search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    முதல் நாள் ஆட்டநேர முடிவில் வலுவான நிலையில் இந்தியா
    X

    முதல் நாள் ஆட்டநேர முடிவில் வலுவான நிலையில் இந்தியா

    • இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
    • முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 246 ரன்களை குவித்தது.

    இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, இங்கிலாந்து முதலில் களமிறங்கியது.

    துவக்க வீரர்களாக களமிறங்கிய ஜாக் கிராவ்லி, பென் டக்கெட் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 50 ரன்களுக்கு மேல் சேர்த்தது. டக்கெட் 35 ரன்னும், கிராவ்லியை 20 ரன்னும், ஒல்லி போப் 1 ரன்னும் எடுத்து வெளியேறினர். ஜோ ரூட் 29 ரன், பேர்ஸ்டோவ் 37 ரன், ஹார்ட்லி 23 ரன்கள் எடுத்தனர்.


    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பென் ஸ்டோக்ஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அவர் 70 ரன்னில் அவுட்டானார். இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா சார்பில் ஜடேஜா, அஸ்வின் தலா 3 விக்கெட்டும், அக்சர் படேல், பும்ரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியான துவக்கத்தை கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 80 ரன்களை சேர்த்த நிலையில், ரோகித் சர்மா 24 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 119 ரன்களை குவித்துள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 76 ரன்களுடனும், சுப்மன் கில் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    Next Story
    ×