search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஆசியாவில் 10,000 ரன்கள் கடந்த 8வது வீரர்  - சாதனை படைத்த ரோகித் சர்மா
    X

    ரோகித் சர்மா

    ஆசியாவில் 10,000 ரன்கள் கடந்த 8வது வீரர் - சாதனை படைத்த ரோகித் சர்மா

    • முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 269 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 248 ரன்களில் ஆல் அவுட்டானது.

    சென்னை:

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

    முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 269 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 47 ரன்கள் எடுத்தார்.

    அடுத்து ஆடிய இந்தியா 248 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. விராட் கோலி அரை சதமடித்து 54 ரன்னில் அவுட்டானார். இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

    இந்தப் போட்டியில், ரோகித் சர்மா 17 பந்துகளில் 2 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஆசியாவில் 10,000 ரன்களை கடந்த 8-வது இந்தியர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார்.

    Next Story
    ×