search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 - விராட் கோலி விளையாடவில்லை: ராகுல் டிராவிட்
    X

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 - விராட் கோலி விளையாடவில்லை: ராகுல் டிராவிட்

    • இரு அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.
    • ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி நாளை (ஜனவரி 11) நடைபெறவுள்ளது.

    இந்த தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இடம்பிடித்துள்ளனர். கடந்த 2022 டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இந்திய டி20 அணியில் இடம்பெற்று இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.




    இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியில் விராட் கோலி விளையாட மாட்டார் என இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்து இருக்கிறார். தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி முதலாவது டி20 போட்டியில் விளையாட மாட்டார்.

    ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு மற்றும் மூன்றாவது டி20 போட்டிகளில் விராட் கோலி விளையாடுவார். இந்திய அணிக்கு ரோகித் சர்மாவுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் துவக்க வீரராக களமிறங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×