலும் கோல் முயற்சி கைகூடவில்லை. எனவே, துனிசியா அணி 1-0 என வெற்றி பெற்றது. அத்துடன், பிரான்சை வீழ்த்திய ஆறுதலுடன் போட்டியில் இருந்து வெளியேறியது.
3 போட்டிகளில் விளையாடிய துனிசிய அணி ஒரு வெற்றி, ஒரு டிரா என மொத்தம் 4 புள்ளிகளை பெற்றது. பிரான்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறியது.
- வெற்றி பெற்றால் தான் 2-வது சுற்றுக்கு தகுதி பெற முடியும்.
- இதே பிரிவில் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் சவுதி அரேபியா-மெக்சிகோ மோதுகின்றன.
தோகா:
உலக கோப்பை கால்பந்து போட்டியில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினா தொடக்க ஆட்டத்தில் சவுதி அரேபியா விடம் 1-2 ( 'சி' பிரிவு ) என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றது.
2-வது போட்டியில் மெக்சிகோவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.
லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி 3- வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் போலந்தை இன்று எதிர்கொள்கிறது . இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு இந்த போட்டி நடக்கிறது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் அர்ஜென்டினாவுக்கு உள்ளது. வெற்றி பெற்றால் தான் 2-வது சுற்றுக்கு தகுதி பெற முடியும். தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். இதனால் அர்ஜென்டினா வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராட வேண்டும். அந்த அணி ஒரு வெற்றியுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.
4 புள்ளிகளுடன் இருக்கும் போலந்து டிரா செய்தாலே தகுதி பெற்றுவிடும். இரு அணிகளும் உலக கோப்பையில் 2 ஆட்டத்தில் மோதியுள்ளன. தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.
இதே பிரிவில் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் சவுதி அரேபியா-மெக்சிகோ மோதுகின்றன.
இதில் வெற்றி பெற்றால் சவுதி அரேபியா 2-வது சுற்றுக்கு நுழையும். அந்த அணி அர்ஜென்டினாவை வென்றது. போலந்திடம் தோற்றது.
மெக்சிகோ அணி போலந்திடம் டிரா செய்தது. அர்ஜென்டினாவிடம் தோற்றது. 2-வது சுற்று வாய்ப்பை பெற கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். டிரா செய்தாலோ, தோற்றாலோ வெளியேறிவிடும்.
குரூப் 'டி' பிரிவில் இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டங்களில் பிரான்ஸ்- துனிசியா ஆஸ்திரேலியா- டென்மார்க் ( இரவு 8.30 ) அணிகள் மோதுகின்றன.
பிரான்ஸ் 2 வெற்றியுடன் ஏற்கனவே 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. அந்த அணி ஹாட்ரிக் வெற்றி ஆர்வத்தில் உள்ளது. 1 டிரா, 1 தோல்வியுடன் இருக்கும் துனிசியா வெற்றி நெருக்கடியில் இருக்கிறது. அந்த அணி பிரான்சை வெல்வது சவாலானது.
ஆஸ்திரேலியா-டென்மார்க் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி முன்னேற்றம் அடையும். இதனால் இந்த ஆட்டம் விறு விறுப்பாக இருக்கும்.
- அமெரிக்க அணியை நெதர்லாந்து சந்திக்கிறது.
- இங்கிலாந்து 2-வது சுற்றில் ‘ஏ’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்த செனகல்லை எதிர் கொள்கிறது.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இதுவரை 7 நாடுகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. பிரான்ஸ் ('டி' பிரிவு), பிரேசில் (ஜி), போர்ச்சுக்கல் (எச்), நெதர்லாந்து, செனகல் (ஏ), இங்கிலாந்து, அமெரிக்கா (பி) ஆகியவை முன்னேறி உள்ளன.
'ஏ' பிரிவில் முதல் இடத்தை பிடித்த நெதர்லாந்து அணி 2-வது சுற்றில் 'பி' பிரிவில் 2-வது இடத்தை பிடித்த அமெரிக்காவுடன் மோதுகிறது. வருகிற 3-ந்தேதி இரவு 8.30 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.
'பி' பிரிவில் முதல் இடத்தை பிடித்த இங்கிலாந்து 2-வது சுற்றில் 'ஏ' பிரிவில் 2-வது இடத்தை பிடித்த செனகல்லை எதிர் கொள்கிறது. 4-ந்தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.
- முதல் பாதியில் அமெரிக்க வீரர் கோல் அடித்தார்.
- இறுதிவரை வேறு கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.
கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் குரூப் பி பிரிவில் நள்ளிரவு 12.30 மணிக்கு இரண்டு ஆட்டங்கள் ஒரே நேரத்தில் தொடங்கின. இதில் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.
மற்றொரு ஆட்டத்தில் ஈரான்-அமெரிக்கா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கோல் போடுவதற்கு இரு அணிகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டன. முதல் பாதியின் 38வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் புலிசிக் ஒரு கோல் அடித்து தமது அணியை முன்னிலை பெறச் செய்தார்.
2வது பாதியில் ஆட்டத்தை சமன் செய்ய ஈரான் வீரர்களின் முயற்சி வெற்றி பெறவில்லை. இறுதிவரை வேறு கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அமெரிக்கா புள்ளி பட்டியலில் 2வது இடத்தை பிடித்ததுடன் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.
- முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
- 2வது பாதியில் இங்கிலாந்து வீரர் 2 கோல்கள் அடித்தார்.
கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் நள்ளிரவு நடைபெற்ற பி பிரிவு ஆட்டம் ஒன்றில் வேல்ஸ் - இங்கிலாந்து அணிகள் மோதின. முதல் பாதியில் எந்த அணிகளும் கோல் அடிக்கவில்லை.
2வது பாதி ஆட்டத்தின் 50 வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் மார்கஸ் ராஷ்போர்டு தமது அணிக்கான முதல் கோலை அடித்தார். தொடர்ந்து 51வது நிமிடத்தில் மற்றொரு வீரர் பில் போடன் ஒரு கோல் அடித்து வெற்றி வாய்ப்பை உறுதி செய்தார்.
68வது நிமிடத்தில் மார்கஸ் ராஷ்போர்டு மீண்டும் ஒரு கோல் அடிக்க, ஆட்ட நேர முடிவில் 3-0 என்ற கோல்கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் பி பிரிவில் 7 புள்ளிகளுடம் அந்த அணி முதலிடம் பிடித்தது.
- முதல் பாதியில் செனகல் அணி ஒரு கோல் அடித்தது.
- ஆட்டநேர முடிவில் செனகல் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
தோகா:
கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரின் ஏ பிரிவில் இரு லீக் ஆட்டங்கள் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெற்றது.
இதில் ஈகுவடார், செனகல் அணிகள் மோதின.
தொடக்கம் முதல் செனகல் அணி சிறப்பாக ஆடியது . ஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் செனகல் அணியின் இஸ்மைலா சர் பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார். இதனால் முதல் பாதியில் செனகல் 1-0 என முன்னிலை வகித்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 67-வது நிமிடத்தில் ஈகுவடார் அணியின் மொய்சஸ் கைசெடொ ஒரு கோல் அடித்து சமனிலைக்கு கொண்டு வந்தார். இதற்கு பதிலடியாக செனகல் அணியின் கலிடோ கவுலிபலி 70-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
இறுதியில், செனகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை வீழ்த்தியது. அத்துடன் புள்ளிப் பட்டியலில் 2வது இடம் பிடித்தது.
இந்த தோல்வியின் மூலம் ஈகுவடார் அணி உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
- முதல் பாதியில் நெதர்லாந்து அணி ஒரு கோல் அடித்தது.
- கத்தார் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
தோகா:
கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரின் ஏ பிரிவில் இரு லீக் ஆட்டங்கள் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெற்றது.
இதில் நெதர்லாந்து, கத்தார் அணிகள் மோதின.
தொடக்கம் முதல் நெதர்லாந்து அணி சிறப்பாக ஆடியது. ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் கோடி காக்போ ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் நெதர்லாந்து 1-0 என முன்னிலை வகித்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 49-வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் பிரெங்கி டி ஜாங் ஒரு கோல் அடித்து அசத்தினார்.
இறுதியில், நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் கத்தாரை வென்றது. அத்துடன் புள்ளிப்பட்டியலில் முதலிடமும் பிடித்தது.
கத்தார் அணி தான் ஆடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து கடைசி இடத்தில் உள்ளது.
- வீரர்கள் அறையில் மெக்சிகோ ஜெர்சியால் தரையை மெஸ்சி சுத்தம் செய்ததாக பாக்சர் குற்றச்சாட்டு
- மெக்சிகோவை அர்ஜென்டினா 2-0 என வீழ்த்தியது
கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நடைபெற்று வருகிறது. மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியாவிடம் 1-2 என அதிர்ச்சி தோல்வியடைந்தது.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மெக்சிகோவிற்கு எதிராக களம் இறங்கியது. இதில் வெற்றி பெற்றால்தான் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற முடியும் என நிலையில் அர்ஜென்டினா 2-0 என மெக்சிகோவை வீழ்த்தியது.
இந்த போட்டி முடிந்த பின்னர் அர்ஜென்டினா வீரர்கள் தங்களது அறையில் வெற்றி மகிழ்ச்சியை கொண்டாடினர். அப்போது மெக்சிகோ வீரர் அணியும் ஜெர்சிக்கு மேல் அர்ஜென்டினா வீரர்கள் குதிப்பது போன்றும், மெஸ்சி ஜெர்சியை காலால் மிதித்துக் கொண்டிருப்பது போலவும், ஜெர்சியால் அறையை க்ளீன் செய்வது போன்ற வீடியோக்கள் வெளியாகின.

இது மெக்சிகோ நாட்டின் குத்துச் சண்டை வீரர் கனாலோ அல்வாரேஸ்-க்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் ''நம்முடைய ஜெர்சி மற்றும் தேசியக்கொடியால் அறையை மெஸ்சி சுத்தம் செய்வதை பார்த்தீர்களா? என டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், ''நான் மெஸ்சியை பார்த்துவிடக் கூடாது என கடவுளிடம் வேண்டிக் கொண்டால் அவருக்கு நன்றாக இருக்கும்'' எனப் பதிவிட்டுள்ளார்.
இது டுவிட்டரில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மெஸ்சியின் ரசிகர்கள் சிலர், மெஸ்சி தரையை சுத்தம் செய்வது போன்று அதில் காட்டப்படவில்லை. மேலும், மெக்சிகோ கொடி அங்கு இல்லை எனத் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் அல்வாரஸ், மெக்சிகோவை அவமானப்படுத்தினர் எனக் குறிப்பிட்டார்.
முன்னாள் அர்ஜென்டினா வீரர் செர்ஜியோ, ''நீங்கள் பிரச்சினையை தேடாதீர்கள். விளையாட்டு முடிந்த பின்னர், வீரர்கள் அறையில் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியாது. விளையாடிய பின்னர், வியர்வையால் நனைந்திருக்கும் ஜெர்சியை வீரர்கள் தரையில் போட்டு வைப்பது வழக்கமானதுதான் எனத் தெரிவித்தள்ளார்.
அல்வாரேஸ் ''நான் அர்ஜென்டினாவிற்கு மரியாதை அளிக்கிறேன். மெக்சிகோவிற்கும் மரியாதை அளிக்க வேண்டும். நான் அர்ஜென்டினாவை பற்றி பேசவில்லை. மெஸ்சி செய்த மோசமான காரியத்தை பற்றி பேசுகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
- ஈரான்-அமெரிக்கா இடையேயான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி 2-வது சுற்றுக்கு தகுதி பெறும்.
- வேல்சை வீழ்த்தி இருந்ததால் ஈரான் நம்பிக்கையுடன் ஆடும்.
தோகா:
உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள 4 அணிகளும் நேற்றுடன் 2 ஆட்டங்களில் மோதி விட்டன. இன்று முதல் 3-வது மற்றும் கடைசி லீக் போட்டியில் விளையாடுகின்றன.
ஏ பிரிவில் இன்று நடைபெறும் கடைசி ஆட்டங்களில் ஈக்வடார்-செனகல், நெதர்லாந்து- கத்தார் ( இரவு 8.30 ) அணிகள் மோதுகின்றன. இந்த பிரிவில் கத்தார் 2 தோல்வியுடன் ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டது.
நெதர்லாந்து, ஈக்வடார் அணிகள் 1 வெற்றி, ஒரு டிராவுடன் 4 புள்ளிகள் பெற்று உள்ளன. இரு அணிகளும் தங்களது ஆட்டங்களில் டிரா செய்தாலே 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். சென கலை பொறுத்தவரை வெற்றி பெற்றால் தான் வாய்ப்பை பெற இயலும். அந்த அணி 1 வெற்றி, 1 தோல்வியுடன் 3 புள்ளி பெற்றுள்ளது.
குரூப்-பி பிரிவில் இன்று நடைபெறும் போட்டிகளில் இங்கிலாந்து-வேல்ஸ், ஈரான்-அமெரிக்கா (நள்ளிரவு 12.30) அணிகள் மோதுகின்றன.
இங்கிலாந்து 1 வெற்றி, 1 டிராவுடன் 4 புள்ளியும், ஈரான் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 3 புள்ளியும், அமெரிக்கா 2 டிராவுடன் 2 புள்ளியும், வேல்ஸ் 1 டிரா, ஒரு தோல்வியுடன் 1 புள்ளியும் பெற்றுள்ளன.
1966-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து டிரா செய்தாலே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிவிடும். அதிக கோல்கள் இருப்பதால் தோற்றாலும் பாதிப்பு ஏற்படாது. அந்த அணி "ஏ" பிரிவில் முதல் இடத்தை பிடிக்க வேல்சை வீழ்த்த முயற்சிக்கும். வேல்சை பொறுத்தவரை கண்டிப்பாக வெல்ல வேண்டும். அந்த அணிக்கு வாய்ப்பு மிகவும் குறைவே.
ஈரான்-அமெரிக்கா இடையேயான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி 2-வது சுற்றுக்கு தகுதி பெறும். வேல்சை வீழ்த்தி இருந்ததால் ஈரான் நம்பிக்கையுடன் ஆடும். அந்த அணி முதல் முறையாக 2-வது சுற்றுக்கு தகுதி பெற்று புதிய சாதனை படைக்கும் ஆர்வத்தில் இருக்கிறது.
- இரண்டாவது சுற்றில் விளையாட போர்ச்சுக்கல் தகுதி பெற்றது.
- இரண்டாவது பாதியில் புருனோ பெர்னாண்டஸ் 2 கோல்கள் அடித்தார்.
உலக கோப்பை கால்பந்து தொடரில் நள்ளிரவு நடைபெற்ற குரூப் ஹெச் பிரிவு ஆட்டத்தில் பலம் வாய்ந்த போர்ச்சுகல் அணி, உருகுவேயை எதிர்கொண்டது. முதல் பாதிவரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
ஆட்டத்தின் 2வது பாதியின் 54 வது நிமிடத்தில் போர்ச்சுகல் நட்சத்திர வீரர் ரொனால்டோ தலையால் முட்டி உருகுவே வலைக்குள் பந்தை தள்ளினார். ஆனால் மற்றொரு வீரர் புருனோ பெர்னாண்டஸ் மேல் பந்து பட்டுச் சென்றதால் அந்த கோலை நடுவர் பெர்னாண்டசிற்கு வழங்குவதாக அறிவித்தார்.

ஆட்ட நேரம் முடிந்து நிலையில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அப்போது 93வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்தி புருனோ பெர்னாண்டஸ் மீண்டும் ஒரு கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

இதன் மூலம் 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை வீழ்த்திய போர்ச்சுக்கல், தனது .பிரிவில் முதலிடம் பிடித்ததுடன், அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.
- முதல் பாதி வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
- ஜி பிரிவு புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது பிரேசில்.
கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் இரவு 9.30 மணிக்கு தொடங்கிய குரூப் ஜி பிரிவு ஆட்டம் ஒன்றில் வலிமையான பிரேசில் அணியும், சுவிட்சர்லாந்து அணியும் மோதின. கோல் அடிப்பதற்கு இரு அணிகளும் தீவிர முயற்சி மேற்கொண்ட போதும், முதல் பாதிவரை கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால் ஆட்டம் சமனில் இருந்தது.
இரண்டாவது பாதி ஆட்டத்தின் 83வது நிமிடத்தில் பிரேசில் வீரர் வினிசியஸ் ஜூனியர் எடுத்துக் கொடுத்த பந்தை, மற்றொரு வீரர் கேஸ்மிரோ கோலாக மாற்றினார். இறுதிவரை வேறு கோல் எதுவும் அடிக்கப்படாததால் அந்த கோலே வெற்றி கோலாகவும் அமைந்தது. ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற பிரேசில் ஜி பிரிவு புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்ததுடன், முதல் அணியாக அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.






