search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    மீண்டும் இரட்டை சதமடித்த ஜெய்ஸ்வால்: இங்கிலாந்து வெற்றிபெற 557 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
    X

    மீண்டும் இரட்டை சதமடித்த ஜெய்ஸ்வால்: இங்கிலாந்து வெற்றிபெற 557 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    • 2வது இன்னிங்சில் இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் பொறுப்புடன் ஆடி இரட்டை சதமடித்தார்.
    • சர்ப்ராஸ் கான் அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார்.

    ராஜ்கோட்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 445 ரன்களை குவித்தது. ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சதம் விளாசி அசத்தினர்.

    அடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் டக்கெட் 153 ரன்களுக்கு அவுட்டானார்.

    இதையடுத்து, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 196 ரன் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் சதமடித்தார். சுப்மன் கில் 65 ரன்னுடன் களத்தில் இருந்தார். இதன்மூலம் இந்திய அணி இங்கிலாந்தை விட 322 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுப்மன் கில் 91 ரன்னில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு இணைந்த சுப்மன் கில், குல்தீப் யாதவ் ஜோடி 55 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஜெய்ஸ்வால் களமிறங்கினார். குல்தீப் யாதவ் 27 ரன்னில் அவுட்டானார்.

    ஜெய்ஸ்வாலுடன் சர்பராஸ் கான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ஆடியதால் ரன் வேகம் அதிகரித்தது. சர்ப்ராஸ் கான் அரை சதம் கடந்தார்.

    தொடர்ந்து ஆடிய ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்தார். அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய அணி 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 430 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. ஜெய்ஸ்வால் 214 ரன்னும், சர்ப்ராஸ் கான் 68 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு172 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் இங்கிலாந்து வெற்றிபெற 557 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

    Next Story
    ×