என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
25 ரன்களில் நெதர்லாந்தை வீழ்த்திய வங்காளதேசம்
- தன்சித் ஹாசன் 35 ரன்களை சேர்த்தார்.
- ஆர்யன் தத், பால் வேன் மெக்ரீன் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் வங்காளதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்துவீச முடிவு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் கேப்டன் நஜ்முல் மற்றும் லிட்டன் தாஸ் தலா 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். துவக்க வீரராக களமிறங்கிய தன்சித் ஹாசன் 35 ரன்களையும், ஷகிப் அல் ஹாசன் 64 ரன்களையும் குவித்தார்.
அடுத்து வந்த வீரர்கள் இரட்டை இலக்க ரன்களை அடிக்க வங்காளதேசம் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை சேர்த்தது. நெதர்லாந்து சார்பில் ஆர்யன் தத் மற்றும் பால் வேன் மெக்ரீன் தலா 2 விக்கெட்டுகளையும் டிம் பிரிங்கில் 1 விக்கெட் வீழ்த்தினர்.
160 ரன்களை துரத்திய நெதர்லாந்து அணிக்கு சுமாரான துவக்கம் கிடைத்தது. அந்த அணியின் மைக்கல் லெவிட் மற்றும் மேக்ஸ் ஒ தவுத் முறையே 18 மற்றும் 12 ரன்களையும் சேர்த்தனர். அடுத்து வந்த விக்ரம்ஜித் சிங் சைபிராண்ட் முறையே 26 மற்றும் 33 ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் தன் பங்கிற்கு 25 ரன்களை சேர்த்தார்.
போட்டி முடிவில் நெதர்லாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் வங்காளதேசம் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.