search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டெல்லிக்கு புறப்பட்ட LSG அணி வீரர்களுடன் பயணிக்காத கே.எல்.ராகுல்
    X

    டெல்லிக்கு புறப்பட்ட LSG அணி வீரர்களுடன் பயணிக்காத கே.எல்.ராகுல்

    • நாளைய போட்டியில் கேஎல் ராகுல் விளையாடுவாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
    • நாளைய போட்டியில் கேஎல் ராகுல் விளையாடவில்லை என்றால் அணியின் கேப்டனாக நிக்கோலஸ் புரன் அணியை வழிநடத்துவார்.

    ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்ப்ர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடுகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கும்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான போட்டியில் மோசமான தோல்வியை தழுவிய பிறகு லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் விரக்தியை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் அந்த வீடியோ இணையத்தில் வைரலானது பல்வேறு விமர்சனங்களுக்கும் வழிவகுத்தது. இதன் காரணமாக கேஎல் ராகுலின் கேப்டன் பதவியும் பறிக்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகின.

    அதன்பின் கேஎல் ராகுல் அணியினருடன் பயணிக்காமல் மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகினர். இந்நிலையில் நாளை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி விளையாடவுள்ள நிலையில், அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தற்போதுவரை அணியினருடன் இணையவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதனால் நாளைய போட்டியில் கேஎல் ராகுல் விளையாடுவாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அதேசமயம் நாளைய போட்டியில் கேஎல் ராகுல் விளையாடவில்லை என்றால் அணியின் கேப்டனாக நிக்கோலஸ் புரன் அணியை வழிநடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய கேஎல் ராகுல் 460 ரன்கள் எடுத்துள்ளார். அதேசமயம் 12 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னோ அணி, 6 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் ஏழாம் இடத்தில் உள்ளது

    Next Story
    ×