search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வாராஹி அம்மன்
    X
    வாராஹி அம்மன்

    ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு உகந்த மந்திரங்கள்

    ஒருவர் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் வெற்றி பெற வேண்டுமானால் வாராகியின் அருளைப் பெற வேண்டியது அவசியமாகும். தோல்வியை துரத்தி எளிதில் வெற்றி கொடுக்கும் வடிவம்தான் இந்த வாராகி.
    ஓம் ச்யாமளாயை வித்மஹே
    ஹல ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ வாராஹி ப்ரசோதயாத்

    ஸ்ரீ வாராஹி மூல மந்திரம் :

    1) ஒம் க்லீம் உன்மத்தபைரவி வாராஹி
    ஸ்வ்ப்பண்ம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா.

    2) ஒம் ஐம்க்லெளம் ஐம்நமோ பகவதீ வார்த் தாளி , வார்த்தளி

    வாராஹி வராஹமுகி வராஹமுகி

    அந்தே அந்தினி நம :
    ருத்தே ருந்தினி நம :
    ஜம்பே ஜம்பினி நம :
    மோஹே மோஹினி நம :
    ஸதம்பே ஸ்தம்பினி நம:
    ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்

    ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி
    ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு

    சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்
    ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்

    3) ஓம் வாம் வாராஹி நம:

    ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:

    ஸ்ரீ வராஹி அம்மன் துதி :

    ஓம் குண்டலினி புரவாசினி , சண்டமுண்ட விநாசினி ,

    பண்டிதஸ்யமனோன்மணி , வாராஹீ நமோஸ்துதே!

    அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி , அஷ்டதாரித்ரய நாசினி

    இஷ்டகாமப்ரதாயினி , வாராஹீ நமோஸ்துதே!

    தியான சுலோகம்
    முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்

    கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி :

    வேண்டுதல் ; செல்வம் பெருக

    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்
    க்லீம் வாராஹி தேவியை நம :

    க்லீம் வாராஹிமுகி
    ஹ்ரீம் ஸித்திஸ்வரூபிணி ஸ்ரீம்

    தனவ சங்கரி தனம்
    வர்ஷய வர்ஷய ஸ்வாஹா.

    சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வராஹி அம்மன். பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்). அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் இந்த சப்த கன்னியர் ஆகும்.

    சப்த கன்னியர் என்னும் பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டி. இவர்களில் பெரிதும் மாறுப்பட்டவள் இந்த வராகி. மனித உடலும், வராகி பன்றி முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள்.

    ஆனால் அன்பிலே, ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவளது ரதம் கிரி சக்கர காட்டு பன்றிகள் இழுக்கும் ரதமாகும். இந்தியாவில் வராஹிஅம்மனுக்கு இரு இடங்களில் தான் ஆலயம் உள்ளது.
    Next Story
    ×