என் மலர்tooltip icon

    வழிபாடு

    குலதெய்வம் உங்கள் மீது கோபமாக இருப்பதை காட்டும் அறிகுறிகள் என்னென்ன?
    X

    குலதெய்வம் உங்கள் மீது கோபமாக இருப்பதை காட்டும் அறிகுறிகள் என்னென்ன?

    • குலதெய்வம் என்பது வாழையடி வாழையாக, தலைமுறை தலைமுறைகளாக நம் முன்னோர்கள் வழிபட்டு வருவது.
    • நம் குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய நேர்த்திக்கடன், பூஜைகளை சரிவர செய்ய வேண்டும்.

    குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம்கூடவே இருந்து வழிகாட்டும் அருட்சக்தியாகக் கருதப்படுகிறது. நமக்கு ஒரு கஷ்டம் என்றால் குலதெய்வம் தான் உடனே முன் வந்து காப்பாற்றும், மற்ற தெய்வங்கள் எல்லாம் அடுத்துதான் வரும் என கிராமங்களில் சொல்வார்கள்.

    குழந்தை பிறந்தவுடன் அதற்கு பெயர் வைப்பது முதல் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்தி காது குத்துவது வரை அனைத்தும் குலதெய்வத்தின் கோவிலில்தான். குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை முதலில் வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குவது வழக்கம். சுப நிகழ்ச்சிகளை தொடங்குபவர்கள் உடனே குலதெய்வம் கோவிலுக்கு செல்ல முடியாவிட்டால் குல தெய்வத்தை நினைத்து காணிக்கையை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து, குலதெய்வம் கோவிலுக்கு செல்லும்போது செலுத்தி விடுவது வழக்கம்.

    குலதெய்வம் என்பது நமது முன்னோர்களினால் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வருவது. ஆகவே, எப்படியாவது நமது குலதெய்வத்தை அறிந்து வழிபடுதல் அவசியம்.

    குலதெய்வ வழிபாடு மிக முக்கியமான ஒரு வழிபாடாகும், பலர் தங்களுக்கு விருப்பமான தெய்வம் (இஷ்ட தெய்வம்) ஒன்றை தொடர்ந்து வழிபட்டு வருவார்கள். உதாரணமாக, திருப்பதி வெங்கடாசலபதி கோவில் போன்ற பிரபல கோவில்களுக்கு மட்டுமே செல்வது பலர் வழக்கம். இவர்களில் சிலர் வேறு கோவில்களுக்கு கூட செல்வது கிடையாது.



    எது எப்படி இருந்தாலும் குலதெய்வத்தை வழிபடாமல் எத்தனை கோவில்களுக்கு சென்றாலும் பலன் குறைவு தான். மூலவரை வழிபடாமல் அங்கிருக்கும் சுவர் சித்திரங்களை வழிபட்டு வருவது போல் தான் பிற வழிபாடுகளை மட்டும் செய்வது. குலதெய்வம் என்பது வாழையடி வாழையாக, தலைமுறை தலைமுறைகளாக நம் முன்னோர்கள் வழிபட்டு வருவது. அப்படிப்பட்ட நம் குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய நேர்த்திக்கடன், பூஜைகளை சரிவர செய்ய வேண்டும். அதை சரியாக செய்ய தவறினாலோ அல்லது மறந்து விட்டாலோ குலதெய்வத்தின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். குலதெய்வம் நம் குடும்பத்தின் மீது கோபமாக இருப்பதை சில அறிகுறிகள் மூலமாக தெரிந்துக் கொள்ளலாம்.

    உங்கள் குலதெய்வ கோவிலுக்கு நீங்கள் செல்லும் போது குடும்பத்தில் இருப்பவர்கள் சிலர் உங்களோடு கோவிலுக்கு வரமுடியாத சூழ்நிலை உருவாகும். தடங்கல்கள் ஏற்படும். அதையும் மீறி கோவிலுக்கு சென்றாலும் அங்கே பூஜை செய்ய முடியாதப்படி தடங்கல்கள் ஏற்படும். அப்படியும் பூஜை செய்து வழிபாட்டால் அங்கேயோ அல்லது வீட்டிற்கு திரும்பி வரும்போதோ பிரச்சனை ஏற்பட்டு மனக்கஷ்டத்தோடு வரவேண்டி இருக்கும். குடும்பத்தோடு கோவிலுக்கு சென்றுவிட்டாலும் காயம் ஏற்படுவது போன்று ஏதாவது அசம்பாவிதம் நடக்கும்.

    உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நினைப்பது ஒன்றாக இருக்கும். ஆனால் நடப்பது வேறொன்றாக இருக்கும். தீயசக்திகள் கனவில் வருவது போன்ற கனவுகள் ஏற்படும். வாழ்வில் தொடர்ந்து பிரச்னை மேல் பிரச்னை வந்துக் கொண்டேயிருக்கும்.

    சில நேரங்களில் தெய்வத்தின் மீது திடீரென வெறுப்புணர்ச்சி தோன்றுவது. குடும்ப உறுப்பினர்களுக்கு திடீரென உடல்நலக் குறைவுகள் ஏற்படுவது, மருத்துவ சிகிச்சைகள் பலனளிக்காமல் இருப்பது. வேலை தேடுவதில் தடைகள், தொழிலில் நஷ்டம், முன்னேற்றம் இல்லாமல் இருப்பது.

    இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் நம் குலதெய்வம் கோபமாக இருக்கிறது என்பதை தெரிந்துக் கொள்ளலாம். இதை தவிர்க்க நம் வீட்டில் குலதெய்வத்திற்கு என்றே ஒரு விளக்கை ஏற்றி, 'நாங்கள் தெரியாமல் செய்த பாவங்களுக்கு எங்களை மன்னித்து உன் சன்னதிக்கு வந்து வழிப்பட அருள் புரியுங்கள்' என்று வேண்டி வழிபடலாம். மேலும், குலதெய்வ கோவிலுக்குச் சென்று வழிபட்டு, பரிகாரங்களைச் செய்து, உங்கள் குலதெய்வத்தின் அருளைப் பெறுவது நல்லது.

    Next Story
    ×