என் மலர்

  வழிபாடு

  பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவில் மற்றும் நாகர்கோவில் நாகராஜா கோவில்
  X
  பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவில் மற்றும் நாகர்கோவில் நாகராஜா கோவில்

  பூதலிங்கசாமி, நாகராஜா கோவில்களில் தேரோட்டம் ரத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதையொட்டி பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவில் மற்றும் நாகர்கோவில் நாகராஜா கோவில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
  குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலிலும், நாகர்கோவில் நாகராஜா கோவிலிலும் ஆண்டுதோறும் தை மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

  அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 17-ந்தேதி தேரோட்டமும், 18-ந்தேதி ஆராட்டு விழாவும் நடைபெறுவதாக இருந்தது. இதேபோன்று நாகர்கோவில் நாகராஜா கோவிலில் கடந்த 10-ந்தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9-ம் திருவிழாவான 18-ந்தேதி தைப்பூசத்தையொட்டி தேரோட்டமும், 19-ந்தேதி ஆராட்டு விழாவும் நடைபெறுவதாக இருந்தது.

  இந்த நிலையில் தமிழக அரசு கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பையொட்டி இன்று(வெள்ளிக்கிழமை) முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

  இதனால் திருவிழா நடக்கும் பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோவில் மற்றும் நாகர்கோவில் நாகராஜா கோவிலில் வாகன பவனி மற்றும் தேரோட்டம் நடைபெறுமா? என்ற கேள்வி பக்தர்கள் மத்தியில் எழுந்தது.

  இதுகுறித்து பல்வேறு அமைப்பினரும், சட்டமன்ற உறுப்பினர்களும் மாவட்ட கலெக்டரிடம் பாரம்பரிய முறைப்படி திருவிழாவை நடத்த கோரிக்கை வைத்திருந்தனர்.

  இந்தநிலையில் குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் வெளியிட்டுள்ள ஒரு செய்திப்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

  தமிழக அரசு இன்று முதல் 5 தினங்களுக்கு பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை என்றும், கோவில் திருவிழாக்களில் பக்தர்கள் கலந்து கொள்ளவும், வாகன பவனி மற்றும் தேரோட்டம் நடத்தவும் அனுமதி இல்லை என குறிப்பிட்டுள்ளது.

  எனவே இன்று முதல் பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலிலும், நாகர்கோவில் நாகராஜா கோவிலிலும் திருவிழாவிற்கான வாகன பவனி மற்றும் தேரோட்டம் ரத்து செய்யப்படுகிறது.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×