என் மலர்
ஆன்மிகம்

வில்லியனூர் மாதா குளத்தில் புனித தீர்த்தம் ஊற்றும் விழா நாளை நடக்கிறது
பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரின் அற்புத சுனையில் இருந்து கொண்டு வரப்படும் புனித நீரானது, வில்லியனூர் மாதா குளத்தில் ஊற்றும் விழா வருகிற 6-ந் தேதி (சனிக்கிழமை) மாலை நடக்கிறது.
புதுவை வில்லியனூரில் அமைந்துள்ள தூய லூர்து அன்னை ஆலயம் சுமார் 139 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும். தமிழர் பண்பாட்டின்படி, ஆலயத்துக்கு முன்குளம் அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பாகும். இயற்கையாக அமைந்துள்ள இந்த மாதா குளத்தின் கரைகள் 1924-ம் ஆண்டு கட்டப்பட்டன.
1858-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில், மரியன்னை, பெர்னத் என்ற சிறுமிக்கு காட்சி கொடுத்த இடத்தில் அற்புதமாக தோன்றிய நீரூற்றில் இருந்து கொண்டு வரப்படும் புனித நீரானது மந்திரிக்கப்பட்டு, ஆண்டு தோறும் வில்லியனூர் மாதா குளத்தில் கலக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய புதுமை நிறைந்த மாதா குளத்தில் பிரான்ஸ் நாட்டில் இருந்து கொண்டு வரப்படும் புனித தீர்த்தம் இந்த ஆண்டும் மந்திரித்து நாளை கலக்கப்பட உள்ளது.
இதனையொட்டி வில்லியனூர் மாதா திருத்தலத்தில் சனிக்கிழமை காலை 5.30 மணிக்கு முதல் திருப்பலியும், அதனை தொடர்ந்து மாதா குளத்தை சுற்றி சிறிய தேர் பவனியும் நடைபெற உள்ளன. காலை 6.45 மற்றும் 11.30 மணிக்கும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற உள்ளன.
தொடர்ந்து மாலை 6 மணிக்கு செங்கல்பட்டு மறை மாவட்ட முதன்மை குரு பாக்கிய ரெஜிஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலியும், பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரின் அற்புத நீரூற்றில் இருந்து கொண்டு வரப்படும் புனித நீரானது வில்லியனூர் மாதா குளத்தில் ஊற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
இதனைத்தொடர்ந்து இரவு 7.30 மணியளவில் மாதாவின் ஆடம்பர தேர் பவனி வீதிகளில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அன்னதானமும், வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பங்குத் தந்தை ரிச்சர்ட் தலைமையில் அருட்பணி சதீஷ்குமார், பங்குப் பேரவை, இளைஞர்கள் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.

Next Story