search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சிக்ஸர் அடிப்பதே எனது பலம்- சதத்தை தவற விட்ட இஷான் கிஷான் பேட்டி
    X

    இஷான் கிஷன்

    சிக்ஸர் அடிப்பதே எனது பலம்- சதத்தை தவற விட்ட இஷான் கிஷான் பேட்டி

    • உங்கள் பலம் சிக்ஸர்களை அடிப்பதில் இருந்தால் அதை செய்யுங்கள்.
    • சதத்தை தவற விட்டது ஏமாற்றம் அளிக்கிறது.

    ராஞ்சி:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையே ராஞ்சியில் நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய வீரர் ஷ்ரேயஸ் அய்யர் 113 ரன் அடித்தார். அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 84 பந்துகளில் 93 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். இதில் 4 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்கள் அடங்கும். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். போட்டி நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஷான் கிஷன் கூறியதாவது:

    சில வீரர்களுக்கு ஸ்டிரைக்கை சுழற்றும் பலம் உண்டு, சிக்ஸர் அடிப்பதே எனது பலம். நான் சிரமமின்றி சிக்ஸர் அடித்தேன், பலரால் அதைச் செய்ய முடியாது. சிக்ஸர் அடித்து ரன்கள் குவித்தால், ஸ்ட்ரைக் ரேட் பற்றி அதிகம் யோசிக்க வேண்டியதில்லை. உங்கள் பலம் சிக்ஸர்களை அடிப்பதாக இருந்தால் அதை செய்யுங்கள். ஒற்றை ரன்னாக எடுத்திருக்கலாம், சதம் அடித்திருக்கலாம். ஆனால் நான் எனக்காக விளையாட மாட்டேன்.


    எனது தனிப்பட்ட ஸ்கோரை நினைத்தால், எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போது, நான் ரசிகர்களை ஏமாற்றி விடுகிறேன். சதத்தை தவற விட்டது ஏமாற்றம் அளிக்கிறது, ஆனால் 93 ரன் அணிக்கு ஒரு பெரிய பங்களிப்பு என்று நான் நினைக்கிறேன். ரன் எடுப்பதில் வேகத்தை அளித்து அணியை பாதுகாப்பான நிலையில் வைத்திருப்பது மிகவும் முக்கியமானது, இதனால் அடுத்து வரும் வீரர்கள் மீது அழுத்தம் குறைவாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×