என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ரஞ்சி கோப்பையில் தெண்டுல்கர், யுவராஜ் சாதனையை முறியடித்த 12 வயது சிறுவன்
- ரஞ்சி கோப்பையில் அறிமுகமான இளம் வயது வீரர் என்ற சாதனை படைத்தார் வைபவ் சூர்யவன்ஷி.
- மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமாகி உள்ள அவருக்கு 12 வயதாகிறது.
புதுடெல்லி:
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் அறிமுகமான இளம் வயது வீரர் என்ற சாதனையை பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமாகி உள்ள அவருக்கு 12 வயதாகிறது.
இதற்கு முன்பு யுவராஜ் சிங் 15 வயது 57 நாட்களில் விளையாடி இருந்ததே சாதனையாக இருந்தது. பீகார் சிறுவன் சூர்யவன்ஷி அதை முறியடித்துள்ளார்.
கிரிக்கெட்டின் சகாப்தமான சச்சின் தெண்டுல்கர் 15 வயது 230 நாட்களில் ரஞ்சி கோப்பையில் அறிமுகமாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






