search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஒல்லி போப் பொறுப்பான ஆட்டம்.. 3-ம் நாள் முடிவில் இங்கிலாந்து முன்னிலை
    X

    ஒல்லி போப் பொறுப்பான ஆட்டம்.. 3-ம் நாள் முடிவில் இங்கிலாந்து முன்னிலை

    • இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
    • முதல் இன்னிங்ஸ்-இல் இந்திய அணி 436 ரன்களை குவித்தது.

    இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக ஆடி 70 ரன்களை குவித்தார். அடுத்து களமிறங்கிய இந்திய அணி இரண்டாவது நாள் முடிவில் முதல் இன்னிங்ஸ்-இல் ஏழு விக்கெட்டுகளை இழந்து 421 ரன்களை குவித்தது.

    இன்று காலை தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது. இதன் மூலம் முதல் இன்னிங்ஸ்-இல் இந்திய அணி 436 ரன்களை குவித்தது. இந்தியா சார்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பரத் மற்றும் அக்சர் பட்டேல் பொறுப்பாக விளையாடினர்.



    இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸ்-ஐ தொடங்கியது. அந்த அணியின் துவக்க வீரர்களான ஜாக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட் முறையே 31 மற்றும் 47 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய போப் பொறுமையாக ஆடி ரன்களை சேர்த்து வந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த போதிலும் அவர் நிதானமாக ஆடி சதம் அடித்தார்.

    மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்களை குவித்துள்ளது. போப் 148 ரன்களுடனும், ரெஹான் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதன் மூலம் அந்த அணி 126 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. இந்திய அணி சார்பில் பும்ரா, அஸ்வின் தலா இரண்டு விக்கெட்டுகளையும், அக்சர் பட்டேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    Next Story
    ×