என் மலர்
ஆன்மிகம்

இஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமைகள்
பெண்கள் சமுதாயம் இந்த நூற்றாண்டில் போராடிப் பெற்ற நியாயமான பல உரிமைகளை, 1,400 ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் எந்தவிதமான போராட்டமும் நடத்தாமலேயே இஸ்லாம் வழங்கி விட்டது.
வழிபாட்டு உரிமையில், சொத்துரிமையில், விவாகரத்து உரிமையில், கல்வி கற்பதில் என அனைத்து உரிமை களையும் வழங்கி அவர்களை கண்ணியப்படுத்திய மார்க்கம் இஸ்லாம்.
இருந்தபோதிலும், ‘பெண்கள் ஐவேளை தொழுவதற்காக பள்ளிவாசலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லையே?’ என்ற கேள்வி எழலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் பள்ளிவாசலுக்குத் தினமும் சென்று தொழுகையில் பங்கேற்றுள்ளனர்.
‘உங்கள் துணைவியர் (பள்ளிவாசலுக்கு செல்ல) அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள்’ என்று நபிகளார் கூறியுள்ளார்கள்.
பெண்கள் பள்ளிவாசலுக்கு வந்து வழிபடலாம்; கூட்டுத் தொழுகையில் பங்கேற்கலாம் என்பதற்கு நபிகளாரின் வாழ்வில் நடந்த நடைமுறைகளே சான்றாகும்.
“பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்லத் தடை இல்லை. ஆனால் அவர்கள் வீட்டில் தொழுவதே சிறந்தது” என்பது நபிகளாரின் கூற்று.
இது பெண்களுக்கு வழங்கப்பட்ட சலுகையே தவிர, உரிமை பறிப்பு அல்ல. ஐவேளை தொழுவதற்கு பெண்கள் பள்ளிவாசலுக்குக் கட்டாயம் வர வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால் அது அவர்களுக்கு சுமையாக இருந்திருக்கும்.
மேலும் இறை இல்லமான கஅபாவில் ஆண்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதைப்போல பெண்களும் நிறைவேற்றுகின்றனர்; தொழுகின்றனர். எனவே பெண்கள் பள்ளிவாசல்களுக்கு வருவதை இஸ்லாம் தடுக்கவில்லை.
ஒரு முஸ்லிம் பெண் பருவம் அடைந்து விட்டால் எல்லா வகையான பொருளாதார உரிமைகளையும் பெறுகிறாள். திருமணத்திற்கு முன்பே பணம், சொத்து ஆகியவற்றைச் சொந்தமாக்கி கொள்ள, முதலீடு செய்ய, அதை அபிவிருத்தி செய்ய, செலவழிக்க உரிமை பெற்றவள் ஆகிறாள். தனது சொத்தை தான் நினைத்த வழிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்னும் உரிமையை பெண்களுக்கு இஸ்லாம் முன்பே வழங்கி விட்டது. ஆனால் இந்த உரிமையை பிரிட்டிஷ் அரசு 1870-ம் ஆண்டில் தான் பெண்களுக்கு வழங்கியது.
நபிகளாரின் மனைவி கதீஜா (ரலி) அவர்கள் ஒரு வெற்றி கரமான வணிகர் என்பதை நாம் அறிவோம். குடும்பப் பணிகள், குழந்தை வளர்ப்பு போன்றவற்றுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், அவளது ஒழுக்கம், கற்பு ஆகியவற்றுக்கு பாதகம் ஏற்படாத வகையிலும் பெண்களின் பொருளட்டும் பணி அமைய வேண்டும்.
பெண்களுக்கு சொத்தில் பங்கு வழங்கிய மார்க்கம் இஸ்லாம் என்பதை எவராலும் மறுக்க முடியாது.
‘பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கும் பாகம் உண்டு. அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு.’ (திருக்குர்ஆன்-4:7) என்ற இறை வசனத்தின் மூலம் பெண்களுக்கான வாரிசுரிமை உறுதி செய்யப்பட்டது.
‘உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு, இரண்டு பெண்களுக்கு கிடைக்கும் பங்கு போன்று கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்’ (திருக்குர்ஆன்-4:11).
இதன் மூலம் சொத்தில் ஆணுக்கு இரண்டு பங்கும், பெண்ணுக்கு ஒரு பங்கும் வழங்க வேண்டும் என்பது இறைக் கட்டளை.
ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதற்கு பெற்றோரின் விருப்பத்தை விட பெண்ணின் விருப்பமே இன்றியமையாதது என்பதை இஸ்லாம் எடுத்தியம்புகிறது.
திருமணத்திற்கு முன்பு கணவன் மணக்கப்போகும் தன் மனைவிக்கு அவன் சக்திக்கேற்ப மணக்கொடை (மஹர்) கொடுக்க வேண்டும். மஹர் தொகையை நிர்ணயம் செய்யும் உரிமை பெண்களுக்கே உண்டு.
உலகில் உள்ள பல மதங்களும் விவாகரத்து செய்வது பாவம் என்று கருதி வந்த காலத்தில், இல்லற வாழ்வில் இணைந்து வாழ முடியாத நிலை வரும்போது மணவிலக்கு (விவாகரத்து) பெறுகின்ற உரிமையை ஆண், பெண் இருவருக்கும் இஸ்லாம் வழங்கியது. மண வாழ்க்கையில் இணைந்தவர்கள், ஒருவர் மற்றொருவருக்கு விருப்பம் இல்லாதவர்களாக இருக்கும் நிலையில், அவர்களை வெறும் சட்டங்களைக் கொண்டு மாத்திரம் வாழ நிர்பந்திப்பது இயற்கைக்கு மாறான செயலாகும்.
இது கடுமையான குற்றங்கள் புரிந்தவர்களுக்குக் கொடுக்கப்படும் தண்டனையை விட கொடுமையானதாகும். அந்த வகையில் பெண்களுக்கும் மணவிலக்கு உரிமையை இஸ்லாம் வழங்கியுள்ளது. இதற்கு ‘குலா’ என்று பெயர். மண விலக்கு பெறும் உரிமையை பெண்களுக்கு வழங்கிய இஸ்லாம், அவர்களுக்கு மறுமணம் செய்கின்ற உரிமையையும் அளித்துள்ளது.
‘கல்வி கற்பது ஒவ்வொரு முஸ்லிமின் கட்டாயக் கடமை ஆகும்’ என்றார்கள். இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானது. அறிவு பெறுதல், சிந்தித்தல், ஆராய்தல் என்பன குறித்து திருக்குர்ஆனில் 800-க்கும் மேற்பட்ட வசனங்கள் உள்ளன. இது தொடர்பான நபிமொழிகளும் உள்ளன. இவை ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவானவை. அந்தக் காலத்திலேயே பெண்கள் அறிவாளிகளாகத் திகழ்ந்தார்கள்.
இதற்கு நபிகளாரின் மனைவி அன்னை ஆயிஷா (ரலி) அவர்களே சிறந்த சான்று. மார்க்கத் தீர்ப்புகளை வழங்குவதிலும், திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளுக்கு விளக்கம் சொல்வதிலும் அவர்கள் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தார்கள். பெண்கள் கல்வி கற்க இஸ்லாம் என்றென்றும் தடை விதித்ததில்லை. படித்து விட்டு பெண்கள் வேலைக்குச் செல்ல போவதில்லை என்ற எண்ணமும், ஏழ்மையுமே முஸ்லிம் பெண்கள், கல்வியில் பின்தங்கியதற்குக் காரணமாகும். ஆனால் இன்று நிலைமை முன்னேற்றமாக மாறி வருகிறது.

Next Story