என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    40,000 திரைகளில் வெளியான  மகாராஜா.. சீனாவில் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
    X

    40,000 திரைகளில் வெளியான 'மகாராஜா'.. சீனாவில் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

    • சீன மொழியில் டப்பிங் செய்து அலிபாபா குழுமம் சீனாவில் வெளியிட்டுள்ளனர்.
    • அமீர் கான் நடித்த 'தங்கல் ' திரைப்படம் சீனாவில் ₹1,400 கோடி வசூலித்தது

    இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா' திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இது விஜய் சேதுபதியின் 50 வது படம் ஆகும்.

    இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் வெற்றிப்படமானது. ஓடிடி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற 'மகாராஜா' திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டது.

    இதற்கிடையே 'மகாராஜா' திரைப்படத்தை சீன மொழியில் டப்பிங் செய்து அலிபாபா குழுமம் சீனாவில் வெளியிட்டுள்ளனர். மேலும் இப்படம் 40,000 திரைகளில் நேற்று முன்தினம் [நவம்பர் 29] வெளியாகியுள்ளது. அதற்கு ஒருநாள் முன்பு சிறப்புக் காட்சியும் திரையிடப்பட்டது.

    இந்நிலையில் முதல் நாள் வசூலாக மகாராஜா ரூ. 5 கோடி எட்டியுள்ளது. சிறப்பு திரையிடலுடன் சேர்த்து ரூ. 10 கோடி வசூல் ஆகியுள்ளது.

    அமீர் கான் நடித்த 'தங்கல் ' திரைப்படம் சீனாவில் ₹1,400 கோடி வசூலித்து நிகழ்த்திய சாதனையை மகாராஜா திரைப்படமும் நிகழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு தமிழ் ரசிகர்களிடையே எழுத்துள்ளது.

    Next Story
    ×