என் மலர்
சினிமா செய்திகள்

மம்மூட்டி, மோகன்லால் போஸ்டர்... Morse Code-ல் ரிலீஸ் தேதியை வெளியிட்ட Patriot படக்குழு
- Patriot படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.
- Patriot படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
மலையாள திரையுலகின் 2 பெரும் சூப்பர்ஸ்டார்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் ஒன்றாக இணைந்து நடிக்கும் படம் PATRIOT.
அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஃபகத் ஃபாசில், ரேவதி, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இந்நிலையில், மம்மூட்டி, மோகன்லால், நயன்தாரா, ஃபஹத் பாசில், குஞ்சாக்கோ போபன் ஆகியோரின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த போஸ்டர்களில் Morse Code-ல் ஏப்ரல் 23 என குறிப்பு வைத்து வித்தியாசமான முறையில் ரிலீஸ் தேதியை Patriot படக்குழு வெளியிட்டுள்ளனர்
மம்மூட்டியும் மோகன்லாலும் ஒன்றாக இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Next Story






