என் மலர்
இஸ்லாம்
இணைவைப்பவர்கள் மக்காவை நோக்கி பயணித்த போது, முஸ்லிம்கள் களத்தில் இறங்கி காயமடைந்தவர்களையும், வீர மரணத்தைத் தழுவியவர்களையும் காணச் சென்றனர்.
உஹுத் போரில் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கும், ஏனைய முஸ்லிம்களுக்கும் பலத்த காயமும் களைப்பும் ஏற்பட்டிருந்தது. இருப்பினும் உரிய நேரத்திற்கு அவர்களெல்லாம் தொழுதனர். நபி முஹம்மது(ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழ, நின்று தொழ இயலாத தோழர்களும் அவ்வாறே தொழுதனர். இதனை, காலித் பின் வலீத் உற்று நோக்கிக் கொண்டிருந்தார். அவருடைய மனதில் ம் இஸ்லாமிற்கு எதிராகச் செய்யும் காரியங்கள் தவறானது என்று தோன்றிக் கொண்டே இருந்தது. ஆனால் அவர் மக்காவாசிகளுக்கு ஆதரவாகவே இருந்தார்.
இணைவைப்பவர்கள் மக்காவை நோக்கி பயணித்த போது, முஸ்லிம்கள் களத்தில் இறங்கி காயமடைந்தவர்களையும், வீர மரணத்தைத் தழுவியவர்களையும் காணச் சென்றனர். பெரும்பாலோரின் உடல் சிதைந்திருந்ததால் அடையாளம் காண முடியாத அளவிற்கு இருந்தனர். எண்பதற்கும் மேற்பட்ட காயங்களுடனிருந்த ஸஅது இப்னு ரபீஆ தனது இறுதி சுவாசித்தில் இருந்தபோதும், அல்லாஹ்வின் தூதர் மீது ஸலாம் சொல்லிவிட்டு, தான் சொர்க்கத்தின் நறுமணத்தை உணர்வதாகச் சொன்னவர், “உங்களில் ஒருவர் உயிருடன் இருக்கும் நிலையில் நபியவர்களின் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் உங்களுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது” என்று முஸ்லிம்களிடம் தனது இறுதி வார்த்தைகளைக் கூறி உயிர் நீத்தார்.

ஒரு நேரத் தொழுகையைக் கூடத் தொழாத உஸைம் என்பவரை, சுவனவாசிகளில் ஒருவர் என்றார்கள் நபி முஹம்மது (ஸல்). காரணம் உஸைம் உயிர் பிரியும் முன்பு, தான் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டு, இஸ்லாம் மீதுள்ள பிரியத்தினால் போரில் கலந்து கொண்டு, அல்லாஹ்வின் தூதரோடு சேர்ந்து எதிரிகளிடம் போர் புரிந்து மரணத்தைத் தழுவியவர்.
உஹுதுப் போரில் உயிர் தியாகிகளாகக் கொல்லப்பட்டவர்களை இரண்டிரண்டு பேராக ஒரே துணியில் சேர்த்து வைத்துக் கஃபனிட்டு ‘இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டு, ஒருவர் சுட்டிக்காட்டப்பட்டதும் அவரின் உடலை உட்குழியில் முதலில் வைத்து பின்னர் அடக்கம் செய்யப்பட்டனர். 'மறுமை நாளில் இவர்களுக்கு நானே சாட்சியாவேன்' என்று கூறிவிட்டு, அவர்களின் இரத்தத்துடனேயே அவர்களை அடக்கம் செய்யும்படி உத்தரவிட்டார்கள் நபி(ஸல்). அவர்களுக்காக நபி(ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை தொழவுமில்லை, மரணித்தவர்கள் நீராட்டப்படவுமில்லை.
“முஃமின்களில் நின்றுமுள்ள மனிதர்கள் அல்லாஹ்விடம் அவர்கள் செய்துள்ள வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொண்டார்கள்; அவர்களில் சிலர் ஷஹீதாக (உயிர் தியாகியாக) வேண்டும் என்ற தம் இலட்சியத்தையும் அடைந்தார்கள்; வேறு சிலர் ஆர்வத்துடன் அதை எதிர் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். எந்த நிலைமையிலும் அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து சிறிதும் மாறுபடவில்லை” என்ற திருக்குர்ஆனின் இறைவசனம் அருளப்பட்டது.
ஆதாரம்: இப்னு ஹிஷாம், ஸஹீஹ் புகாரி 3:56:2805, 4:61:3596, 4:64:4079, திருக்குர்ஆன் 33:23
-ஜெஸிலா பானு.

நீ இறந்தவர் என்று சொன்னவர்கள் எல்லாருமே உயிரோடுதான் இருக்கிறார்கள். உனக்கு மனத் துன்பமளிக்கும் ஒரு விஷயம் மக்கா வெற்றிதான் இப்போது எஞ்சியுள்ளது” என்றார்கள்.
உஹுத் போரில் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் முன் பல் உடைக்கப்பட்டு, தலையில் ஏற்பட்ட பலமான காயத்தினால் இரத்தம் வழிந்தோடியது. அப்போது நபிகள் நாயகம் “அல்லாஹ்வின் இறைத்தூதரை காயப்படுத்தியவர்கள் எவ்வாறு வெற்றிபெற முடியும்?” என்று கூறியபோது அல்லாஹ் “நபியே, உமக்கு இவ்விஷயத்தில் ஒரு சம்பந்தமும் இல்லை.
அவன் அவர்களை மன்னித்து விடலாம், அல்லது அவர்களை வேதனைப்படுத்தலாம். நிச்சயமாக அவர்கள் கொடியோராக இருப்பதின் காரணமாக” என்ற திருக்குர்ஆனின் இறைவசனத்தை அருளியதன் மூலம் போரின் வெற்றி தோல்வியை இறைவன் மட்டுமே தீர்மானிக்கிறான், வானங்களிலும், பூமியிலும் உள்ளவையெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியவை. தான் நாடியவர்களை அவன் மன்னிக்கின்றான்; இன்னும் தான் நாடியவர்களை வேதனைப்படுத்தவும் செய்கின்றான் - அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், பெருங்கருணையாளன் என்பது தெளிவு.
நபிகளாரின் முகத்தில் வழிந்தோடிய இரத்தத்தை அலீ(ரலி) அவர்களின் கேடயத்தில் கொண்டு வந்த தண்ணீரை வைத்து நபி முஹம்மது(ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா(ரலி) கழுவினார். இரத்தம் நிற்காமல் இருந்ததால், ஒரு பாயை எடுத்து அது கரிக்கப்பட்டு அந்தச் சாம்பலை நபி(ஸல்) அவர்களின் காயத்தில் பூசினார்.
போரை நிறுத்திக் கொண்டு மக்காவிற்குப் புறப்பட்ட இணைவைப்பாளர்களின் ஆத்திரம் தீராதிருந்ததால் போரில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் சடலத்தின் காது, மூக்கு, பின்ன இதர உறுப்புகளை அறுத்து மகிழ்ந்தனர். வயிறுகளைக் கிழித்து இன்புற்றனர். அபூ ஸுஃப்யானின் மனைவி ஹிந்த் பின்த் உத்பா மக்காவிற்குத் திரும்பும் போது ஹம்ஸா(ரலி) அவர்களின் உடலைச் சிதைத்து அவரது ஈரலை அறுத்து மென்று முழுங்க முயற்சித்து, முடியாமல் அதைத் துப்பிவிட்டுச் சென்றவர், பிற முஸ்லிம் வீரர்களின் குடல்களை அறுத்துத் தனக்குக் கால் கொலுசாகவும், கழுத்து வெற்றி மாலையாகவும் அணிந்து கொண்டு சென்றாள்.
பத்ருப் போரின்போது இணைவைப்பாளர்கள் மடிந்தும் கைதிகளாகவும் பிடிப்பட்டிருந்ததற்குச் சமமாக உஹுத் போரில் முஸ்லிம்கள் இறந்து கிடந்ததைக் கண்டு சந்தோஷப்பட்ட அபூ ஸுஃப்யான் மக்காவிற்குத் திரும்புவதற்கு முன்பு களத்தில் இறங்கி, “உங்கள் கூட்டத்தில் முஹம்மது இருக்கிறாரா?” என்று மூன்று முறை கூக்குரலிட்டான்.

முஸ்லிம்களைப் பதிலளிக்க வேண்டாமென்றார்கள் நபி முஹம்மது(ஸல்). மறுபடியும் அபூ ஸுஃப்யான் அபூ பக்ர் இருக்கிறாரா? என்றும், கத்தாபின் மகன் உமர் இருக்கிறாரா? என்றும் மூன்று முறை கேட்டுப் பார்த்துவிட்டு, ‘இவர்களெல்லாம் ஒழிந்தனர்’ என்று ஏளனமாகப் பேசிச் சிரித்தார். மக்காவாசிகளின் பக்கம் திரும்பி, ‘இவர்களெல்லாம் கொல்லப்பட்டுவிட்டனர்’ என்றார். இதைக் கேட்டு பொறுமை இழந்த உமர்(ரலி), தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், தைரியமாக முன்னேறி வந்து “அல்லாஹ்வின் பகைவனே! பொய் சொல்லாதே.
நீ இறந்தவர் என்று சொன்னவர்கள் எல்லாருமே உயிரோடுதான் இருக்கிறார்கள். உனக்கு மனத் துன்பமளிக்கும் ஒரு விஷயம் மக்கா வெற்றிதான் இப்போது எஞ்சியுள்ளது” என்றார்கள். உடனே அபூ ஸுஃப்யான், “ஹுபலே, உன் கட்சி மேலோங்கிவிட்டது” என்று கவிதை பாடலானார். அதற்கு பதில் தரும் வகையில் நபித்தோழர்கள் “அல்லாஹ்வே மிக உயர்ந்தவன், மிக மேலானவன்” என்றனர். தொடந்து அபூ ஸுஃப்யான், “எங்களுக்கு ‘உஸ்ஸா’ எனும் தெய்வம் இருக்கிறது, உங்களிடம் அது இல்லையே’ என்று முட்டாள்தனமான கவிதையைப் பாடினார்.
அதனை எதிர்க்கும் வகையில் “அல்லாஹ்வே எங்கள் உதவியாளன், உங்களுக்கு உதவியாளனே இல்லையே!” என்று நபிகளார் சொல்லித் தந்ததை முஸ்லிம்கள் சொன்னார்கள். உடனே அபூ ஸுஃப்யான் “இந்நாள் பத்ருப் போர் நடந்த நாளுக்குப் பதிலாகும். நமக்கிடையிலான போரில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருகிறது. உங்கள் கூட்டத்தாரில் நீங்கள் அங்கங்கள் சிதைக்கப்பட்டவர்களைக் காண்பீர்கள்.
அப்படிச் செய்யும்படி நான் கட்டளையிடவுமில்லை” என்று சொல்ல, அதற்கு உமர் (ரலி) “கண்டிப்பாக அதற்கு இது சமமாக முடியாது. எங்களில் கொல்லப்பட்டவர்கள் சுவனத்தில் இருக்கிறார்கள். உங்களில் கொல்லப்பட்டவர்கள் நரகத்தில் இருக்கிறார்கள்” என்று பதிலடி தந்தார்கள்.
அபூ ஸுஃப்யான் எதுவும் பேச முடியாமல், நபி முஹம்மது (ஸல்) உயிருடன் இருப்பதை அறிந்து கொண்டு ‘அடுத்த வருடம் பத்ர் மைதானத்தில் சந்திப்போம்’ என்று சவாலாகச் சொல்ல, “அப்படியே ஆகட்டும்” என்று நபித் தோழர்கள் பதிலுரைக்க, இணைவைப்பாளர்கள் மக்காவிற்குப் பயணமாகினர்.
ஆதாரம்: திருக்குர்ஆன் 3:128-129, ஸஹீஹ் புகாரி 1:4:243, 3:56:3039, இப்னு ஹிஷாம்
- ஜெஸிலா பானு.

இறைவன் அல்லாஹ்வை வணங்கி, அவன் காட்டிய வழியில் நடந்து இம்மையிலும், மறுமையிலும் இறைவனின் திருப்பொருத்தத்தை பெற நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும்.
உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் படைத்தவன் இறைவன். கண்ணுக்கு தெரியாத உயிரினம் முதல் உருவத்தில் மிகப்பெரிய உயிரினங்கள் வரை பல்வேறு வகையான அமைப்பில் உயிரினங்களை இறைவன் படைத்துள்ளான். ஆனால் இறைவனின் படைப்பில் மிகவும் அற்புதமானது மனிதன். வேறு எந்த உயிரினங்களுக்கும் இல்லாத பல்வேறு சிறப்புகளுடன் மனிதனை இறைவன் படைத்துள்ளான். இதையே திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
‘அத்தியின் மீதும், ஜெய்த்தூனின் மீதும் சத்தியமாக, தூர்ஸினாய் மலைத்தொடரின் மீதும் சத்தியமாக, அபயமளிக்கும் இந்த நகரத்தின் மீதும் சத்தியமாக, நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகிய அமைப்பில் படைத்திருக்கிறோம்’ (திருக்குர்ஆன் 95:1-4)
அருள்மறையாம் திருக்குர்ஆனில் அல்லாஹ் தனது கட்டளை களைச் சொல்லும் போது சிலவற்றை மிக அழுத்தமாக சொல்ல நினைத்தால், சிலவற்றின் மீது சத்தியம் செய்து சொல்வதுண்டு. அப்படிப்பட்ட செய்திகளில் மிகுந்த உண்மைத்தன்மையும், பல அத்தாட்சிகளும் இடம் பெற்றிருக்கும்.
அப்படிப்பட்ட ஒரு செய்தியாகத் தான் மனித படைப்பை பற்றி ஏக இறைவன் குறிப்பிடுகின்றான். ‘மனிதனை அழகிய அமைப்பில் படைத்திருக்கின்றோம்’ என்று சொல்வதிலும் கூட ஒரு மறை பொருளை வைத்துச் சொல்கிறான்.
‘அழகு’ என்பது கண்ணோட்டங்களைப் பொருத்தது. ஒருவருக்கு அழகாய்த் தெரிவது, பிறருக்கு பிடிக்காமல் போகலாம். நிறங்களில், தோற்றங்களில், வடிவமைப்புகளில் அழகுணர்ச்சி வேறுபட்டு நிற்கலாம். அதில் உண்மையும் இருக்கலாம்.
இந்த வசனத்தில் ‘அழகிய அமைப்பில்’ என்ற சொல்லாடல் கையாளப்பட்டிருப்பதால் அழகையும் அமைப்பையும் இரண்டையும் சேர்த்தே அல்லாஹ் குறிப்பிடுகின்றான். மனிதன் அழகானவன், அழகிய வடிவத்தில் படைக்கப்பட்டிருப்பவன். உச்சந்தலை முதல் உள்ளங்கால்கள் வரை உள்ள உடல் உறுப்புகள் அனைத்தும் மனிதனுக்கு பயன்படும் வகையில் இறைவன் அமைத்திருக்கின்றான். வெளி உறுப்புகள், உள் உறுப்புகள் என்று எத்தனையோ உடல் உறுப்புகள் அற்புத படைப்பாய் அமைந்து மனித வாழ்க்கைக்கு உதவுகிறது.
சிரிப்பு, அழுகை, துக்கம், மகிழ்ச்சி, கோபம், அமைதி, என்று உருவமில்லா எத்தனை உணர்ச்சிகள். ஒன்றோடொன்று வேறுபட்ட தன்மை கொண்டாலும் குறிப்பிட்ட நிகழ்வுகளில் சரியான காலகட்டத்தில் அவை தன்னையறியாமல் வெளிப்படும் தன்மையை அளித்திருக்கிறான் ஏக இறைவன். இதோ தனது படைப்பு குறித்து திருக்குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:
“உங்கள் தாய்மார்களின் வயிற்றில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களைப் படைக்கின்றான். அந்த அல்லாஹ்தான் உங்கள் இறைவன்” (39:6).
ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பாக மனிதனின் முதலும் முடிவும் பற்றிய அறியாத அந்த கால சூழ்நிலையில் கருவறைத் தத்துவத்தை சொன்னது திருக்குர்ஆன். இன்று விஞ்ஞானம் மெய்ப்பிக்கின்ற அறிவியல் செய்தியை அன்றே அறிவித்தது திருக்குர்ஆன்.
மனிதன் விலை மதிப்பற்றவன் மட்டுமல்ல. அவன் தனித்தவனும் கூட. இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரும் ஒரு விஷயத்தில் தனித்தன்மை கொண்டவர்களாகவே படைக்கப்படுகிறார்கள். எல்லா வகைகளிலும் ஒத்து போகின்ற இரட்டை பிறவிகளும் இந்த ஒரு விஷயத்தில் வேறுபட்டு நிற்பர். அதுதான் மிக அற்புதமான விரல் ரேகைகள்.

உலகம் தோன்றிய காலம் தொட்டு இன்று வரை எண்ணிலடங்கா மனித உயிரினங்கள் படைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒருவருக்கு கூட கைரேகை ஒன்றாய் அமையவில்லை. இதன் மூலம் அல்லாஹ்வின் படைப்பாற்றல் எவ்வளவு நுணுக்கமானது என்பதை அறிந்துகொள்ளலாம்.
இதையே திருக்குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:
“ஆம்! அவனுடைய விரலின் நுனியைக் கூட மிக துல்லியமாக அமைப்பதற்கு நாம் ஆற்றல் பெற்றுள்ளோம்” (75:4).
ஜனன மரணங்கள் எத்தனை நிகழ்ந்தாலும் இந்த நிகழ்விற்கு முடிவு இருக்காது. அதுமட்டுமல்ல மனிதனின் தனித்தன்மையை நிரூபிக்க இன்றைய அறிவியல் ரேகையையும், மரபணுக்களின் தொகுப்பையும் மட்டுமே நம்பியுள்ளது.
மனிதன் மரணம் அடையக்கூடியவன் தான். இருந்தும் மறுமை நாளில் அவன் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவான். அப்போது அவனது நன்மைகள், தீமைகளுக்கு ஏற்ப அவனுக்கு சொர்க்கம் அல்லது நரகம் பரிசாக வழங்கப்படும்.
‘இறந்த பிறகு அடக்கம் செய்யப்படும் மனித உடல் சில மாதங்களில் மண்ணோடு மண்ணாக மட்கிப்போகும். அப்படிப்பட்ட மனிதன் மீண்டும் எப்படி உருவாக்கப்படுவான்’ என்ற கேள்வி ஆதி தொட்டு இன்றுவரை நிலைத்திருக்கின்ற ஒன்று. அருள்மறை திருக்குர்ஆன் இதற்கு இவ்வாறு பதிலுரைக்கின்றது:
“இறந்து, உக்கி மண்ணாய் போன அவனுடைய எலும்புகளை நாம் ஒன்று சேர்க்க மாட்டோம் என்று மனிதன் எண்ணிக்கொண்டிருக்கின்றானா?” (75:3).
அல்லாஹ்வின் தூதர் அருமை நாயகம் நபிகள் நாயகம் அவர்கள் சொன்னார்கள்:
“மனிதனின் உடலில் எலும்பு ஒன்று உள்ளது. அதை பூமி ஒருபோதும் புசிக்காது. அதை வைத்தே மீண்டும் மறுமையில் அவன் படைக்கப்படுவான்”.
அப்போது அருகில் இருந்த தோழர்கள் கேட்டனர் ‘அது எந்த எலும்பு என்று எங்களுக்கு விளக்கிச் சொல்ல முடியுமா?’
அதற்கு நபிகளார் பதில் அளிக்கும்போது, ‘உள்வால் எலும்பின் நுனி’ என்றார்கள். (முஸ்லிம்-5662)
ஜெர்மன் விஞ்ஞானி ஹான்ஸ் ஸ்பீமேன் என்பவர் உள்வால் எலும்பு நுனி குறித்து தீவிரமாக ஆராய்ந்தார். அதனை பல ஆயிரம் டிகிரி வெப்பத்தில் எரிக்கவும், வீரியம் மிக்க அமிலங்களின் கலவை கொண்டு அதனை கரைக்கவும் முயற்சி செய்தார். அதில் சிறு மாறுதலைக் கூட அவரால் செய்ய முடியவில்லை. ஆராய்ச்சியின் முடிவாய் திருக்குர்ஆன் வார்த்தைகளை உண்மைபடுத்தி உலகிற்கு அறிவித்தார்.
இப்படி எத்தனையோ அத்தாட்சிகளைக் கொண்டு அற்புத படைப்பாய் மனிதனை அல்லாஹ் படைத்திருக்கின்றான். சிந்தித்து பார்க்கும் மக்கள் அவனுக்கு சிரம் பணிய வேண்டாமா?
“இன்னும் உங்களைப் படைத்திருப்பதிலும், உயிரினத்தில் இருந்து பரப்பி இருப்பதிலும் நம்பிக்கையில் உறுதியான சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன” (45:4) என்ற திருக்குர்ஆன் வசனம் முடிவான கருத்தையும் நம்முன்னே பதிவு செய்கிறது.
எனவே அத்தகைய சிறப்பு மிக்க படைப்பாக நம்மை உருவாக்கிய ஏக இறைவன் அல்லாஹ்வை வணங்கி, அவன் காட்டிய வழியில் நடந்து இம்மையிலும், மறுமையிலும் இறைவனின் திருப்பொருத்தத்தை பெற நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். இதுவே நம்மை படைத்த இறைவனுக்கு நாம் செலுத்தும் நன்றியாகும்.
எம்.முஹம்மது யூசுப், உடன்குடி.

முஸ்லிம்களை எதிரிகள் சூழ்ந்ததைப் பார்த்த நபிகளார், முஸ்லிம்களைக் காப்பாற்ற தன்னுடன் சிறு படையைச் சேர்த்துக் கொண்டு எதிரிகளின் படையைத் தாக்கினார்கள்.
உஹுதுப் போரின்போது நபிகளாரைக் காக்க வேண்டுமென்று அவர்களின் தோழர்களான அபூபக்ர்(ரலி), உமர்(ரலி), அலீ(ரலி) ஆகியோர் அங்கு விரைந்து நபிகளாரைச் சுற்றி பாதுகாப்பு அரணாக மாறினர். முஸ்லிம்களை எதிரிகள் சூழ்ந்ததைப் பார்த்த நபிகளார், முஸ்லிம்களைக் காப்பாற்ற தன்னுடன் சிறு படையைச் சேர்த்துக் கொண்டு எதிரிகளின் படையைத் தாக்கினார்கள்.
நபிகளாரைப் பார்த்த கஅப் இப்னு மாலிக்(ரலி) மகிழ்ச்சியில் “முஸ்லிம்களே, நற்செய்தி!! அல்லாஹ்வின் தூதர் வந்துவிட்டார்கள்” என்று உரக்கக் கூறினார். எதிரிகளின் கவனம் அந்த இடத்தில் அவர்கள் மீது வரக் கூடாது என்பதற்காக, கஅபிடம் அமைதி காக்க சைகை செய்தார்கள் நபிகளார். நபிகளார் இறந்துவிட்டார்கள் என்ற தவறான செய்தியால் குழப்பத்திலிருந்த முஸ்லிம்களின் காதுகளுக்கு இன்பச் செய்தி எட்டிவிடவே அவர்கள் நபி முஹம்மது (ஸல்) அவர்களைச் சூழ்ந்து கொண்டனர்.
நபி(ஸல்) அவர்கள் எதிரிகளுடன் போராடி முஸ்லிம்களை மீட்டு மலைக் கணவாய்க்கு அழைத்து வந்து சேர்ந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் மலையை நோக்கி ஒதுங்க முயன்றபோது பலத்த காயங்களாலும் கனமான இரண்டு கவச ஆடையின் காரணத்தாலும் அவர்களால் ஏற முடியவில்லை. தல்ஹா இப்னு உபைதுல்லாஹ்(ரலி) அவர்களின் உதவியால் மேலே ஏறினார்கள்.
நபி(ஸல்) அவர்களைத் தம் தோல் கேடயத்தால் மறைத்துக் கொண்டு பாதுகாத்தபடி நின்றார்கள் அபூ தல்ஹா(ரலி). அபூ தல்ஹா(ரலி), வில்லின் நாணை நன்கு இழுத்து வேகமாக அம்பெறியக் கூடியவர். அம்பெறிகையில் இரண்டு - மூன்று விற்கள் உடைந்தன. யாரேனும் அம்புக் கூட்டுடன் செல்வதைக் கண்டால் நபி(ஸல்) அவர்கள், 'அதை அபூ தல்ஹாவிடம் போடு' என்று சொல்லும் அளவிற்கு வில்லாற்றலுடையவர்.

நபி(ஸல்) அவர்கள் மேலேயிருந்து தலையை உயர்த்திப் போரின் நிலவரத்தையும் மக்களின் நிலையையும் எட்டிப் பார்க்க, அபூ தல்ஹா அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! எட்டிப் பார்க்காதீர்கள். தாங்கள் எட்டிப் பார்க்காமலிருந்தால் என் மார்பு தங்கள் மார்புக்கு முன்னால் கேடயம் போன்று உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும்' என்று கூறினார்கள்.
நபி முஹம்மது(ஸல்) மலைக் கணவாயில் இருந்தபோது குறைஷிகளில் ஒரு கூட்டம் மலையின் மீது ஏறி வந்து தாக்க பல முறை முயற்சித்துத் தோற்றது. நபி (ஸல்) அவர்களின் போர்த் திறமைக்கு முன் காலிதின் போர்த் திறமை தோற்றதை அறியாமல் நபிகளார் குறைஷிகளின் தாக்குதலால் இறந்திருக்கலாம் என்று உறுதியாக எண்ணிய எதிரிகள் போரை நிறுத்திக் கொண்டு மக்காவிற்குப் புறப்பட ஆயத்தமாகினர்.
நபிகளாரின் மனைவி ஆயிஷா(ரலி) மற்றும் உம்மு சுலைம்(ரலி) அவர்களும் வரிந்து கட்டிக் கொண்டு காயமுற்றவர்களுக்குப் பணிவிடைகள் செய்தனர். அவர்கள் தண்ணீர் நிரம்பிய தோல் துருத்திகளைத் தங்கள் முதுகுகளில் சுமந்து கொண்டு காயமுற்று வீழ்ந்து கிடக்கும் மக்களின் வாய்களில் ஊற்றிவிட்டு, பிறகு திரும்பிச் சென்று தண்ணீர் நிரப்பிக் கொண்டு வந்து அவர்களின் வாய்களில் ஊற்றினர்.
முஸ்லிம் படையிலிருந்து கிட்டத்தட்ட எழுபது பேர் இறந்து கிடந்தனர். போர் இவ்வளவு கடுமையாகவும் உக்கிரமாகவும் நடந்து கொண்டிருந்த வேளையில் அல்லாஹுத் தஆலா முஸ்லிம்களுக்கு நிம்மதியளிக்கும் பொருட்டுச் சிறு தூக்கத்தை இறக்கினான். அபூதல்ஹா (ரலி) அவர்களையும் சிறு தூக்கம் பிடித்ததால் அவர்கள் கையிலிருந்து பலமுறை வாள் வீழ்ந்தது. அவர்கள் அதனை எடுக்க அது கீழே மீண்டும் விழுந்தது.
காலைப் பொழுதில் தொடங்கிய போர் முதலில் வெற்றி பிறகு சேதம் என்று ஒரு வழியாக மதிய வேளையில் முடிவுக்கு வந்தது. “அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் 'ரப்'பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - அவனால் அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்” என்ற இறை வசனமும் அருளப்பட்டது.
ஆதாரம்: திருக்குர்ஆன் 3:144, 3:169, இப்னு ஹிஷாம், 4:62:3722, 3723, 3724, 4:63:3811, 4:64:4064, 4:64:4068

வெட்கம் வியாபித்திருக்கிற வரை தான் உலகில் விபரீதங்கள் கட்டுக்குள் இருக்கும். இல்லை என்றால் விளைவுகள் அபாயகரமானது என்பதை உணர்ந்து செயல்படுவோம்.
படைக்கப்பட்ட படைப்பினங்களில் எல்லாம் மிகச்சிறந்த படைப்பாக மனிதனை பகுத்தறிவோடு அல்லாஹ் படைத்திருக்கின்றான். மனிதன் அந்த பகுத்தறிவைக் கொண்டு பேசவும், சிரிக்கவும், சிந்திக்கவும் திறன் கொண்டதால் அவன் மிருகங்களை விட்டும் வேறுபட்டு நிற்கின்றான்.
ஆனால் எந்த உயிரினங்களாலும் உணர்ந்து கொள்ள முடியாத, தன் உயிரோடும், உணர்ச்சிகளோடும் ஒன்றாக கலந்த ஒரு அற்புத குணாதிசயத்தை அல்லாஹ் மனிதனுக்கு வழங்கியதால் அவன் மேலும் சிறந்தோங்கி நிற்கின்றான். அதுதான் ‘வெட்கம்’ மனித ரத்த நாளங்களோடு ஒன்றாக கலந்து சங்கமித்துக் கொண்டிருக்கிற உணர்ச்சிப்பெருக்குதான் அது.
வெட்கம் என்ற உணர்வு இருப்பதால் மட்டுமே, மனித இனம் விபரீதங்களின் வீரியத்தை விட்டு விலகி நிற்கிறது. வெட்கம் விலகும் போது அந்தரங்கங்களும் பாழ்பட்டு போகும்.
ஆடைகள் அணிகிறோம், அந்தரங்கங் களைப் மறைத்துக் கொள்ள; மானத்தை பாதுகாத்துக் கொள்ள. இதை யாரும் மறுத்துச் சொல்வதில்லை. ஆனால் இன்றைய நாளில் ஆண், பெண் ஆடை அணிவதில் கூட கண்ணியங்கள் காற்றில் பறக்கவிடப்பட்டிருக்கின்றன. காரணம் வெட்கம் நம்மைவிட்டு வெகுதூரம் சென்றுவிட்டதால் தானே.
இன்றைய சூழ்நிலைகளின் தாக்கத்தால் மனங்கள் மாறுபட்டு சில மனித ஜென்மங்கள், வெட்கம் என்ற நல்ல பண்பை உதிர்த்துவிட்டு கலாசாரங்களை உதாசீனப்படுத்துவதால் தான் பண்பாடுகள் அழிவை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கின்றன.
அல்லாஹ் சொல்கிறான்: ‘நபியே! நம்பிக்கையாளர்களுக்கு, தம் பார்வைகளை அவர்கள் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தன் வெட்கத்தலங்களை பேணிக்கொள்ள வேண்டும் என்று நீர் கூறுவீராக. இது அவர்களுக்கு மிகத்தூய்மையானது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்கின்றவற்றைப் பற்றி நன்கு தெரிந்தவன்’. (திருக்குர்ஆன்-24:30)
எல்லா பாவங்களின் தொடக்கமும் பார்ப்பதில் இருந்து தான் ஆரம்பம் ஆகிறது. பார்வைகள் தவிர்க்கப்படும் போது அவசியமில்லாத, அனாச்சார, ஆபாச காட்சிகள் காண்பதிலிருந்து விலகி கொள்ள முடியும். அதனால் பாவங்கள் நிகழ்வது தடுக்கப்படலாம்.
இதற்கு வலு சேர்க்கும் வகையிலே, இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘நிச்சயமாக நாணம் கொள்வது ஈமானில் ஒரு பகுதி’ என்று அண்ணல் எம் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியதாக புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அபுஹுரைரா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் சொன்னதாக அறிவிக்கிறார்கள்: ‘ஈமானிற்கு அறுபதிற்கும் மேலான கிளைகள் உண்டு. அவற்றில் மிக முக்கியமானது வெட்கம் என்ற கிளையாகும்’.
நாம் எந்த அளவிற்கு அந்தரங்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ அதைவிட அதிகமான அளவில் வெட்கம் என்ற பண்பை பாழ்படாமல் பாதுகாக்க வேண்டும் என்பது இங்கு பட்டவர்த்தமாக பறை சாட்டப்பட்டுள்ளது.
பெண்கள் பேண வேண்டிய வெட்கம் என்பதை பற்றிச் சொல்லும் போது, ‘அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு’ ஆகிய நான்கும் அவர்களுக்கு அத்தியாவசியமான ஒன்று. அவற்றில் நாணம் அதிக அளவு பேணப்படும் போது தான் அவள் போற்றப்படுகிறாள்.
அந்த குணாதிசயம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், ‘ஒரு பெண் பிற ஆடவர்களை கண்டால் தன் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும். அணியும் ஆடைகளில் கண்ணியம், ஒழுக்கம் பேணப்பட வேண்டும். பிற ஆடவர்களுடன் பேசும் போது பேச்சில் நளினம் காட்டக்கூடாது. எந்த சந்தர்ப்பத்திலும் பிற ஆணுடன் தனித்திருப்பதை தவிர்க்க வேண்டும்’.
இந்த நான்கு நிலைகளை ஒரு பெண் அடைய வேண்டும் என்றால் அவளிடம் வெட்கம் என்கின்ற பண்பு குடியிருக்க வேண்டும். சூழ்நிலைகள் தவிர்க்கப்படும் போது சூழ்ச்சிக்கான காரணங்களும் களையப்படலாம்.
வெட்கம் என்ற உயர்ந்த பண்பால் இன்றைய காலச்சூழ்நிலையில் மகளிர் எதிர்கொள்ளும் எத்தனையோ கலாசார சீர்கேடுகளை களைந்து எறிந்து விடமுடியும். ‘நாணம்’ என்ற பண்பை மறந்து விட்டால் உணர்ச்சிகள் மரத்து எல்லாமே சகஜம் தான் என்று சகிப்பு தன்மை மேலோங்கிவிடும்.
வெட்கம் மனிதனை விட்டு மறைந்து போகும்போது தான் காலங்காலமாய் கட்டிகாத்த சமூக விழுமியங்கள் தகர்ந்து போகின்றன. உடலில் வலு இருந்தும், உழைக்க வழியிருந்தும் ஒருவன் கையேந்துகின்றான் என்றால் அவனிடம் வெட்கம் என்ற உணர்வு இல்லை என்றுதானே அர்த்தம். அதிகாரிகளிடமும், அரசியல்வாதிகளிடமும் லஞ்சமும், ஊழலும் பெருகிக்கிடப்பதற்கு வெட்கம் என்ற குணாதிசயத்தை அவர்கள் இழந்துவிட்டது தானே காரணம்.
கடன் பெற்றவன் கடனைத் திருப்பி செலுத்த வேண்டும் என்ற கடமையுணர்வு, மானத்திற்கு அஞ்சிய வெட்கம் என்ற உணர்வு இருப்பதால் மட்டுமே. அன்னிய பெண்ணை கண்ணோடு கண் நேராக பார்க்க அச்சம் ஏற்படுகிறது என்றால், பாலியல் பாவங்கள் கூட தவிர்க்கப்படுகிறது என்றால் வெட்கம் என்ற உணர்வு இருப்பதால் மட்டுமே.
எனவே தான் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ‘வெட்கம் எப்பொருளில் இருந்தாலும் அது அப்பொருளை அழகாக்காமல் இருப்பதில்லை’ என்று கண்மணி நாயகம் நவின்றார்கள். (திர்மிதி : 1897)
வஞ்சப் புகழ்ச்சியாலோ, அல்லது அளவிற்கு மீறிய புகழ்ச்சியாலோ ஒருவன் தலைகனம் என்னும் அகம்பாவத்தில் வீழ்ந்து அன்னியரை அற்பமாய் எண்ணுகின்ற அகந்தையிலிருந்து காப்பது வெட்கம் என்ற பண்பு அல்லவா?
‘வெட்கம் கொள்வது அனைத்திற்கும் நல்லதே’. (ரியாலுஸ் ஸாலிஹீன்-682)
அண்ணல் நபிகளார் அதிக அளவில் வெட்கம் என்ற பண்பை பெற்றிருந்தார்கள் என்பது அவர்கள் சரிதையைப் படித்தவர் களுக்குத் தெரியும்.
எனவே வெட்கம் வியாபித்திருக்கிற வரை தான் உலகில் விபரீதங்கள் கட்டுக்குள் இருக்கும். இல்லை என்றால் விளைவுகள் அபாயகரமானது என்பதை உணர்ந்து செயல்படுவோம்.
எம். முஹம்மது யூசுப், உடன்குடி.

கரு எவ்வாறு உருவாகிறது என்று இன்றைய விஞ்ஞானம் கூறுவதைக் கவனித்தால், திருக்குர்ஆன் கூற்று, உண்மை என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
தாயின் வயிற்றில் வளர்ந்து வரும் கருவில் முதலில் உருவாவது செவிப்புலனே ஆகும். கருக்குழந்தை 6-வது மாதத்தில் ஒலிகளைக் கேட்கத் தொடங்குகிறது. இந்த மாதத்தில், ‘குழந்தைகளின் திறமைகள் கூடும். வெளிச்சத்தம் கேட்டால் உள்ளே குழந்தை குதிக்கும்’ என்று மருத்துவ உலகம் உரைக்கிறது. ஆனால் 8-வது மாதத்தில்தான் கண்ணின் விழித்திரை வெளிச்சத்தை உணரும் தன்மையைப் பெறுகிறது. இந்த மாதத்தில், ‘குழந்தையின் நீளமும் எடையும் கூடும். மூளையின் நரம்பு மண்டலமும் நன்கு வளரும். கண், வெளிச்சத்தைப் பார்க்க முடியும்’ என்று கூறப்பட்டுள்ளது.
கருவில் உருவாகும் குழந்தையின் புலன் உணர்வுகளை கூறும் கீழ்க்கண்ட குர்ஆன் வசனங்களைப் படித்துப் பாருங்கள்.
“இன்னும் உங்களுக்கு அவன் செவிப்புலனையும், பார்வைப் புலன்களையும், இதயங்களையும் அமைத்தான்” (32:9) என்றும்,
“(பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியில் இருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம். அவனைச் சோதிப்பதற்காக அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்” (76:2) என்றும்,
“இன்னும் அவனே உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் படைத்தான். மிகக் குறைவாகவே அவனுக்கு நீங்கள் நன்றி செலுத்துகிறீர்கள்” (23:78) என்றும் திருக்குர்ஆனில் இறைவன் கூறுகின்றான்.
மேற்கண்ட அனைத்து வசனங்களிலும் பார்வைப் புலனுக்கு முன்பாக செவிப்புலன் இடம் பெற்று இருப்பதைக் காணலாம். கருவில் இருக்கும் குழந்தைக்கு முதலில் செவிப்புலனும், அதைத் தொடர்ந்து பார்வைப்புலனும் கிடைக்கிறது என்ற நவீன விஞ்ஞான கண்டுபிடிப்பு, குர்ஆனின் குரலோடு பொருந்திப்போவதை அறியலாம்.
மனித உருவை உண்டாக்குவது கரு. ஆணின் விந்தணு, பெண்ணின் கரு முட்டையுடன் சேர்ந்து கரு உண்டாகிறது. கரு முதிர்ச்சி அடைந்து உருவும், உருவமும், உயிரும் தோன்று கிறது.
இதைத் திருக்குர்ஆனின் பல வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.
“(கர்ப்பக் கோளறைக்குள் சொட்டு சொட்டாய்) ஊற்றப்படும் இந்திரியத் துளியாக அவன் இருக்கவில்லையா? பின்னர் ரத்தக் கட்டியாக (அட்டை போன்று ஒட்டிக் கொண்டிருக்கும் நிலையில்) இருந்தான். அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான். பின்னர் அவனில் இருந்து ஆண் பெண் என்ற ஜோடிகளை உண்டாக்கினான்” (75:37).

மேற்கண்ட குர்ஆன் வசனம், ஆணிடம் இருந்து வெளிப்படும் விந்துதான் கருக்குழந்தையின் பாலினத்தைத் தீர்மானித்திட காரணமாக அமைந்துள்ளது என்ற கருத்தை எடுத்துரைக் கிறது.
சாதாரணமாக மனித உடம்பில் ஒரு செல்லில் 23 ஜோடி (நாற்பத்தாறு) குரோமோசோம்கள் இருக்கும். ஆனால் உயிரணுவிலும், சினை முட்டையிலும் மட்டும் தலா 23 குரோமோசோம்கள்தான். இவற்றில் இருபத்து மூன்றாவது குரோமோசோம் மட்டும் அந்தக் கரு ஆணா பெண்ணா என்று தீர்மானிக்கும் குரோமோசோம்.
இனப்பெருக்கத்தில் சினை முட்டைகள் பெண்ணின் சினைப் பையில் (ஓவரி) உற்பத்தி ஆகின்றன. இவற்றில் ‘எக்ஸ் எக்ஸ்’ குரோமோசோம்கள் இருக்கும். ஆணின் விந்தகத்தில் விந்தணுக்கள் உற்பத்தி ஆகின்றன. இவற்றில் ‘எக்ஸ் ஒய்’ குரோமோசோம்கள் இருக்கின்றன. இவை இணைகிறபோது பெண்ணின் சினை முட்டையில் உள்ள எக்ஸ் குரோமோசோமும், ஆணின் விந்தணுவில் உள்ள எக்ஸ் குரோமோசோமும் இணைந்தால் பெண் குழந்தை உருவாகும்.
பெண்ணின் சினை முட்டையில் உள்ள எக்ஸ் குரோமோசோம், ஆணின் விந்தணுவில் உள்ள ஒய் குரோமோசோமுடன் இணைந்தால் ஆண் குழந்தை பிறக்கும். பெண்ணுடைய சினை முட்டையில் ஒய் குரோமோசோம் இல்லை. இதனால் உருவாகும் குழந்தை ஆணா பெண்ணா என்று தீர்மானிப்பதில் பெண்ணுக்கு எந்தவித பங்கும் இல்லை. ஆணிடம்தான் அதற்கான தன்மை உள்ளது என்று இன்றைய மரபியல் கூறும் உண்மையைத் திருக்குர்ஆன் அன்றே எடுத்துக் கூறி உள்ளது.
“மனிதனை ஒரு துளி இந்திரியத்தில் இருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா?” (36:77) என்றும்,
“மனிதன் எதில் இருந்து படைக்கப்பட்டான் என்பதை அவன் கவனிக்கட்டும். குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் அவன் படைக்கப்பட்டான்” (86:5) என்றும்,
“அவன் மனிதனை ஒரு துளி விந்தில் இருந்து படைத்தான்” (16:4) என்றும் குர்ஆனில் இறைவன் கூறுகின்றான்.
கரு எவ்வாறு உருவாகிறது என்று இன்றைய விஞ்ஞானம் கூறுவதைக் கவனித்தால், திருக்குர்ஆன் கூற்று, உண்மை என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
“ஆண்கள் வெளிப்படுத்தும் ஒவ்வொரு உயிரணுவும் ஓர் அதிசயம். சுமார் 0.05 மில்லி மீட்டர். அதற்கும் தலை, நடுப்பகுதி, வால் பகுதி உண்டு. உடலுறவின்போது ஒருமுறை வெளிப்படும் ஒரு டீ ஸ்பூன் விந்தில் இருக்கும் உயிரணுக்களின் எண்ணிக்கை முன்னூறு மில்லியன்- அதாவது முப்பது கோடி. அந்த கோடிக் கணக்கான உயிரணுக்கள் எப்படியும் சினை முட்டையை அடைந்தே தீருவது என்ற முனைப்போடு முன்னேறிச் செல்கின்றன.
நீந்திச் செல்லும் அந்த உயிரணுக்களில் ஒரே ஒரு உயிரணு மட்டும் கருக்குழாயில் இருக்கும் சினை முட்டையுடன் இணைந்து கரு உருவாகும் அதிசயம் நடக்கிறது. ஆணின் உயிரணும், பெண்ணின் சினை முட்டையும் இணைந்து ஒன்றாக உரு வெடுத்த கரு, ஒரே ஒரு ‘செல்’லாக கடுகு வடிவத்தில் இருக்கும். இதன் பிறகு இந்தக் கரு, கருப்பையில் தங்கி வளரத் தொடங்குகிறது”
இது மகப்பேறு மருத்துவர்களின் கருத்து. ‘ஒரு துளி விந்து’- ‘குதித்து வெளிப்படும் ஒரு துளி நீர்’-‘பீறிட்டு பாயும் விந்து’ என்ற குர்ஆனின் சொற்றொடரோடு மருத்துவர்களின் கருத்து நூற்றுக்கு நூறு பொருந்திப் போவதைப் பார்க்கலாம். இதன் மூலம் விந்தைக்கொண்டு விந்தை புரிபவன் இறைவன் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

உத்பா இப்னு அபீ வக்காஸ் என்பவன் நபியவர்களை நோக்கிக் கல்லெறிந்தான். இதனால் நபியவர்கள் கீழே விழுந்து நபிகளாரின் வலது கீழவரிசையில் முன் பல் சேதமடைந்து கீழ் உதடும் காயமடைந்தது.
உஹுத் போரில் அம்பெறி வீரர்கள் செய்த தவறினால் எதிரிகள் நபிகளாரைச் சூழ்ந்து கொண்டனர். நபிகளாரைத் தாக்கவிடாமல் நபித்தோழர்கள் கடுமையாக எதிரிகளை எதிர்த்துப் போராடினர். நபி(ஸல்) அவர்களின் மீது வைத்திருந்த அன்பினால் தங்களையே அர்ப்பணித்து வீர மரணத்தைச் சுவைத்தனர். ஸஅது இப்னு அபீ வக்காஸ், தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி) ஆகிய இரு தோழர்களுமே மிகுந்த வீரத்துடனும் துணிவுடனும் போரிட்டனர்.
இதற்கிடையில் நபி முஹம்மது(ஸல்) கொல்லப்பட்டுவிட்டார் என்ற வதந்தி பரவியது. முஸ்லிம்கள் நிலை தடுமாறி, எது முஸ்லிம் படையினர், எது எதிரிப்படையினர் என்று குழம்பிவிட்டவர்களாகத் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்ளும் நிலை வந்தது. நிலையை அறிந்த நபி முஹம்மது (ஸல்), அவர்களுக்குப் பின்னால் இருந்த அணியிலிருந்து அம்பெறி வீரர்களைப் போர்க்களத்திற்குத் திரும்பி வரும்படி அழைத்தார்கள். ஆனால் அவர்கள் அதைக் கவனிக்கவில்லை. அணிகளுக்கிடையில் பெரும் குழப்பம் நிலவியது எந்த அளவிற்கென்றால் முஸ்லிம்களில் முன்னணிப் படையினர் திரும்பிச் சென்று பின்னணிப் படையினருடன் போரிட்டார்கள்.
அப்போது அங்கு ஹுதைஃபா(ரலி) அருகிலிருந்த தன் தந்தை யமான்(ரலி) அவர்களை முன்னணிப் படையினரிடம் சிக்கியதைப் பார்த்துவிட்டு, ‘அல்லாஹ்வின் அடியார்களே! இது என் தந்தை, இது என் தந்தை!’ என்று உரக்கக் கூறி தடுக்க முயன்றார்கள். ஆனால் முஸ்லிம் வீரர்களுக்கு அந்தக் கூச்சல் குழப்பத்தில் எதுவும் கேட்கவில்லை, அவரைத் தாக்கிக் கொன்றே விட்டனர். ஆனாலும் முஸ்லிம்களை ஹுதைஃபா மன்னித்ததோடு ‘அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!’ என்று பெருந்தன்மையாகக் கூறினார்.

நபி முஹம்மது (ஸல்) கொல்லப்பட்டார்கள் என்ற வதந்தியைக் கேட்டு குழம்பி சோர்வடைந்த முஸ்லிம்களிடம் ‘இறைத்தூதர் இறக்கலாம் ஆனால் இறைவனுக்கு இறப்பில்லை நம் மார்க்கத்திற்காகக் கடைசி வரை போராடுவோம்’ என்று சொல்லப்பட்டதும் முஸ்லிம்கள் குழப்பத்திலிருந்து விடுபட்டவர்களாக முன்னேறினர்.
உத்பா இப்னு அபீ வக்காஸ் என்பவன் நபியவர்களை நோக்கிக் கல்லெறிந்தான். இதனால் நபியவர்கள் கீழே விழுந்து நபிகளாரின் வலது கீழவரிசையில் முன் பல் சேதமடைந்து கீழ் உதடும் காயமடைந்தது. எதிரிப் படையைச் சேர்ந்த மற்றவர் நபி(ஸல்) அவர்களின் முகத்தைக் காயப்படுத்தினர். நபிகளாரின் புஜத்திலும் வாளால் ஓங்கி வெட்டப்பட்டது, ஆனால் அவர்களின் கவசம் காத்துக் கொண்டாலும், வலியால் துடித்தார்கள்.
தல்ஹா (ரலி) எதிரிகளுடன் சண்டையிட்டு நபிகளாரைக் காத்தார்கள். அப்போது அவருக்கும் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது. நபி (ஸல்) அவர்களைத் தாக்க விரைந்த எதிரிகளின் எண்ணிக்கை அதிகரித்தவாறே இருந்தது. அதைப் போலவே, நபிகளாரைக் காக்க வேண்டுமென்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது.
நபிகளாரைக் காக்க வேண்டுமென்று அவர்களின் தோழர்களான அபூபக்ர்(ரலி), உமர்(ரலி), அலீ(ரலி) ஆகியோர் அங்கு விரைந்து நபிகளாரைச் சுற்றிப் பாதுகாப்பு அரணாக மாறினர்.
ஸஹீஹ் புகாரி 3:59:3290, இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம்

ஒரு முஸ்லிம் பிற முஸ்லிம்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என ஏந்தல் நபி (ஸல்) ஏவுகிறார்கள். இதன்படி அனைத்து முஸ்லிம்கள் வாழ்ந்து காட்டவேண்டும்.
‘ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு முகம் காணும் கண்ணாடியைப் போன்று அவன் தன் சகோதரனுக்கு வரும் பாதிப்புகளை தடுத்து விடுகின்றான்; மேலும் அவன் தன் சகோதரனை பின் பகுதியிலிருந்து வரும் தீங்குகளை விட்டும் பாதுகாக்கிறான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு பல வகைகளில் உவமையாக, உதாரணமாக திகழ்கின்றான். மேற்கூறப்பட்ட நபி மொழியில் ஒரு முஸ்லிம் முகம் காணும் கண்ணாடியைப் போன்று பிற முஸ்லிம்களிடமும், பிற மக்களிடமும் வாழ்ந்து காட்ட வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
கண்ணாடி கூறும் தத்துவம்
நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ, கறையோ பட்டுவிட்டால், முகத்தை கண்ணாடியில் பார்க்கும்போது அது தெரிகிறது. அந்த அழுக்கையோ, கறையையோ கண்ணாடி கூட்டுவது இல்லை; குறைப்பதும் இல்லை. உள்ளதை உள்ளபடி கண்ணாடி காட்டு கிறது அல்லவா?
அதேபோல் நாமும் நமது சகோதரனிடம், நண்பனிடம், கணவரிடம், மனைவியிடம், குழந்தையிடம், பொதுமக்களிடம் எந்த அளவுக்கு குறை உள்ளதோ அந்தளவுக்குத் தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டுமே தவிர, எதையும் மிகைத்தோ, ஜோடித்தோ சொல்லக்கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக ஆக்கவோ கூடாது. இது கண்ணாடி கூறும் முதல் தத்துவம்.
கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும் போதுதான் அது உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று சென்றுவிட்டால், அது அமைதியாகிவிடும். இதுபோல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது. ஒருவரின் குறையை அவர் இல்லாத போது பேசினால், அது புறம். அவரிடமே இல்லாத குறையைப் பற்றி பேசினால், அது அவதூறு ஆகும். இது கண்ணாடி கூறும் இரண்டாம் தத்துவம்.
ஒருவருடைய முகக்கறையையும், குறையையும் கண்ணாடி காட்டுவதால், அவர் அந்தக் கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ அடைவாரா? இல்லையே...! அதேபோல, நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக்காட்டினால், அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூறவேண்டும். அந்தக்குறைகள் நம்மிடம் இருக்குமேயானால், அவற்றை திருத்திக் கொள்ளவேண்டும். இது கண்ணாடி கூறும் மூன்றாம் தத்துவம்.
கண்ணாடி குறைகளை மட்டும் காட்டுவது இல்லை. முகத்தில் வெளிப்படும் அழகையும், கவர்ச்சியையும் காட்டுகிறது. நாம் பிறரின் குறைகளை மட்டும் கவனிக்கக் கூடாது. அவரின் நிறைகளையும் மனநிறைவாக வாழ்த்தவேண்டும். இவ்வாறு வாழ்த்தும்போது, இரு உள்ளங்களுக்கிடையே அன்பும், கருணையும், அரவணைப்பும் உண்டாகிவிடுகிறது. இது கண்ணாடி கூறும் நான்காம் தத்துவம்.
கண்ணாடி உடைந்துவிட்டால், நாம் நமது நிறை, குறைகளை சீர் செய்ய முடியாது. இதனால் மக்கள் முன்னிலையில் கேவலத்திற்கும் பரிகாசத்திற்கும் ஆளாக நேரிடும். இவ்வாறு நம்மை சீர் செய்யும் ஒரு முஸ்லிமின் உள்ளத்தை நாம் உடைத்து காயப் படுத்தினால், அவரால் நமக்கு கிடைக்கும் நேர்வழி, சீர்திருத்தம் கிடைக்காமல் போய்விடும். நாம் சீர்கெட்டு விட்டால், உலகம் நம்மை பழித்தும், இழித்தும் பேசும் நிலைக்கு நாம் தள்ளப்படுவோம். இது கண்ணாடி கூறும் ஐந்தாம் தத்துவம்.
கண்ணாடியில் முகம் காணும்போது பின்வரும் துஆவை நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத்தரு கிறார்கள்: ‘இறைவா! எனது புற தோற்றத்தை நீ அழகாக்கியது போன்று, எனது அக தோற்றத்தையும் நீ அழகுபடுத்துவாயாக’.
ஒரு முஸ்லிம் பிற முஸ்லிமின் வெளித்தோற்றத்தை கண்ணாடி போன்று அழகுபடுத்துவதை போல், அவரின் அகத்தோற்றத்தையும் அழகுபடுத்தும் நற்செயல்களையும் கற்றுக்கொடுக்க வேண்டும். ஒரு முஸ்லிம் பிற முஸ்லிமின் அகமும், புறமும் தூய்மைப்படுத்தும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். இது கண்ணாடி கூறும் ஆறாம் தத்துவம்.
இவ்வாறு தான் ஒரு முஸ்லிம் பிற முஸ்லிம்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என ஏந்தல் நபி (ஸல்) ஏவுகிறார்கள். இதன்படி அனைத்து முஸ்லிம்கள் வாழ்ந்து காட்டவேண்டும்.
- மவுலவி அ.செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து,
திருநெல்வேலி டவுண்.

அபூஹுரைரா (ரலி) அவர்களின் தாயாருக்காக அவருக்கு அருகில் வைத்தே நபி (ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனையை வரலாறு பதிவு செய்துவைத்துள்ளது. (முஸ்லிம்)
‘பிரார்த்தனை’ என்று சொன்னால், ‘துஆ’வின் மகத்துவம் குறித்தோ, அதன் சிறப்புகள் குறித்தோ அல்லது பிரார்த்தனையின் நிபந்தனைகள் மற்றும் ஒழுக்கங்கள் குறித்தோ இங்கே நாம் கூறப்போவதில்லை. மாறாக உள்ளங்களை வெல்வதற்கு பிரார்த்தனையை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து மட்டுமே பார்க்க இருக்கின்றோம்.
பொதுவாகவே, தங்களுக்காக அடுத்தவர் ‘துஆ’ கேட்பதை மக்கள் விரும்புவார்கள். ஒருவர் நம்மிடம் அவருடைய பிரச்சினையைச் சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம்... உடனே நாம், ‘ஆண்டவன் இருக்கான்...’ என்று ஒற்றை வார்த்தையில் சொன்னால் நன்றாக இருக்குமா? அதனை அவர் விரும்பவும் மாட்டார். பட்டும் படாமலும் தப்பிச் செல்லும் ஒரு கைங்கர்யம்தான் இந்த ‘ஆண்டவன் இருக்கான்’ என்ற வார்த்தை.
மாறாக, “இறைவன் உதவி செய்வான்.. இறைவன் லேசாக்குவான்... ஒன்றும் கவலைப்படாதீர்கள். உங்களுக்காக நான் கண்டிப்பாக பிரார்த்தனை செய்கிறேன்” என்று கூறிப்பாருங்கள்.
வாய்ப்பு இருந்தால், அவர் காதுபடவே... ‘இறைவா! இவருடைய பிரச்சினையை தீர்த்து வைப்பாயாக. இவருடைய தேவைகளை நிறைவேற்றிக்கொடுப்பாயாக’ என்று அவர் காதுபடவே பிரார்த்தனை செய்யுங்கள்.
அது அவரது மனதிற்கு இதமாக அமையும். ஒருபோதும் அதனை அவர் மறக்க மாட்டார்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தோழர்களுடன் அமர்ந்திருக்கும் சபையில் அனைவருக்கும் முன்பாக ஒருவர் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கு விபசாரத்திற்கு அனுமதி தாருங்கள்’ என்று கேட்கிறார்.
மிகத்தெளிவாக இதனை அவர் கேட்கிறார். அண்ணலாரின் காதுகளுக்கு அருகே வந்து ரகசியமாகவோ.. அல்லது பெருமானார் (ஸல்) அவர்கள் மட்டும் அமர்ந்து இருக்கும்போதோ அல்ல. மாறாக அனைவரும் இருக்கும் சபையில் மிகத்தெளிவாகவும் பகிரங்கமாகவும் கேட்கிறார்.
நபி (ஸல்) அவர்கள் அந்த இளைஞரை அழைத்து அவருக்கு உபதேசம் செய்கின்றார்கள். ‘உனது தாய் விபசாரம் செய்வது உனக்கு விருப்பமா?, சகோதரி..? தாயின் சகோதரி..?’ என்று தொடர்ந்து கேட்கின்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.
செய்த தவறை உணரத் தொடங்குகிறார் அந்த இளம் நபித்தோழர். இறுதியில் பணிவுடன், ‘அல்லாஹ்வின் தூதரே! எனது இதயம் தூய்மை பெற இறைவனிடன் எனக்காக துஆ செய்யுங்கள்’ என்று கேட்கிறார்.
அவரை அழைத்து தன் அருகில் அமர வைத்து அவரது நெஞ்சத்தில் கை வைத்து நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள்: ‘இறைவா... இவரின் உள்ளத்தை தூய்மைப்படுத்துவாயாக. இவரின் பாவங்களை மன்னிப்பாயாக, இறைவா... இவரின் கற்பைப் பாதுகாப்பாயாக’.
அந்த இளைஞர் இவ்வாறு கூறியவராக அந்த சபையில் இருந்து எழுந்து சென்றார்: ‘இந்தச் சபையில் நுழையும்போது விபசாரமே நான் அதிகம் விரும்பும் ஒரு செயலாக இருந்தது. ஆனால், இப்போது நான் அதிகம் வெறுக்கும் விஷயமாக அந்த விபசாரமே மாறிவிட்டது’ (அஹ்மத், தபரானி).
மக்காவின் ஆரம்ப நாட்கள். மொத்த முஸ்லிம்களே 38 நபர்கள் தான். அபூபக்கர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே, நாம் பகிரங்கமாக மக்களுக்கு மத்தியில் சென்று இறைச் செய்தியை எடுத்துக் கூறலாமே’ என்று சொன்னார்.
நபி (ஸல்) அவர்களோ, ‘அபூபக்கரே! நாம் எண்ணிக்கையில் மிகவும் குறைவாக இருக்கின்றோமே’ என்று கூறினார்கள்.

ஆனாலும் அபூபக்கர் (ரலி) அவர்கள் கேட்கவில்லை. நபிகளாரை அழைத்துக்கொண்டு கஅபாவிற்கு அருகே சென்று அபூபக்கர் (ரலி) அவர்களே இஸ்லாத்தின் செய்தியை மக்களுக்கு எடுத்துச் சொன்னார்கள்.
கோபம் கொண்ட குறைஷிகள் அபூபக்கர் (ரலி) அவர்களை மூர்க்கத்தனமாகத் தாக்கத் தொடங்கினர். குறிப்பாக அபூபக்கர் (ரலி) அவர்களை உத்பா பின் ரபீஆ என்பவன் மிகக்கொடூரமாகத் தாக்கினான். அவனது காலணிகளால் அபூபக்கரின் முகத்தில் கடுமையாக உதைத்தான்.
அபூபக்கர் (ரலி) அவர்களுடைய முகத்தில் மூக்கு எது வாய் எது என்று தெரியாத அளவுக்கு காயமும் ரத்தமும். காயத்தின் காரணத்தால் அங்கேயே மயக்கமுற்றார்கள் அபூபக்கர் (ரலி).
மயக்கமுற்ற அபூபக்கரை இறந்துவிட்டார் என்று கருதி ஒருபோர்வையால் சுற்றி அவருடைய வீட்டுக்குள் வீசிச் சென்றனர். ‘உயிரோடு இருந்தால் தண்ணீர் கொடுங்கள்’ என்று கிண்டல் வேறு.
அருகில் அபூபக்கர் (ரலி) அவர்களின் தாயார் அழுத வண்ணம் நின்றுகொண்டு இருக்கின்றார். கண் விழிக்கிறார் அபூபக்கர் (ரலி).
கண் விழித்ததும் அவர்கள் கேட்ட முதல் கேள்வி: ‘அல்லாஹ்வின் தூதர் எங்கே..? அவர்களுக்கு என்னவாயிற்று?’ என்பதுதான்.
இறைத்தூதருக்கு ஒன்றும் சம்பவிக்கவில்லை, நலமாக உள்ளார் என்ற செய்தியை அறிந்து... அந்த நிலையிலும் தாயின் கைத்தாங்கலுடன் பெருமானார் (ஸல்) அவர்களைப் பார்க்கச் செல்கின்றார்.
நபிகளாரைக் காண்கிறார். பசி ஒருபக்கம்... தாகம் ஒருபக்கம்... வலி மறுபக்கம். ஆயினும் அபூபக்கர் (ரலி) அவர்களுடைய குறிக்கோள் எல்லாம் தமது தாயை எப்படியாவது இஸ்லாத்தில் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதாகவே இருந்தது. அவர் கூறினார்: ‘அல்லாஹ்வின் தூதரே! இதோ எனது தாய். இவரை இஸ்லாத்தைபால் அழையுங்கள். இவர்களுக்காக துஆ செய்யுங்கள்’.
அந்த இடத்திலேயே நபி (ஸல்) அவர்கள் அந்த அம்மையாருக்காக துஆ செய்தார்கள். அவரும் இஸ்லாத்தை ஏற்றார். (இப்னு ஹிஷாம்)
அபூஹுரைரா (ரலி) அவர்களின் தாயாருக்காக அவருக்கு அருகில் வைத்தே நபி (ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனையை வரலாறு பதிவு செய்துவைத்துள்ளது. (முஸ்லிம்)
துஃபைல் (ரலி) அவர்கள் தம்முடைய மக்களுக்காக துஆ செய்யுமாறு பெருமானார் (ஸல்) அவர்களிடம் கூறியபோது, ‘யா அல்லாஹ்! தவ்ஸ் கோத்திரத்தினருக்கு நேர்வழி காட்டுவாயாக!’ என்று இருமுறை அந்த இடத்தில் வைத்தே நபி (ஸல்) அவர்கள் துஆ செய்துள்ளார்கள்.
மூஸா (அலை) அவர்களுக்கு பெரும் உறு துணையாக விளங்கியது யார்..? அவருடைய சகோதரர் ஹாரூன் (அலை) அவர்கள்தானே. யாரை இறைத்தூதராக தேர்ந்தெடுக்க வேண்டும் எனும் உரிமை அல்லாஹ்வைச் சார்ந்தது. இவர் தான் நபியாக வரவேண்டும் என்றோ, இவரை உனது தூதராக அனுப்பு என்றோ அல்லாஹ்விடம் யாரும் விண்ணப்பிக்க முடியாது.
ஆயினும் மனித இன வரலாற்றிலேயே ஒருவருடைய பிரார்த்தனை மூலம் இன்னொருவர் நபியாக அனுப்பப்பட்டார் என்றால் அது ஹாரூன் (அலை) அவர்கள் மட்டுமே. தமது சகோதரருக்காக மூஸா (அலை) அவர்கள் இவ்வாறு துஆ செய்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது: ‘மேலும், என்னுடைய சகோதரர் ஹாரூன் என்னைவிட அதிகமாக நாவன்மை உடையவர். அவரை உதவியாளர் எனும் முறையில் என்னுடன் அனுப்பி வைப்பாயாக! அவர் எனக்குத் துணையிருப்பார்’ (28:34)
அடுத்தவருக்காக நாம் செய்யும் பிரார்த்தனைகள் அவர்களுடைய உள்ளங்களை வெல்லும் என்பதற்காகத்தானோ என்னவோ, உம்ரா செய்வதற்காக உமர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கோரியபோது, பெருமானார் (ஸல்) அவர்கள் உமரிடம் வைத்த ஒரேயொரு கோரிக்கை, ‘என் சகோதரரே! உமது பிரார்த்தனையில் எம்மை மறந்துவிடாதீர்’. (திர்மிதி)
மவுலவி நூஹ் மஹ்ளரி, குளச்சல்.

பத்ருப் போரில் முஸ்லிம்களுக்குக் கிடைத்த வெற்றியைப் போலவே உஹுத் போரிலும் வெற்றியென்று நினைக்கும் வேளையில் அம்பெறியும் வீரர்கள் செய்த தவறினால் நிலை தலைகீழானது.
மாவீரர் ஹம்ஸா(ரலி) உஹுத் போரில் உயிரிழந்தார்கள். முஸ்லிம்களுக்கு அது பெரிய இழப்பாக இருந்தது. இருந்தாலும் முஸ்லிம்கள் நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருந்தனர். சிறிய படையாக இருந்தாலும் அவர்களின் வீரதீர செயல்களினால், பெரும்படையினர் தங்களது பழி வாங்க வேண்டுமென்ற எண்ணத்தை மறந்து சிதறி ஓடத் தொடங்கினர். யுத்தத்தில் பங்கேற்றப் பெண்களும் ஓடிவிட்டனர்.
நபி முஹம்மது(ஸல்) அவர்களின் கட்டளையின் பேரில் மலையின் மீது நிறுத்திய வீரர்கள் முஸ்லிம்களைப் பின்புறமாகத் தாக்க வரும் அணியினரைச் சேதப்படுத்தினர். பத்ருப் போரில் முஸ்லிம்களுக்குக் கிடைத்த வெற்றியைப் போலவே உஹுத் போரிலும் வெற்றியென்று நினைக்கும் வேளையில் அம்பெறியும் வீரர்கள் செய்த தவறினால் நிலை தலைகீழானது.
ராணுவ பாதுகாப்புக்காக நபிகளார் பல கட்டளைகளைப் பிறப்பித்திருந்தார்கள், அதில் முக்கியமானது அவர்களின் கட்டளையில்லாமல் வெற்றியோ தோல்வியோ அம்மலையைவிட்டு அம்பெறி வீரர்கள் நகரக் கூடாது என்று முன்கூட்டியே சொல்லியிருந்தார்கள். அப்படிச் சொல்லியிருந்தும், வெற்றி கிடைத்து எதிரிகளின் பொருட்களை முஸ்லிம்கள் திரட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவர்களுக்கும் ஆசை ஏற்பட்டுவிட்டது.

அவர்கள் மலையைவிட்டு கீழே இறங்கத் தொடங்கினர். உடனே அம்பெறிப் படையின் தளபதி அப்துல்லாஹ் இப்னு ஜுபைர், அங்கிருந்து நகரக் கூடாது என்று நபிகளார் சொன்னதை வீரர்களுக்கு நினைவூட்டினார்கள். அவர்கள் அதனைப் பொருட்படுத்தாமல் நாற்பதற்கும் மேற்பட்டவர்கள் மலையிலிருந்து கீழே பொருட்களை நோக்கி இறங்கினர்.
இதனால் முஸ்லிம் படையினருக்குப் பின் பகுதியில் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டது. தளபதி அப்துல்லாஹ்வும் இன்னும் வெகு சிலரும் மட்டுமே மலையின் மீது இருந்ததைக் கவனித்த எதிரிப் படை வீரர் காலித் இப்னு வலீத், அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அந்த மலையை நோக்கி தம் படையுடன் புறப்பட்டார்கள்.
மலை மீது இருந்த அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) மற்றும் அங்கிருந்த மற்ற வீரர்களையும் கொன்று குவித்தனர். பின்புறமாக முஸ்லிம் படையைத் தாக்கத் தொடங்கினர். ஓடிக் கொண்டிருந்த எதிரிப் படை வீரர்கள் இதைக் கண்டு தெம்பு வந்தவர்களாக மீண்டும் முஸ்லிம்களை நோக்கித் திரும்பி வந்து தமது கொடியை உயர்த்திப் பிடித்து முஸ்லிம்களைச் சரமாரியாக வெட்டி வீழ்த்தினர்.
இதைச் சற்றும் எதிர்பார்த்திராத நபிகளார் முஸ்லிம்கள் கொல்லப்படுவதைப் பார்த்தவுடன் துணிச்சலான தளபதியாக, தனது குரலை உயர்த்தி “அல்லாஹ்வின் அடியார்களே, என் பக்கம் வாருங்கள்” என்று முஸ்லிம்களை அழைத்தார்கள். எதிரிப்படையினர் நபி முஹம்மது (ஸல்) அவர்களைக் கொல்வதற்காகத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தும், தன் மக்களைக் காப்பாற்ற நபிகளார் தன் உயிரைப் பொருட்படுத்தாமல் குரலை உயர்த்தித் தோழர்களை அழைத்தார்கள்.
முஸ்லிம்கள் நபியவர்களிடம் வந்து சேர்வதற்கு முன்பாக எதிரிப்படையினர் வந்து சேர்ந்தனர்.
இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம், ஸஹீஹ் புகாரி 3:56:3039

உடலில் ஏற்படும் வலியை உணரும் தன்மை மூளையில்தான் உள்ளது என்று தொடக்கத்தில் நம்பினார்கள். ஆனால் திருக்குர்ஆன் கூறுவதைப்போல வலி உள்வாங்கிகள் தோலில் அமைந்திருக்கிறது என்பதை அண்மையில் கண்டுபிடித்துள்ளனர்.
நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் ஒருநாள் முடிவுக்கு வரும். வானம், பூமி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் அனைத்தும் அழிக்கப்படும். பிறகு உலகில் பிறந்த அனைவரும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள். அவர்களின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும். அந்த நியாயத் தீர்ப்பு நாளில் நல்லவர்களுக்கு சொர்க்கமும், தீயவர்களுக்கு நரகமும் வழங்கப்படும்.
மனித உடல் மண்ணில் புதைக்கப்பட்டு அவற்றின் எலும்புகள் மக்கிப் போன பிறகு, மனிதன் எவ்வாறு மீண்டும் உயிர்த்தெழுப்பப்படுவான்? அப்படி அவர்கள் ஒருவேளை உயிரோடு எழுப்பப்பட்டாலும், அந்த மனிதனை எவ்வாறு அடையாளம் கண்டு கொள்ள முடியும் என்று இறை நிராகரிப்பாளர்களான மக்கா மாநகர் குரைஷிகள் அன்றே கேள்விக்கணைகளை எழுப்பினார்கள்.
“உங்களை முதலாவதாக எவன் படைத்தானோ அவன்தான் (நீங்கள் மரணித்த பின்பும் உங்களை எழுப்புவான்) என்று (நபியே) கூறுங்கள்” (திருக்குர்ஆன்-17:49) என்று இறைவன் திருமறையில் பதில் கூறுகின்றான்.
முதுகெலும்பு உள்ள விலங்கு மற்றும் மனிதர்களின் உள்கூட்டில் காணப்படும் விறைப்பான உறுப்பு எலும்புகள். இந்த எலும்பு கள் உடல் உள்உறுப்புகளுக்கு பாதுகாப்பாக அமைவதுடன், உடலைத் தாங்குவதற்கும், இடம் விட்டு இடம் நகர்வதற்கும் பயன்படுகின்றன. நமது உடலில் தோலையும், தசையையும் நீக்கி விட்டால் மிஞ்சுவது எலும்புக்கூடுகள் மட்டுமே. எலும்புக்கூட்டிற்கு ‘எலும்புச் சட்டம்’ என்று பெயர். உடலுக்கு ஆதாரமாகவும், தசை நரம்புகளுக்கு பற்றுக்கோடாகவும் இருப்பது எலும்புக் கூடுகள் தான். மூளை, கண், இதயம், நுரையீரல் போன்ற மென்மையான உறுப்புகளுக்கு பாதுகாப்பாக இருப்பதும் இந்த எலும்புக்கூடுகள் தான்.
மரணித்து விட்ட மனிதனின் எலும்புகள் மட்டுமின்றி, அவனது விரல் நுனிகளையும்கூட மீண்டும் சீராக, செம்மையாக ஒழுங்குபடுத்தும் ஆற்றல் உண்டு என்பதை இறைவன் திரு மறையில் தெளிவுபடுத்துகிறான்.
“(இறந்து உக்கிப்போன, மண்ணோடு மண்ணாக மக்கிப்போன) அவனுடைய எலும்புகளை நாம் ஒன்று சேர்க்க மாட்டோம் என்று மனிதன் எண்ணிக் கொண்டிருக்கின்றானா? அன்று அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செம்மையாக்க நாம் ஆற்றலுடையோம்” (75:3) என்பது இறைமறை வசனம்.
எலும்புகள் மக்கிப்போனாலும் மனிதனுக்கு உயிர் கொடுப்போம் என்று உரத்த குரலில் கூறும் இறைவன், குறிப்பாக விரல் நுனி குறித்து கூறுவதன் காரணம் என்ன?
ஒவ்வொரு உயிரினங்களுக்கும் தனி அடையாளம் உண்டு. அதைப்போல மனிதர்களுக்கு இருக்கிற தனிப்பட்ட அடையாளமே, கைரேகை.
உலகில் வாழுகின்ற காலம் வரையில் ஒரு மனிதனின் கைரேகையில் எந்தவித மாற்றமும் இருக்காது. இந்த உலகில் சுமார் 750 கோடி மக்கள் வாழ்கிறார்கள். அவர்களில் ஒரு மனிதரின் கைரேகை, இன்னொரு மனிதருக்குப் பொருந்தி வராது. இதற்கு முன்பு வாழ்ந்த நம் முன்னோர்களின் கைரேகைகளும் சரி, இனிமேல் பிறக்கப்போகிற குழந்தைகளின் கைரேகைகளும் சரி, ஒன்றுக்கொன்று பொருந்தாது. அதனால்தான் ‘ஆதார்’ அட்டைகளில் ஆதாரமாக கைரேகைகள் பதிவு செய்யப்படுகின்றன.
தாயின் கருவில் இருக்கும்போதே உருவாகும் கைரேகை, ஆயுள் காலம் வரை மாறாது; மறையாது. ஒரு தாய்க்கு ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தாலும், ஒரு குழந்தையின் கைரேகை இன்னொரு குழந்தைக்குப் பொருந்தாது.
‘கைரேகை என்பது இறைவன் மனிதர்களுக்கு அளித்த முத்திரை’ என்று தடயவியல் அறிஞர்கள் வர்ணித்துள்ளனர்.
கைரேகை மூலம் மனிதர்களை அடையாளம் காண்பதற்கான முறையை சர் பிரான்சிஸ் கால்டன், சர் எட்வர்டு ஹென்றி ஆகியோர் உருவாக்கினார்கள். இந்த முறை 1901-ம் ஆண்டு ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப் படுத்தப்பட்டது.
கைரேகைகளை மீண்டும் படைப்போம் என்று சொல்வதன் மூலம் மனிதர்களின் தனித்த அடையாளத்தையும், தனது வல்லமையையும் இறைவன் நிரூபித்துக் காட்டுகிறான்.
“யார் நம் வேத வசனங்களை நிராகரிக்கிறார்களோ அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம். அவர்கள் தோல்கள் கருகி விடும் போதெல்லாம் அவையல்லாத (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையை (பரிபூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக்கொண்டே இருப்போம்” (4:56) என்பது திருக்குர்ஆன் வசனம்.
இதன் மூலம் ‘நரகவாசிகளின் தோல்கள் கருகும்போதெல்லாம், அவர்கள் வேதனையை உணர்வதற்காக வேறு தோல்களை மாற்றிக் கொண்டே இருப்போம்’ என்று இறைவன் கூறுகின்றான்.
உடலில் ஏற்படும் வலியை உணரும் தன்மை மூளையில்தான் உள்ளது என்று தொடக்கத்தில் நம்பினார்கள். ஆனால் திருக்குர்ஆன் கூறுவதைப்போல வலி உள்வாங்கிகள் தோலில் அமைந்திருக்கிறது என்பதை அண்மையில் கண்டுபிடித்துள்ளனர்.
தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியை பரிசோதனை செய்யும் டாக்டர், தீக்காயங்களின் அளவைக் கண்டறிய குண்டூசியால் குத்திப் பார்க்கிறார். நோயாளி வலியை உணரும் நேரத்தில் டாக்டர் மகிழ்ச்சி அடைகிறார். காரணம், தீக்காயங்கள் மேலோட்டமானவை என்றும், தோலில் உள்ள வலி உள்வாங்கிகள் பழுதுபடவில்லை என்பதையும் பழுதற புரிந்து கொள்கிறார். இதற்கு மாறாக அந்த நோயாளி வலியை உணரவில்லை என்றால், தீக்காயம் ஆழமாக உள்ளது என்பதையும், வலி உள்வாங்கி கள் சேதம் அடைந்திருப்பதையும் அறிந்து கொள்கிறார். தோலில் அமைந்துள்ள இந்த வலி உள்வாங்கிகள் இல்லாவிட்டால் உடலில் ஏற்படும் வலியை உணர்ந்து கொள்ள முடியாது என்பதே உண்மையாகும்.
தோலில் உள்ள வலி உள்வாங்கிகள் குறித்து, தாய்லாந்தில் உள்ள சியாங்மாய் பல்கலைக்கழகத்தில் உடல்கூறு துறைத் தலைவர் பேராசிரியர் தேஜாசென் நீண்ட நாட்கள் ஆய்வு மேற்கொண்டார். ஆராய்ச்சி முடிவில், “1,400 ஆண்டுகளுக்கு முன்பு திருக்குர்ஆனில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து செய்திகளும் உண்மையே. அவை அறிவியல்பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று முடிவாகக் கூறினார். சவூதி தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற எட்டாவது மருத்துவ மாநாட்டில் பேராசிரியர் தேஜாசென் மக்கள் முன்னிலையில் இஸ்லாத்தில் இணைந்தார்.

நபிகளாரால் சிங்கம் என்று போற்றப்பட்ட மாவீரர் ஹம்ஸா (ரலி) கொலை செய்யப்பட்டதால் முஸ்லிம்களுக்குப் பெருத்த சேதம் ஏற்பட்டது இருப்பினும் முஸ்லிம்கள் நிலைமையைத் தங்களது கட்டுக்குள் வைத்திருந்தனர்.
உஹுத் போரின் தீ இரு தரப்பிலும் கடுமையாக மூண்டு போர்க்களத்தின் பல பகுதிகளிலும் போர் வெடித்தது.
முன்னர், நபி(ஸல்) இராணுவ திட்டத்தைச் செயல்படுத்த சொல்லிவிட்டு ஒரு கூர்மையான வாளை எடுத்து, தம் தோழர்களிடம் “இதற்குரிய கடமையை நிறைவேற்றுபவர் யார்?” என்று கேட்டபோது, அதனைப் பெற பலர் முன் வந்தாலும் அபூ துஜானா(ரலி) அவர்களுக்கு அது தரப்பட்டது. அதனை எடுத்துக் கொண்டு அவர்கள் எதிரிப் படையை நோக்கி முன்னேறினார்கள். தனக்கு எதிரே வந்த ஒவ்வொரு எதிரியுடனும் வாள் சண்டையிட்டு வீழ்த்தினார்கள்.
காயம்பட்ட முஸ்லிம்களைக் குறிப்பார்த்து, எதிரிப் படையைச் சேர்ந்த ஒருவன் தாக்கிக் கொண்டிருந்தான். அபூ துஜானா(ரலி) அவனை நேருக்கு நேர் சந்தித்து இருவரும் கடுமையான வாள் சண்டையிட்டு, எதிரி அபூ துஜானாவை வீழ்த்த வாளை உயர்த்தும்போது அதனை அபூ துஜானா தனது கேடயத்தால் தடுக்க, அவனுடைய வாள் கேடயத்துக்குள் சிக்கியது. அந்தக் கணப்பொழுதில் அபூ துஜானா(ரலி) அவனை வெட்டி மாய்த்தார். அங்கிருந்து முன்னேறி எதிரிகளுடன் போரிட்டுக் கொண்டிருந்தபோது எதிரிப் படையில் ஒருவர் மக்களுக்குப் போர் ஆர்வத்தைத் தூண்டியபடி சண்டையிட்டு கொண்டிருந்ததைக் கவனித்தவராக அவர் மீது தன் வாளை வீச எண்ணி அவரைத் திருப்பிய போது அது ஒரு பெண் என்பதைக் கண்டு ஒரு பெண்ணை நபியவர்களின் வாளில் வீழ்த்த வேண்டாமென்று விட்டுவிட்டார்கள். அவர் விட்டு வைத்த அந்தப் பெண் அபூ ஸுஃப்யானின் மனைவி ஹிந்த் பின்த் உத்பா. பத்ருப் போரில் ஹிந்த் தனது தந்தை உத்பாவையும், மகன் ஹன்ளலா இப்னு அபூ ஸுஃப்யானையும் இழந்திருந்ததால் வீரியத்துடன் போர் புரிந்து கொண்டிருந்தார்.
எதிரிகளின் கொடியைச் சுமந்திருந்த தல்ஹா இப்னு அபூதல்ஹா குடும்பத்தில் அக்கொடியை காப்பதற்கே குடும்பத்திலுள்ள அனைவரும் உயிர் இழக்க நேரிட்டது. எதிரிகளின் கொடி பூமியில் சாய்ந்து, அதைச் சுமப்பதற்கு யாரும் இல்லாமல் இறுதி வரை அது மண்ணிலேயே கிடந்தது.
ஹம்ஸா(ரலி), ஸஅது இப்னு அபூ வக்காஸ்(ரலி), அலீ(ரலி), ஆஸிம் இப்னு ஸாமிதி(ரலி), ஜுபைர் இப்னு அவ்வாம்(ரலி), தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி) மற்றும் பலர் முஸ்லிம்களின் அணியில் பெரும் பங்காற்றி இணைவைப்பவர்களை யோசிக்க வைத்தனர். இவர்களைக் கண்டாலே எதிரிகள் ஓடத் தொடங்கினர். நபிகளாரின் சிறிய தந்தையான ஹம்ஸா(ரலி) அவர்களை நேருக்கு நேர் கொல்ல முடியாதென்று ஜுபைர் இப்னு முத்யிம் என்பவர் ஈட்டி எறிவதில் திறமை வாய்ந்த தனது அடிமை வஹ்ஷீயிடம் ‘நீ ஹம்ஸாவை கொன்றால் நீ அடிமைத்தளையிலிருந்து விடுதலையாவாய்’ என்று கூறி அவரை அனுப்பி வைத்திருந்தார். காரணம் பத்ருப் போரில் ஜுபைருடைய தந்தையின் சகோதரர் கொல்லப்பட்டிருந்தார். அதனால் வஹ்ஷீ தருணம் பார்த்து ஒளிந்திருந்து தூரத்திலிருந்து ஈட்டியை எறிந்தான். அது ஹம்ஸா(ரலி) அவர்களைக் கிழித்துக் கொண்டு அதுவே அவர்களின் வாழ்நாள் முடிவிற்குக் காரணமாக அமைந்தது. ஒளிந்திருந்த வஹ்ஷீ ஓடிவந்து ஹம்ஸா(ரலி) இறந்துவிட்டதை உறுதி செய்து கொண்டு தனது ஈட்டியை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான். தனது விடுதலைக்காக அந்தக் கொலையைச் செய்துவிட்டு வேறு யாரையும் கொல்ல வேண்டுமென்ற அவசியமும் எண்ணமும் இல்லாததால் மக்காவிற்குத் திரும்பிவிட்டான்.
நபிகளாரால் சிங்கம் என்று போற்றப்பட்ட மாவீரர் ஹம்ஸா (ரலி) கொலை செய்யப்பட்டதால் முஸ்லிம்களுக்குப் பெருத்த சேதம் ஏற்பட்டது இருப்பினும் முஸ்லிம்கள் நிலைமையைத் தங்களது கட்டுக்குள் வைத்திருந்தனர்.
இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம், ஸஹீஹ் புகாரி 4:64:4072
-ஜெஸிலா பானு, துபாய்