என் மலர்
இஸ்லாம்
ஆலோசனை வழங்கக்கூடியவர் நம்பத்தகுந்தவராகவும், பிறர் நலன் நாடுபவராகவும் இருக்க வேண்டும். இப்படிப்பட்டவரிடம் தான் ஆலோசனை கேட்க வேண்டும்.
மனிதனாகப் பிறப்பதே சிறப்பிலும் சிறப்பு. அதில் முழுமனிதனாக வாழ்வது அரிதிலும் அரிது. மனிதம் பல்வேறு சூழ்நிலைகளில் முழுமை அடைகிறது. மனிதம் பரிபூரணம் அடைய பல வழிகள் உண்டு. ஒவ்வொரு வழியிலும் மனிதம் பரிபூரணம் அடைய அந்தந்த வழியில் மனிதன் மேம்பட்டு, சிறந்து விளங்கிட வேண்டும்.
நாம் மனிதம் பரிபூரணம் அடைய இங்கே எடுத்துக்கொண்ட வழிகளில் “கலந்தாலோசித்தல்” என்பது சிறந்த வழியாகும்.
ஒவ்வொரு மனிதனும் கலந்தாலோசிக்க பலதரப்பட்ட வாழ்க்கை அம்சங்கள் உள்ளன. அவை:
1) குடும்ப ஆலோசனை, 2) கல்வி ஆலோசனை, 3) நிர்வாக ஆலோசனை, 4) மருத்துவ ஆலோசனை, 5) குழந்தை நல ஆலோசனை, 6) மார்க்க சம்பந்தமான ஆலோசனை, 7) சமாதான ஆலோசனை, 8) நல்லிணக்க ஆலோசனை, 9) மனநல ஆலோசனை, 10) சீர்திருத்த ஆலோசனை.
இதுபோன்ற எண்ணிலடங்கா ஆலோசனைகள் உண்டு.
நாம் வாழ்வில் எதை செய்ய முனைந்தாலும் நம்மைவிட வயதிலும், அறிவிலும், அனுபவத்திலும் சிறந்த விளங்குவோரிடம் கலந்தாலோசித்து அந்த காரியத்தில் இறங்கவேண்டும். இவ்வாறு நடந்து கொள்பவரே முழுமனிதர் ஆவார். இதன்மூலம் அவரின் மனிதம் பரிபூரண நிலையை அடைந்து விடுகிறது.
ஹஸன் பஸரீ (ரஹ்) இதுபற்றி கூறுவதாவது:
‘மனிதர்கள் மூன்று வகையினர் ஆவர். முதலாவது வகையினர் முழு மனிதர்கள் ஆவர். இரண்டாவது வகையினர் அரை மனிதர்கள் ஆவர். மூன்றாவது வகையினர் மனிதர்களே இல்லாதவர் ஆவர். முதலாம் வகையினர் முழு மனிதர்கள் யாரென்றால், அவர்கள் அறிவுடையவர்களாகவும் இருப்பார்கள்; பிறரிடம் ஆலோசனைகளை கேட்பவராகவும் இருப்பார்கள். இவர்கள்தான் மனிதர்களிலேயே முழு மனிதர்கள்’.
‘இரண்டாம் வகையினர் அரை மனிதர்கள். யாரெனில் சுயபுத்தி உடைய புத்திசாலியாக இருப்பார்கள்; எனினும் பிறரிடம் ஆலோசனை செய்யமாட்டார்கள். இவர்கள்தான் மனிதர்களிலேயே அரைமனிதர்கள்’.
‘மூன்றாம் வகையினர் மனிதர்களே கிடையாது. இவர்கள் எப்படிப்பட்டவர்களென்றால், இவர்களுக்கு சுயபுத்தியும் கிடையாது. பிறரின் புத்தியையும், ஆலோசனைகளையும் கேட்கவும் மாட்டார்கள். இவர்கள்தான் மனிதர்களிலேயே மனிதத்தன்மையை இழந்தவர்கள்’.
இம்மூன்று வகையினரில் நாம் எந்த வகையினராக இருக்க விரும்புகிறோம் என்பதை புரிந்து செயல்படவேண்டும். இஸ்லாமியப் பார்வையில் ஆலோசனையில் ஈடுபாடு கொள்வது இறை வணக்கத்திற்குச் சமமானது.
இறைவணக்கம் புரிவது நன்மைகளை பெற்றுத்தரவல்லது. இதுபோன்று ஆலோசனை கேட்பது, ஆலோசனை கூறுவது, ஆலோசனை செய்யப்படும் சபையில் இருப்பது போன்ற அனைத்தும் நன்மைகள் பெற்றுத்தரும் காரியங்களே.
ஆலோசனைகள் செய்யப்படும்போது, பலதரப்பட்ட மனிதர்களின் சிந்தனையில் தோன்றிய விலைமதிக்கமுடியாத அறிவு பொக்கிஷங்களின் குவியல்கள் வெளிப்படுகின்றன. நமது சிந்தனையில் உதித்த எண்ணங்களை விட பிறரின் சிந்தனை உயர்வாகவும், காலத்திற்கு தோதுவாகவும், சூழ்நிலைகளுக்கு ஏற்றதாகவும் இருக்கலாம். அவற்றை செயல்படுத்தும் போது வெற்றி கிட்டலாம்.
மேலும் ஆலோசனை செய்யும்போது அனைவரின் உள்ளங்களும் ஒன்றுபடுகின்றன. பகை உணர்வு மறைந்து பகைவர்களையும் நேசர்களாக மாற்றிவிடும் ஒரு சக்தி ஆலோசனையில் உள்ளது.
ஆலோசனை புரியாத ஒரு காரியம் வெற்றி அடைந்தாலும், அது நிரந்தரமான வெற்றி என கூறிவிடமுடியாது. ஆலோசனைகளை கேட்டு எடுக்கப்பட்ட ஒரு காரியம் தோல்வியில் முடிந்தாலும், அது தற்காலிகமானதுதான். அதன் முடிவு வெற்றியாகவும், அபிவிருத்தியாகவும் அமையும்.
“எவன் ஆலோசனைகளை கேட்டு செயல்படுகிறானோ, அவன் கை சேதம் அடைவது கிடையாது” என்பது நபிமொழியாகும்.
அல்லாஹ் மனித சமுதாயத்தை படைக்க நாடியபோது, வானவர்களிடம் தனது எண்ணத்தை தெரிவித்தான். அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களும் அனைத்து காரியத்திலும் தோழர்களுடன் ஆலோசனைகள் செய்தார்கள்.
“சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்” (திருக்குர்ஆன் 3:159) என்ற வசனத்தில் நபி அவர்களையும், ஆலோசனையின்படி செயல்படுமாறு இறைவன் கட்டளையிட்டு இருக்கிறான். இதுபோலவே அனைவரும் செயல்படவேண்டும் என்று மனிதர்கள் அனைவருக்கும் இறைவன் கற்றுக்கொடுத்திருக்கிறான்.
இறைவிசுவாசிகளின் குணாதிசயங்களை குறித்து இறைவன் விவரிக்கும் போது இவ்வாறு குறிப்பிடுகின்றான்:
“அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர்” (திருக்குர்ஆன் 42:38)
“தமது தோழர்களிடம் அதிகமான முறையில் ஆலோசனை செய்த நபி (ஸல்) அவர்களை விட வேறெந்த நபரையும் நான் கண்டதில்லை” (அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) திர்மிதி)
ஆலோசனை வழங்கக்கூடியவர் நம்பத்தகுந்தவராகவும், பிறர் நலன் நாடுபவராகவும் இருக்க வேண்டும். இப்படிப்பட்டவரிடம் தான் ஆலோசனை கேட்க வேண்டும்.
“ஆலோசனை வழங்கக்கூடியவர் நம்பத் தகுந்தவராக இருக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” (நபிமொழி)
“மார்க்கம் என்பதே உபதேசம்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” (முஸ்லிம்)
அனைத்து காரியங்களிலும் அதை தொடங்கும் முன் ஆலோசனை செய்து கொள்வது இறைவன், இறைத்தூதர் ஆகியோரின் நடைமுறையாக அமைந்துள்ளது. அவர்கள் வழி நாமும் நடந்து எந்த ஒரு செயலை செய்யும் முன்பு அது தொடர்பாக ஆலோசனைகள் செய்து அதன்படி நடந்தால் இறைஅருளால் வெற்றியை பரிசாக பெறலாம்.
மவுலவி அ. சைய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன்.

எதிரிகளின் படையில் அதிகமான போர் வீரர்களும் போர் ஆயுதங்களும் இருந்தன. இருப்பினும் அவர்களுக்கு முஸ்லிம்களைப் பற்றிய பயமிருந்தது.
உஹுத் போரில் நபிகளார் துரிதமாகக் காரியங்களைச் செய்து ராணுவச் சட்டங்களைக் கூறி பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தி, சிறிய குழுவை மலையில் நிறுத்தி, முஸ்லிம்களைப் பின்புறமாக எதிரிகள் தாக்கிவிடாமல் இருக்க எல்லா நடவடிக்கைகளையும் எடுத்தார்கள் நபி முஹம்மது (ஸல்).
எதிரிகளின் படையில் அதிகமான போர் வீரர்களும் போர் ஆயுதங்களும் இருந்தன. இருப்பினும் அவர்களுக்கு முஸ்லிம்களைப் பற்றிய பயமிருந்தது. காரணம் “நீர் உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சிக்கை செய்வீராக!” என்ற குர்ஆன் வசனம் அருளப்பட்ட போது நபிகளார் தனது நெருங்கிய உறவினர்களான ஹாஷிம் கிளையினரையும் மற்றவர்களையும் சந்தித்துப் பேசியபோது, நபிகளாரின் தந்தையின் சகோதரர் அபூ லஹப் இஸ்லாமையும் இறைத் தூதரையும் இழிவாகத் தொடந்து பேசினார், நபிகளாருக்குப் பலவகையான இன்னல்களைத் தந்தபோது, திருக்குர்ஆனில் ஸூரத்துல் லஹப்பில் அவனுக்கு இழி மரணம் வந்தடையும் என்று வந்துள்ளதைத் தெரிந்தும் கூட ஆயுள் அவகாசமிருந்தும் அவன் மாறு செய்தான்.
அவனுடைய வாழ்வு இப்படித்தான் அமையுமென்று திட்டவட்டமாகச் சொல்லப்பட்டிருந்தபடியே அவன் துர்மரணம் அடைந்தான். குர்ஆனின் சான்று வெளிப்படையானது, ஆனால் ஏக இறைவன் ஒருவனே என்று ஏற்க மனமில்லாத இணை வைப்பாளர்கள், ‘தான்’ என்ற அகந்தையிலிருந்து விடுபடாதவர்களாகத் தமக்குத் தெரிந்த குறுக்கு வழியைக் கையாள நினைத்தனர்.

மதீனாவாசிகளிடம் அபூ ஸுஃப்யான் தூதனுப்பி “எங்களுக்கு உங்களிடம் எந்தப் பகையுமில்லை, உங்களிடம் போர் செய்ய வரவில்லை. எங்களின் ஒன்றுவிட்ட சகோதரரை மட்டும் எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள், நாங்கள் திரும்பிச் சென்று விடுகிறோம்” என்று ஏமாற்ற நினைத்த வார்த்தைகள் முஸ்லிம்களிடம் பலிக்காமல் போனது. அடுத்த முயற்சியாக மதீனாவின் முன்னாள் தலைவனான அபூ ஆமிர் என்பவரை அனுப்பிப் பார்த்தனர், அதையும் முஸ்லிம்கள் கண்டுகொள்ளவில்லை.
தங்கள் படையின் அணிகளை அமைத்தனர். குறைஷிப் பெண்களும் படைவீரர்களை உற்சாகப்படுத்தவும், அவர்களிடம் கவி பாடி உணர்வுகளைத் தூண்டவும் செய்தனர். பொதுத் தளபதியாக அபூ ஸுஃப்யான், வலப்பக்கத்தில் காலித் இப்ன் வலீத்தின் குதிரைப்படை, இடப்பக்கத்தில் பத்ருப் போரில் தனது தந்தை அபூ ஜஹ்லை இழந்த அவனது மகன் இக்ரிமா, காலாட்படை வீரர்களுக்கு ஸஃப்வான் இப்னு உமய்யா, மற்றும் அம்பெறியும் வீரர்களுக்கு அப்துல்லாஹ் இப்ன் அபூ ரபீஆ என்று தலைமையேற்று முன்னேறினர்.
போருக்கு ஆயுத்தமாகினர். எதிரிப் படையின் முரட்டுக் கடா என்று அழைக்கப்படும் கபிஷுல் கதீபா முஸ்லிம்களை நேருக்கு நேர் மோத அழைத்தான். அழைத்தவனை ஒரே பாய்ச்சலில் வெட்டிச்சாய்த்தார்கள் ஜுபைர்(ரலி). சண்டை சூடுபிடித்தது. நபிகளார் ‘அல்லாஹ் மிகப் பெரியவன் - அல்லாஹு அக்பர்’ என்று முழங்கினார்கள்.
குறைஷிகளின் கொடியை தாங்கியவரான தல்ஹா இப்னு அபூ தல்ஹா போரின் தீப்பிழம்பை மூட்டினான்.
அங்குச் சண்டை கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.
திருக்குர்ஆன் 111:1-5, அர்ரஹீக் அல்மக்தூம்
- ஜெஸிலா பானு.

எதிரிப்படையில் மிகத் திறமையான காலித் பின் வலீத் தலைமையேற்றிருக்கும் குதிரைப் படை முஸ்லிம் அணியை நெருங்கிவிடாதபடியும் பார்த்துக் கொள்ள வீரர்களை நியமித்தார்கள் நபி முஹம்மது(ஸல்).
போருக்காகத் திரண்டு வந்த படையிலிருந்து 300 பேர் திரும்பிவிட்ட பிறகு மீதமுள்ள பெரும்படை வீரர்களுடன் நபி முஹம்மது (ஸல்) எதிரிகளை எதிர்கொள்ளப் புறப்பட்டார்கள். உஹுத் என்ற இடத்திற்கு வேறு வழியாக வந்தடைந்து ‘உத்வத்துல் வாதி’ என்ற கணவாயின் அருகில் தங்களது கூடாரங்களை அமைத்தனர்.
எதிரிகள் எந்தப் பக்கத்திலிருந்தும் முஸ்லிம்களை நெருங்கிவிடாதபடி அவர்களைச் சுற்றி திறமையான அம்பெய்பவர்களை நபிகளார் நியமித்தார்கள். படையைப் பின்புறத்திலிருந்து யாரும் தாக்கிவிடக் கூடாதென்று திறமையான அம்பெய்யும் சிறு குழுவை அருகிலிருந்த மலையில் நிறுத்தினார்கள் நபி(ஸல்). அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் காலாட்படையினருக்குத் தலைவராக நியமித்தார்கள்.
“போரில் நாங்கள் கொல்லப்பட்டு எங்கள் சடலங்களைப் பறவைகள் கொத்திச் செல்வதை நீங்கள் பார்த்தால் கூட நான் உங்களுக்குச் சொல்லியனுப்பும் வரை உங்களுக்கு நியமித்த இடத்தைவிட்டு நகராதீர்கள். நாங்கள் எதிரிகளைத் தோற்கடித்துப் போர்க் களத்தில் செத்து வீழ்ந்துகிடக்கும் அவர்களை மிதித்துச் செல்வதை நீங்கள் பார்த்தாலும் கூட நான் உங்களுக்குச் சொல்லியனுப்பும் வரை உங்களுடைய இடத்தைவிட்டு நகராதீர்கள்” என்று நபி (ஸல்) படைவீரர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் படைவீரர்களை நியமித்தார்கள். எதிரிப்படையில் மிகத் திறமையான காலித் பின் வலீத் தலைமையேற்றிருக்கும் குதிரைப் படை முஸ்லிம் அணியை நெருங்கிவிடாதபடியும் பார்த்துக் கொள்ள வீரர்களை நியமித்தார்கள் நபி முஹம்மது(ஸல்).
நபி(ஸல்) மிக நுணுக்கமான இராணுவ திட்டத்தைச் செயல்படுத்திவிட்டு ஒரு கூர்மையான வாளையும் எடுத்துத் தோழர்களிடம் “இதற்குரிய கடமையை நிறைவேற்றுபவர் யார்?” என்று ஆர்வத்தைத் தூண்டியபோது, அதனைப் பெற்றுக் கொள்ளப் பலர் முன் வந்தாலும் அபூ துஜானா(ரலி) அதனைப் பெற்றுக் கொண்டார்கள்.
நபி முஹம்மது (ஸல்) அவர்களிடன் கட்டளை வரும் வரை போரை ஆரம்பிக்கக் கூடாது என்றும் படைவீரர்கள் அறிவுறுத்தப்பட்டார்கள்.
ஸஹீஹ் புகாரி 3:56:3039, இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம்

“பூமி முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்” (திருக்குர்ஆன் 36:36)
இந்த உலகில் மனிதர்களையும், விலங்குகளையும், பறவைகளையும் இறைவன் ஜோடியாகவே படைத்தான். இனங்கள் பெருக வேண்டும்; உலகம் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகவே இணைகளை ஏற்படுத்தினான்.
“இன்னும், உங்களை (ஆண், பெண்) ஜோடியாக நாம் படைத்தோம்” (திருக்குர்ஆன்-78:8) என்றும்,
“நீங்கள் சிந்திப்பதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாகப் படைத்தோம்” (51:49) என்றும்,
“அவன்தான் ஜோடிகள் யாவற்றையும் படைத்தான். உங்களுக்காக கப்பல்களையும், நீங்கள் சவாரி செய்யும் கால்நடைகளையும் உண்டாக்கினான்” (43:12) என்றும்,
“வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே; உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும், கால்நடைகளில் இருந்து ஜோடிகளையும் அமைத்து, அதில் உங்களை(ப் பல இடங்களிலும் பல்கி) பரவச் செய்கிறான். அவனைப் போன்று எப்பொருளும் இல்லை” (42:11) என்றும் இறைவன் திருமறையில் கூறுகிறான்.
ஆனால் தாவரங்களிலும் ஆண்-பெண் என ஜோடிகள் உண்டு என்பதைப் பண்டை நாட்களில் மனிதர்கள் யாரும் அறிந்திருக்கவில்லை.
தாவரம் என்பது மரம், செடி, கொடி, புற்கள் போன்றவற்றைக் குறிக்கும் ஒரு பெரும் உயிரினப் பிரிவாகும். இந்தப் பூமியில் உள்ள நிலப்பரப்பு முழுவதும் ஏன் நீரிலும்கூட வாழ்ந்து இந்த உலகத்தில் மற்ற உயிரினங்கள் வாழ வழிவகை செய்பவை தாவரங்கள்.
மண் சரிவு, மண் அரிப்பில் இருந்து பாதுகாக்கவும், மண் வளம், மழை வளம், சுகமான தட்ப வெப்ப நிலை ஆகியவற்றை நிலைப்படுத்தவும் தாவரங்களால் முடியும் என்பதைப் பார்க்கும்போது, மனித வாழ்க்கைக்கு தாவரங்களின் ஆதாரமான பங்கை அறியலாம்.
இந்த உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் அடிப்படையாகத் தாவரங்கள் இருக்கின்றன. மிகச் சிறிய நீரில் நேரடியாக வாழும் பாசி வகைகளில் இருந்து 100 மீட்டர் (330 அடி) உயரத்திற்கு மேல் வளரும் ‘சிகொயா’ மரங்கள் வரை, பல்வேறு வகைகள் உள்ளன. சுமார் 3,50,000 தாவர வகைகள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றில் சிலவற்றை மட்டுமே நாம் உணவு, உடை, மருந்து, உறைவிடம் ஆகியவற்றுக்காகப் பயன்படுத்துகிறோம். பல நாடுகளின் பொருளாதாரம் மற்றும் அரசுகள் இதைப் பொறுத்தே நிலைபெறுகிறது. இதைவிட முக்கியமாக 100 கோடி (பில்லியன்) ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தாவரங்களின் பச்சையத்தால் தான் (குளோரபில்) இப்போது நாம் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவை கிடைக்கின்றன என்பதை அறியும்போது தொழில் உலகின் அடித்தளமே தாவரங்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
தாவரங்கள் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு தானே நகராமல் நிலையாக இருப்பதால் அவற்றை ‘நிலைத்திணை’ என்கிறார்கள். மனிதர்களும், விலங்குகளும் நகர்வதால் ‘நகர் திணை’ எனலாம்.

ஆறறிவுடைய மக்கள் உயர்திணை. திணையாவது ஒழுக்கம். உயர்ந்த ஒழுக்கம் உடையவர் என்பதை இந்த குறியீடு உணர்த்து கிறது. இதில் ஆளும் தன்மை உடையவர்கள் ஆண்கள்; பேணும் தன்மை உடையவர்கள் பெண்கள்.
உயர்ந்த ஒழுக்கம் இல்லாதது, அஃறிணை. அல்+திணை= அஃறிணை. இது உயிருள்ளது; உயிரற்றது என இருவகைப் படும்.
“இதை (மழைநீரை)க் கொண்டு நாம் பலவிதமான தாவரங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்” (திருக்குர்ஆன்-20:53) என்று திருமறையில் இறைவன் கூறுவதன் மூலம் தாவரங்களிலும் ஜோடி உண்டு என்பதை அறிய முடிகிறது.
இனப் பெருக்கத்திற்காகவும், விதைகள் தோன்றுவதற்கும் மகரந்தத் தூள்கள் ஒரு தாவரத்தில் இருந்து இன்னொன்றுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இதுவே ‘மகரந்தச் சேர்க்கை’ எனப்படும். தாவரத்தில் உள்ள மகரந்தத் தூள், ஆண்பால் அணுக்களைக் கொண்டுள்ளது. சூல் வித்திலைகள், பெண்பால் அணுக்களைக் கொண்டுள்ளன. இவை இரண்டும் இணையும் நிகழ்வுதான் மகரந்தச் சேர்க்கை. இது ‘தன் மகரந்தச் சேர்க்கை’, ‘அயல் மகரந்தச் சேர்க்கை’ என்று இருவகைப்படும்.
ஒரு பூவில் உள்ள மகரந்தம் அதே பூவில் உள்ள அல்லது அதே தாவரத்தில் உள்ள வேறொரு பூவில் இருக்கும் சூல் வித்துடன் மகரந்தச் சேர்க்கைக்கு உள்ளாயின் அது ‘தன் மகரந்தச் சேர்க்கை’ எனப்படும். ஒரு தாவரத்தில் இருக்கும் சூல் வித்தானது, வேறொரு தாவரத்தில் இருந்து பெறப்படும் மகரந்தத்தால் கருக்கட்டப்படுமாயின் அது ‘அயல் மகரந்தச் சேர்க்கை’ எனப்படும்.
ஆண்பால் அணுக்களான மகரந்த மணிகளை, பெண்பால் அணுக்களான சூல் வித்திலைகளுக்கு கொண்டு செல்வதில் வேறொரு உயிரினம் பயன்படுகிறது. இதில் வண்டு, தேனீ, எறும்பு, குளவி, பட்டாம்பூச்சி போன்ற பூச்சிகளுக்கு பெரும் பங்குண்டு. பறவைகளும், வவ்வால்களும்கூட அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவி புரிகின்றன. எந்த உயிரினத்தின் உதவியும் இல்லாமலும் மகரந்தச் சேர்க்கை நடைபெறலாம். பொதுவாக இந்த வகையான மகரந்தச் சேர்க்கை காற்றின் துணையுடன் நிகழும்.
“அவன் எத்தகையவன் என்றால், அவனே பூமியை விரித்து அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான். இன்னும் கனிகள் ஒவ்வொன்றில் இருந்தும் இரண்டிரண்டாக ஜோடிகளை அதில் உண்டாக்கினான்” (திருக்குர்ஆன் 13:3).
இந்த வசனத்தின் மூலம் அனைத்துப் பழங்களிலும் ஆண், பெண் பாலினப்பகுதிகள் அமைந்துள்ளன என்கிற தாவரவியல் உண்மையை திருக்குர்ஆன் எடுத்துக் கூறுகின்றது.
“பூமி முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்” (திருக்குர்ஆன் 36:36)
மனிதர்கள், மிருகங்கள், செடிகொடிகள், பழவகைகள் என்ற இனங்களையும் கடந்து, மனிதர்கள் அறியாதவற்றிலும் ஜோடி ஜோடியாகப் படைத்திருப்பதாக மேற்கண்ட வசனத்தில் இறைவன் கூறுகின்றான்.
நாம் பயன்படுத்தும் மின்சாரத்தில் கூட உடன்பாடு (பாஸிட்டிவ்) எதிர்மறை (நெகட்டிவ்) என்ற ஜோடிகள் இருப்பதை இப்போது விஞ்ஞான உலகம் கண்டறிந்துள்ளது.
பாத்திமா மைந்தன்.

இதைத் திருக்குர்ஆனில் ஸூரத்துல் இம்ரானில் “அந்தப் போரில் உங்களில் இரண்டு பிரிவினர் தைரியம் இழந்து ஓடி விடலாமா என்று எண்ணியபோது – அல்லாஹ் அவ்விரு பிரிவாருக்கும் உதவி செய்து காப்போனாக இருந்தான். ஆகவே, முஸ்லிம்கள் அல்லாஹ்விடத்திலேயே முழு நம்பிக்கை வைக்க வேண்டும்” என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதீனாவைவிட்டு வெளியேறாமல்.. ஆனால் அதே சமயம் குறைஷிகள் மதீனாவிற்குள் நுழைய முயன்றால் தெரு முனைகளிலிருந்தே அவர்களை எதிர்ப்போமென்று நபி முஹம்மது (ஸல்) அவர்கள், நபித்தோழர்களிடம் கேட்ட ஆலோசனைக்கு நபித் தோழர்கள் மறுப்பு தெரிவித்து மதீனாவைவிட்டு வெளியேறி போர் புரிவோம் என்று கேட்டுக் கொண்டதன் பேரில், அதனை ஏற்றுக் கொண்டு நபி முஹம்மது (ஸல்) போருக்குத் தயாரானவர்களைச் சந்தித்துத் தகுந்த பிரிவுகளாக அவர்களைப் பிரித்து, பார்வையிட்டார்கள்.
போர் செய்யப் புறப்பட்டவர்களிலிருந்து பலவீனமானவர்களை மதீனாவிற்கே திருப்பி அனுப்பிவிட்டார்கள். ஆங்காங்கே நிறுத்தி உரிய நேரத்தில் தொழுகையைக் கடைப்பிடித்தார்கள் ஆனால் ராணுவ முகாமின் பாதுகாப்புக்காக, எல்லா நேரங்களிலும்.. கண்காணிப்பிற்காக சுழற்சி முறையில் ஆட்களை நியமித்திருந்தார்கள்.
எதிரிகளின் படை தெரியும் அளவுக்கு, எதிரிகள் முகாமிட்டிருந்த இடத்திற்கு அருகில் வந்தபோது அதிகாலை தொழுகைக்கான நேரம் வந்ததால் அங்கு நின்று அனைவரும் ஃபஜர் தொழுகையை நிறைவேற்றினார்கள்.

வெளித்தோற்றத்திற்காக மட்டும் இஸ்லாத்தை ஏற்ற இப்னு உபை படையில் ஒரு பகுதியான கிட்டதட்ட 300 வீரர்களை அழைத்துக் கொண்டு போர் செய்யாமல் திரும்பச் செல்ல விழைந்தான். இவன் உயிருக்குப் பயந்து போர் புரிய வரவில்லையென்றால் அவன் மதீனாவிலேயே தங்கியிருக்கலாம், ஆனால் அவனது நோக்கம், வீரர்களிடையே திடீர் பீதியை ஏற்படுத்தி, குழப்பத்தை நிகழ்த்துவது மட்டுமே.
அவன் நோக்கத்தின்படியே மற்ற இரு பிரிவினர்களும் போரிலிருந்து பின் வாங்க இருந்தனர். அப்போது இறைவன் அவர்களின் மனதில் துணிவை ஏற்படுத்தினான். இதைத் திருக்குர்ஆனில் ஸூரத்துல் இம்ரானில் “அந்தப் போரில் உங்களில் இரண்டு பிரிவினர் தைரியம் இழந்து ஓடி விடலாமா என்று எண்ணியபோது – அல்லாஹ் அவ்விரு பிரிவாருக்கும் உதவி செய்து காப்போனாக இருந்தான். ஆகவே, முஸ்லிம்கள் அல்லாஹ்விடத்திலேயே முழு நம்பிக்கை வைக்க வேண்டும்” என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
போரிலிருந்து பின் வாங்கியவர்களை அப்துல்லாஹ் இப்னு ஹராம் (ரலி) சமாதானப்படுத்தி மீண்டும் அழைத்து வர முயன்றார்கள். “நீங்கள் களத்தில் இறங்கிப் போர் புரிய வேண்டாம், எங்களுக்கு அரணாக நில்லுங்கள் போதும்” என்று கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் “நீங்கள் போருக்கு வரவில்லை, உங்களையே அழித்துக் கொள்ள வந்திருக்கிறீர்கள்” என்று கூறினர்.
இச்சம்பவம் நிகழ்ந்ததே மாறுசெய்பவர்களை அடையாளம் காட்டத்தான். இது குறித்துத் திருக்குர்ஆனில், “நயவஞ்சகரைப் பிரித்து அறிவதற்கும் தான்; அவர்களிடம் கூறப்பட்டது: “வாருங்கள்! அல்லாஹ்வின் பாதையில் போர் புரியுங்கள் அல்லது பகைவர்கள் அணுகாதவாறு தடுத்து விடுங்கள்,” அப்போது அவர்கள் சொன்னார்கள்: “நாங்கள் போரைப் பற்றி அறிந்திருந்தால் நிச்சயமாக நாங்கள் உங்களைப் பின்பற்றியிருப்போம்.” அன்றையதினம் அவர்கள் நம்பிக்கையை விட நிராகரிப்பின் பக்கமே அதிகம் நெருங்கியிருந்தார்கள்; தம் உள்ளங்களில் இல்லாதவற்றைத் தம் வாய்களினால் கூறினர்; அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்து வைப்பதையெல்லாம் அல்லாஹ் நன்கு அறிகிறான்” என்றும் இவர்களைக் குறிப்பிட்டே சொல்லப்பட்டுள்ளது.
திருக்குர்ஆன் 3:122, 3:167

மறக்க வேண்டிய இரண்டு: ‘நீங்கள் பிறருக்கு செய்த நன்மை, பிறர் உங்களுக்கு செய்த தீமை. இவ்விரண்டையும் எப்போதும் மறந்துவிடுங்கள்’.
எவர்களுடைய வாழ்வில் இத்தகைய நல்லுபதேசங்கள் நடைமுறைபடுத்தப்படுமோ அவர்களுடைய ‘வாழ்வு’ என்பது ‘இல்ஹாம்’ உடையதாக மாறிவிடும். அது இறைநேசத்தையும், இறை நெருக்கத்தையும் பெற்றுத் தந்துவிடும்.

நபிமார்கள் என்ற தீர்க்கத்தரிசிகளுக்கு இறைவன் அருளுகின்ற செய்திகள் ‘வஹீ’ (இறைத்தூது) என்று கூறப்படும். இறைவனின் விருப்பத்திற்கு ஆளான ஞானியர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கு ‘இல்ஹாம்’ (நல்லுதிப்பு) என்று அழைக்கப்படும்.
இறுதித்தூதரான முகம்மது நபியோடு நபித்துவம் நிறைவு பெற்று விட்டதை இறைவன் தனது திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்:
‘உங்களில் உள்ள ஆடவர்களில் எவருக்கும் முகம்மது (நபி அவர்கள்) தகப்பனாக இருக்கவில்லை. எனினும் அவர் அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு (கடைசி) முத்திரையாகவும் இருக்கின்றார். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிந்தோனாக இருக்கிறான்’. (33.40)
முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு யாதொரு நபியும் இனி வரமாட்டார்கள் என்பதை மேலே சொன்ன வசனம் நன்கு தெளிவுபடுத்துகின்றது. எனவே ‘வஹீ’யின் வாசல் நிறைவு பெற்று விட்டது. ‘இல்ஹாம்’ உடைய அருள்வாசலை தனது நேசர்களுக்காக யுக முடிவு நாள் வரை என்றும் இறைவன் திறந்தே வைத்திருக்கின்றான்.
இல்ஹாம் என்ற ஞானத்தைப் பெற்ற மேதையான, ஹசரத் லுக்மான் அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பிரசித்து பெற்று விளங்கினார்கள். அவர்கள் குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு சிறப்பித்துக் கூறுகின்றது:
‘லுக்மானுக்கு திட்டமாக நாம் ஞானத்தை கொடுத்தோம். அல்லாஹ்வுக்கு நீர் நன்றி செலுத்துவீராக (என்று கூறினோம்). எவர் நன்றி செலுத்துகிறாரோ, அவர் நன்றி செலுத்துவதெல்லாம் தமது (நன்மைக்காக) தான். எவர் (அதனை) நிராகரிக்கிறாரோ (அது அவருக்கே கேடாகும்), நிச்சயமாக அல்லாஹ் (எவரிடமும்) தேவையற்றவன், புகழுக்குரியவன். (31-12)
ஞான மேதை ஹசரத் அவர்களின் பெயரிலேயே ‘சூரத்து லுக்மான்’ என்ற 31 வது அத்தியாயம் குர்ஆனில் இறங்கி உள்ளது. இது ஞானம் பெற்ற மேதைகளுக்கு எல்லாம் இறைவன் வழங்கிய மகத்தான கண்ணியமாகவே கருதப்படுகின்றது.
ஹசரத் லுக்மான் அவர்கள், தங்களது காலத்தில் வாழ்ந்த அநேக நபிமார்களுக்கு பணிவிடை (ஹிக்மத்) செய்து தனது ஞானத்தை பெருக்கிக்கொண்டார்கள். இயல்பாகவே இறைவன் இவர்களுக்கு மருத்துவ ஞானத்தையும் மிக அதிகமாக வழங்கியிருந்ததால், ‘லுக்மானுல் ஹக்கீம்’ என்றும் அழைக்கப்பட்டார்கள். ‘ஹக்கீம்’ என்ற சொல்லுக்கு ‘மருத்துவர்’ என்பது பொருளாகும்.
யுனானி மருத்துவத்தின் அடிப்படை ஹசரத் லுக்மான் ஹக்கிமிடமிருந்தே ஆரம்பமாகிறது. இவர் கள் உடல்கூறு மற்றும் மனக்கூறு மருத்துவத்தில் நிபுணராக விளங்கினார்கள்.
இவர்களை சிலர் நபி என்றும் கூறுவார்கள். ஆனால் மார்க்க அறிஞர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இதனை மறுத்து கூறுகிறார்கள். “அல்லாஹ்வால், ஹசரத் லுக்மான் நல்லறிவும் ஞானமும் கொடுக்கப்பட்டவர்கள். அவர்கள் நபியல்லர். ஆடு மேய்த்த ‘ஹபசி’ (ஒரு இனத்தை சார்ந்தவர்)” என்கிறார்கள்.
‘எனதருமை மகனே’ என்று அழைத்து தனது மகனுக்கு கூறுவது போல் அமைந்துள்ள இவரது உபதேசங்கள் ஆதமுடைய மகன்களான மனித குலம் முழுமைக்கும் உள்ள உபதேசமாகவே உள்ளது.
திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள இவர்களின் உபதேசம் குறித்து சிலவற்றை பார்ப்போம்.
‘எனது அருமை மகனே, இறைவனுக்கு நீ இணை வைக்காதே. நிச்சயமாக இணை வைத்தல் மிகப்பெரும் அறியாமையாகும்’. (31-13)
‘எனது அருமை மகனே, நிச்சயமாக (உன் செயல் நல்லதோ கெட்டதோ), அது கடுகின் விதையளவு இருந்தாலும் (சரி), இன்றும் அது ஒரு பாறைக்குள்ளாகவோ அல்லது வானத்திலோ, பூமியிலோ, (எங்கு மறைந்து இருந்தாலும்) (உனது இறைவன்) அல்லாஹ் அதனை (வெளி)க் கொண்டு வரும் (ஆற்றலுள்ளவன்). நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவாளன், (அனைத்தையும்) நன்கு அறிந்தவன்’. (31-16)
‘என்னுருமை மகனே, தொழுகையை கடைப்பிடிப்பாயாக, நன்மையானவற்றை ஏவுவாயாக, தீமையை விட்டும் (மக்களை) தடுப்பாயாக, (இதனால்) உனக்கு ஏற்படும் இன்னல்களை (நீ) பொறுமையுடன் (சகித்து) கொள்வாயாக. நிச்சயமாக காரியங்களில் இது (மிக) உறுதியானது ஆகும்’. (31-17)
‘இன்னும் (பெருமை கொண்டு) உன்னுடைய முகத்தை (மற்ற) மனிதர்களை விட்டும் திருப்பிவிடாதே, பூமியில் கர்வமாக நடக்காதே. நிச்சயமாக அல்லாஹ் பெருமையடித்து கர்வம் கொள்ளும் எவரையும் நேசிப்பதில்லை’. (31-18)
எவர்களுடைய வாழ்வில் இத்தகைய நல்லுபதேசங்கள் நடைமுறை படுத்தப்படுமோ அவர்களுடைய ‘வாழ்வு’ என்பது ‘இல்ஹாம்’ உடையதாக மாறிவிடும். அது இறைநேசத்தையும், இறை நெருக்கத்தையும் பெற்றுத் தந்துவிடும்.
இவர்கள் ஐயூப் நபியுடைய காலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்ததாக சரித்திர குறிப்பில் காணப்படுகிறது. அவர்களின் உபதேசத்திலிருந்து இரண்டு விஷயங்களைப் பார்ப்போம்.
‘இரண்டை நினைவில் வையுங்கள், இரண்டை எப்போதும் மறந்து விடுங்கள்’.
நினைவில் கொள்ள வேண்டிய இரண்டு: ‘இறைவனையும், இறப்பையும் எப்போதும் நினைவில் வையுங்கள்’.

மு.முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, திருநெல்வேலி மாவட்டம்.

நாமெல்லாம் இவ்வுலகிற்கு தற்காலிகமாக வந்து செல்லும் பயணிகளாகவே இருக்கின்றோம் என்ற எண்ணத்தில் வாழ்வதுதான் சிறப்புக்குரிய இரு உலக வாழ்வையும் பெற்றும் தரும்.
தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு போலியான ஒரு அடக்கத்தை வெளிக்காட்டுவது என்பது தற்பெருமையின் தந்திரமாகவே இருக்கின்றது.
புகழுக்கு ஆசைப்படுவதே தற்பெருமையின் அடிப்படையாக உள்ளது. தற்பெருமை என்பது மிகவும் நுட்பம் வாய்ந்த ஒன்றாகும். அது நம்மையறியாமலேயே நமக்குள் குடியேறியும் விடுகின்றது.
சமுதாயத்தில் நமது கீர்த்தியை மேம்படுத்திட பலவழிகளிலும் நம்மை பெருமை பேசவைப்பதும் இந்த தற்பெருமைதான். போலித்தனமான இப்பெருமை இரட்டைத் தன்மை கொண்டதாகும். உள்ளத்தில் ஒன்றும் வெளியே மற்றொன்றும் என இரண்டு விதமாக இது நம்மை செயல்பட வைக்கிறது. உள்ளதை உள்ளபடி செய்கின்ற ஒற்றைத் தன்மைதான் இறைவனின் நேசத்திற்குரியதாகும்.
இறைவன் பொருத்தத்திற்காகவே அன்றி வேறு எந்த எதிர்பார்ப்பும் இன்றி நாம் செயல்படும் போதுதான் தற்பெருமை நம்மை விட்டும் மறைந்து விடுகின்றது.
உண்மை எங்கே இருக்கின்றதோ அதனை நாடியே உலகம் ஓடி வரும். அதற்கு போதனையே போதுமானதாகும். வலியுறுத்தலோ, வற்புறுத்தலோ அதற்கு அவசியமற்றதாகி விடுகின்றது.
எங்கே வற்புறுத்தல் இல்லையோ அங்கேதான் உண்மையும் இருக்கும். அதிக வலியுறுத்துதல் என்பது வலு இழந்தவர்களின் செயலாகவே மதிக்கப்படும். உண்மையில் பணிவுடையவர்கள் அப்பணிவுக்கு எப்போதுமே உரிமைக் கோருவதில்லை. இதுவே தற்பெருமை அற்றவர்களின் அடையாளமாகும்.
இறைவனை நேசிக்கிறேன் என்று கூறும் நம்மில் பலர் தனது குடும்பத்தையே சரியாக நேசிக்க தெரியாதவர்களாக இருக்கிறோம். உறவுகளை மதிக்க மறுக்கின்றோம். உண்மையில் இறைவனின் நேசம் என்பது அவனது படைப்புகளிடமும் நேசம் பாராட்டுவதாகவே இருக்கும்.
பொய் கூறுவது, தற்பெருமை பேசுவது, முகஸ்துதியை எதிர்பார்ப்பது போன்றவைகள் சைத்தானின் கொடிய ஆயுதங்களாக உள்ளது. அதனைக் கொண்டு அவன் நம்மை வீழ்த்திட முயற்சிக்கின்றான்.
அதனை ‘சத்தியம்’ என்ற இறைவனின் கேடயத்தைக் கொண்டுதான் சைத்தானின் கோரத் தாக்குதலிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இந்த தற்பெருமையை கைவிட்டால்தான் சொர்க்கத்தை ருசிக்க முடியும் என்பதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்கள்.

‘யாருடைய உள்ளத்தில் கடுகளவு பெருமை இருக்குமோ அவர்களால் சொர்க்கத்தில் நுழைய முடியாது’ என்றார்கள். இன்னும் இது குறித்து இறைவனும் தனது திருமறையில் இவ்வாறு கூறுகிறான்:
‘இன்னும் (பெருமை கொண்டு) உன்னுடைய முகத்தை (மற்ற) மனிதர்களை விட்டும் திருப்பி விடாதே. பூமியில் கர்வம் கொண்டு நடக்காதே. நிச்சயமாக அல்லாஹ் பெருமையடித்து கர்வம் கொள்ளும் எவரையும் நேசிப்பதில்லை’. (31:18)
சகல நன்மைகளையும் அழித்துவிடும் தற்பெருமையின் பிடியில் சிக்காமல் இருப்பதே இறைவனின் நெருக்கத்தை நமக்கு பெற்றுத் தரும் என்பதை இவ்வசனம் நமக்கு நினைவூட்டுகிறது.
‘ஈமான்’ என்ற இறைநம்பிக்கை என்பது விலைமதிக்க முடியாத ஒரு மாபெரும் பொக்கிஷமாகவே இருக்கின்றது. அதனை உலக இன்பங்களைப் பெறுவதற்காக தொலைத்து விடக்கூடாது.
செல்வந்தர்களின் ஆதரவையும், பாராட்டையும் பெறுவதற்காகவே நம்மில் பலர் அவர்களை வானளாவ புகழ்ந்து பேசியும், அவர்களின் செல்வத்தைக் பெறுவதற்காக நெளிவு சுளிவாகவும் நடந்து கொள்கின்றோம். இது மார்க்க பற்றுள்ளவர்களின் அடையாளமாக கருதமுடியாது.
இறைவனுக்கே அடிபணிவோம் என்று வாயால் கூறிக்கொண்டு அதிகாரம் படைத்தவர்களின் அநீதியைக் கண்டு அஞ்சுவதும், அடிபணிவதும் நல்லோரின் நடைமுறையாக ஆகாது.
இறைவனின் பார்வையில் இருந்து யாராலும் தப்ப முடியாது என்றும் அவன் நம்முடைய கண்கள் செய்யும் சதி மோசத்தையும் இதயத்தில் நெளியும் எண்ணங்களையும் பார்க்கின்ற ஆற்றல் வாய்ந்தவன் என்றும் நமது எண்ணம் நிலைபெறுமானால் தற்பெருமை என்பது துளியும் நம்மிடம் இருக்காது.
இறைவனின் விருப்பத்தை மனநிறைவுடன் ஏற்று நடப்பதும் சுயகருத்து கூறாமல் அமைதியைக் கடைப்பிடிப்பதும் பணிவான இதயத்தோடு இறைவனிடம் மன்றாடுவதும் தற்பெருமை நம்மைவிட்டும் அகற்றிட உதவும்
எல்லா பெருமையும் புகழும் இறைவனுக்கே சொந்தம். நாமெல்லாம் இவ்வுலகிற்கு தற்காலிகமாக வந்து செல்லும் பயணிகளாகவே இருக்கின்றோம் என்ற எண்ணத்தில் வாழ்வதுதான் சிறப்புக்குரிய இரு உலக வாழ்வையும் பெற்றும் தரும்.
மு. முகம்மது சலாகுதீன்,
ஏர்வாடி, நெல்லை மாவட்டம்.

இறை விசுவாசிகளுக்கோ மரணத்தின் போது உலகில் எதனையும் இழப்பதற்கில்லை, அவர்கள் இறைவனை பொருந்திய வண்ணம் நிம்மதியுடனே இவ்வுலகை விட்டும் பிரிந்து செல்கின்றார்கள்.
உலகில் எந்தப் பொருட்களை எல்லாம் கொண்டு நாம் மகிழ்ந்து இருந்தோமோ, அந்த பொருட்களை விட்டும் ஒருநாள் நாம் பிரிந்துவிடுவது நிச்சயமான ஒன்றாக இருக்கின்றது.
ஞானமுள்ளவன், திராட்சையிலே மது இருப்பதை கண்டுகொள்வதை போன்று இறைவிசுவாசிகள், உலகின் நகர்வில் மறுமையின் வரவை கண்டு கொள்கிறார்கள்.
இந்த உலக வாழ்வையே சத்தியம் என்றும், நிச்சயம் என்றும், நினைக்கின்ற மனிதனுக்கு மறுவுலக வாழ்வு என்பது கனவாகவே தோன்றுகின்றது.
உலகம் நம்முடனே இருப்பது போன்று பாசாங்கு செய்து கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டும் நகர்ந்து செல்கிறது. இறுதியில் மரணம் வரும் தருணம் உலகம் நம்மை விட்டும் விலகி விடுகின்றது. அதுவரை நாம் நிலையானது என்று கருதிக் கொண்டிருந்த உலக சுகங்கள் யாவும் நம்மைவிட்டும் பிரிந்து போய்விடுகின்றன.
உலகம் நிலையானது இல்லை என்பதை நன்கு தெரிந்திருந்தும், கசாப்புகாரரை நம்பி அவன் பின்னால் ஆடு செல்வதை போன்று, நம்மில் பலர் உலகத்தை நம்பி அதன் பின்னால் சென்று கொண்டிருக்கின்றோம்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘(உலகில்) மனிதர்கள் உறக்கத்தில் இருக்கின்றார்கள். மரணத்தின் போது விழித்துக் கொள்வார்கள்’.
கனவு நிறைந்த தூக்கத்தில் இருந்து நாம் விழித்துக்கொள்ளும் போது தான் தெரிந்து கொள்கிறோம், ‘தூக்கத்தில் இவ்வளவு நேரம் நாம் கண்டது எல்லாம் நிஜமல்ல, கனவு’ என்று. அது போன்றே மரணம் என்ற விழிப்பு நிலை ஏற்படும் போது மனிதன் உண்மையான உலகை கண்டு கொள்வான். அப்போது உலக வாழ்வு என்பது நீண்டதொரு கனவு போன்று ஆகிவிடுகின்றது.
இவ்வுலகின் இயல்பு நிலை குறித்து விளக்கம் தருவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களில் சிலரை ஊருக்கு வெளியே இருந்த ஒரு குப்பை மேட்டின் பக்கம் அழைத்துச் சென்றார்கள்.
‘நண்பர்களே! அக்குப்பை மேட்டில் கிடக்கின்ற மனித மண்டை ஓட்டை பாருங்கள். அது ஒரு காலத்தில் உங்களைப் போன்றே ஒரு மனிதனாக ஆசைகளை சுமந்த வண்ணம் இருந்தது. இப்போது சதையும் தோலும் இல்லாத எலும்பாகி விட்டது. விரைவில் அது மண்ணோடு மண்ணாகி மக்கிப் போய்விடும்’. ‘இதோ, அந்த மலத்தைப் பாருங்கள். அது ஒரு நேரத்தில் மனமும் சுவையும் மிக்க மனித உணவாக இருந்தது. இப்போது அருவருக்கத்தக்க ஒன்றாகி மக்கள் அதைக் கண்டு முகம் சுளித்து ஓடும் படியாகிவிட்டது’.
கிழிந்து கிடக்கும் கந்தல் துணிகளை பாருங்கள். அது ஒரு காலத்தில் மனிதனின் ஆடம்பரம் மிக்க ஆடையாக இருந்தது. இப்போது கந்தலாக காட்சி தருகின்றது. அங்கு கிடக்கும் மிருகங்களின் எலும்புகளை பாருங்கள். அவை எல்லாம் ஒரு நேரத்தில் மனிதர்கள் சவாரி செய்யும் அழகுமிகு வாகனங்களாக இருந்தவை என்பதை நினைத்துப் பாருங்கள், இதுதான் உலகம்.
இது அழவேண்டிய தருணம். யாரேனும் இம்மையின் நிலையறிந்து அழ விரும்பினால் அவர்கள் (நன்றாக) அழுது கொள்ளட்டும் என்றார்கள்.
உலகில் வந்த இடத்தில் சொந்தம் கொண்டாடி நாமும் மகிழாமல் பிறரையும் மகிழ விடாமல் நம்மை நாமே சங்கடத்தில் ஆழ்த்திக் கொள்கின்றோம் என்பதை அருள்மறை குர் ஆன் இவ்வாறு தெளிவுபடுத்துகின்றது.
‘எவரொருவர் நற்செயல் செய்வாரோ (அச்செயல்) அவருக்கே (நன்மை) ஆகும். எவர் தீமையைச் செய்வாரோ (அது) அவர் மீதே (பாதகம்) ஆகும். ‘உம்முடைய இரட்சகன் (ரப்பு) தன் அடியார்களுக்கு சிறிதளவும் அநியாயம் செய்பவனல்லன்’ (41–46).
உலகில் இறைவனிடமிருந்து எவருக்கும் எந்த சங்கடமும் ஏற்படுவதில்லை. மனிதர்கள் ஒருவரை மற்றவர் மதிக்காமல் எல்லை மீறி நடப்பதாலே சங்கடம் உண்டாகின்றது என்பதை மேல் சொன்ன வசனம் அறிவுறுத்திக் காட்டுகின்றது.
மனிதனை, இமைப்பொழுதில் இவ்வுலகை விட்டுப் பிரித்து மறுஉலகின் பக்கம் புரட்டி போட்டுவிடுகின்ற மரணத்தை மனிதன் மறந்தே உலகில் வாழ்கின்றான்.
அதனால்தான் அவன் போட்டி போட்டுக் கொண்டு செல்வத்தை வாரி குவிக்கின்றான். அதில் அவன் அனுபவிக்கப் போவது என்பது என்னவோ கொஞ்சம் தான். ஆனாலும் மனிதன் செல்வத்தின் மீது தணியாத தாகம் கொண்டவனாகவே அலைகின்றான்.
உலக வாழ்வின் இயல்புநிலை குறித்தும், எது வெற்றியின் பக்கம் மனிதனை அழைத்துச் செல்கின்றது என்பது குறித்தும் குர்ஆன் வலியுறுத்தி கூறும் செய்தி இதுதான்.
‘ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுவைக்க கூடியதே. உங்களுடைய பிரதிபலன் உங்களுக்கு வழங்கப்படுவதெல்லாம் (கியாமத் என்னும்) மறுமை நாளில் தான்’.
‘எனவே எவர் நரகை விட்டும் (தீமையை விட்டும்) தூரமாக்கப்பட்டு சொர்க்கம் புகுமாறு செய்யப்படுகிறாரோ அவர் திட்டமாக வெற்றியடைந்து விட்டார்’.
‘இவ்வுலக வாழ்வு (என்பது) ஏமாற்றும் (அற்ப) சுகப்பொருளே அன்றி (வேறு) இல்லை’ என்கிறது திருக்குர்ஆன் (3–185).
இறை விசுவாசிகளுக்கோ மரணத்தின் போது உலகில் எதனையும் இழப்பதற்கில்லை, அவர்கள் இறைவனை பொருந்திய வண்ணம் நிம்மதியுடனே இவ்வுலகை விட்டும் பிரிந்து செல்கின்றார்கள்.
அவர்களின் நிறைவான கூலியும் நிரந்தரமான நித்திய வாழ்வும் இப்பிரபஞ்சத்தை படைத்த இறைவனிடமே உள்ளது. அத்தகைய வெற்றியாளர்களின் கூட்டத்தில் நம்மையும் ஒருவராக ஆக்கிட எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக! ஆமீன்.
- மு.முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை மாவட்டம்.

எதிரிகளைப் பார்த்து பயந்துவிட்டதால் நாம் நம் நகரத்தைவிட்டு வெளியில் செல்லவில்லை என்று அவர்கள் நினைக்கக் கூடும். மறுக்காதீர்கள், அவர்களை எதிர்கொள்வோம், போர் புரிவோம்” என்று வீராவேசமாக நபித்தோழர்கள் பேசி நபிகளாரை மறுத்தனர்.
நபி மூஸா(அலை) காலத்தில் சூன்யம் மக்களிடையே பிரபலமாக இருந்ததால் அல்லாஹ் சூனியக்காரர்களுக்குச் சவாலான அற்புதங்களைச் செய்து காட்டும் சிறப்பை மூஸா நபிக்கு அளித்தான். அதே போல நபி ஈஸா(அலை) காலத்தில் மருத்துவ அற்புதங்கள் மேலோங்கி இருந்ததால் ஈஸா நபியின் பிறப்பே மருத்துவ அற்புதங்களுக்குச் சவாலாக இருந்ததோடு, ஈஸா நபிக்கு நோய் தீர்க்கும் அற்புதங்களையும் அல்லாஹ் அருளியிருந்தான்.
நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் காலத்தில் கவிதைகளில் மக்கள் மயக்கம் கொண்டிருந்தனர். கவிஞர்களையும் இலக்கியவாதிகளையும் கொண்டாடினர். அதனாலேயே தமது இறைத்தூதர் ஓரிறைக் கொள்கையைப் பரப்பிட இலக்கிய நயம் பொருந்திய, கவிதை வடிவமுள்ள திருக்குர்ஆனை அக்காலத்தில் வாழ்ந்த கவிஞர்கள் வாயடைக்கும் வகையில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அருளியிருந்தான்.
கவியைக் கவியால்தான் வெல்ல முடியுமென்று தப்புக் கணக்குப் போட்ட ஸஃப்வான் இப்னு உமைய்யா பெரும் கவிஞரான அபூ அஸ்ஸாவின் உதவியை நாடினான். பத்ருப் போரில் பொருள் மற்றும் உயிர் சேதத்தை எதிர்கொண்ட குறைஷிகள் மீண்டும் ஒன்றுகூடி தமது பொருட்களையெல்லாம் செலவு செய்து போர் தொடுக்க மக்களை மனதளவில் தயார்படுத்த, அவர்களின் உள்ளுணர்வுகளைத் தட்டியெழுப்ப அபூ அஸ்ஸாவின் கவிதைகளைப் பயன்படுத்தி, குறைஷிகளை முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டினான். அபூ அஸ்ஸா பத்ருப் போரில் கலந்து கொண்டு நபி முஹம்மது(ஸல்) அவர்களால் மன்னித்து விடுதலை செய்யப்பட்டவன். இருப்பினும் அவனுக்குப் பொருளாசையைக் காட்டி கவி எழுத வைத்தான் ஸஃப்வான்.
அபூ ஸுஃப்யானும் போருக்காக மக்களை ஆர்வமூட்ட மற்றொரு கவியான முஸாஃபிஃ இப்னு அப்து மனாஃப் என்பரை அழைத்து வந்தான். அவனையும் கவி பாடச் செய்து ஒருவழியாகக் குறைஷிகளின் கோபத்தைத் தூண்டி அவர்களின் பழைய விரோதத்தோடு சமீபத்திய தோல்வியும் சேர்ந்து கொண்டதால் வெகு விரைவிலேயே அவர்களால் படையைத் திரட்ட முடிந்தது. படை வீரர்களுடன் பல்லாயிரக்கணக்கான ஒட்டகங்கள், குதிரைகள் சேர்ந்தன. இப்படையின் பொதுத் தளபதி பொறுப்பை அபூ ஸுஃப்யான் இப்னு ஹர்ஃபும், குதிரைப் படைக்குத் தலைவராகக் காலித் பின் வலீதும் பொறுப்பேற்றனர். எல்லோரும் மக்காவை விட்டுப் புறப்பட்டனர்.

குறைஷிகளின் திட்டம் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரிய வந்தது. உடனே தம் தோழர்களிலுள்ள தளபதிகளிடம் உரையாடினார்கள். துரித நடவடிக்கையெடுக்கப்பட்டு மதீனாவைச் சுற்றி ரோந்து படைகளை நிறுவினர். எந்நேரமும் ஆயுதங்களை ஏந்தியவர்களாக, பாதுகாப்பு எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
மக்கா படையினர் உஹுத் மலையின் அருகில் ‘அய்னைன்’ என்ற இடத்தில் தங்கினர். மக்காவினரின் நடவடிக்கைகளை மதீனாவில் இருந்தபடியே நபிகளார் தெரிந்து கொண்டு அதற்கேற்ற ஏற்பாடுகளைச் செய்தார்கள். அப்போது நபி முஹம்மது (ஸல்) கனவு கண்டதை பற்றித் தோழர்களிடம் பகிர்ந்து கொண்டார்கள். “நான் மக்காவைத் துறந்து அங்கிருந்த பேரீச்சந்தோட்டங்கள் நிறைந்த ஒரு பூமிக்குச் செல்வதாகக் கண்டேன்.
அதுதான் மதீனா. என் வாள் ஒன்றை அசைக்க அதன் முனை உடைந்து விடுவதாகக் கண்டேன். சில காளை மாடுகள் அறுக்கப்படுவதுபோல் கண்டேன்" என்றார்கள். அதன் விளக்கம் அவர்களின் உள்மனதிற்குத் தெரிந்ததால் நபிகளார் தம் தோழர்களிடம் “மதீனாவிற்குள் இருந்து கொண்டே நம்மைப் பாதுகாத்துக் கொள்வோம். மதீனாவை விட்டு நாம் வெளியேறாமல் இருந்துவிடுவோம்.
மக்கா படையினர் எவ்வளவு காலம்தான் முகாமில் தங்கியிருந்து நமக்காகக் காத்திருப்பார்கள். கட்டாயம் திரும்பச் சென்றுவிடுவார்கள். அல்லது அவர்கள் மதீனாவிற்குள் நுழைய முயன்றால், நமது தெரு முனையிலிருந்தே அவர்களை எதிர்க்கலாம்” என்று ஆலோசனை சொன்ன போது, பத்ருப் போரில் கலந்து கொள்ளாமல் போனவர்கள் “நபிகளாரே! இப்படியான ஒரு நாளுக்காகத்தான் நாங்கள் காத்திருந்தோம்.
அல்லாஹ்விடம் நாங்கள் பிரார்த்தனையும் செய்து வந்தோம். எதிரிகளைப் பார்த்து பயந்துவிட்டதால் நாம் நம் நகரத்தைவிட்டு வெளியில் செல்லவில்லை என்று அவர்கள் நினைக்கக் கூடும். மறுக்காதீர்கள், அவர்களை எதிர்கொள்வோம், போர் புரிவோம்” என்று வீராவேசமாக நபித்தோழர்கள் பேசி நபிகளாரை மறுத்தனர்.
அர்ரஹீக் அல்மக்தூம், ஸஹீஹ் புகாரி 4:64:4081, 4:61:3622

வானங்களும், பூமியும் இறைவனின் பிரமிப்பூட்டும் பிரமாண்ட படைப்புகளாக இருப்பதைப் போன்றே மலைகளும் ஒரு மகத்தான படைப்பாகும் என்பதையே இது காட்டுகிறது.
மலை என்பது குறிப்பிட்ட ஒரு நிலப்பகுதியில் அதன் சுற்றாடலுக்கு மேலே உயர்ந்து காணப்படும் ஒரு பெரிய நில வடிவம் ஆகும்.
நாம் வெகு தூரத்தில் இருந்து கொண்டு மலைகளின் அழகை ரசித்து மகிழ்கிறோம். மேலும் பாதைகளை அமைத்து மலையின் உச்சிக்கே சென்று, உலவும் மேகக்கூட்டங்களையும், உலகின் அழகையும் கண்டு வியப்பின் உச்சிக்கே செல்கிறோம்.
திருக்குர்ஆனில் பூமி மற்றும் வானங்கள் பற்றிப் பேசப்படுகின்ற இடங்களில் மலைகள் குறித்தும் பேசப்படுகிறது. வானங்களும், பூமியும் இறைவனின் பிரமிப்பூட்டும் பிரமாண்ட படைப்புகளாக இருப்பதைப் போன்றே மலைகளும் ஒரு மகத்தான படைப்பாகும் என்பதையே இது காட்டுகிறது.
“பின்னர் அவனே பூமியை விரித்தான். அவனே அதில் இருந்து நீரையும் மேய்ச்சலையும் வெளிப்படுத்துகிறான். மலைகளையும் அவனே அதில் நிலை நிறுத்தினான்” (திருக்குர்ஆன்-79:30) என்றும்,
“நிச்சயமாக (நம்முடைய) பொறுப்பை சுமந்து கொள்வீர்களா? என நாம் வானங்கள், பூமி, மலைகள் முதலியவற்றிடம் வினவினோம். அதற்கு அவை அதைப் பற்றி பயந்து, அதைச் சுமப்பதில் இருந்து விலகி விட்டன. மனிதன் அதைச் சுமந்து கொண்டான். (இருப்பினும்) அவன் அறியாமையால் தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொண்டான்” (33:72) என்றும் பூமியுடன் மலைகளும் சேர்ந்தே இடம் பெற்றுள்ளதை அறிந்து கொள்ளலாம்.
பூமியில் அழகாகவும், கம்பீரமாகவும் காட்சி அளிக்கும் மலைகள் எதற்காகப் படைக்கப்பட்டிருக்கின்றன? பூமியில் அதன் அவசியம்தான் என்ன?
“நாம் பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா? இன்னும் மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?” (78:6) என்றும்,
“அவனே பூமியை விரித்து அதில் உறுதியான மலைகளையும் ஆறுகளையும் உண்டாக்கினான்” (13:3) என்றும்,
“அவனே பூமியை விரித்தான்... அதில் மலைகளையும் நிலைநாட்டினான்” (79:30,32) என்றும் இறைவன் திருமறையில் கூறுகின்றான்.
பூமி ஆடாமல் அசையாமல் நிற்பதற்கு மலைகள், ‘முளை’களாக அமைந்துள்ளன என்பதையும், அவை உறுதியானவை என்பதையும் மேற்கண்ட வசனங்கள் மூலம் அறியலாம்.
கூடாரங்கள் காற்றில் பறந்து விடாமல் தடுப்பதற்காக அதன் பக்கவாட்டில் உள்ள கயிறுகளை இழுத்துக் கட்டுவதற்காக பூமியில் அறையப்படும் ‘முளைக்குச்சி’களைப் போல மலையின் வேர்கள் அமைந்துள்ளன.
‘புவி’ (எர்த்) என்ற தலைப்பில் எழுதப்பட்ட புத்தகம் புவியியல் தொடர்பான அறிவியல் நூலாக போற்றப்படுகிறது. இந்த நூலின் ஆசிரியர்களில் ஒருவரும், அமெரிக்காவில் உள்ள தேசிய விஞ்ஞானக் கழகத் தலைவருமான பிராங் பிரஸ் கூறுகையில், “மலைகள், முளைகளைப் போன்று பூமிக்கடியில் புதைந்து காணப்படுகின்றன. அதன் வேர்கள் பூமிக்குள் மிக ஆழமாக ஊடுருவி நிற்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.
பூமியின் மேற்பரப்பில் காணப்படும் மலைகளின் உயரத்தை விட 10 அல்லது 15 மடங்கு ஆழமாக பூமிக்கடியில் ‘மலை வேர்’ என்று அழைக்கப்படும் அதன் வேர் பதிந்துள்ளது.
சான்றாக, பூமியின் மேற்பரப்பில் இருந்து 9 கிலோ மீட்டர் உயரமான இமயமலையின் வேர் பூமிக்கு அடியில் சுமார் 125 கிலோ மீட்டர் ஆழத்திற்கு நீண்டு காணப்படுகிறது.
இதன் காரணமாக கூடாரத்தைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் முளைகள் போன்று மலைகள் செயல்படுகின்றன என்பதை விஞ்ஞான உலகம் ஒப்புக் கொண்டுள்ளது.
பூமி பல அடுக்குகளைக் கொண்டுள்ளது என்பதை முந்தைய அத்தியாயத்தில் பார்த்தோம்.
நிலப்பகுதியைச் சேர்ந்த பூமியின் மேல் அடுக்கு, கண்டத்தட்டு (காண்டினென்டல் கிரஸ்ட்) என்றும், நீருக்கடியில் உள்ள மேல் அடுக்கு, கடல் தட்டு (ஓசியானிக் கிரஸ்ட்) என்றும் அழைக்கப்படுகிறது.
கண்டத் தட்டு பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் ஆழம் வரை உள்ளது. கடல் தட்டு கடல் நீருக்கடியில் 5 முதல் 10 கிலோ மீட்டர் ஆழம் வரை வியாபித்துள்ளது. மேன்டில் எனப்படும் இரண்டாம் அடுக்கு மற்றும் உட்கரு (கோர்) எனப்படும் மைய அடுக்கு என பல அடுக்குகள். அதில் உள் மையம், வெளி மையம் என்று உட்கரு இரண்டு கிளை அடுக்குகளாக பிரிந்துள்ளன.
பூமியின் உள்ளமைப்பு பல்வேறு நிலைகளில் உள்ளன. இதனால் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வரும்போது நிலப்பரப்பு நிலை பெயர்ந்து போகலாம். பூமியின் அடுக்குகளில் நடுக்கம் ஏற்பட்டு சீட்டுக்கட்டுகள் போல சரிந்து போகலாம். இதனால் பூமியை அசையவிடாமல் கெட்டியாகவும், உறுதியாகவும் பிடித்துக் கொள்வதற்கு மலையின் மேற்பகுதி உறுதுணையாக உள்ளது.
“இன்னும் இப்பூமி (மனிதர்களுடன்) ஆடி சாயாமல் இருக்கும் பொருட்டு, நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம். அவர்கள் நேரான வழியில் செல்லும் பொருட்டு, நாம் விசாலமான பாதைகளையும் அமைத்தோம்” (திருக்குர்ஆன்-21:31) என்ற வசனத்தின் மூலம் பூமி ஆடாமல் அசையாமல் இருப்பதற்காகவே மலைகள் அமைந்துள்ளன என்பதை அறியலாம்.
மலையின் கம்பீரமான தோற்றமும், எழிலும் மனிதர்களுக்கு மலைப்பை ஏற்படுத்துவதால்தான் அதற்கு மலை என்று பெயரிட்டனர்.
மலைப்பைத் தருவது மலை மட்டுமல்ல; திருக்குர்ஆனில் மலை பற்றி இறைவன் கூறிய கருத்துகளும்தான்.

யூதர்களும் குறைஷிகளும் முஸ்லிம்களுக்கு அளவிலா இன்னல்களைக் கொடுக்க முற்பட்டு, தங்களின் செல்வங்களையும், உயிர்களையும் இழந்து கொண்டிருந்தனர்.
யூதர்களும் குறைஷிகளும் முஸ்லிம்களுக்கு அளவிலா இன்னல்களைக் கொடுக்க முற்பட்டு, தங்களின் செல்வங்களையும், உயிர்களையும் இழந்து கொண்டிருந்தனர். இஸ்லாமை வேரோடு அழிக்க வேண்டுமென்று சரியான தருணத்திற்காகக் குறைஷிகள் காத்திருந்தனர். மிகப் பெரிய அளவில் முஸ்லிம்கள் மீது போர் தொடுத்து தங்களது மதிப்பையும் மரியாதையும் திரும்பப் பெற வேண்டும் என்ற வெறி அவர்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எதிரியான கஅப் இப்னு அஷ்ரப் என்பவன் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் வெறுக்கத்தக்க செயல்களான நபித்தோழர்களின் வீட்டுப் பெண்களைத் தனது கவியில் இழிவுபடுத்திப் பழித்துப் பாடுவது, முஸ்லிம்கள் மீது வெறுப்பு கொண்டவனான அவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல இன்னல்களைத் தொடர்ந்து செய்வது என்று இருந்தான்.
அபூ ஸுஃப்யானுடன் சேர்ந்து கொண்டு “நீங்களே சிறந்தவர்கள், நீங்கள்தான் நேர்வழி பெற்றவர்கள்” என்று கஅப் புகழ்ந்தார். அப்போது அல்லாஹ் அருளிய இறைவசனமானது “நபியே, வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீர் பார்க்கவில்லையா? இவர்கள் சிலைகளையும், ஷைத்தானையும், நம்புகின்றனர், ‘இவர்கள்தாம் இறைநம்பிக்கையாளர்களைவிட மிக நேரான பாதையில் இருக்கின்றனர்’ என்றும் பொய்யாக நிராகரிப்பவர்களைக் கூறுகின்றனர். இவர்களைத்தான் அல்லாஹ் சபிக்கிறான்; எவர்களை அல்லாஹ் சபிக்கிறானோ அவர்களுக்கு உதவி செய்பவர் எவரையும் நீர் காணமாட்டீர்.”

அப்படி சபிக்கப்பட்ட அல்லாஹ்வின் எதிரியான கஅப்பைக் கொலை செய்ய முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி) என்பவர் திட்டம் தீட்டி, அவனிடம் சில உணவுப் பொருட்களைக் கடனாகக் கேட்டார்கள். “அடமானம் வைக்காமல் எப்படித் தருவது? உங்கள் வீட்டுப் பெண்களை என்னிடம் அடகு வையுங்கள்” என்று கூசாமல் கேட்டான். கோபத்தை அடக்கியவராக முஹம்மது இப்னு மஸ்லமா(ரலி), “அரபிகளிலேயே அழகு மிக்கவனான உன்னிடம் எப்படி எங்கள் பெண்களை விட்டுச் செல்வது என்று புத்திசாலித்தனமாகத் தட்டிக் கழித்தார். கஅபும் விடாமல் ‘உங்கள் குழந்தைகளை என்னிடம் அடகு வைக்க முடியுமா?” என்றான்.
அதற்கும் அவர், 'நாங்கள் எப்படி எங்கள் குழந்தைகளை அடகு வைக்க முடியும்? அப்படி அடகு வைத்தால் 'உணவுக்காக அடகு வைக்கப்பட்டவன்தானே இவன்' என்று அவர்களை மற்றவர்கள் இழிவாகப் பேசுவார்கள் அதனால், நாங்கள் உன்னிடம் எங்கள் ஆயுதங்களை அடகு வைக்கிறோம்' என்று கூறினார்கள். அவனும் அதற்குச் சம்மதிக்க, பின்னர் வருவதாக வாக்களித்துச் சென்று. பிறகு ஆயுதத்துடன் வந்து அதை அடகு வைக்கிற சாக்கில் அவனைக் கொன்றுவிட்டார்கள்.
கஅப் கொல்லப்பட்டதை அறிந்த குறைஷிகள் மேலும் கொதித்து எழுந்தனர்.
“நிச்சயமாக, நிராகரிப்பவர்கள் தங்கள் பொருட்களை (மக்கள்) அல்லாஹ்வுடைய வழியில் செல்வதைத் தடை செய்யச் செலவு செய்கின்றனர். அவர்கள் மேன்மேலும் இவ்வாறே செலவு செய்யும்படி நேர்ந்து, முடிவில் அது அவர்களுக்கே துக்கமாக ஏற்பட்டுவிடும்! பின்னர் அவர்கள் வெற்றி கொள்ளப்படுவார்கள். இத்தகைய நிராகரிப்பவர்கள் மறுமையில் நரகத்தின் பக்கமே ஓட்டிச் செல்லப்படுவார்கள்” என்ற இறைவசனத்திற்கேற்ப குறைஷிகள் தங்களிடமுள்ள பொருட்களையெல்லாம் முஸ்லிம்களை எதிர்க்க, போரிட செலவு செய்யத் துணிந்தனர்.
திருக்குர்ஆன் 4:51-52, 8:36, ஸஹீஹ் புகாரி 2:48:2510

'மெய்யாகவே இந்த குர்ஆன் இறைவனிடமிருந்து ரூஹால் குத்தூஸ் என்னும் ஜிப்ரீல் தான் இறங்கி வைத்தார் என்று நபியே கூறுவீராக' என்பது திருக்குர்ஆன் (16:102) வசனம் ஆகும்.

இந்த வசனத்தின் மூலம் அருள்மறை திருக்குர்ஆன் தனக்குத்தானே ஒரு சாட்சியத்தை ஏற்படுத்திக் கொண்டு, எந்தவித முரண்பாடுகளும் இன்றி நிலைத்து நிற்கும் என்பதையும் உண்மைப்படுத்திக் கொண்டிருக்கிறது.
மனிதனின் தோற்றம் பற்றி அருள்மறை கூறும் போது, 'ஆரம்பத்தில் மனிதனை களிமண்ணைக் கொண்டே படைத்தான். பின்னர் ஓர் அற்பத்துளியாகிய இந்திரியத்திலிருந்து அதனுடைய சந்ததியைப் படைக்கின்றான்' (32:7) என்று குறிப்பிடுகிறது.
அற்ப இந்திரியத்துளியில் இருந்து உலகின் அற்புதமான, அதிசயமான படைப்பினை இறைவன் வெளிக்கொணர்கின்றான்.
அற்பமான மனிதனின் ஆரம்பத்தைச் சொன்ன அருள்மறை, இன்னும் பல அற்பமான படைப்பினங்கள் குறித்தும் பேசுகிறது. அதுமட்டுமல்ல அவற்றிற்கென தனித்தனி அத்தியாயத்தையே உருவாக்கியுள்ளது.
அற்பமான கொசுவைப் பற்றிய பதிவில், 'கொசு அல்லது அதைவிட அற்பத்தில் மேலான எதையும் உதாரணமாக கூறுவதற்கு அல்லாஹ் நிச்சயமாக வெட்கப்படமாட்டான். ஆதலால் எவர்கள் உண்மையாக நம்பிக்கை கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் அவ்வுதாரணம் தங்கள் இறைவனால் கூறப்பட்ட உண்மையான உதாரணம் தான் என்று உறுதியாக அறிந்து கொள்வார்கள்' என்று திருக்குர்ஆனில் (2:26) குறிப்பிடப்பட்டுள்ளது.
தன்னோடு ஒப்பிடும் போது, எதிரி பல மடங்கு பெரிதாய் அமைந்தவன் என்று அறிந்திருந்தும் எந்தவித அச்சமுமின்றி எதிர்கொள்ளும் தைரியத்தை எங்கிருந்து கொசு கற்றுக் கொண்டது?. இந்த போராட்டத்தில் சாவு நிச்சயம் என்று தெரிந்திருந்தும் மீண்டும் மீண்டும் எதிர்த்து போராடும் போர்க்குணத்தை எங்கே அது கற்றுக் கொண்டது?.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக மனிதன் கொசுவுக்கு பயந்து வலைக்குள் பதுங்கி கொள்ளும் அச்சத்தை அது ஏற்படுத்தி இருக்கிறதே!
உலகில் உயிர் கொல்லி நோய்கள் என்று அறிவிக்கப்பட்டவைகளில் மிக அதிகமானவை கொசுக்களால் தான் பரப்பப்படுகின்றன. இத்தனை ஆச்சரியங்களை உள்ளடக்கிய கொசுவை அற்பமாக எண்ணிக் கொண்டீர்களா?, அதுபற்றி ஆராய வேண்டாமா?. அதை தானே திருக்குர்ஆன் சொல்லிக் கொண்டிருக்கிறது.
ஒரு பூச்சியின் மூலம் அபாயத்தை அறிவுறுத்தியவன், இன்னொன்றின் மூலம் அருமருந்தை அருளியுள்ளான். அது தான் தேனி.
தேனீ மூலம் கிடைக்கப்பெறும் தேன், எல்லா வியாதிகளுக்கும் அருமருந்தாய் இருப்பது கண்கூடு,
'தேனீயே! நீ ஒவ்வொரு பூக்களில் இருந்தும் புசித்து உனது இறைவன் உனக்கு அறிவித்த எளிதான வழியில் உன்னுடைய கூட்டுக்குள் ஒடுங்கிச்செய். இதனால் அதன் வயிற்றிலிருந்து பல நிறங்களையுடைய பானம் தேன் வெளியாகின்றது. அதில் மனிதர்களுக்கு நிவாரணம் உண்டு. நிச்சயமாக இதிலும் சிந்திக்க கூடிய மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கின்றது' என்கிறது திருக்குர்ஆன் (16:69).
தேனீக்களின் வாழ்வியலை ஆராய்ந்தால் மனிதனின் கூட்டுக்குடும்ப தத்துவத்தை ஒத்திருப்பது ஆச்சரியம் அளிக்கும். தலைமைக்கு கட்டுப்படுதல், ஒன்றிணைந்து உழைத்தல், எதிர் காலத்திற்காக சேமித்து வைத்தல், தேன் கூட்டை அழகிய முறையில் பராமரித்தல் போன்றவை மனித பண்பை ஒத்திருக்கும்.
மலர்களில் இருக்கும் சாதாரண ஒரு திரவத்திற்கும், தேனீக்கள் வயிற்றில் சுரக்கும் தேனிற்கும் எட்ட முடியா உயரங்களில் வித்தியாசங்கள், குணாதிசயங்கள் இருப்பதை சொல்லித் தந்தது இறை மறை. அந்த அற்ப தேனீயில் இருந்து அதிமதுர மருந்தை வெளிக்கொணர்ந்தானே அல்லாஹ், அதனை ஆராய வேண்டாமா?
'ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகளிலும் உங்களுக்கு ஓர் படிப்பினை உண்டு. ரத்தத்திற்கும், சாணத்திற்கும் இடையில் அதன் வயிற்றிலிருந்து பாலை உற்பத்தி செய்து நாம் உங்களுக்கு புகட்டுகிறோம். அது அருந்துபவர்களுக்கு மிக்க இன்பகரமானது' என்கிறது திருக்குர்ஆன் (16:66).
தாய்ப்பாலுக்கு இணை உலகில் இல்லை. இருந்தும் அதற்குப்பதிலாக ஒன்றை அற்பங்களுக்கு இடையில் தான் படைக்கின்றான். அதனால் அற்பங்களில் சூழ்ந்துள்ள அதிசயங்களை, அற்புதங்களை ஆராய்ந்து பாருங்கள் என்கின்றார் அல்லாஹ்.
அற்பமான எறும்பையும், அதன் அறிவையும், ஆற்றலையும், அறிவுசால் திறனையும், ஒன்றுபட்டு வாழும் வாழ்வியலையும், பாதுகாப்பு உணர்வையும் அறிந்து கொள்வதற்கென ஒரு அத்தியாயமே அருள்மறையில் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாலைவனத்தில் வசிக்கும் ஒட்டகம் வடிவமைக்கப்பட்ட விதம், அதன் கண் அமைப்பில் மணற்துகள்கள் படாமல் பாதுகாக்க ஒளி ஊடுருவும் சவ்வுத்திரை, பல நாட்கள் தண்ணீரை வயிற்றில் சேமித்து வைத்து தேவையான போது திரும்பப்பெறும் வகையில் வயிற்றின் அமைப்பு, மணலில் ஊன்றி நடப்பதற்கு ஏதுவாய் கால் குளம்புகள், இப்படி எத்தனையோ அமைப்புகள்.
அதனால் தான் அல்லாஹ் சொல்கின்றான்: 'நாம் ஒட்டகத்தை எப்படி படைத்திருக்கிறோம் என்பதை நீங்கள் ஆராய வேண்டாமா?' என்று.
அதுபோல அற்பத்திலும் அற்பமான சிலந்தி பூச்சி பற்றியும் திருக்குர்ஆன் பேசுகிறது. 'வீடுகளில் எல்லாம் மிக்க பலவீனமானது நிச்சயமாக சிலந்திப்பூச்சியின் வீடு தான்' (28:41).
சிலந்திப்பூச்சியின் வீடு பலவீனமானது தான். ஆனால் அதன் வடிவமைப்பு மிக அற்புதமானது. தன் வாயில் சுரக்கும் ஒரு திரவத்தைக் கொண்டே, தன் வீட்டை அது அமைத்துக்கொள்கிறது. அந்த திரவம் வெளிவந்ததும் கடினப்பட்டு நூலிழையாய் மாறிவிடுகின்றது.
எளிதில் அறுந்துவிடும் அந்த அற்ப நூலைக் கொண்டு கலைநயம் மிளிரும் ஓவியம் போன்று கட்டங்களிலும், அளவிலும் கொஞ்சமும் மாற்றம் காணாத வீட்டை அமைத்துக் கொள்கிறது என்றால், சிலந்திக்கு அந்த அறிவை கொடுத்தது யார்?
ஒவ்வொரு சிலந்திக்கும் அதன் முழு எடையைத் தாங்கும் சக்தி கொண்ட தகுதி வாய்ந்த நூலிழையை அமைத்து கொடுத்து, எதிரி வந்தால் அதில் தொங்கி தன்னை காப்பாற்றிக் கொள்ளும் யுக்தியை கொடுத்தவனும் அல்லாஹ் அல்லவா?
இப்படி எத்தனையோ அற்பங்களின் அதிசயங்கள் பற்றி அருள்மறையில் பல இடங்களில் செய்திகள் பரவி கிடக்கின்றன.