என் மலர்
இஸ்லாம்
‘இன்னும் வலிமை மிக்க ஓர் உதவியாக அல்லாஹ் உமக்கு உதவியளிப்பதற்காகவும் இவ்வாறு வெற்றி அளித்தான்’ (திருக்குர் ஆன் 48:3) என்று அருள்பாலிக்கின்றான்.
உலக வாழ்க்கையில் ஒரு மனிதனுக்கு கிடைக்கும் வெற்றி தோல்விகளை அடிப்படையாகக்கொண்டு அவனது உயர்வு தாழ்வுகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. ஆனால் அது நிலையானது அல்ல, நிரந்தரமானதும் அல்ல.
இன்றைய வெற்றியாளன் நாளை தோல்வியை தழுவக் கூடிய வாய்ப்புகள் உண்டு. பழையன கழிந்து புதியன ஏற்படும்போது வெற்றியின் இலக்கும் மாறிக்கொண்டே போகின்றது.
இஸ்லாத்தின் தத்துவங்கள் போதிப்பதெல்லாம் இந்த உலக வாழ்க்கை நாம் மேற்கொள்ளும் நீண்ட பயணத்தின் சிறிது இளைப்பாறும் இடம் தான். இங்கு சற்று ஓய்வெடுத்து கொள்ளலாம். நமது மறுமைப்பயணங்களை எளிதாக்க கூடியவற்றை தயார் செய்து கொள்ளலாம். சக பயணிக்கும் நம்மால் முடிந்த உதவியைச் செய்து அவரது பயணத்தையும் இலகுவாக்க உதவி செய்யலாம்.
ஆனால் ‘ஈமான்’ என்ற இறையச்சத்தை நெஞ்சில் ஏந்திய ஒரு உண்மையான முஸ்லிம் இந்த உலக வெற்றிகளை ஒரு பொருட்டாகவே கருதமாட்டான். ‘உலக வெற்றி பொய்யானது. உண்மையான வெற்றி மறுமையில் தான் உள்ளது’ என்பதை இறையச்சம் கொண்ட மனிதன் அறிந்து கொள்வான்.
ஈமான் என்பது, ‘அல்லாஹ் ஒருவன் தான். அவன் தான் நம்மை எல்லாம் படைத்து பரிபாலித்து பரிபக்குவம் செய்பவன்’ என்று உறுதியான நம்பிக்கை கொள்வது ஆகும். இறைவன் ஏவிய கட்டளைகளை செவ்வனே செய்வதும், இறைவன் தடுத்தவற்றை விட்டு விலகி இருப்பதும் ஈமானில் ஒரு பகுதியாகும்.
அல்லாஹ் ஐம்பெரும் கடமைகளை மனிதர்களுக்கு நிர்மாணித்து தந்தான். அது கட்டாய கடமைகள் ஆகும். அதிலும் கூட சில விதிவிலக்குகள் உண்டு. நோயாளிக்கு நோன்பு கடமையில்லை. ஏழைகளுக்கு தர்மம் (ஜகாத்) கடமை இல்லை. பொருளாதார பின்னடைவு உள்ளவர்களுக்கு புனித ஹஜ் கடமையில்லை.
ஆனால் கொண்ட ஈமானில் ஒரு கீறல் கூட விழுவதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை. ஏக இறை கொள்கையில் ஒரு விழுக்காடு கூட குறைவு செய்வதற்கு யாருக்கும் உரிமையில்லை.
அதுபோன்று தொழுகையிலும் எந்தவித சலுகைகளும், யாருக்கும் தரப்படவில்லை. ‘உயிர்போகும் அந்த ஆபத்தான கட்டங்களிலும் உன் உள்ளுணர்வு விழித்துக் கொண்டிருக்குமானால், கண்களின் இமைகளை இமைத்து, விரல்களை லேசாக அசைத்து தொழ வேண்டும். அதுவும் தொழுகையின் அந்த நேரம் வந்து விட்டால் உரிய நேரத்தில் தொழுதே ஆக வேண்டும்’.
இதன் அடிப்படையில் தான் உண்மையான வெற்றியாளர்களைப் பற்றி விவரித்து அல்லாஹ் தன் அருள்மறையிலே இந்த வசனத்தை மிக அழகாக பதிவு செய்துள்ளான்.
‘ஓரிறை நம்பிக்கையாளர்கள் திட்டமாக வெற்றி அடைந்து விட்டனர். அவர்கள் எத்தகையோர் என்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சம் உடையவர்களாக இருப்பார்கள். இன்னும் அவர்கள் வீணானவற்றை விட்டுவிலகி இருப்பார்கள். இன்னும் அவர்கள் ஜகாத்தை நிறைவேற்றுவார்கள். இன்னும் அவர்கள் தங்கள் வெட்கத்தலத்தை பாதுகாத்து கொள்வார்கள். அவர்கள் தம் அமானிதங்களையும், தம் வாக்குறுதியையும் பேணுவார்கள். இன்னும் அவர்கள் தங்கள் தொழுகையை பாதுகாத்து கொள்வார்கள். இத்தகையோர்தான் வெற்றியாளர்கள். சுவர்க்கத்தை வாரிசாக்கி கொள்பவர்கள்’. (திருக்குர்ஆன் 23:1-10)
அல்லாஹ் வெற்றியின் இலக்கணத்தை தொழுகையைக் கொண்டே ஆரம்பிக்கின்றான். தொழுகையை கொண்டே முடித்து வைக்கின்றான். ஆக தொழுகையில் தான் வெற்றி என்பதை உறுதி செய்கின்றான். வெற்றியின் பரிசாக சொர்க்கத்தை இறைவன் சுட்டிக்காட்டுகின்றான்.
அல்லாஹ்விற்கு பிடித்த அமல்களில் மிகவும் சிறந்த நற்செய்கை எதுவென்று நபிகளிடம் கேட்ட போது, ‘உங்களுடைய தொழுகையை உரிய நேரத்தில் குறிப்பிட்ட முறையில் முறையாய் நிறைவேற்றுங்கள்’ என்று பதிலளித்தார்கள்.

எந்தவித படை பலமுமின்றி, நிராயுதபாணிகளாக, இறையச்சத்தையும், தொழுகையையும் மட்டுமே கொண்டு வெற்றி கொண்ட நிகழ்வுகள் இஸ்லாமிய வரலாற்றில் ஏராளம் உண்டு.
பத்ர் யுத்தத்தில் நபிகளாருடன் இருந்தவர்கள் வெறும் முன்னூற்று முப்பத்து மூன்று ஏழை சஹாபாக்கள். அவர்கள் போர் வீரர்களும் அல்ல. போர்த்தளவாடங்கள் கொண்டவர்களும் அல்ல. அவர்களை எதிர்த்து நிற்பதோ ஆயிரத்திற்கும் மேற்பட்ட போர்த்திறன் கொண்ட போர் வீரர்கள், குதிரை, ஒட்டக, யானைப்படை.
கண்மணி நாயகம் கண் துஞ்சவில்லை. தொழுகையில் நிற் கிறார்கள். தரையில் சிரம் பணிந்து அல்லாஹ்விடம் மன்றாடு கிறார்கள்.
பொழுது புலர்கிறது. எதிரிப்படைகள் துவம்சம் செய்யப்பட்டது. எங்கிருந்து வந்தது இந்த சக்தி. எந்த யுக்தியைப் பயன்படுத்தினார்கள். யாரும் அறிந்திருக்கவில்லை. ஆனால் வெற்றி கிட்டியது உண்மை.
அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் ‘தொழுகையில் வெற்றி இருக்கிறது’ என்பது மட்டும் தான். ‘உள்ளத்தின் உறுதியில், இறையச்சத்தில் அதனை பெற்றுக்கொள்ள முடியும்’ என்ற நம்பிக்கை மட்டும் தான்.
போர்க்களத்தில் வெற்றி இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிறிது நேரத்தில் வெற்றிக் கனியைப் பறித்து விடலாம் என்ற நிலை இருந்தபோது, தொழுகை நேரம் நெருங்கி விட்டது. இறைகட்டளை அவர்களின் ஞாபகத்திற்கு வருகிறது.
‘நபியே! போர்க்களத்தில் அவர்களுடன் நீர் இருந்து அவர்களுக்கு தொழவைக்க இமாமாக நீர் நின்றால், அப்போது அவர்களிலிருந்து ஒரு பிரிவினர் உம்முடன் தொழ நின்று கொள்ளட்டும். இன்னும் தம் ஆயுதங்களையும் அவர்கள் தம்முடன் எடுத்து கொள்ள வேண்டும். எனவே உம்முடன் தொழும் அவர்கள் ஸஜ்தா செய்து தொழுகையை முடித்து விட்டால் உங்களுக்கு பின்னால் உங்களுக்கு பாதுகாப்பாக அவர்கள் நின்று கொள்ளவும். அப்போது தொழாமல் இருக்கும் மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் சேர்ந்து தொழுது கொள்ளவும்’. (திருக்குர்ஆன் 4:102)
வெற்றியைத் தோல்வியை நிர்ணயிக்கும் அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தொழுகையைத் தாமதிக்கும் உரிமை வழங்கப்படவில்லை. அப்படி என்றால், வீணான காரியங் களிலும், கூட்டம், விழாக்கள், சினிமா, கேளிக்கைகள் என்ற காரணங்களால் தொழுகையை தாமதிப்பது அல்லது உரிய நேரத்தில் தொழாமல் விட்டுவிடுவது முறையாகுமா?
இஸ்லாமிய படையினரிடையே இருந்த இரண்டு முக்கிய பண்புகளை மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டும். ஒன்று கடமையை முழு மனதாய் உறுதியாய் நிறைவேற்றுகிறார்கள். அச்சப்படுவதில்லை, இறப்பை கண்டு அஞ்சுவதுமில்லை. நம்பிக்கையோடு போராடுகிறார்கள். வெற்றியை அல்லாஹ்விடமே வேண்டு கிறார்கள். வெற்றியையும் தோல்வியையும் தன்னகத்தே கொண்டவன் சர்வ வல்லமை படைத்த அல்லாஹ் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.
அவர்களின் நம்பிக்கைக்கு அச்சாரமாக அல்லாஹ் சொல்கிறான்: ‘இன்னும் வலிமை மிக்க ஓர் உதவியாக அல்லாஹ் உமக்கு உதவியளிப்பதற்காகவும் இவ்வாறு வெற்றி அளித்தான்’ (திருக்குர் ஆன் 48:3) என்று அருள்பாலிக்கின்றான்.
எனவே இறை நம்பிக்கையோடு செயல்பட்டு, தொழுகையை தவறாமல் கடைப்பிடித்து ஈருலக வாழ்க்கையின் வெற்றிகளை நாம் பெற்றுக்கொள்வோம்.
எம். முஹம்மது யூசுப், உடன்குடி.

'ஸலாம்' என்ற சொல்லுக்கு உள்ளார்ந்த உள்ளன்பை வெளிப்படுத்துகிற சொல்லாகும். 'ஸலாம்' என்ற அரபுச் சொல்லுக்கு பல பொருள்கள் உள்ளன.
மனிதர்கள் தினந்தோறும் ஒருவரையருவர் சந்தித்துக் கொள்ளும்போது நலம் விசாரிப்பதும், வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வதும் வழிவழியாக வந்த வழிமுறையாகும்.
ஒருவரை முதன்முறையாகச் சந்திக்கும்போது 'வணக்கம்' கூறுவது தமிழர்களின் பண்பாடாகும். காலையில் சந்திக்கும்போது 'குட் மார்னிங்' என்பதும், மாலையில் சந்திக்கும்போது 'குட் ஈவனிங்' என்பதும், இரவில் பிரிகிற நேரத்தில் 'குட் நைட்' என்பதும் ஆங்கிலேயர்கள் நடைமுறை.
இன்னும் 'வந்தனம்', 'நமஸ்தே', 'நமஸ்காரம்' போன்ற வாழ்த்துச்சொற்களும் உண்டு.
ஆனால் இவற்றுக்கெல்லாம் இல்லாத சிறப்பு, இஸ்லாம் சொல்லித் தந்த 'ஸலாம்' என்ற சொல்லுக்கு உண்டு. அது உள்ளார்ந்த உள்ளன்பை வெளிப்படுத்துகிற சொல்லாகும்.
'ஸலாம்' என்ற அரபுச் சொல்லுக்கு பல பொருள்கள் உள்ளன. 'பாதுகாப்பு' என்பது அவற்றுள் ஒன்று. இதன்படி 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்று கூறினால், 'உங்களுக்கு இறைவனின் பாதுகாப்பு கிடைக்கட்டும்' என்பது பொருள். அதாவது இறைவன் உங்களுக்குப் பாதுகாப்பு அளிப்பான்; நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை. 'ஸலாம்' என்பதற்கு இன்னொரு பொருள், 'சாந்தி, சமாதானம்.' அதாவது நம்மிடையே சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவட்டும்.
'ஸலாம்' என்ற சொல்லுக்கு வாழ்த்து, முகமன் ஆகிய பொருள்களும் உண்டு.
மேலும், இறைவனின் 99 திருநாமங்களில் 'அஸ்ஸலாம்' என்பதும் இடம் பெற்றுள்ளது. இறைவன் (அல்லாஹ்) அனைத்துக் குறைபாடுகளை விட்டு நீங்கியவன். 'நிச்சயமாக அல்லாஹ்வே 'ஸலாமாக' இருக்கின்றான்' என்பது நபிமொழியாகும்.
இறைவனால் அவனது அடியார்களுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது. அதனால் உலக மக்களின் நன்மைக்காக இறைவன் தன் பெயரை 'ஸலாம்' என்று வைத்திருக்கின்றான்.
ஸலாமுக்கு, இறைவன் உங்களோடு இருக்கின்றான் என்ற பொருளும் கூறப்படுகிறது. எனவே 'ஸலாம்' கூறும்போதும், அதற்குப் பதில் 'ஸலாம்' கூறும்போதும் ஒருவர் மற்றொருவரைப் பார்த்து, 'இறைவன் உங்களோடு இருக்கின்றான்' என்று வாழ்த்துகின்றனர்.
முதலில் 'ஸலாம்' கூறுபவர், 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்று கூற வேண்டும். இதற்கு, 'உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக' என்று பொருள். பதில் கூறுபவர், 'வ அலைக்கும் ஸலாம்' என்று சொல்ல வேண்டும். 'உங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக' என்று இதற்கு அர்த்தம்.
ஸலாம் சொல்லும்போது, 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்று சொல்வதோடு நிறுத்தி விடாமல், 'வ ரஹ்ம(த்)துல்லாஹி வ பரகா(த்)துஹ§' என்பதையும் சேர்த்து சொல்லுதல் சிறப்பாகும். இதற்கு, 'இன்னும் இறைவனின் அருளும், அவனது நிரந்தரமான அபி விருத்தியும் உண்டாகட்டும்' என்பது பொருள். பதில் அளிப்பவர்களும், 'வ அலைக்கும் ஸலாம், வ ரஹ்ம(த்)துல்லாஹி வ பரகா(த்)துஹு' என்று கூற வேண்டும்.
'அஸ்ஸலாமு அலைக்கும்- இதில் 'அலைக்கும்' என்பது பன்மை. இதற்கு 'உங்கள் மீது' என்று அர்த்தம்.
'அஸ்ஸலாமு அலைக்க'- இதில் 'அலைக்க' என்பது ஒருமை. இதற்கு 'உன் மீது' என்று பொருள்.
எனவே ஒருவருக்கு 'ஸலாம்' கூறினால் 'அஸ்ஸலாமு அலைக்கும்' (உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக') என்று பன்மையிலேயே கூற வேண்டும்.
'உங்கள் மீது' என்ற வார்த்தையில் அவருடன் இருக்கின்ற அமரர்களையும், உலக முஸ்லிம்களையும் மனதில் நாடி, இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற அடிப் படையில் அவ்வாறு மொழிய வேண்டும்.
சந்திக்கும்போது மட்டுமல்ல; பிரியும்போதும் 'ஸலாம்' சொல்ல வேண்டும் என்கிறது, இஸ்லாம்.
ஸலாத்தை நேரிலும் சொல்லலாம். வெளியூரில் மற்றும் வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ வேறொருவர் மூலமாகவும் கூறலாம்.
வெளிநாடு செல்ல இருக்கும் உறவினர் ஒருவர், நம்மிடம் 'பயணம்' சொல்லி வாழ்த்து பெற வருகிறார். அவரிடம், 'நீங்கள் அங்கு என் அண்ணன் மகனைச் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்படும். அப்போது அவருக்கு, 'என் ஸலாத்தைச் சொல்லுங்கள்' என்கிறோம். அவரும் அந்த ஸலாத்தைச் சுமந்து கொண்டு வெளிநாடு செல்கிறார்.
சொல்லியபடியே அண்ணன் மகனைச் சந்தித்து ஸலாத்தைச் சமர்ப்பிக்கிறார்.
இதைக் கேட்ட அண்ணன் மகன், 'வ அலைக்க அலைஹி(ஸ்)ஸலாம்' என்று மறுமொழி பகர்வார்.
வ அலைக்க - இன்னும் தங்களுக்கும்
வ அலைஹி - (சொல்லி அனுப்பிய) அவருக்கும்
ஸலாம் - சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக.
ஸலாத்தைச் சொல்லி அனுப்பியவருக்கு மட்டுமல்ல; அதைச் சுமந்து சென்றவருக்கும் இங்கே 'சோபனம்' கூறப்படுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், ஒரு மனிதர் சென்று, 'இஸ்லாத்தில் சிறந்தது எது?' என்று கேட்டார். அதற்கு நபிகளார், '(பசித்தவருக்கு) உணவு அளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும், உமக்கு அறிமுகமற்றவருக்கும் முகமன் (ஸலாம்) சொல்வதும் ஆகும்' என்று பதில் அளித்தார்கள்.
'தெரிந்தவராயினும், தெரியாதவராயினும் அவருக்கு 'ஸலாம்' சொல்லுங்கள் என்று சொல்வது உயர்ந்த பண்பாட்டைப் பண்பாடும் சொல்லாகும்.

முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்த முடியாத யூதர்கள் வெளிப்படையாகவே நபிகளாரை எதிர்த்தவர்களாக அவர்களுடன் செய்திருந்த உடன்படிக்கையை முறித்துக் கொண்டனர்.
பத்ருப் போருக்கு பிறகு முஸ்லிம்களின் மீது மதிப்பும் மரியாதையும் ஒருசேர மக்கள் மனதில் இருந்தது. இதனை யூதர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருப்பதையும் முறியடிக்க நினைத்தனர். ஏதாவது குழப்பங்கள் செய்து கொண்டே இருந்தனர். நபி முஹம்மது (ஸல்) மிகவும் பொறுமையாக இருந்தார்கள்.
முஸ்லிம்களில் இரு பிரிவினரின் முன்னாள் பகையை யூதர்கள் நினைவுப்படுத்திக் கலகமூட்டினர். அக்கலகத்தினால் இரு பிரிவினரும் போருக்கே தயாராகும் அளவுக்கு, பகைமை கொண்டனர். அப்போது நபி முஹம்மது (ஸல்) அங்கு விரைந்து சென்று சமாதானப்படுத்தினார்கள். அவர்கள் முஸ்லிமாகிவிட்டதையும், அவர்களுக்குள் அல்லாஹ் அன்பை ஏற்படுத்தியிருப்பதையும் நினைவுபடுத்தினார்கள். இரு பிரிவினரும் தங்களின் தவறுகளை உணர்ந்து ‘அல்லாஹ் எங்களைப் பாதுகாப்பானாக’ என்று சொல்லி ஒருவரையொருவர் கட்டித் தழுவி அன்பை நிலைநிறுத்தினர்.
முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்த முடியாத யூதர்கள் வெளிப்படையாகவே நபிகளாரை எதிர்த்தவர்களாக அவர்களுடன் செய்திருந்த உடன்படிக்கையை முறித்துக் கொண்டனர். யூதர்களைச் சந்தித்து நபி முஹம்மது (ஸல்) அறிவுரை வழங்கினார்கள். தூய மார்க்கத்திற்கு, நேர்வழிக்கு அவர்களை அழைத்தார்கள். ஆனால் யூதர்களோ ஆணவமாக “முஹம்மதே! குறைஷிகளை வென்றுவிட்ட மமதையில் பேசுகிறீர்கள். அவர்கள் போர் செய்யத் தெரியாதவர்கள். எங்களுடன் போர் புரிந்து பாரும். நாங்கள் வலிமைமிக்கவர்கள் என்பதைப் புரிந்து கொள்வீர்” என்றனர். முஸ்லிம்களுக்குத் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து அராஜகத்தைத் தொடங்கினர். முஸ்லிம் பெண்களை நேரடியாகவே வம்புக்கிழுத்தனர்.

வியாபாரத்திற்குக் கடைக்கு வந்திருந்த ஒரு முஸ்லிம் பெண்ணின் பர்தாவை நீக்க வேண்டுமென்று ஒரு யூதன் வம்பிழுத்தான். அப்பெண்மணி மறுத்தாள். அவளுக்குத் தெரியாமல் அவளுடைய ஆடையைப் பின்னாலிருந்து கட்டிவிட்டான். அவள் வியாபாரம் முடிந்து நகரும்போது அந்தப் பெண்ணின் ஆடை மறைவிடம் தெரியும்படி அகன்று விட்டது. சுற்றியிருந்த யூதக்கூட்டத்தினர் சிரித்தனர். அப்பெண் உதவி வேண்டி கூச்சலிட்டார். இதை அறிந்த ஒரு முஸ்லிம் தன் உடன்பிறவா சகோதரிக்காக அந்த யூதனை ஆத்திரத்தில் கொன்றார். யூதர்களும் அந்த முஸ்லிம் நபரை விட்டுவைக்கவில்லை கொன்றுவிட்டனர். இப்படி ஆரம்பித்த சண்டை வலுப் பெற்று போராக மாறியது.
“நிராகரிப்போரிடம் நபியே! நீர் கூறுவீராக: “வெகு விரைவில் நீங்கள் தோல்வியடைவீர்கள்; அன்றியும் மறுமையில் நரகத்தில் சேர்க்கப்படுவீர்கள்; இன்னும், நரகமான அவ்விரிப்பு கெட்ட படுக்கையாகும். பத்ரு களத்தில் சந்தித்த இரு சேனைகளிலும் உங்களுக்கு ஓர் அத்தாட்சி நிச்சயமாக உள்ளது; ஒரு சேனை அல்லாஹ்வின் பாதையில் போரிட்டது; பிறிதொன்று காஃபிர்களாக இருந்தது;
நிராகரிப்போர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைத் தங்களைப்போல் இரு மடங்காகத் தம் கண்களால் கண்டனர்; இன்னும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத் தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான்; நிச்சயமாக, அகப்பார்வையுடையோருக்கு இதில் திடனாக ஒரு படிப்பினை இருக்கிறது” என்ற இறைவசனத்திற்கேற்ப முஸ்லிம்கள் யூதர்களான பனூ நளீர் குலத்தாரை வென்று அவர்களை நாடு கடத்தினார்கள். மற்ற குலத்தவரான குறைழா மன்னிப்பு கேட்டதால், நபிகளார் அவர்களுக்குக் கருணை காட்டி மன்னித்து மதீனாவிலேயே வசிக்க அனுமதித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி 4:64:4028, திருக்குர்ஆன் 3:12,13, இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம்
- ஜெஸிலா பானு.

கடலுக்குள் ஒருவன் மூழ்கும்போது, ஆழம் செல்லச்செல்ல இருள் அதிகரித்துக் கொண்டே சென்று, முடிவில் தன் கையைக் கண் முன்னால் கொண்டு வந்தால் அதை அவனால் காண இயலாத அளவுக்கு ‘இருட்டாக’ இருக்கும் என்று இந்த வசனம் கூறுகிறது.
கடல், பூமிப் பரப்பில் 70 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ள உப்பு சுவை கொண்ட நீர் நிலையாகும். இதனால் பூமியை ‘நீர்க்கோள்’ என்றும், ‘நீல வண்ணக்கோள்’ என்றும் அழைக்கிறோம். பூமியின் பருவ நிலையை நிலைப்படுத்துவதோடு நீர் சுழற்சி, கரிமச் சுழற்சி, நைட்ரஜன் சுழற்சி ஆகியவற்றிலும் கடல் நீர், முதன்மைப் பங்காற்றுகிறது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகுதல், பருவ மழை பெய்தல் ஆகியவற்றுக்கு கடல் நீரின் பங்கு முக்கியமானதாகும்.
அது- ‘ஆழி’, ‘விரிநீர்’, ‘பெருநீர்’, ‘பருநீர்’, ‘நிலை நீர்’ என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.
கடலுக்கு ‘முந்நீர்’ என்ற பெயரும் உண்டு. மழைநீர், ஆற்று நீர், நிலத்தடி நீர் சேருதலால் முந்நீர் என்ற பெயர் வந்தது. படைப்பு, காப்பு, அழிப்பு ஆகியவை செய்தலாலும் அது முந்நீர் ஆனது.
பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், அண்டார்டிக் பெருங்கடல், ஆர்ட்டிக் பெருங்கடல் என்று 5 பெருங்கடல்கள் உள்ளன. இவை தவிர அரபிக்கடல், வங்காள விரிகுடா கடல், கருங்கடல், செங்கடல், மத்தியத் தரைக்கடல், காஸ்பியன் கடல், கரீபியன் கடல், மர்மரா கடல், பாரசீக வளைகுடா போன்ற சிறிய கடல்களும் உள்ளன.
‘கடல்’ என்ற சொல்லானது ‘கடத்தற்கு அரிய தென்று’ பொருள்படும். ‘நீந்திக் கடத்தற்கு அரியது’ என்பதாகக் கருதலாம்.
இறைவன் படைப்பில் அனைத்துமே அதிசயம்; அதிலும் கடல்கள் மாபெரும் அதிசயம்; அந்தக் கடல்களுக்கு மத்தியில் தடுப்பு ஏற்படுத்தி இருப்பதாக திருக்குர்ஆனில் இறைவன் கூறி இருப்பது அதிசயத்திலும் அதிசயம்.
“இரு கடல்களையும் அவனே சந்திக்கச் செய்தான். ஆயினும் அவ்விரண்டுக்கும் இடையே ஒரு தடுப்பு இருக்கின்றது. அதை அவை மீறுவதில்லை” (59:19) என்றும்,
“இந்தப் பூமியை வசிக்கத்தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும், அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும், இரு கடல்களுக்கு இடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலானோர் அறியாதவர்களாக இருக்கின்றனர்” (27:61) என்றும் இறைவன் திருமறையில் கூறுகின்றான்.
எங்கெல்லாம் இருவேறு கடல்கள் கலக்குமோ அந்தக் கடல்களுக்கு மத்தியில் தடுப்பு இருப்பதாக இன்றைய தினம் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ‘தடுப்பு’ என்பது திடப்பொருளால் ஆன தடுப்பு அல்ல. இரு கடல்களுக்கு இடையே கண்ணுக்கு புலப்படாத வகையில் ஒரு ‘நீர்த் தடுப்பு’ உள்ளது. இதன் காரணமாக இரு கடல்களின் தனித்தன்மையில் எந்தவித மாற்றமும் ஏற்படுவது இல்லை.
மத்திய தரைக்கடலுக்கும், ஜிப்ரால்டரில் உள்ள அட்லாண்டிக் கடலுக்கும் இடையே உள்ள தடுப்பு உள்பட பல்வேறு இடங்களில் இந்த அற்புத நிகழ்வு ஏற்படுகின்றது.
மத்தியத் தரைக்கடலும், அட்லாண்டிக் கடலும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டிருந்தாலும் அதன் தட்ப வெப்ப நிலை, உப்புத் தன்மை, அடர்த்தி ஆகியவற்றில் எந்தவித மாற்றமும் இல்லை.
கடல் நீரின் சராசரி ஆழம் 4 கிலோ மீட்டர். மிக அதிகமான ஆழம் 11 கிலோ மீட்டர். இது பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா பள்ளத்தாக்கு ஆகும். எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தைக் காட்டிலும் இது கடலுக்கு அடியில் அதிக ஆழம் கொண்டதாகும்.
ஆழ் கடலில் ஏற்படுகின்ற இருட்டைப் பற்றியும் திருக்குர்ஆன் கூறுகிறது.
“அல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும். அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றொரு அலை; அதற்கு மேலே மேகம். (இப்படி) பல இருள்கள்; சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதைப் பார்க்க முடியாது. எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியும் இல்லை”. (24:40)
இந்த வசனத்தில் இறை நிராகரிப்பாளர்களை இறைவன் ஆழ் கடலின் இருளுக்கு உவமையாக கூறுகின்றான்.
கடலுக்குள் ஒருவன் மூழ்கும்போது, ஆழம் செல்லச்செல்ல இருள் அதிகரித்துக் கொண்டே சென்று, முடிவில் தன் கையைக் கண் முன்னால் கொண்டு வந்தால் அதை அவனால் காண இயலாத அளவுக்கு ‘இருட்டாக’ இருக்கும் என்று இந்த வசனம் கூறுகிறது.
கடலில் ஒரு குறிப்பிட்ட ஆழத்திற்கு மேல் மனிதனோ அல்லது அவன் கண்டுபிடித்த உபகரணங்களோ செல்ல முடியவில்லை என்பதே உண்மை. காரணம் ஒரு குறிப்பிட்ட ஆழத்திற்கு மேல் வெளிச்சம் உட்புக முடியாததாலும், நீரின் அழுத்தம் அதிகரிப்பதாலும் ஏற்படும் பாதிப்புகளைக் களைய இன்னும் நவீன எந்திரங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.
மேற்கண்ட (24:40) வசனம், ஆழ்கடலில் இருள் மட்டுமல்ல; அலைகளும் இருப்பதாகக் கூறுகின்றது.
பொதுவாக கடலின் மேற்புறத்தில் காற்றின் தாக்கத்தால் அலைகள் உருவாகின்றன. இரவில் சந்திரனின் ஈர்ப்பின் காரணமாகவும் அலைகள் எழும்புகின்றன. இந்த அலைகள் எல்லாம் கடலின் மேற்பரப்பில் நிகழ்பவை.
ஆழ்கடலின் ஆழத்தில் உள்ள வெப்பநிலை, அடர்த்தி, உப்புத் தன்மைக்கு ஏற்றவாறு வெவ்வேறு அடர்த்தியுள்ள நீர் ஒன்று சேரும் இடங்களில் ஆழத்தில் பெரும் அலைகள் உருவாகின்றன. இவை சுமார் 100 மீட்டர் (330 அடி) பிரமாண்ட உயரமும், பல நூற்றுக்கணக்கான மைல் நீளமும் நீண்டு செல்லும். இந்த அலைகள் கடற்பரப்பில் நம் கண்களுக்குத் தெரியாது.
இருந்தபோதிலும் பல்வேறு கடல் பகுதிகளின் ஆழத்தில் அலைகள் உருவாகின்றன என்பதற்குச் செயற்கைக் கோள் படங்கள் நமக்கு சாட்சியாக- அத்தாட்சியாக உள்ளன.

நபிகளார் “உங்களுடைய இந்த வாழ்த்தைவிட மிகச் சிறந்தது ‘சலாம்’தான். ’உங்களின் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் - அஸ்ஸலாமு அலைக்கும்’ என்ற வாழ்த்தே இறைவனுக்கு விருப்பமானது”.
பத்ருப் போருக்குப் பிறகு, தங்களது எல்லாப் பொருட் சேதங்களுக்கும், அவமானங்களுக்கும் காரணமான முஹம்மது நபி (ஸல்) அவர்களைக் கொலை செய்ய வேண்டுமென்று சிலர் எண்ணினர். மக்காவைச் சேர்ந்த உமைர் இப்னு வஹப் மற்றும் ஸஃப்வான் இப்னு உமைய்யா இதற்கான திட்டத்தைத் தீட்டினார். உமைரின் கடன்களை நிறைவேற்றுவதாகவும், அவருடைய குடும்பத்தைத் தனது குடும்பம்போல் பார்த்துக் கொள்வதாகவும் ஸஃப்வான் உறுதியளித்து உமைரை நபிகளாரை கொலை செய்யத் தூண்டினான். உமைர் தனது மகன் வஹப், பத்ர் போரில் சிறைப்பிடிக்கப்பட்டதால் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் மீது மிகுந்த கோபத்தில் இருந்தான். அதன் காரணமாக ஸஃப்வான் சொன்னதும், அவ்விருவரும் இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்ட பின், மதீனாவிற்கு உமைர் தனது கூரிய வாளுடன் புறப்பட்டார்.
மதீனாவில் நுழைந்த உமைரை, நபித் தோழர் உமர்(ரலி) அவர்கள் கவனித்துவிட்டார்கள். கடும் கோபத்துடன் அவன் வந்ததைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். நபிகளார் உமைரைத் தம்மிடம் அழைத்து வரும்படி கேட்டுக் கொண்டார்கள். உமைரை நம்பாத உமர்(ரலி) அவர்கள், நபிகளாரின் அருகில் சிலரை காவலுக்கு நிறுத்திவிட்டு உமைரை இழுத்து வந்தார்கள்.
உமர்(ரலி) அவர்களிடம் நபி முஹம்மது (ஸல்) உமைரை விட்டுவிடும்படி கேட்டார்கள். உடனே உமைரும் தம் குரலை தாழ்த்தி நல்லவிதமாக “உங்களின் காலைப் பொழுது பாக்கியமாகட்டும்” என்று நபிகளாருக்கு வாழ்த்து தெரிவித்தார். அதற்கு நபிகளார் “உங்களுடைய இந்த வாழ்த்தைவிட மிகச் சிறந்தது ‘சலாம்’தான். ’உங்களின் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் - அஸ்ஸலாமு அலைக்கும்’ என்ற வாழ்த்தே இறைவனுக்கு விருப்பமானது” என்றார்கள். அத்தோடு உமைர் வந்த காரணத்தையும் வினவினார்கள். அதற்கவன் தன் மகன் அங்குக் கைதியாக இருப்பதைப் பற்றிச் சொன்னான். தன் மகனிடம் நல்லமுறையில் நடந்து கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டான்.

அதற்கு நபி முஹம்மது (ஸல்), “உன் மகனுக்காக வந்த நீ, ஏன் கூரிய வாளுடன் வந்தாய்?” என்று கேட்க, அதற்கவன் “இந்த வாள்தான் எங்களுக்கு எந்தப் பயனையும் அளிக்கவில்லையே” என்று அதிருப்தியுடன் கூறினான்.
புன்முறுவலுடன் நபிகளார் “நீ வந்த நோக்கத்தையும் ஸஃப்வானுடன் நீ செய்து கொண்ட ஒப்பந்தத்தைக் குறித்தும் நான் அறிவேன். ஆனால், இப்போது உன் நோக்கத்திற்குத் தடையாக அல்லாஹ் இருக்கிறான்” என்றார்கள்.
இதைக் கேட்ட உமைர் “நீங்கள் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன். இறை அறிவுப்புகளை நீங்கள் எங்களுக்குக் கூறியபோது நாங்கள் உங்களைப் பொய்யர் என்றோம். நானும் ஸஃப்வானும் செய்து கொண்ட ஒப்பந்தம் இரகசியமானது. நாங்கள் பேசும்போதும் அங்கு யாருமே இருக்கவில்லை.
இறைவன்தான் உங்களுக்கு இச்செய்தியை அறிவித்தான் என்று நான் நம்புகிறேன். நான் நல்வழியில் செல்ல வேண்டும் இஸ்லாமின் பக்கம் சரியான பாதைக்கு வர வேண்டும் என்பதற்காகவே என்னை அல்லாஹ் இங்கு அனுப்பியுள்ளான். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே” என்று கூறி இஸ்லாத்தை ஏற்கிறேன் என்று உறுதிமொழியெடுத்து மனமார இஸ்லாத்தை ஏற்றார்.
நபி முஹம்மது (ஸல்) அவர்கள், தம் தோழர்களிடம் “உங்களின் சகோதரருக்கு மார்க்கச் சட்டங்களையும் குர்ஆனையும் கற்றுக் கொடுங்கள். அவரது கைதியை விடுதலை செய்யுங்கள்” என்று கூறினார்கள்.
பழி தீர்க்கச் சென்ற உமைர் நபிகளாரைக் கொன்ற செய்தியைத் தருவான் என்று மக்காவில் ஸஃப்வான் காத்திருந்தான். விரைவில் நல்ல செய்தி வரவிருக்கிறது என்று மக்காவாசிகளிடமும் கூறி வந்தான். அவனிடம் வந்த நற்செய்தியானது ’உமைர் முஸ்லிமாகிவிட்டார், இஸ்லாத்தைத் தழுவிவிட்டார்’ என்பதே. இச்செய்தியைக் கேட்ட ஸஃப்வான் அதிர்ச்சியில் உறைந்தான்.
இஸ்லாமியக் கல்வியை உமைர் மதீனாவில் கற்று சில நாட்களுக்குப் பிறகு மக்கா திரும்பினார். மக்காவில் மக்களை இஸ்லாமின் பக்கம் அழைத்தார். அவரால் பலர் இஸ்லாமைத் தழுவினர் என்பது வரலாறு.
இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம்

பெண்கள் சமுதாயம் இந்த நூற்றாண்டில் போராடிப் பெற்ற நியாயமான பல உரிமைகளை, 1,400 ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் எந்தவிதமான போராட்டமும் நடத்தாமலேயே இஸ்லாம் வழங்கி விட்டது.
வழிபாட்டு உரிமையில், சொத்துரிமையில், விவாகரத்து உரிமையில், கல்வி கற்பதில் என அனைத்து உரிமை களையும் வழங்கி அவர்களை கண்ணியப்படுத்திய மார்க்கம் இஸ்லாம்.
இருந்தபோதிலும், ‘பெண்கள் ஐவேளை தொழுவதற்காக பள்ளிவாசலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லையே?’ என்ற கேள்வி எழலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்குத் தினமும் சென்று தொழுகையில் பங்கேற்றுள்ளனர்.
‘உங்கள் துணைவியர் (பள்ளிவாசலுக்கு செல்ல) அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள்’ என்று நபிகளார் கூறியுள்ளார்கள்.
பெண்கள் பள்ளிவாசலுக்கு வந்து வழிபடலாம்; கூட்டுத் தொழுகையில் பங்கேற்கலாம் என்பதற்கு நபிகளாரின் வாழ்வில் நடந்த நடைமுறைகளே சான்றாகும்.
“பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்லத் தடை இல்லை. ஆனால் அவர்கள் வீட்டில் தொழுவதே சிறந்தது” என்பது நபிகளாரின் கூற்று.
இது பெண்களுக்கு வழங்கப்பட்ட சலுகையே தவிர, உரிமை பறிப்பு அல்ல. ஐவேளை தொழுவதற்கு பெண்கள் பள்ளிவாசலுக்குக் கட்டாயம் வர வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால் அது அவர்களுக்கு சுமையாக இருந்திருக்கும்.
மேலும் இறை இல்லமான கஅபாவில் ஆண்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதைப்போல பெண்களும் நிறைவேற்றுகின்றனர்; தொழுகின்றனர். எனவே பெண்கள் பள்ளிவாசல்களுக்கு வருவதை இஸ்லாம் தடுக்கவில்லை.
ஒரு முஸ்லிம் பெண் பருவம் அடைந்து விட்டால் எல்லா வகையான பொருளாதார உரிமைகளையும் பெறுகிறாள். திருமணத்திற்கு முன்பே பணம், சொத்து ஆகியவற்றைச் சொந்தமாக்கி கொள்ள, முதலீடு செய்ய, அதை அபிவிருத்தி செய்ய, செலவழிக்க உரிமை பெற்றவள் ஆகிறாள். தனது சொத்தை தான் நினைத்த வழிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்னும் உரிமையை பெண்களுக்கு இஸ்லாம் முன்பே வழங்கி விட்டது. ஆனால் இந்த உரிமையை பிரிட்டிஷ் அரசு 1870-ம் ஆண்டில் தான் பெண்களுக்கு வழங்கியது.
நபிகளாரின் மனைவி கதீஜா (ரலி) அவர்கள் ஒரு வெற்றி கரமான வணிகர் என்பதை நாம் அறிவோம். குடும்பப் பணிகள், குழந்தை வளர்ப்பு போன்றவற்றுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், அவளது ஒழுக்கம், கற்பு ஆகியவற்றுக்கு பாதகம் ஏற்படாத வகையிலும் பெண்களின் பொருளட்டும் பணி அமைய வேண்டும்.
பெண்களுக்கு சொத்தில் பங்கு வழங்கிய மார்க்கம் இஸ்லாம் என்பதை எவராலும் மறுக்க முடியாது.
‘பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கும் பாகம் உண்டு. அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு.’ (திருக்குர்ஆன்-4:7) என்ற இறை வசனத்தின் மூலம் பெண்களுக்கான வாரிசுரிமை உறுதி செய்யப்பட்டது.
‘உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு, இரண்டு பெண்களுக்கு கிடைக்கும் பங்கு போன்று கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்’ (திருக்குர்ஆன்-4:11).
இதன் மூலம் சொத்தில் ஆணுக்கு இரண்டு பங்கும், பெண்ணுக்கு ஒரு பங்கும் வழங்க வேண்டும் என்பது இறைக் கட்டளை.
ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதற்கு பெற்றோரின் விருப்பத்தை விட பெண்ணின் விருப்பமே இன்றியமையாதது என்பதை இஸ்லாம் எடுத்தியம்புகிறது.
திருமணத்திற்கு முன்பு கணவன் மணக்கப்போகும் தன் மனைவிக்கு அவன் சக்திக்கேற்ப மணக்கொடை (மஹர்) கொடுக்க வேண்டும். மஹர் தொகையை நிர்ணயம் செய்யும் உரிமை பெண்களுக்கே உண்டு.
உலகில் உள்ள பல மதங்களும் விவாகரத்து செய்வது பாவம் என்று கருதி வந்த காலத்தில், இல்லற வாழ்வில் இணைந்து வாழ முடியாத நிலை வரும்போது மணவிலக்கு (விவாகரத்து) பெறுகின்ற உரிமையை ஆண், பெண் இருவருக்கும் இஸ்லாம் வழங்கியது. மண வாழ்க்கையில் இணைந்தவர்கள், ஒருவர் மற்றொருவருக்கு விருப்பம் இல்லாதவர்களாக இருக்கும் நிலையில், அவர்களை வெறும் சட்டங்களைக் கொண்டு மாத்திரம் வாழ நிர்பந்திப்பது இயற்கைக்கு மாறான செயலாகும்.
இது கடுமையான குற்றங்கள் புரிந்தவர்களுக்குக் கொடுக்கப்படும் தண்டனையை விட கொடுமையானதாகும். அந்த வகையில் பெண்களுக்கும் மணவிலக்கு உரிமையை இஸ்லாம் வழங்கியுள்ளது. இதற்கு ‘குலா’ என்று பெயர். மண விலக்கு பெறும் உரிமையை பெண்களுக்கு வழங்கிய இஸ்லாம், அவர்களுக்கு மறுமணம் செய்கின்ற உரிமையையும் அளித்துள்ளது.
‘கல்வி கற்பது ஒவ்வொரு முஸ்லிமின் கட்டாயக் கடமை ஆகும்’ என்றார்கள். இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானது. அறிவு பெறுதல், சிந்தித்தல், ஆராய்தல் என்பன குறித்து திருக்குர்ஆனில் 800-க்கும் மேற்பட்ட வசனங்கள் உள்ளன. இது தொடர்பான நபிமொழிகளும் உள்ளன. இவை ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவானவை. அந்தக் காலத்திலேயே பெண்கள் அறிவாளிகளாகத் திகழ்ந்தார்கள்.
இதற்கு நபிகளாரின் மனைவி அன்னை ஆயிஷா (ரலி) அவர்களே சிறந்த சான்று. மார்க்கத் தீர்ப்புகளை வழங்குவதிலும், திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளுக்கு விளக்கம் சொல்வதிலும் அவர்கள் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தார்கள். பெண்கள் கல்வி கற்க இஸ்லாம் என்றென்றும் தடை விதித்ததில்லை. படித்து விட்டு பெண்கள் வேலைக்குச் செல்ல போவதில்லை என்ற எண்ணமும், ஏழ்மையுமே முஸ்லிம் பெண்கள், கல்வியில் பின்தங்கியதற்குக் காரணமாகும். ஆனால் இன்று நிலைமை முன்னேற்றமாக மாறி வருகிறது.

பழக்கடையில் இனிப்பான கனிகளைத் தேர்ந்தெடுப்பது போன்று வார்த்தைகளிலும் இனிப்பானவற்றையே தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். ஏனெனில் வார்த்தைகளுக்கு மனதை மயக்கும் மந்திர சக்தி இருக்கிறது.
ஒரு திறமையான வியாபாரியின் தகைமை என்ன? என்பது குறித்து அறிஞர்கள் கூறுவதாவது: ‘பேச்சில் மயக்கும் மந்திரவாதியைப் போன்று அவர் இருக்க வேண்டும். முதலில் இனிமையான பேச்சு பின்னர் நியாயமான விலை இதுவே திறமையான வியாபார உக்தி’.
காரியதரிசி பதவிக்குத் தகுதியானவர் யார்..? இன்முகமும் இனிய பேச்சும் உடையவர்தான் வெற்றிகரமான காரியதரிசியாக வலம் வருவார்.
புரியாத புதிர் என்னவென்றால்.. சில கணவன்மார்கள்.. கஞ்சனாகவும், அழகற்றவராகவும் இருப்பார்கள். அதேவேளை மனைவியரின் அன்பைப் பெற்றவராக இருப்பார்கள். காரணம் என்ன? அவர்களுடைய இனிமையான பேச்சுதான். அந்த இனிய பேச்சில் மனைவியர்கள் மந்திரத்தால் கட்டுண்டவர்கள் போல் மயங்கிக் கிடப்பார்கள்.
உள்ளங்களை கொள்ளை கொள்வதற்கு இஸ்லாம் கூறும் இனிய வழிகளில் ஒன்றுதான் இனிய பேச்சு. நாலு நல்ல வார்த்தைகளைக் கூறுவதால் ஒருவர் மகிழ்ச்சி அடைகிறார் என்றால் எதற்காக கடுகடுப்புடன் பேசவேண்டும்!? இனிய பேச்சின் மூலம் யாரை வேண்டுமென்றாலும் வழிக்குக் கொண்டுவரலாம்.
அண்ணலார் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் இருந்து இதனை அழகுற தெரிந்துகொள்ள முடியும். கைஸ் பின் ஆஸிம், அஸ்ஸுபர்கான் பின் பத்ர், அம்ர் பின் அல்அஹ்தம் இவர்கள் மூவரும் தமீம் கோத்திரத்தின் தலைவர்கள். ஒருமுறை நபி (ஸல்) அவர்களிடம் இம்மூவரும் வருகை தந்தனர். வந்தவர்கள் தங்களைக் குறித்து தாமே நபிகளாரிடம் சுய அறிமுகம் செய்யத் தொடங்கினர்.
அஸ்ஸுபர்கான் கூறினார்: ‘அல்லாஹ்வின் தூதரே! நான் தான் தமீம் கோத்திரத்தின் தலைவன். அவர்கள் எனக்கே கட்டுப்படுவார்கள். நான் அழைத்தால் பதில் தருவார்கள். அநீதி ஏற்படாமல் அவர்களை நான் பாதுகாக்கின்றேன். அவர்களுடைய உரிமைகளை மீட்டுக்கொடுக்கின்றேன்’.
பின்னர் அருகிலிருந்த அம்ர் பின் அல்அஹ்தம் அவர்களைச் சுட்டிக்காட்டி, ‘இவருக்கும் இது நன்றாகத் தெரியும்’ என்றார்.
உடனே அம்ர் அவர்கள், அஸ்ஸுபர்கானைக் கொஞ்சமாகப் புகழ்ந்தவாறு, ‘ஆம், அல்லாஹ்வின் தூதரே! கோத்திர மக்கள் இவர் சொன்னால் கட்டுப்படுவார்கள். மக்களுக்கு தீங்கு ஏற் படாமல் தடுக்கிறார்’ என்று கூறி இரண்டொரு வார்த்தைகளில் நிறுத்திக்கொண்டார். மேலதிகமாக புகழாமல் மவுனமாக இருந்தார்.
ஆனால் அஸ்ஸுபர்கானோ இன்னும் அதிகமாக தம்மை அவர் புகழ வேண்டும் என்று எதிர்ப்பார்த்தார். பொறாமையால்தான் தம்மை அவர் அதிகமாகப் புகழவில்லை என்று கருதினார்.
உடனே பெருமானார் (ஸல்) அவர்களிடம் கூறினார்: ‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது ஆணை..! பொறாமையால்தான் என்னைக் குறித்து இவர் அதிகம் கூறவில்லை’.
இதுகேட்ட அம்ர் அவர்களுக்குக் கோபம் வந்துவிட்டது. அவரிடம் கூறினார்: ‘உம்மீது நான் பொறாமை கொண்டேனா..? அல்லாஹ்வின் மீது ஆணை! நீர் உமது சகோதரர்களால் சபிக்கப்பட்டவர். புதிய பணக்காரர். முட்டாள் பிள்ளைகளின் தந்தை. குடும்பமே கைவிட்ட தனி நபர் நீர்’.
தொடர்ந்து நபி (ஸல்) அவர்களைப் பார்த்து கூறினார்: ‘அல்லாஹ்வின் தூதரே! இவரைக் குறித்து நான் ஆரம்பத்தில் கூறியது உண்மை. இப்போது கூறியதிலும் பொய் எதுவும் கிடையாது. அவர் மீது நான் திருப்தியுடன் இருந்தபோது நல்லவற்றைக் கூறினேன். கோபமாக இருந்தபோது நான் பார்த்த தீயவற்றைக் கூறினேன். எனவே இரண்டு நிலையிலும் நான் உண்மையாகவே நடந்துள்ளேன்’.
அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கோ ஆச்சரியம். எவ்வளவு வேகமாக வாதிடுகிறார்! எவ்வளவு அழகாகப் பேசுகிறார்! எவ்வளவு பலத்துடன் விளக்கமளிக்கிறார்! அவருடைய நாவின் திறமையைப் பார்த்து வியந்தவராக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நிச்சயமாக சில பேச்சுக்களில் மந்திர சக்தி இருக்கிறது’ (ஹாகிம்)
நாவை எப்போதும் இனிமையாக வைத்திருங்கள். போகிற போக்கில் நாலு நல்ல வார்த்தைகளை கூறிச் செல்லுங்கள். கேட்பவரின் உள்ளம் உங்கள் பின்னாடியே ஓடி வரும்.
அந்நியர் என்றால் நம்முடைய உரையாடல்களை அனேகமாக ஒற்றை வார்த்தையிலேயே முடித்துக்கொள்கிறோம். ‘உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்’ என்று யாராவது நம்மிடம் சொன்னால்.. உடனே நாம், ‘ஹும்.. சொல்லு..’ என்று முடித்துக்கொள்கிறோம்.
‘கொஞ்சம் உதவி தேவை’ என்று எவராவது கேட்டால், அவர் கேட்டுமுடிப்பதற்குள்.. ‘என்னா..?’ என்றுவாறு ஒரு முறைப்பு. முறைக்கிற முறைப்பிலேயே என்ன கேட்க வந்தோம் என்பதையே அவர் மறந்துவிடுவார்.

‘ஆமா..’, ‘இல்லை..’, ‘சரி..’, ‘போ..’, ‘வா..’ என்பன போன்ற ஒற்றை வார்த்தைகளையே நாம் அதிகமாகப் பயன்படுத்துகிறோம். இவை ஒருபோதும் அன்பை அறுவடை செய்யாது.
ஹுனைன் போர் முடிந்த காலகட்டம். அந்தப் போரில் கிடைத்த ஏராளமான ‘கனீமத்’ எனப்படும் போர்ப் பொருட்களை முஹாஜிர்களுக்கும், புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர்களுக்கும், இஸ்லாத்தை தழுவலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்தவர்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் பங்கிட்டு வழங்கினார்கள். மதீனாவாசிகளான அன்சாரிகளுக்கு ஒரு காசுகூட தரவில்லை.
‘நபிகளார் தம் ஆட்களைப் பார்த்ததும் நம்மை மறந்துவிட்டார்கள்’ என்ற பேச்சு அன்சாரிகளுக்கு மத்தியில் எழுந்தது. அன்சாரிகளின் தலைவர்களில் ஒருவராகிய ஸஅத் பின் உபாதா (ரலி) அவர்களுக்கும் இந்த எண்ணம் இருந்தது. நபிகளாருக்குத் திகைப்பு. உடனே அன்சாரிகளை ஒரு கூடாரத்தில் கூட்டிய பெருமானார் (ஸல்) அவர்கள் அவர்களிடையே உரையாற்றினார்கள். அந்த உரை கேட்போரை மெய்சிலிர்க்க வைக்கக் கூடியதாக அமைந்து இருந்தது. அத்தனை அன்சாரிகளையும் அழ வைத்தது.
‘அன்சாரிகளே நான் கேள்விப்பட்டது உண்மையா..?’ என்று மூன்று தடவை கேட்டவாறு தமது உரையாடலை நபி (ஸல்) அவர்கள் தொடங்கினார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! யாரோ பொறுப்பில்லாத சில அன்சாரி இளைஞர்கள் கூறியதை நீங்கள் காதில் போட்டுக்கொள்ள வேண்டாம்’ என்று அன்சாரிகள் பதில் கூறினர்.
ஆனால் நபியவர்கள் தொடர்ந்தார்கள். ‘அன்சாரிகளே! நான் வருவதற்கு முன் நீங்கள் தீய வழியில் இருந்தீர்கள். நான் வந்த பிறகு அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டவில்லையா..? நான் வருவதற்கு முன்னர் நீங்கள் ஏழைகளாக இருந்தீர்கள். நான் வந்தபிறகு அல்லாஹ் உங்களுக்கு செல்வத்தைத் தரவில்லையா..? நான் வருவதற்கு முன்னர் நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள். நான் வந்தபிறகு அல்லாஹ் உங்களிடையே ஒற்றுமையை மலரச் செய்யவில்லையா..?’
தம் வருகை மூலம் கிடைத்த மூன்று நன்மைகளை அண்ணலார் சொன்னபோது அன்சாரிகள் அனைவரும், ‘ஆம் அல்லாஹ்வின் தூதரே!’ என்று ஒப்புக்கொண்டார்கள்.
தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகள் மூலம் தமக்குக் கிடைத்த மூன்று நன்மைகளை இவ்வாறு குறிப்பிட்டார்கள்: ‘என் அருமைத் தோழர்களே! நீங்கள் வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம் - நீங்கள் மக்காவிலிருந்து பொய்யராக எங்களிடம் வந்தீர்கள். நாங்கள்தானே உங்களை உண்மையாளராக ஏற்றுக்கொண்டோம் என்று நீங்கள் சொல்லலாம். ஆம், அவ்வாறு நீங்கள் சொன்னால் அது உண்மைதான். மக்காவிலிருந்து உதவியற்றவராக நீங்கள் வந்தீர்கள். நாங்கள்தானே உதவியளித்தோம் என்று நீங்கள் சொல்லலாம். ஆம், அவ்வாறு நீங்கள் சொன்னால் அது உண்மைதான். மக்காவிலிருந்து விரட்டப்பட்டு அடைக்கலம் இல்லாமல் நீங்கள் மதீனா வந்தபோது நாங்கள்தானே அடைக்கலம் அளித்தோம் என்று நீங்கள் கூறலாம். ஆம், அவ்வாறு நீங்கள் சொன்னால் அது உண்மைதான்’.
பிறகு நபி (ஸல்) அவர்கள் சற்று சப்தம் உயர்த்திக் கேட்டார்கள்: ‘அழியக்கூடிய இந்த செல்வத்தின்மீதா நீங்கள் ஆசை வைக்கிறீர்கள்? அன்சாரிகளே! இந்தப் போரில் கலந்துகொண்டவர்கள் ஆடுகளையும் ஒட்டகங்களையும் தங்கள் பங்காக எடுத்துச் சென்று கொண்டிருக்க, அன்சாரி களாகிய நீங்கள் அல்லாஹ்வின் தூதரை உங்கள் பங்காக எடுத்துச் செல்வதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’
இவ்வாறு கேட்டதுதான் தாமதம், அன்சாரிகள் அனைவரும் அழத் தொடங்கிவிட்டார்கள்.
தொடர்ந்து பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அன்சாரிகளே! உலக மக்கள் அனைவரும் ஒரு திசையில் சென்றுகொண்டிருக்க, அன்சாரிகளாகிய நீங்கள் வேறு திசையில் சென்றுகொண்டிருந்தால், அல்லாஹ்வின் தூதராகிய இந்த முஹம்மத் அன்சாரிகள் எந்தப் பாதையில் நடக்கிறார்களோ அந்தப் பாதையில் இருப்பேன்’.
இந்த வார்த்தைகளைக்கேட்டதும் ஒட்டுமொத்த அன்சாரிகளும் தலைகுனிந்து அழத் தொடங்கிவிட்டார்கள். நபிகளாரோ, ‘யா அல்லாஹ்! அன்சாரிகளின் பாவங்களை மன்னிப்பாயாக! அவர்களின் குழந்தைகளின் பாவங்களை மன்னிப்பாயாக! அந்தக் குழந்தைகளின் குழந்தைகளுடைய பாவங்களை மன்னிப்பாயாக!’ என்று மூன்று தலைமுறைகளுக்காக பிரார்த்தனை செய்தார்கள்.
அன்சாரிகள் அனைவரும் அழுதபடியே, ‘போரில் கிடைத்த எங்களின் பங்காக எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் மட்டுமே போதும்’ என்று ஒருமித்த குரலில் கூறினார்கள்.
பழக்கடையில் இனிப்பான கனிகளைத் தேர்ந்தெடுப்பது போன்று வார்த்தைகளிலும் இனிப்பானவற்றையே தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். இனிய பேச்சால் பிறர் மனதைக் கொள்ளை கொள்ளுங்கள்! ஏனெனில் வார்த்தைகளுக்கு மனதை மயக்கும் மந்திர சக்தி இருக்கிறது.
மவுலவி நூஹ் மஹ்ளரி, குளச்சல்.

“நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்” என்ற இறைவசனம் அருளப்பட்டது.
பத்ருப் போரில் முஸ்லிம்களை எதிர்க்க முடியாமல் போனதை கேள்விப்பட்டு, குதிரை வீரர்களை வானவர்களென்று அபூராஃபியா சொன்னதும் அபூலஹப் கோபத்தில் அபூராஃபியைத் தாக்கியபோது மற்றவர்கள் வந்து விலக்கினர். சில நாட்களில் அல்லாஹ் அபூலஹபின் உடலில் அம்மையைப் போன்ற கொப்பளங்களை ஏற்படுத்தினான். அது அவன் உடலெங்கும் பரவியது.
அரேபியர்கள் அந்நோயை ஒரு துர்க்குறியாகக் கருதி யாரையும் அவன் அருகில் நெருங்கவிடவில்லை. அந்நோயே அவனைக் கொன்றது. அவன் இறந்த பிறகும் அவனைத் தொடாமல், அவன் கிடந்த படுக்கையோடு சேர்த்துத் தூக்கி ஒரு குச்சியால் அவனை ஒரு பெரும் குழியில் தள்ளி, கற்களை எறிந்து மூடினர்.
இப்போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது மக்காவாசிகள்தான். மக்காவாசிகளும், இணைவைப்பவர்களும், யூதர்களும் முஸ்லிம்களின் மீது கடும் கோபத்திலிருந்தனர்.
பத்ருப் போரை குறித்து, குர்ஆனில் ‘அல் அன்ஃபால்’ என்ற அத்தியாயத்தில் போருக்கான சட்டத்திட்டங்கள் மற்றும் அதனைச் சார்ந்த விஷயங்களே அடங்கியுள்ளன. அதனைப் பின்பற்றி மக்களும் சிறப்பாகச் செயல்பட்டனர்.
“நீங்கள் பூமியில் மக்காவில் சிறு தொகையினராகவும், பலம் இல்லாதவர்களாகவும் இருந்த நிலையில், உங்கள் மீது எந்நேரத்திலும் மனிதர்கள் தாக்குதல் நடத்துவார்கள் என்று நீங்கள் பயப்பட்டுக் கொண்டிருந்தபோது அல்லாஹ் உங்களுக்கு மதீனாவில் புகலிடம் தந்து தன் உதவியைக் கொண்டு உங்களைப் பலப்படுத்தினான். இன்னும் நல்ல உணவுகளையும் உங்களுக்கு அளித்தான். அதையெல்லாம் நினைவு கூர்ந்து அல்லாஹ்வுக்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!” என்று இறைவசனத்தை இறைக்கட்டளையாக அருளினான்.
பத்ருப் போரில் கிடைத்த வெற்றியால், இஸ்லாம் சித்தாந்தமாகப் பார்க்காமல் வாழ்க்கை நெறியாகப் பார்க்கப்பட்டாலும் இப்போரினால் முஸ்லிம்களைப் பல தரப்பினர் பகைத்துக் கொள்வதற்கும் அதுவே காரணமாக அமைந்தது. வெவ்வேறு பிரிவினரும் தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளத் துடித்தனர்.
ஸுலைம் மற்றும் கதஃபான் கிளையினர் மதீனாவின் மீது போர் தொடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டதும் நபிகளார் தமது படையுடன் வருவதை அறிந்து அந்தக் குலத்தவர்கள் அங்கிருந்து ஓடி மறைந்தனர். மதீனாவாசிகள் 500 ஒட்டகத்தை மட்டும் கைப்பற்றி மறு வெற்றியுடன் திரும்பினர்.
எல்லாப் பொருட் சேதத்திற்கும் அவமானங்களுக்கும் காரணமான முஹம்மது நபி (ஸல்) அவர்களைக் கொலை செய்ய வேண்டுமென்று மக்காவைச் சேர்ந்த உமர் இப்னு வஹப் மற்றும் ஸஃப்வான் இப்னு உமைய்யா திட்டம் தீட்டினர்.
“நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்” என்ற இறைவசனம் அருளப்பட்டது.
திருக்குர்ஆன் 8:26, 5:82, அர்ரஹீக் அல்மக்தூம், இப்னு ஹிஷாம்

அல்லாஹ்விடம் உங்களுடைய மன்னிப்பு ஏற்கெனவே எழுதப்படாமலிருந்தால் நீங்கள் போர்க் கைதிகளிடம் ஈட்டுப் பணத்தை எடுத்துக் கொண்டதற்காக உங்களை ஒரு பெரிய வேதனை பிடித்திருக்கும்” என்ற எச்சரிக்கை இறைவசனத்தை அல்லாஹ் அருளினான்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பத்ருப் போரின் வெற்றிக்கு பிறகு மதீனாவிற்குள் நுழையும் போதே மதீனாவைச் சேரந்த பல தலைவர்கள் வாழ்த்துகளைக் கூறிய வண்ணமிருந்தனர். உடல்நிலை சரியில்லாமலிருந்த நபிகளாரின் மகள் ருகையா(ரலி) இறந்தவிட்ட செய்தியும் நபிகளாருக்குக் கிடைத்தது.
நபிகளாரைத் தொடர்ந்து, போர் கைதிகளும் மதீனாவிற்கு அழைத்து வரப்பட்டனர். கைதிகளைப் போர்க்களத்திலிருந்த முஸ்லிம் வீரர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்து, கைதிகளிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள உபதேசித்தார்கள் நபிகளார். கைதிகளிடம் ஈட்டுத் தொகை பெற்றுக் கொண்டு அவர்களை விடுதலை செய்யலாமென்று அபூபக்ர் (ரலி) யோசனை சொன்னார்கள்.
அதனை மறுத்து உமர் (ரலி), “கைதிகளைக் கொலை செய்வதே சரி, இவர்கள் கொடுங்கோலர்கள்” என்று கூறினார். நபிகளார் அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டார்கள். கைதிகளிடம் ஈட்டுத்தொகையாக ஆயிரத்திலிருந்து நான்காயிரம் வெள்ளி நாணயங்கள் வரை நிர்ணயிக்கப்பட்டுப் பெறப்பட்டது. ஈட்டுத் தொகையைக் கொடுக்க இயலாத கைதிகள் எழுத, படிக்கத் தெரியாத மதீனாவைச் சேர்ந்த பத்து சிறுவர்களுக்கு எழுத, படிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டுமென்று உத்தரவிடப்பட்டது. சிறுவர்கள் நன்றாகக் கற்றுக் கொண்டதும் அக்கைதிகளுக்கு விடுதலை வழங்கப்படுமென்றும் வாக்குறுதி அறிவிக்கப்பட்டது.
நபி (ஸல்) அவர்களுடைய மகள் ஸைனபின் கணவர் அபுல் ஆஸும் கைதிகளில் ஒருவராக இருந்தார். நபிகளாரின் மனைவி கதீஜா (ரலி) அவர்களின் மாலை ஈட்டுத்தொகையில் வந்ததைக் கண்ட நபிகளார், மகள் ஸைனப்(ரலி) தனது கணவனை விடுவிக்க, தனது தாயாரின் மாலையை அனுப்பியிருப்பதைப் பார்த்து, தங்களது தோழர்களிடம் அபுல் ஆஸை ஈட்டுத் தொகையின்றி விடுதலை செய்ய அனுமதி கேட்டார்கள். தோழர்கள் அனுமதிக்கவே, மகள் ஸைனப்பை மதீனாவிற்கு அனுப்பிவிட வேண்டுமென்ற நிபந்தனையோடு அபுல் ஆஸ் விடுதலை செய்யப்பட்டார்.
“இஸ்லாமை அழித்தொழிக்க வந்த விஷமிகளை அடக்காமல் விரோதிகளை உயிருடன் சிறைபிடிப்பது எந்த நபிக்கும் தகுதியில்லை; நீங்கள் இவ்வுலகத்தின் நிலையில்லா பொருட்களை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ மறுமையில் உங்கள் நலத்தை மட்டுமே நாடுகிறான். அல்லாஹ் ஆற்றலில் மிகைத்தோனும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
அல்லாஹ்விடம் உங்களுடைய மன்னிப்பு ஏற்கெனவே எழுதப்படாமலிருந்தால் நீங்கள் போர்க் கைதிகளிடம் ஈட்டுப் பணத்தை எடுத்துக் கொண்டதற்காக உங்களை ஒரு பெரிய வேதனை பிடித்திருக்கும்” என்ற எச்சரிக்கை இறைவசனத்தை அல்லாஹ் அருளினான். நபிகள் நாயகம் (ஸல்) மற்றும் அவர்களுடைய தோழர் அபூபக்ர் (ரலி) இருவரும் மனம் வருந்தி அழுது அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு வேண்டினர்.
திருக்குர்ஆன் 8:67, 68, அர்ரஹீக் அல்மக்தூம்

பூமியில் இருக்கின்ற நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகி, அதை வானம் மீண்டும் மழையாகத் தருவதையே, ‘திருப்பித் தரும் வானம்’ என்ற சொல்லால் சுட்டுகிறது, குர்ஆன்.
வானம் அல்லது ஆகாயம் என்பது பூமியின் மேற்புறத்தில் இருந்து குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் விரிந்திருக்கும் அனைத்தையும் உள்ளடக்கிய பரந்த வெளி. இது வளி மண்டலத்தையும் அதற்கு அப்பால் உள்ள விண்வெளியையும் குறிக்கும்.
வானியலில் வானமானது வானக்கோளம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த வெளியில் உள்ள சூரிய, நிலா, நட்சத்திரங்கள் போன்றவற்றின் அசைவுகளை நம்மால் அவதானிக்க முடிகிறது.
படைக்கப்பட்ட காலம் தொட்டு, மனிதன் இந்த உலகத்தைப் பற்றியும், சூரியன், சந்திரன், வானம், நட்சத்திரங்கள் பற்றியும் மிக சொற்பமாகவே அறிந்திருந்தான். 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பூமியிலும், வானங்களிலும் உள்ளவை பற்றி விஞ்ஞான உலகம் பல அடுக்கடுக்கான உண்மைகளை எடுத்து வைத்தது. இதன் மூலம் இந்தப் பிரபஞ்சத்தை இறைவன் வீணாகப் படைக்கவில்லை என்பதை விளங்கிக் கொள்ள நம்மால் முடிந்தது.
“நாம் வானங்களையும், பூமியையும் இவை இரண்டுக்கும் இடையே உள்ளவற்றையும் உண்மையைக் கொண்டே அல்லாது படைக்கவில்லை” (15:85) என்றும்,
“வானத்தையும், பூமியையும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் விளையாட்டாக நாம் படைக்கவில்லை” (21:16) என்றும்,
“வானங்களையும், பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை” (44:38) என்றும்,
“வானத்தையும், பூமியையும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை” (38:27) என்றும் இறைவன் திருமறையில் பல இடங்களில் பறை சாற்றுகிறான்.
இந்த பிரபஞ்சத்தில் படைக்கப்பட்டுள்ள அனைத்தும் மனிதனுக்குப் பயன்படும் வகையில் அமைந்துள்ளன. இவற்றில் சிலவற்றை மனிதன் அறிந்திருக்கிறான். பெரும்பாலானவைகளின் நன்மைகளைப் பற்றி மனிதனால் இன்னமும் உணர்ந்து கொள்ள முடியவில்லை.
“வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின் (அவ்வாறே) செல்லுங்கள். ஆனால் வல்லமை(யும் நம் அதிகாரமும்) இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது” (55:33) என்று திருமறையில் இறைவன் கூறுகின்றான்.
மேற்கண்ட திருக்குர்ஆன் வசனம், மனிதன் விண்வெளிப் பயணம் மேற்கொள்ள முடியும் என்பதை எடுத்துக் கூறுகிறது.
வளி மண்டலத்திற்கு வெளியே உள்ள பிரபஞ்சத்தை ஆராய ஆளுள்ள ராக்கெட்டுகளையும், ஆளில்லாத ராக்கெட்டுகளையும், பயன்படுத்துவது குறித்த ஆராய்ச்சிகள் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொடங்கின. இவற்றில் குறிப்பிடத்தக்கவை அமெரிக்காவின் அப்போலோ திட்டமும், அதில் உள்ளடங்கிய 1969-ம் ஆண்டு முதலில் நிலவில் கால் வைத்த நிகழ்ச்சியும், சோவியத் சோயுஸ் மற்றும் ‘சல்யூட்’ திட்டங்களும் ஆகும். இதைத் தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளும் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டன.
விண்ணில் பறக்க முடியுமா என்பதைக் கனவில்கூட காணமுடிய அந்தக் காலகட்டத்தில், விண்ணில் பறக்க முடியும் என்பதையும், அதற்கென்று ஓர் ஆற்றல்-சக்தி தேவை என்பதையும் கூறிய திருக்குர்ஆன், இறை வேதம் என்பதை மெய்ப்பிக்கிறது.
“அல்லாஹ் எவர்களுக்கு நேர்வழி காண்பிக்க விரும்புகின்றானோ அவர்களுடைய உள்ளத்தை இஸ்லாத்தின் பக்கம் (செல்ல) விரிவாக்குகின்றான். எவர்களை அவர்களுடைய வழிகேட்டிலேயே விட்டுவிட விரும்புகின்றானோ அவர்களுடைய உள்ளத்தை (நிர்ப்பந்தத்தால்) வானத்தில் ஏறுபவ(னி)ன் (உள்ளம்) போல் கஷ்டப்பட்டு சுருங்கும்படியாக்கி விடுகிறான்” (6:125) என்ற இறை வசனம், விண்ணில் மேலேறிச் செல்பவரின் இதயம் சுருங்கும் என்பதை எடுத்துக் கூறுகிறது.
விண்வெளியில் பயணம் மேற்கொள்பவர்களின் இதயம் சுருங்கும்; இறுக்கமான நிலையை அடையும் என்பதை இன்றைக்கு விண்வெளி வீரர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். விண்வெளி வீரர்கள் மட்டுமல்ல, விமானப் பயணிகள் கூட இத்தகைய அனுபவத்தை உணர முடியும்.
வியப்பில் நம்மை ‘அண்ணாந்து’ பார்க்க வைக்கும் இன்னொரு திருக்குர்ஆன் வசனம், “திருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக” (86:11) என்பதாகும்.
இந்த வசனத்திற்கான பொருள் பல நூற்றாண்டுகளாக புரியாமல் இருந்தது. இந்த வசனத்திற்கு எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் நல்ல விளக்கத்தை விஞ்ஞானிகள் அளித்துள்ளனர்.
பூமியில் இருக்கின்ற நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகி, அதை வானம் மீண்டும் மழையாகத் தருவதையே, ‘திருப்பித் தரும் வானம்’ என்ற சொல்லால் சுட்டுகிறது, குர்ஆன்.
சூரியனின் வெப்ப ஆற்றல் காரணமாக கடலிலும், நீர் நிலைகளிலும் இருக்கின்ற நீர் ஆவியாகி மேகங்களாக மாறுகின்றது. இந்த மேகங்களின் மீது குளிர்ந்த காற்று தாக்கும்போது இது குளிர்வடைந்து மழை நீராக மீண்டும் பூமியை வந்தடைகிறது. மழைநீரில் முக்கால் பகுதி கடலிலும், கால் பகுதி நிலத்திலும் பெய்கிறது. நிலத்தில் பெய்யும் மழைநீரில் ஒரு பகுதி நீர் நிலைகளில் சேமிக்கப்படுகிறது. எஞ்சிய நீர் கால்வாய்கள், ஆறுகள் வழியாக கடலில் சென்று கலக்கின்றது. கடல் நீர் மீண்டும் ஆவியாகி மேகங்களாக மாறுகின்றது. இது தொடர்ந்து சுழற்சியாக நடந்து கொண்டிருப்பதால் இதை ‘நீர் சுழற்சி’ என்று அழைக்கிறோம்.
மேலும் பூமியில் இருந்து செயற்கைக்கோள் மூலம் அனுப்பப்படுகின்ற ஒலி மற்றும் ஒளி அலைகளை வானம் மீண்டும் பூமிக்குத் திருப்பி அனுப்புகிறது. இதன் மூலம் இன்றைக்கு நாம் வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கேட்கவும், காணவும் முடிகிறது.
பொதுவாக பொறுமைக்கு பூமியையும், வள்ளல் தன்மைக்கு வானத்தையும் உவமையாகக் கூறுகிறோம். இதைத் ‘திருப்பித் தரும் வானம்’ என்ற அற்புதமான அடைமொழி மூலம் இறைவன் நமக்கு அடையாளப்படுத்தி இருக்கின்றான்.

‘அல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியை தங்குமிடமாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான்’ (திருக்குர்ஆன்-40:64) என்றும் இறைவன் திருமறையில் கூறுகின்றான்.
“நீங்கள் பார்க்கின்ற தூண்கள் எதுவுமின்றி அல்லாஹ்தான் வானங்களை உயர்த்தினான். பிறகு தனது ஆட்சி பீடத்தில் அமர்ந்தான். மேலும் அவன் சூரியனையும், சந்திரனையும் ஒரு நியதிக்குக் கட்டுப்படும்படிச் செய்தான்” (திருக்குர்ஆன்-13:2) என்றும்,
“நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களைப் படைத்துள்ளான்” (திருக்குர்ஆன்-31:10) என்றும் இறைவன் திருமறையில் கூறுகின்றான்.
வானங்களுக்கும் பூமிக்கும் தூண்கள் இருக்கின்றன; ஆனால் அவற்றை நம் கண்களால் பார்க்க முடியாது என்ற கருத்தின் அடிப்படையிலேயே ‘பார்க்கின்ற தூண்களின்றி’ என்ற சொல்லால் இறைவன் சுட்டுகிறான்.
‘தூண்களின்றி வானத்தைப் படைத்தான்’ என்று கூறாமல், ‘நீங்கள் பார்க்கக் கூடிய தூண்களின்றி’ என்ற தேர்ந்தெடுத்த வார்த்தையை இறைவன் தேர்வு செய்திருக்கிறான். பேரண்டத்தின் படைப்பில் கண்களுக்கு புலனாகாத தூண்கள் உள்ளன என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
பூமி உள்ளிட்ட எல்லாக் கோள்களும் தத்தமது பாதைகளை விட்டு விலகாமல் இருப்பதற்கு ஈர்ப்பு விசை என்ற கண்ணுக்குத் தெரியாத தூண்களே காரணம். இந்த அறிவியல் உண்மையைத்தான், ‘நீங்கள் பார்க்கின்ற தூண்கள் இன்றி’ என்று இறைவன் இயம்புகின்றான்.
‘அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான்’ (திருக்குர்ஆன்-2:22) என்றும்,
‘வானத்தைப் பாதுகாக்கப்பட்ட முகடாக்கினோம்’ (திருக்குர்ஆன்-21:32) என்றும்,
‘அல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியை தங்குமிடமாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான்’ (திருக்குர்ஆன்-40:64) என்றும் இறைவன் திருமறையில் கூறுகின்றான்.
இந்த வசனத்தில் வானத்தை ‘முகடு’ என்றும், அதுவும் ‘பாதுகாக்கப்பட்ட முகடு’ என்றும் இறைவன் சொல்கிறான்.
‘முகடு’ என்பதைக் ‘கூரை’ என்றும் பொருள் கொள்ளலாம்.
வானத்தை முகடு, கூரை என்று கூறுவதாக இருந்தால், அது மேலிருந்து வரும் ஆபத்துகளையும், கடும் வெப்பத்தையும் தடுத்து நிறுத்த வேண்டும்.
நமக்கு மேலே வெட்டவெளியாகத் தோன்றும் வானம் எப்படிக் கூரையாக இருக்க முடியும்? என்ற வினா எழலாம்; சிலர் வினா எழுப்பலாம்.
‘வானம் பூமிக்குக் கூரையாக அமைந்துள்ளது’ என்பதை இன்றைய விஞ்ஞான உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது.
சந்திரனில் பகல் நேர வெப்பம் 127 சென்டிகிரேடாக இருக் கிறது. சந்திரனுக்கு அருகில் உள்ள பூமியிலும் இதே போன்ற வெப்பம்தானே இருக்க வேண்டும். ஆனால் சராசரியாக 40 டிகிரி சென்டிகிரேடு அளவு வெப்பமே உள்ளது. இதற்குக் காரணம் பூமியின் மேற்பரப்பில் சூழ்ந்துள்ள வாயுக்கள் நிரம்பிய காற்று மண்டலமே காரணமாகும்.
காற்று மண்டலம் ஐந்து அடுக்குகளாக அமைந்துள்ளது.
முதல் அடுக்கு:
இதன் வரையறை பூமியின் மேற்பரப்பில் இருந்து 12 கிலோ மீட்டர் உயரம் ஆகும். காற்று மண்டலத்தில் உள்ள நைட்ரஜன், ஆக்சிஜன், கரியமில வாயு போன்ற வாயுக்களின் பெரும்பாலான அளவு இந்த அடுக்கிலேயே அடங்கியுள்ளது. இந்த அடுக்கில் வாயுக்கள் அதிகம் உள்ளதால் இது கூரைபோல செயல்படுகிறது. சூரியனில் இருந்து வரும் வெப்பத்தில் மூன்றில் இரு பங்கைக் குறைத்து, சூரியனின் வெப்பம், பூமியை முழுமையாகத் தாக்காமல் தடுக்கிறது. மழையைத் தரும் மேகங்கள் வானில் மிதந்து கொண்டிருப்பதும் இந்த அடுக்கில்தான். ஆகாயத்தில் விமானங்கள் பறந்து செல்வது இந்த முதல் அடுக்கின் மேற்பகுதியில்தான்.
இரண்டாம் அடுக்கு:
இது 12 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் உயரம் வரை பரந்துள்ளது. அபாயகரமான புற ஊதாக் கதிர்களைத் தடுத்து நிறுத்தும் ஓசோன் படலம் இந்த அடுக்கில்தான் அமைந்துள்ளது. இது பூமியில் வாழும் உயிரினங்களைக் காக்கும் கேடயமாக அமைந்துள்ளது.
மூன்றாம் அடுக்கு:
50 கிலோ மீட்டர் முதல் 85 கிலோ மீட்டர் வரை பரவியுள்ள காற்று மண்டலத்தின் பகுதி மூன்றாம் அடுக்கு ஆகும். அவ்வப்போது விண்கற்கள் பூமியை நோக்கி பாய்ந்து வரும்போது இந்த அடுக்கில் காற்றுடன் உரசிக் கொண்டு அவை எரிந்து சாம்பலாகி விடுகின்றன. அதிக எடை கொண்ட விண்கற்கள், மிகுந்த வேகத்தோடு நேரடியாகப் பூமியைத் தாக்கினால் பெரும் சேதம் ஏற்படும். இப்படிப்பட்ட நிலையில், மூன்றாம் அடுக்கில் அவை எரிந்து சாம்பலாகும் நிலையை ஏற்படுத்தி, வானத்தை இறைவன் ஒரு பாதுகாக்கப்பட்ட கூரையாக ஆக்கி இருக்கின்றான்.
நான்காம் அடுக்கு:
இது 85 கிலோ மீட்டர் முதல் 600 கிலோ மீட்டர் வரை பரவி உள்ளது. பூமியில் இருந்து செலுத்தப்படும் செயற்கைக் கோள்கள் இந்த அடுக்கில் இருந்தபடி பூமியைச் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கின்றன.
ஐந்தாம் அடுக்கு:
600 கிலோ மீட்டர் முதல் 10 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பரவி உள்ள இந்த அடுக்கு காற்று மண்டலத்தின் கடைசி எல்லையாகும். இதற்குப் பிறகு வெற்றிடமாக விளங்கும் விண்வெளிப்பகுதி தொடங்கி விடுகிறது.
காற்று மண்டலம் இருப்பதன் காரணமாகவே பூமியில் மழை வளம் ஏற்படுகின்றது. காற்று மண்டலம் இல்லாவிட்டால், பூமி ஒரு பனி மூடிய, உறைந்த உயிரற்ற கோளாக இருந்திருக்கும்.
காற்று மண்டலம் ஒரு பாதுகாப்புப் போர்வையாக இருப்பதால் உயிரினம் வாழ்வதற்கு ஏதுவாகவும், சாதகமாகவும் பூமி அமைந்துள்ளது.
மேற்கண்ட காரணங்களால் திருக்குர்ஆன் கூறுவதைப்போல வானம், பூமிக்குப் பாதுகாக்கப்பட்ட கூரையாக அமைந்துள்ள அற்புதத்தை அறிந்து கொள்ளலாம்.
முஸ்லிம்களின் அபார வெற்றியைக் கண்டு இஸ்லாமை உண்மையான மார்க்கம் என்று அறிந்து கொண்டு பலர் மனம் மாறி இஸ்லாமிற்குத் திரும்பினர்.
'பத்ரு'ப் போரில் முஸ்லிம்களுக்குப் பெரும் வெற்றி கிடைத்தது. இணை வைப்பவர்களுக்குப் பொருட்சேதம் மட்டுமல்லாது பல உயிர்களையும் அவர்கள் இழக்க நேரிட்டது. குறைஷிகளின் மூத்த தலைவர்களும், தளபதிகளும் கொல்லப்பட்டனர். பலர் கைது செய்யப்பட்டனர்.
போர் முடிந்த மூன்றாவது நாள், நபி முஹம்மது (ஸல்) அவர்கள், 'பத்ரு'ப் போரில் இறந்தவர்களின் சடலங்கள் வீசப்பட்ட அசுத்தமான கிணற்றருகில் சென்று, அதில் எறியப்பட்டிருந்தவர்களின் பெயர்களையும், அவர்களின் தந்தையரின் பெயர்களையும் குறிப்பிட்டு, “இன்னாரின் மகன் இன்னாரே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடந்திருந்தால் இன்று உங்களுக்கு இது மகிழ்ச்சியானதொரு நாளாகியிருக்கும். எங்களுடைய இரட்சகன் எங்களுக்கு வாக்களித்த நன்மைகள் உண்மையானதே என்று நாங்கள் கண்டு கொண்டோம். அதேபோல் இரட்சகன் வாக்களித்த தண்டனைகள் உண்மையானதுதான் என்று நீங்கள் கண்டு கொண்டீர்களா?” என்று கூறினார்கள்.
அப்போது நபித் தோழர் உமர்(ரலி) இறைத்தூதரின் அருகிலில் வந்து, “இறைத்தூதர் அவர்களே! உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “என்னுடைய உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நான் கூறுவதைக் கிணற்றில் உள்ள இவர்கள் நன்கு செவியேற்பவர்களாக இருக்கிறார்கள், உங்களுக்கு அது புரியாது” என்று கூறினார்கள்.
மக்காவாசிகள் தோல்வி பற்றிக் கேள்விப்பட்டதும், இறந்தவர்களின் பெயர்களைப் பற்றி அறிந்ததும், அதனை நம்ப மறுத்து, கண்டிப்பாக இது தவறான செய்தியாகத்தான் இருக்க முடியுமென்று சாதித்தனர். அபூஸுஃப்யான் வருவதைக் கண்டு அபூலஹப் அவனிடம் “என்ன நடந்தது?” என்று ஆவலாகக் கேட்டான். நிகழ்ந்தவற்றை அபூஸுஃப்யான் விவரித்தார். “நாம் பலமிழந்துவிடவில்லை மாறாக மிகச் சிறந்த குதிரை வீரர்களைக் கண்டோம். அவர்களை எங்களால் எதிர்க்க முடியவில்லை” என்றவுடன் அபூராஃபி(ரலி) “அவர்கள் வானவர்கள்” என்று சொல்லியதுதான் தாமதம், அபூலஹப் கோபத்தில் அபூராஃபியைத் தாக்கினார். பிறகு மற்றவர்கள் வந்து விலக்கி அபூலஹப்பை அங்கிருந்து அனுப்பினர்.
மதீனாவாசிகளுக்கும் போரைக் குறித்துப் பல செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. நபிகளார் கொலை செய்யப்பட்டார் என்ற தவறான தகவல்களும் பரப்பப்பட்டன. இறுதியில் அவர்கள், முஸ்லிம்களின் வெற்றியைத் தெரிந்து கொண்டு மகிழ்ச்சியின் மிகுதியில் “அல்லாஹு அக்பர், அல்லாஹ் மிகப் பெரியன்” என்று முழங்கினர்.
'பத்ரு'ப் போரில் கிடைத்த பொருட்களைப் பங்கிடுவதில் மக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இப்பிரச்சனைக்குத் தீர்வாக இறைவசனம் அருளப்பட்டது. “போரில் கிடைத்த வெற்றிப்பொருள் (அன்ஃபால்)களைப் பற்றி நபி முஹம்மது (ஸல்) அவர்களிடம் முஸ்லிம்கள் கேட்கின்றனர். அதற்கு நபியே! நீர் கூறுவீராக, ’அன்ஃபால் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் சொந்தமானதாகும். ஆகவே அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; உங்களிடையே ஒழுங்குடன் நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் முஸ்லிம்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்” என்ற இறைவசனத்திற்கு மக்கள் கட்டுப்பட்டனர். போரில் கிடைத்த பொருட்கள் ஒன்று திரட்டப்பட்டு, பத்ர் மைதானத்திலிருந்து வெளியேறி வேறொரு இடத்தில் அப்பொருட்களைப் போரில் கலந்து கொண்ட வீரர்களுக்குச் சட்டப்படி பங்கு வைத்தார்கள். ஐந்தில் ஒரு பாகத்தை அல்லாஹ்விற்காகவென்றும் ஒதுக்கினார்கள்.
முஸ்லிம்களின் அபார வெற்றியைக் கண்டு இஸ்லாமை உண்மையான மார்க்கம் என்று அறிந்து கொண்டு பலர் மனம் மாறி இஸ்லாமிற்குத் திரும்பினர். முஸ்லிம்களாக மாறாவிட்டால் பிற்காலத்தில் தங்களுக்குப் பிரச்சனைவரும் என்று பயந்து மனத்திற்குள் முஸ்லிம்களை வெறுப்பவர்கள் சிலரும் இஸ்லாமைத் தழுவினர்.
ஸஹீஹ் புகாரி 4:64:3976, திருக்குர்ஆன் 8:1
_ ஜெஸிலா பானு.