search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தபோது எடுத்த படம்.
    X
    முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தபோது எடுத்த படம்.

    முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவில் விழா: பால்குடத்துடன் பக்தர்கள் ஊர்வலம்

    முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவில் கொடைவிழாவையொட்டி பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.
    முப்பந்தல் ஆலமூடு இசக்கி அம்மன் கோவில் பூக்குழி கொடைவிழா கடந்த 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    நேற்று ஆரல்வாய்மொழி அகலிகை ஊற்று பிள்ளையார் கோவிலில் இருந்து பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தின் முன் ஆலமூடு அம்மன் நிலை வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது. பின்னர் அம்மன் திருமுகம் ஏந்திய யானைகள் அணிவகுத்து சென்றன.

    பிறகு விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் சுமந்து வந்தனர். பெண்கள் முளைப்பாரியை எடுத்து வந்தனர். மேலும் பல பக்தர்கள் அலகு குத்தியும், சூரிய காவடியுடனும், பறக்கும் காவடியுடனும் வந்தனர். ஊர்வலம் கோவிலை வந்தடைந்ததும் அம்மனுக்கு கலச பூஜை, அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அன்னதானம் நடைபெற்றது.

    பின்னர் சுவாமிகளின் பாயாச குளியலும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. மாலையில் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து கோவிலை வலம் வந்தனர்.

    தொடர்ந்து பூப்படைப்பும், பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கினர். இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் வந்து இருந்தனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் சாரிட்டபிள் டிரஸ்ட் தலைவர் அருணாசலம் மற்றும் நிர்வாகிகள், பக்தர்கள் சேவலா சங்கத்தினர், விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.
    Next Story
    ×