என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்

X
ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை - மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா
By
மாலை மலர்10 Sep 2023 9:56 PM GMT

- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது.
- ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் ஆஸ்திரேலியா மீண்டும் முதலிடத்தை எட்டியது.
புளோம்பாண்டீன்:
தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், ஐ.சி.சி. ஒருநாள் போட்டி தரவரிசையில் ஆஸ்திரேலியா (121 புள்ளி) மீண்டும் 'நம்பர் ஒன்' இடத்தைப் பிடித்துள்ளது.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இரு ஒருநாள் போட்டிகளில் வெற்றி கண்டதால் ஆஸ்திரேலியா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
பாகிஸ்தான் 120 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இந்தியா 114 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், நியூசிலாந்து 106 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் இருக்கிறது.
இவ்விரு அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி போட்செப்ஸ்ட்ரூமில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
Next Story
×