என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    சிந்தாதிரிப்பேட்டை விண்ணரசி மரியாள் ஆலய ஆண்டு திருவிழா இன்று மாலை தொடங்குகிறது.
    சிந்தாதிரிப்பேட்டை தூய விண்ணரசி மரியாள் ஆலய ஆண்டு திருவிழா இன்று தொடங்குகிறது. மாலை 5 மணிக்கு பெரவலூர் பங்கு தந்தை பீட்டர் ஜெரால்ட் கொடியேற்றுகிறார். தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி சிறப்பு வழிபாடுகள் நடை பெறுகின்றன. 19-ந் தேதி நற்கருணை திருவிழாவும், தேர்பவனியும் நடைபெறுகிறது. 21-ந் தேதி புதுநன்மை விழா நடக்கிறது.

    22-ந் தேதி மாலை திருவிழா நிறைவு திருப்பலி, கொடியிறக்கம் நடைபெருகிறது. இதில் எழும்பூர் திரு இருதய ஆலய தந்தை ராக் சின்னப்பா உள்பட பலர் பங்கேற்கிறார்கள். விழா ஏற்பாடுகளை பங்குதந்தை ஸ்தனிஸ்லாஸ், இணைபங்கு தந்தை குழந்தை மற்றும் பங்கு நிர்வாகிகள் பங்கு மக்கள் செய்து இருக்கிறார்கள்.

    கடவுள் நமக்காக வைத்திருக்கும் திட்டத்தை மீறி நாம் நம்முடைய விருப்பத்துக்காய் கடவுளை இறைஞ்சி மன்றாடும் போது கடவுள் ஒருவேளை அவற்றைத் தருவார். ஆனால் அது ஆசீர்வாதங்களுக்குப் பதிலாக பெரும் சாபத்தைக் கொண்டு வரும் வாய்ப்பும் உண்டு என்பதை எசேக்கியாவின் வாழ்க்கை நமக்கு விளக்குகிறது.
    எசேக்கியா யூதாவின் அரசனாக முடிசூட்டிக் கொண்டபோது அவருக்கு வயது 25. தாவீது மன்னனைப் போல கடவுளுக்கு உகந்த வாழ்க்கையை வாழ்ந்து வந்தார் எசேக்கியா. நாட்டு மக்கள் வேற்று தெய்வங்களையும் சிலைகளையும் வழிபட்டு வந்தனர். மோசே அடையாளத்துக்காய் செய்து வைத்திருந்த வெண்கலப் பாம்பைக் கூட தூபம் காட்டி வழிபட்டு வந்தனர். எசேக்கியா அத்தனை சிலைகளையும் உடைத்து தூண்களைத் தகர்த்து நாட்டை தூய்மையாக்கினார்.

    மீண்டும் உண்மைக் கடவுளை வழிபடும் கூட்டம் அதிகரித்தது. மக்கள் கடவுளை உண்மையுடனும் ஆத்மார்த்தமாகவும் தொழ ஆரம்பித்தனர். காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்த தயக்கம் காட்டவில்லை. எசேக்கியா மன்னன் யூதா நாடு முழுவதும் இந்த மத சீர்திருத்தத்தைச் செய்தார். எசேக்கிய மன்னனுக்கு எதிராக அசீரிய மன்னன் செனகெரிபு எழுந்தான். அவன் ஏற்கனவே இஸ்ரவேலின் பத்து கோத்திர நகரங்களை கைப்பற்றியிருந்தான். இப்போது அவன் எசேக்கியாவுக்கு எதிராக போரிட வந்தான்.

    எசேக்கிய மன்னன் போரைத் தவிர்க்க விரும்பி சிரிய மன்னனுக்கு அளவில்லாத செல்வத்தை அள்ளி வழங்கினான். ஆண்டவரின் இல்லத்தில் இருந்தவற்றை எல்லாம் கூடமன்னனுக்குக் கொடுத்தான். அவனுடைய கர்வம் தீரவில்லை. எந்தக் கடவுளும் என்னோடு போரிட்டு வெற்றி பெறமுடியாது. எல்லா கடவுள்களையும் விடநானே வலிமையானவன் என கர்வம் கொண்டு எசேக்கிய மன்னனை ஏளனம் செய்தான். எசேக்கிய மன்னன் கடவுளின் ஆலயத்துக்குச் சென்று அவரது பாதத்தில் சரணடைந்தார்.

    ஆடைகளைக் கிழித்து தன்னைப் பணிவானவனாக்கினான். கடவுள் மனமிரங்கினார். தன்னை இழிவாய்ப் பேசிய மன்னனுடைய படை வீரர்கள் ஒரு லட்சத்து எண்பதாயிரம் பேரை கடவுளின் தூதர் அன்று இரவே கொன்றார். எசேக்கியேலுக்குப் போர் தேவைப்படவில்லை. சிரிய மன்னனோ நடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தான். தனது கடவுளான நிஸ்ரோக்கின் ஆலயத்தில் சென்று வழிபாடு செய்தான். அப்போது அவனுடைய மகன்களில் இருவர் வந்து அவரை வெட்டிக் கொன்றனர்!

    காலங்கள் கடந்தன. எசேக்கியா மன்னனுக்கு நோய் வந்தது. படுத்த படுக்கையானான். இறைவாக்கினர் எசாயா அவரிடம் வந்து. நீர் இறந்து போய் விடுவீர் என்பது கடவுளின் வாக்கு என்று சொன்னார். எசேக்கியேல் பதறினார். ஆண்டவரே உம் பார்வையில் நல்லவனாய் வாழ்ந்தேனே எனக்கு நோயை தீர்த்து ஆயுளை நீட்டித்துத் தாரும் என கதறி அழுது வேண்டினார். கடவுள் மனமிரங்கினார். மீண்டும் எசாயா வழியாக எசேக்கியேலிடம் பேசினார்.

    கடவுளின் வாக்கு எனக்கு வந்தது. நீர் இன்னும் 15 ஆண்டுகள் வாழ்வீர். இன்றிலிருந்து மூன்றாவது நாளில் கடவுளின் இல்லம் செல்வீர் என்று மன்னனிடம் தெரிவித்தார் எசாயா. அதற்கு என்ன அடையாளம்? எசேக்கியா கேட்டார். நீயே சொல். உனது நிழல் பத்து பாகை முன்னால் போகவேண்டுமா பத்து பாகை பின்னால் வரவேண்டுமா? எசாயா கேட்டார். நிழல் முன்னால் போவது எளிது. பத்து பாகை பின்னால் வரட்டும் எசேக்கியா சொன்னார். எசாயா கடவுளிடம் வேண்டினார். நிழல் பத்து பாகை பின்னால் வந்தது. எசேக்கியா மகிழ்ந்தார். அவருடைய நோய் நீங்கியது. வாழ்க்கை தொடர்ந்தது.

    உமக்குப் பின் உம்முடைய மகன்கள் கைது செய்யப்பட்டு பாபிலோனுக்குக் கொண்டு போகப்படுவார்கள் என்றார் எசாயா. எசேக்கியேல் அதைக் குறித்து அலட்டிக் கொள்ளவில்லை. தனது வாழ்நாளில் நாடு நன்றாய் அமைதியாய் இருந்தால் போதும் என்றே அவர் நினைத்தார். எசேக்கியாவின் வாழ்க்கை முடிந்தது. அவனுக்குப் பின் அவனுடைய மகன் மனாசே அரசரானார்.

    மனாசே அரசனானபோது அவனுக்கு வயது பன்னிரண்டு. கடவுளுக்கு எதிரான ஒரு வாழ்க்கையை அவன் வாழ்ந்தான். நாடு மீண்டும் மிகமிக மோசமான நிலைக்குச் சென்றது. அவனுக்குப் பின் வந்த அவனது மகன் ஆமோனும் கடவுள் வெறுக்கத்தக்க கெட்ட ஆட்சியையே நடத்தினான்.எசேக்கியா ஒருவேளை பதினைந்து ஆண்டுகள் அதிகமாய் வாழவேண்டும் எனஆசைப்படாமல் இருந்திருந்தால் மனாசே பிறந்திருக்கவே மாட்டான்.

    மனாசேவின் ஐம்பத்து ஐந்து ஆண்டு கெட்ட ஆட்சி நடந்திருக்கவே நடந்திருக்காது. அவனுடைய மகன் ஆமோனும் பிறந்திருக்க மாட்டான். உணர்த்தியதும் அதை அப்படியே ஏற்றுக் கொண்டார் பவுல். இக்கூடாரம் பிரிக்கப்படும் நேரம் விரைவில் வரும் என்பது எனக்குத் தெரியும்.

    நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் அதை எனக்குத் தெரிவித்துள்ளார் என்று மனப்பூர்வமாய் ஒத்து கொண்டார். ஆனால் எசேக்கியா அப்படிச் செய்யவில்லை. கடவுள் நமக்காக வைத்திருக்கும் திட்டத்தை மீறி நாம் நம்முடைய விருப்பத்துக்காய் கடவுளை இறைஞ்சி மன்றாடும் போது கடவுள் ஒருவேளை அவற்றைத் தருவார். ஆனால் அது ஆசீர்வாதங்களுக்குப் பதிலாக பெரும் சாபத்தைக் கொண்டு வரும் வாய்ப்பும் உண்டு என்பதை எசேக்கியாவின் வாழ்க்கை நமக்கு விளக்குகிறது.

    பரலோகத் தந்தை தனக்கு அளித்த பணியை நிறைவேற்ற, தாம் யார் என்பதை இந்த உலகிற்கு உணர்த்த தனது முப்பதாவது வயதில் பொதுவாழ்க்கைக்குள் நுழைந்தார் இயேசு
    பரலோகத் தந்தை தனக்கு அளித்த பணியை நிறைவேற்ற, தாம் யார் என்பதை இந்த உலகிற்கு உணர்த்த தனது முப்பதாவது வயதில் பொதுவாழ்க்கைக்குள் நுழைந்தார் இயேசு. அடுத்து வந்த மூன்று ஆண்டுகளும் பூமியின் வரலாற்றைப் புரட்டிப்போட்டவை.

    திருமுழுக்கு பெற்றார்

    பாவங்களை கைவிட்டு மக்கள் மனம் திரும்பவேண்டும் என்று யூதமக்களை கேட்டுகொண்ட யோவான் தீர்க்கதரிசி, இஸ்ரவேல் பாலை நிலத்தில் வாழ்ந்து வந்தார். மனம் திருந்தி வந்த மக்களுக்கு யோர்தான் நதியில் திருமுழுக்கு கொடுத்தார். அப்போது இயேசுவும் யோவானைத் தேடிவந்தார்.

    இயேசு தன்னை நோக்கி வருவதைக் கண்ட யோவான், “இதோ, உலகத்தின் பாவத்தை போக்குவதற்கு கடவுளால் அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டி. இவர் யாரென்று இஸ்ரவேல் மக்களுக்கு வெளிப்பட வேண்டும் என்பதற்காகவே நான் இவருக்கு தண்ணீரினால் திருமுழுக்கு கொடுக்க வந்தேன். இவரோ தூய ஆவியால் உங்களுக்கு திரு முழுக்கு தருவார். இவரது காலணிகளின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் தகுதியற்றவன்” என்றார்.

    அப்போது, கடவுளின் தூய ஆவி புறாவைப் போல் வானிலிருந்து இயேசுவின் மீது இறங்கியது.

    ‘என் அன்புக்குரிய மகன் இவரே’ என்ற குரல் வானிலிருந்து ஒலித்தது. இதன்பிறகு இயேசு போதனைகளையும், அற்புதங்களையும் செய்யத் தொடங்கினார்.

    அவரது போதனைகளை கேட்டவர்கள் படிப்பறிவில்லாத சாதாரண பாமர மக்கள், மீன்பிடிப்பவர்கள். அவர்கள் புரிந்து கொள்ளும்படி உவமைகள் வாயிலாக இறையரசை பரப்பினார். மக்களிடம் மனமாற்றத்தை உண்டாக்கினார்.

    அழைப்பு விடுத்த இயேசு

    இயேசுவின் போதனைகளையும், அவரது அற்புதங் களையும் பார்த்து அவரிடம் சீடராக சேர பலர் அவரை பின்தொடர்ந்தார்கள். ஆனால் அந்தப் பாதை சுகமான பதவிகளைக் கொடுப்பதல்ல, கடுமையான முட்களும், பாறைகளும் நிறைந்தது என்பதை உணர்ந்து பலர் விலகி ஓடினார்கள். மாறாக தன்னை நெருங்கி தன் இறைத்தன்மையை முழுமையாக உணர்ந்தவர்களை மட்டுமே இயேசு, சீடர்களாக தேர்ந்தெடுத்தார்.

    இயேசுவுக்கு திருமுழுக்கு கொடுத்த யோவான் கைதுசெய்யப்பட்டு கொலை செய்யப்படுவதற்கு முன்பு இயேசுவைப் பார்த்து.. ‘இதோ, கடவுளுடைய ஆட்டுக் குட்டி. இனி அவரைப் பின்தொடர்ந்து செல்லுங்கள்’ என்றார். அவர் அப்படிச் சொன்னதும் அந்தச் சீடர்கள் இருவரும், இயேசுவுக்குப் பின்னால் போனார்கள்.

    அவர்கள் பின்னால் வருவதை இயேசு திரும்பிப் பார்த்து, ‘உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்றார்.

    அப்போது அவர்கள், ‘ரபீ (இதற்கு ‘போதகரே’ என்று அர்த்தம்), நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள்.

    அதற்கு அவர், ‘நீங்களே வந்து பாருங்கள்’ என்றார்.

    அவர்களும் அவர் தங்கியிருந்த இடத்தைப் போய்ப் பார்த்தார்கள், அன்று முழுவதும் அவருடன் தங்கினார்கள்; அன்று இயேசுவின் இறைத்தன்மையை கண்டுகொண்டார்கள்.

    யோவான் சொன்னதைக் கேட்டு, இயேசுவின் அழைப்பை ஏற்று, அவர் தங்கியிருந்த இடத்திற்குப் போன இருவரில் ஒருவர் சீமோன். இன்னொருவர் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா. அவர் முதலில் போய், தன்னுடைய சொந்த சகோதரனாகிய சீமோனைப் பார்த்து, ‘நாங்கள் மேசியாவை கண்டுகொண்டோம்’ என்றார். (‘மேசியா’ என்றால் ‘கிறிஸ்து’ என்பது பொருள்). பிறகு சீமோனை இயேசுவிடம் அழைத்துச் சென்றார்கள்.

    இயேசு அவரைப் பார்த்தபோது, ‘நீ யோவானுடைய மகன் சீமோன்; இனி ‘கேபா’ என அழைக்கப்படுவாய்’ என்றார். (‘கேபா’ என்ற வார்த்தைக்கு ‘பேதுரு’ என்பது பொருள்).

    இயேசு மறுநாள் கலிலேயாவுக்கு செல்ல விரும்பினார். அப்போது பிலிப்புவைக் கண்டு, ‘என்னைப் பின்பற்றி வா’ என்றார். அந்திரேயாவையும், பேதுருவையும் போலவே இந்த பிலிப்புவும் பெத்சாயிதா நகரைச் சேர்ந்தவர். இப்படி இயேசுவால் அழைக்கப்பட்டவர்களும், தாமாகவே அவரை பின்தொடந்த மானசீகச் சீடர்களும் நூற்றுக்கும் அதிகமாக இருந்தார்கள்.

    யார் அந்த பன்னிருவர்?

    கெத்சாமனே என்ற மலையுச்சிக்கு சென்ற இயேசு இரவு முழுவதும் விழித்திருந்து அங்கே ஜெபம் செய்துவிட்டு, தம்முடைய சீடர்களிலிருந்து பன்னிரண்டு பேரை மட்டுமே தேர்ந்தெடுத்தார். அவர்களுக்கு ‘அப்போஸ்தலர்கள்’ என்று பெயரிட்டார். அவர்கள்...

    1. சீமோன் (இவருக்கு பேதுரு என்று பெயரிட்டார்), 2. சீமோனின் சகோதரன் அந்திரேயா; 3. யாக்கோபு, 4. யோவான், 5. பிலிப்பு, 6. பர்த்தொலொமேயு, 7. மத்தேயு, 8. தோமா, 9. அல்பேயுவின் மகன் யாக்கோபு, 10. பக்தி வைராக்கியமிக்கவன் என்றழைக்கப்பட்ட சீமோன், 11. யாக்கோபின் மகன் யூதாஸ், 12. துரோகியாக மாறிய யூதாஸ் இஸ்காரியோத்து என்பவர்களே.

    அடுத்து வந்த இரண்டு ஆண்டுகளில் அந்த பன்னிரண்டு பேரோடும் நிறைய நேரம் செலவிட்டார்; சொல்லாலும், செயலாலும் அவர்களுக்கு நிறைய கற்றுக் கொடுத்தார். இயேசு, ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விதத்தில் ஆலோசனைகளை கொடுத்தார், ஊழியத்தில் முழுமையான பயிற்சியையும் கொடுத்தார்.

    தாம் மரித்து பரலோகத்திற்குப் சென்றபின் அவர்களுக்குக் கொடுக்கப்பட இருந்த மிக முக்கியமான பொறுப்புக்காகவே அவர் களைத் தயார்படுத்தினார். கடவுள் மீது நமக்கு விருப்பம் இருக்கலாம். அபிமானம் இருக்கலாம். ஆனால் நீங்கள் அவரது பக்தனாக இருக்க அல்ல, அவரது சீடனாக இருக்கவே உங்களை அழைக்கிறார். அதற்கு நீங்கள் தயாரா...? என்பதை முடிவு செய்து வாழுங்கள்.

    -மிராண்டாஸ், சென்னை.
    கும்பகோணம் தூய அலங்கார அன்னை ஆலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேர்பவனி 14-ந்தேதி நடக்கிறது.
    கும்பகோணம் தூய அலங்கார அன்னை ஆலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி புதியதாக 6 லட்சம் மதிப்பில் 60 அடி உயரமுள்ள 1 அடி சுற்றளவு கொண்ட பித்தளை கொடிமரம் செய்யப்பட்டு 6 அடி பீடத்தில் புதியதாக நிறுவப்பட்டுள்ளது.

    தூய அலங்கார அன்னை கொடியை கிறிஸ்தவ பேண்ட் இசைக்குழுவினர் ஊர்வலமாக எடுத்துக் கொண்டு காமராஜர் சாலையில் ரயில்நிலையம் முதல் மகாமகக்குளம் மணிக்கூண்டு வரை சென்று வந்தனர். புனித வேளாங்கண்ணி மாதா ஆலய அதிபர் பிரபாகர் கொடியேற்றி திருப்பலி செய்தார்.

    பின்னர்மரியாள் இரக்கத்தின் அன்னை என்ற தலைப்பில் இறைமறை உறையாற்றினார். இதில் பங்கு தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்கு பேரவை, பங்கு மக்கள் மற்றும் கும்பகோணத்தைச் சேர்ந்த ஏராளாமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    வருகிற 13-ந்தேதி வரை திருப்பலியும் மற்றும் மரியாள் பற்றிய மறைஉரையும் நடைபெறுகிறது. ஆண்டு பெருவிழாவின் சிறப்பு அம்சமாக வருகிற 14-ம் தேதி தூய அலங்கார அன்னையின் ஆடம்பர தேர்பவனி நடக்கிறது.
    எசேக்கியா ஒரு நல்ல ராஜா. இவரைப்பற்றி இந்த குறிப்பில் பார்க்கலாம்.
    யெகோவாவிடம் இந்த நபர் எதற்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறார் என்று உனக்குத் தெரியுமா? யெகோவாவின் பலிபீடத்திற்கு முன் இந்தக் கடிதங்களை இவர் ஏன் வைத்திருக்கிறார்? இவருடைய பெயர் எசேக்கியா. இவர் இஸ்ரவேலின் இரண்டு கோத்திர தெற்கு ராஜ்யத்தின் ராஜா. இவர் பயங்கரமான பிரச்சினையில் சிக்கியிருக்கிறார். ஏன்?

    ஏனென்றால் அசீரியப் படைகள் 10 கோத்திர வடக்கு ராஜ்யத்தை ஏற்கெனவே அழித்து விட்டன. ஜனங்கள் மிக மோசமானவர்களாக இருந்ததால் யெகோவா அதை அனுமதித்தார். இப்போது அசீரியப் படைகள் இந்த இரண்டு கோத்திர ராஜ்யத்துடன் போர் செய்ய வந்திருக்கின்றன.

    அசீரிய ராஜா இப்போதுதான் எசேக்கியா ராஜாவுக்குக் கடிதங்களை அனுப்பியிருக்கிறார். அந்தக் கடிதங்களையே கடவுளுக்கு முன்பாக அவர் வைத்திருக்கிறார். அந்தக் கடிதங்களில் யெகோவாவைப் பற்றி கேலியாக எழுதப்பட்டிருக்கிறது, எசேக்கியா சரணடையும்படியும் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் அவர் யெகோவாவை நோக்கி: ‘யெகோவா தேவனே, அசீரிய ராஜாவிடமிருந்து எங்களைக் காப்பாற்றும், அப்போது நீர் ஒருவரே கடவுள் என்று எல்லா தேசத்தாரும் தெரிந்துகொள்வார்கள்’ என்று ஜெபிக்கிறார். எசேக்கியாவின் ஜெபத்திற்கு யெகோவா பதிலளிப்பாரா?

    எசேக்கியா ஒரு நல்ல ராஜா. இஸ்ரவேலின் 10 கோத்திர ராஜ்யத்தின் கெட்ட ராஜாக்களைப் போன்றவர் அல்ல. தன்னுடைய கெட்ட அப்பாவான ஆகாஸ் ராஜாவைப் போன்றவரும் அல்ல. யெகோவாவின் சட்டங்கள் எல்லாவற்றிற்கும் எசேக்கியா கவனமாக கீழ்ப்படிந்திருக்கிறார். அதனால், எசேக்கியா ஜெபித்து முடித்ததும் ஏசாயா தீர்க்கதரிசி மூலம் யெகோவா ஒரு செய்தியை அவருக்கு அனுப்புகிறார், அதாவது: ‘அசீரிய ராஜா எருசலேமுக்குள் வர மாட்டான். அவனுடைய படைவீரர்களில் ஒருவனும் எருசலேமின் அருகில்கூட வர மாட்டார்கள். நகரத்தின் மீது ஒரு அம்பையும் எய்ய மாட்டார்கள்!’

    இங்குள்ள படத்தைப் பார். செத்துப் போயிருக்கும் இந்தப் படைவீரர்கள் யார் என்று உனக்குத் தெரியுமா? இவர்கள் அசீரியர்கள். யெகோவா ஒரு தேவதூதனை அனுப்பினார், அந்தத் தேவதூதன் ஒரே ராத்திரியில் 1,85,000 அசீரிய படைவீரர்களைக் கொன்று போட்டார். அதனால் அசீரிய ராஜா போர் செய்யாமல் தன் தேசத்துக்கே திரும்பிப் போய் விட்டான்.

    இப்படியாக, இரண்டு கோத்திர ராஜ்யம் பாதுகாக்கப்பட்டது, சிறிது காலத்திற்கு ஜனங்கள் சமாதானமாக வாழ்ந்தார்கள், ஆனால் எசேக்கியா இறந்த பின்பு அவருடைய மகன் மனாசே ராஜாவாக ஆகிறார்.
    நாட்டார்குளத்தில் இருந்து அன்னை வேளாங்கன்னி கோயிலுக்கு நடைபயணம் பக்தர்கள் புறப்பட்டனர்.
    செய்துங்கநல்லூர் அருகே உள்ள நாட்டார் குளத்தில் இருந்து ஆண்டு தோறும் ஆகஸ்டு 15-ந் தேதி நடைபயணமாக பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு செல்வது வழக்கம். இதற்காக இந்த ஆண்டு நண்பர்கள் சங்கத்தின் சார்பாக 41 நாள்கள் பக்தர்கள் ஊதா கலர் உடை அணிந்து விரதம் இருந்தனர்.

    இதற்காக திருப்பலி தினந்தோறும் நாட்டார்குளம் சூசையப்பர் ஆலயத்தில் நடை பெற்றது. இவர்களை வழியனுப்பும் விதமாக சிறப்பு வழிபாடு நாட்டார்குளத்தில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கெபியில் வைத்து நடந்தது. காலையில் சிறப்பு திருப்பலி நடந்தது. மாலையில் அசன பண்டிகை நடந்தது. இரவு 11 நடைபயணம் செல்லும் பக்தர்களை வழியனுப்பும் சிறப்பு ஜெபம் நடந்தது.

    நாட்டார்குளம் பங்கு தந்தை இருதயராஜா ஜெபம் நடத்தினர். வேதியர் மரியசிங்கம் மற்றும் நண்பர்கள் சங்கத்தினர் கலந்துகொண்டனர். இங்கிருந்து நடைபயணமாக செல்லும் பக்தர்கள் வருகிற 15- ந்தேதி வேளாங்கண்ணி ஆலயத்தில் நடைபெறும் சிறப்பு திருப்பலியில் கலந்துகொள்வார்கள்.
    திருச்சிமாவட்டம் தொட்டியம் தூய ஜெயராக்கினி மாதா ஆலய திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
    திருச்சிமாவட்டம் தொட்டியம் தூய ஜெயராக்கினி மாதா ஆலய திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியாக பங்குதந்தைகள் சென்னை போஸ்கோ, பாடாலூர் ஜோசப்ஆரோக்கியராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறிய தேர்பவனி மற்றும் திருப்பலிகளை நடத்தினர். தொடர்ந்து திருவிழாவில் வருகிற 13-ந்தேதி வரை நவநாள் கொண்டாட்டமாக தினமும் திருப்பலியும், சொற்பொழிவும் சிறிய தேர் பவனியும் நடைபெறுகிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சிறப்பு திருப்பலி மற்றும் ஆடம்பர தேர்பவனி வருகிற 14-ந்தேதி நடக்கிறது.

    திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை எல்.குழந்தைசாமி, உதவி பங்கு தந்தை எஸ். ஸ்டீபன்ஜோசப் மற்றும் ஆலய பங்குமக்கள், அருட் சகோதரிகள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
    காரைக்காலில் உள்ள தூயதேற்றரவு அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    காரைக்காலில் உள்ள பிரசித்தி பெற்ற மும்மத வழிபாட்டுத் தலங்களுள் தூயதேற்றரவு அன்னை ஆலயமும் ஒன்று. காரைக்கால், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளை பிரெஞ்சுக் காரர்கள் ஆட்சி செய்தபோது சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஆலயத்தில் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து மாதா கொடி ஆலயத்தை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் புதுச்சேரி பல்கலைக்கழக ஆசிய கிறிஸ்தவக் கல்வி பிரிவு தலைவர் ஜோனாஸ் அடிகளார் கொடியை ஏற்றி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஆலய பங்குத்தந்தை அந்தோணி லூர்துராஜ், தூயமரியன்னை மேல்நிலைப்பள்ளி முதல்வர் அந்தோணிராஜ் மற்றும் துணை பங்கு குருக்கள், அருட்சகோதரிகள் உள்பட திரளான பங்கு மக்கள் கலந்துகொண்டனர்.

    தொடர்ந்து தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் ஜெபவழிபாடு மற்றும் சிறியதேர் பவனியும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 15-ந் தேதி காலை 7.30 மணிக்கு திருவிழா கூட்டுத் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு மின் அலங்கார பெரிய தேர் பவனியும் நடைபெறுகிறது. மறுநாள் (16-ந்தேதி) காலை 6.30 மணிக்கு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள அதிசய பனிமாதா ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தங்க தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
    நெல்லை மாவட்டம் வள்ளியூர் தெற்கு கள்ளிகுளத்தில் பரிசுத்த அதிசய பனிமாதா ஆலய திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஆண்டுக்கான 131-வது ஆண்டு திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் திருயாத்திரையுடன் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை மறையுரையுடன் நற்கருணை ஆசிரும் நடந்தது.

    8-ம் நாள் திருவிழா அன்று மாலையில் தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் நற்கருணை பவனி நடந்தது. பங்குத்தந்தை ஜெரால்ட் ரவி மறையுரை வழங்கினார்.

    9-ம் திருவிழா அன்று நள்ளிரவு 12 மணிக்கு பரிசுத்த அதிசய பனிமாதா தங்கத்தேரில் எழுந்தருளி, தங்க தேரோட்டம் நடந்தது. தேர் திரளான மக்கள் வெள்ளத்தில் வீதி உலா வந்தது.



    பின்பு தக்கலை மறை மாவட்ட பிஷப் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. 10-ம் திருவிழாவான நேற்று கூட்டுத் திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜான்சன்ராஜ், உதவி பங்குத்தந்தை ராயப்பன், தர்மகர்த்தாவும் தெற்குகள்ளிகுளம் பஞ்சாயத்து தலைவருமான ஆனந்தராஜா மற்றும் தெற்கு கள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகமை சங்க நிர்வாககுழு உறுப்பினர்கள், இறை மக்கள் செய்து இருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வள்ளியூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலாஜி தலைமையில் போலீஸ் அதிகாரிகள் செய்திருந்தனர்.
    பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரின் அற்புத சுனையில் இருந்து கொண்டு வரப்படும் புனித நீரானது, வில்லியனூர் மாதா குளத்தில் ஊற்றும் விழா வருகிற 6-ந் தேதி (சனிக்கிழமை) மாலை நடக்கிறது.
    புதுவை வில்லியனூரில் அமைந்துள்ள தூய லூர்து அன்னை ஆலயம் சுமார் 139 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும். தமிழர் பண்பாட்டின்படி, ஆலயத்துக்கு முன்குளம் அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பாகும். இயற்கையாக அமைந்துள்ள இந்த மாதா குளத்தின் கரைகள் 1924-ம் ஆண்டு கட்டப்பட்டன.

    1858-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில், மரியன்னை, பெர்னத் என்ற சிறுமிக்கு காட்சி கொடுத்த இடத்தில் அற்புதமாக தோன்றிய நீரூற்றில் இருந்து கொண்டு வரப்படும் புனித நீரானது மந்திரிக்கப்பட்டு, ஆண்டு தோறும் வில்லியனூர் மாதா குளத்தில் கலக்கப்பட்டு வருகிறது.

    இத்தகைய புதுமை நிறைந்த மாதா குளத்தில் பிரான்ஸ் நாட்டில் இருந்து கொண்டு வரப்படும் புனித தீர்த்தம் இந்த ஆண்டும் மந்திரித்து நாளை கலக்கப்பட உள்ளது.

    இதனையொட்டி வில்லியனூர் மாதா திருத்தலத்தில் சனிக்கிழமை காலை 5.30 மணிக்கு முதல் திருப்பலியும், அதனை தொடர்ந்து மாதா குளத்தை சுற்றி சிறிய தேர் பவனியும் நடைபெற உள்ளன. காலை 6.45 மற்றும் 11.30 மணிக்கும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற உள்ளன.

    தொடர்ந்து மாலை 6 மணிக்கு செங்கல்பட்டு மறை மாவட்ட முதன்மை குரு பாக்கிய ரெஜிஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலியும், பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரின் அற்புத நீரூற்றில் இருந்து கொண்டு வரப்படும் புனித நீரானது வில்லியனூர் மாதா குளத்தில் ஊற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதனைத்தொடர்ந்து இரவு 7.30 மணியளவில் மாதாவின் ஆடம்பர தேர் பவனி வீதிகளில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அன்னதானமும், வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பங்குத் தந்தை ரிச்சர்ட் தலைமையில் அருட்பணி சதீஷ்குமார், பங்குப் பேரவை, இளைஞர்கள் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.
    சேலத்தில் பூரண சுவிசே‌ஷ ஆலயத்தில் சுவிசே‌ஷ கூட்டங்கள் 4 நாட்கள் நடக்கிறது.
    சேலம் ஜங்சன் தர்மநகர் 5-வது வீதி வடபுறம் உள்ள பூரண சுவிசே‌ஷ ஆலயத்தில் நேற்று மாலை முதல் வருகிற 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை சுவிசே‌ஷ கூட்டங்கள் நடைபெற உள்ளது.

    இன்று (5-ந்தேதி) மாலை 6.30 மணியளவிலும், 6-ந்தேதி, 7-ந்தேதி ஆகிய இருதினங்களில் காலை 9.30 மணி மற்றும் மாலை 6.30 மணியளவிலும் கூட்டம் தொடங்குகிறது. இந்த கூட்டங்களில் வியாதியஸ்தர்களுக்காகவும், பேய், பிசாசு பிடித்தவர் களுக்காகவும் விசேஷித்த ஜெபம் செய்யப்படும்.

    இதில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த தகவலை சேலம் பூரண சுவிசே‌ஷ ஆலயத்தின் பாஸ்டர் பி.டேவிட் தெரிவித்துள்ளார்.
    மானாமதுரை அருகே அருளானந்தபுரத்தில் தூய அன்னாள் பெரு விழாவில் தேர்பவனி நடந்தது.
    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர் பங்கு தளத்தில் உள்ள அருளா னந்தபுரம் தூய அன்னாள் ஆலய 151-வது ஆண்டு பெருவிழா கடந்த 25-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தினமும் நவ நாள் பூஜை, திருப்பலி நடந்தது.

    அதைத்தொடர்ந்து திருவிழா தேர்பவனி நற்கருணை பெருவிழா, புனித அன்னாளின் சம அன்னதானம் நிகழ்ச்சிகள் நடந்தன.

    தேவகோட்டை ஆனந்தா கல்லூரி துணை முதல்வர் ஜோசப்ஜான் கென்னடி சிறப்பு திருப்பலிபூஜையை நடத்தினார். விழா ஏற்பாடுகளை இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் திருத்தல அருட்பணியாளர் ரெமிஜியஸ் மற்றும் அருளானந்தபுரம் கிராம மக்கள் செய்து இருந்தனர்.
    ×