search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    லட்சுமி அருள்பாலிக்கும் தலங்கள்
    X

    லட்சுமி அருள்பாலிக்கும் தலங்கள்

    • திருப்பதி திருமலை தலத்தில் ஸ்ரீ விக்னேஸ் வரரின் ஆலயம் ஒன்று உள்ளது.
    • திருவாரூரில் ஸ்ரீ பஜூலட்சுமி என்று லட்சுமிக்கு ஒரு ஆலயம் உள்ளது.

    திருப்பதி திருமலை:-

    திருப்பதி திருமலை தலத்தில் ஸ்ரீ விக்னேஸ் வரரின் ஆலயம் ஒன்றுள்ளது. அதில் அஷ்டலட்சுமிகளான, ஸ்ரீ ஆதிலட்சுமி, ஸ்ரீ வீரலட்சுமி, ஸ்ரீ கஜலட்சுமி, ஸ்ரீ தான்யலட்சுமி, ஸ்ரீ விஜய் லட்சுமி, ஸ்ரீ தீப லட்சுமி, ஸ்ரீ தனலட்சுமி, ஸ்ரீ ஐஸ்வரியலட்சுமி எனும் திருநாமங்களோடு அர்ச்சாவதார மூர்த்திகளாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார்கள். இம்மூர்த்தங்களை ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்து வைத்தார்.

    ஸ்ரீ ரங்கம்:-

    ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டப வீதி புது அக்ரஹாரத்தில் அஷ்ட லட்சுமி மண்டபம் என்றே ஒரு மண்டபம் உள்ளது. அதில் நுழைவுப் பகுதி முன் வாயிலுக்கு ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி வாசல் என்பது பெயராகும். அம்மண்டபத்தினுள் எண் திசைகளுக்கும் ஒவ்வொன்றாக எட்டு லட்சுமி மூர்த்தங்கள் உள்ளன. ஒவ்வொன்றிற்கும் இரண்டிரண்டு திருநாமங்களும் உள்ளன.

    1. ஸ்ரீ வித்யலட்சமி - யசோலட்சுமி, 2. ஸ்ரீ தனலட்சுமி - கஜலட்சுமி, 3. ஸ்ரீ சந்தானலட்சுமி - தான்யலட்சுமி, 4. ஸ்ரீ தைரிய லட்சுமி - சித்தலட்சுமி, 5. ஸ்ரீ சாம்ராஜ்யலட்சுமி - மோக்ஷ லட்சுமி, 6. ஸ்ரீ சௌர்யலட்சுமி - வீர லட்சுமி, 7. ஸ்ரீ லட்சுமி - ஜயலட்சுமி, 8. ஸ்ரீ பிரசன்னலட்சுமி - சௌபாக்ய லட்சுமி எனும் திருநாமங்களாகும்.

    பெங்களூர்:-

    கர்நாடக மாநிலம், பெங்களூரில் விவேக நகருக்கு அருகில் உள்ள ஈஜிபுரம் எனும் இடத்தில ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி திருக்கோவில் ஒன்றுள்ளது. இதில் பலகாலமாக அஷ்டல லட்சுமிகளை 8 கலசங்களில் ஆவாஹனம் செய்து அஷ்ட லட்சுமி பூஜை செய்து வந்தார்கள். இப்«பாது அங்கு ஸ்ரீ கந்த மரத்தால் (சந்தனமரம்) செய்யப்பட்ட தாருஜம், தாருமயீ எனும் வகை அஷ்ட லட்சுமிகளின் அர்ச்சா மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாட்டில் உள்ளன. இது மிகவும் விசேஷமான மூர்த்தங்களாகும். செஞ்சந்தன மரத்தில் மஹாலட்சுமி வடிவத்தை சிற்ப முறைப்படி செய்து பூஜித்தால் லட்சுமி கடாக்ஷம் கிடைக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு.

    திருவலம்:-

    சென்னையில் இருந்து 120 கி.மீ தொலைவில் உள்ளது திருவலம் என்ற திருத்தலம். இத்தலத்தில் ஜகத்குரு, ஸ்ரீ ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அஷ்டலட்சுமி திருக்கோவில் உள்ளது. இங்கு அஷ்டலட்சுமிகளும் இருந்து அருள்பாலிக்கின்றனர்.

    மதுராந்தகம்:-

    சென்னையில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் உள்ள மதுராந்தகத்தில் இருக்கும் ஏரிகாத்தராமர் ஆலயத்தில் ஜனக வல்லித்தாயார் என்ற திருநாமம் கொண்டு பிராட்டியார் அருள்பாலித்து வருகிறாள். மேலும் அதே மதுராந்தகத்தில் தேரடித் தெருவிற்கு அருகில் ஸ்ரீ தேவி சரணம் என்ற வளைவுடன் கூடிய, சாஸ்த்திர அடிப்படையில் அமைக்கப்பட்ட நூதனமான ஒரு ஸ்ரீதேவி திருக்கோவில் உள்ளது. இங்குள்ள தாயாரின் திருநாமம் அஷ்டலட்சுமி சவுந்தர்ய மந்த்ர பீடேஸ்வரி ஸ்ரீதேவி என்பதாகும்.

    திருவாரூர்:-

    திருவாரூரில் ஸ்ரீ பஜூலட்சுமி என்று லட்சுமிக்கு ஒரு ஆலயம் உள்ளது. இக்கோவிலின் ஸ்தல விருட்சமான புன்னை மரத்தினடியில் தாயார் அவதாரம் செய்துள்ளார். எனவே இந்த பஜூலட்சுமிக்கு புன்னைப் பிராட்டி என்றும் ஒரு திருநாமம் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×