என் மலர்
ஈக்வடார்
- மின்கசிவு காரணமாக கணினி முடங்கியதால் ரோப் கார்கள் நின்றுவிட்டன.
- 10 மணி நேர போராட்டத் துக்கு பிறகு 75 சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டனர்.
ஈக்வடார்:
ஈக்வடார் தலைநகர் குயிட்டோவில் உலகின் மிக உயரமான சுற்றுலா ரோப் கார் வசதி உள்ளது. மலைப்பகுதியில் 2½ கிலோ மீட்டர் வரை பயணிக்கக் கூடிய கேபிள் கார்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில் ரோப் கார்கள் செல்கின்றன. இந்த நிலையில் ரோப் கார்களில் சுற்றுலா பயணிகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று பழுது ஏற்பட்டதால் நடுவழியில் சிக்கி கொண்டனர்.
மின்கசிவு காரணமாக கணினி முடங்கியதால் ரோப் கார்கள் நின்றுவிட்டன. கோளாறை சரி செய்து ரோப் கார்களை உடனடியாக இயக்க முடியவில்லை. இதையடுத்து சுற்றுலா பயணிகளை மீட்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டனர். கயிறுகள் மூலம் ரோப் கார்களில் தவித்தவர்கள் பத்திரமாக கீழே கொண்டு வரப்பட்டனர். 10 மணி நேர போராட்டத்துக்கு பிறகு 75 சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டனர்.
சுற்றுலா பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று குயிட்டோ நகராட்சி நிர்வாகம் தெரிவித்தது.
- விபத்தில் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை.
- விமானத்தின் மீது மோதிய பறவை ஆண்டியன் காண்டன் வகை ராட்சத பறவையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
லாஸ்ரியோஸ்:
ஈக்வாட்டார் நாட்டின் லாஸ் ரியோஸ் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென அந்த விமானத்தின் மீது ராட்சத பறவை ஒன்று மோதியது.
பறவையின் காலும், இறக்கையும் மோதியதில் விமானத்தின் காக்பிட் அறை சேதமடைந்தது. இதில் கண்ணாடிகள் சிதறி விழுந்ததில் விமானி படுகாயம் அடைந்தார். அவரது முகத்தில் ரத்தம் கொட்டியது. உடனே அவர் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது. விமானம் தரை இறங்கியதும், விமானி ரத்தம் சொட்ட, சொட்ட விமானத்தில் இருந்து வெளியே வந்தார். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை.
விமானத்தின் மீது மோதிய பறவை ஆண்டியன் காண்டன் வகை ராட்சத பறவையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் விமானி அதிர்ஷ்டசாலி என்றும், அதனால் தான் அவர் உயிருடன் மீண்டார் எனவும் குறிப்பிட்டு உள்ளார்.
தற்போது விமானத்தின் காக்பிட் பகுதியில் பறவை மோதி நிற்கும் காட்சி சமூக வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.
- 30 பேரை கொண்ட கும்பல் ஒன்று கையில் துப்பாக்கிகளுடன் மோட்டார்சைக்கிள்களில் வந்து இறங்கியது.
- தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள எஸ்மரால்டாஸ் மாகாணத்தில் சிறிய மீன்பிடி துறைமுகம் ஒன்று உள்ளது. நேற்றுமுன்தினம் இந்த துறைமுகம் வழக்கம்போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.
அப்போது அங்கு 30 பேரை கொண்ட கும்பல் ஒன்று கையில் துப்பாக்கிகளுடன் மோட்டார்சைக்கிள்களில் வந்து இறங்கியது. அவர்கள் துறைமுகத்தில் இருந்த வணிகர்கள் மற்றும் ஊழியர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. அங்கிருந்த அனைவரும் உயிர் பயத்தில் அலறி துடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனாலும் அந்த கும்பல் கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுத்தள்ளியது.
பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இந்த கொடூர சம்பவத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை.
எஸ்மரால்டாஸ் மாகாணத்தில் சமீபகாலமாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதும், இதன்காரணமாக அங்கு கடந்த மாதம் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
- ஈக்வடாரில் சிறைச்சாலை வளாகத்திற்குள் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
- அப்போது நடந்த வன்முறையில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
குவிட்டோ:
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் உள்ள சிறைச்சாலைகளில் அடிக்கடி கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் நடந்து வருகிறது. சிறைச்சாலை வளாகத்திற்குள் கைதிகளுக்கு இடையே நடக்கும் கோஷ்டி மோதல்களே பெரும் கலவரமாக உருவெடுத்து வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இதுபோன்ற மோதல்களை தடுக்க சிறைச்சாலைகளில் குழுத் தலைவர்களாக வலம் வரும் நபர்களை வேறு சிறைகளுக்கு மாற்றும் நடவடிக்கையை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.
அதன்படி ஈக்வடார் தலைநகர் குவிட்டோவில் உள்ள இன்கா சிறைச்சாலையில் இருந்து 3 முக்கிய கேங் லீடர்களை வேறு சிறைக்கு மாற்றும் பணி நடைபெற்றது.
இந்நிலையில், கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டு கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.






