விவாகரத்துக்கு பின் ஹன்சிகாவின் பதிவு| Hansika Motwani

திருமணமாகி 3 ஆண்டுகளுக்கு பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.விவாகரத்து பெற்றாலும் கணவரிடம் இருந்து அவர் ஜீவனாம்சம் பெற மறுத்துவிட்டார்.
விவாகரத்துக்கு பின் ஹன்சிகாவின் பதிவு| Hansika Motwani
Published on

தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வரும் ஹன்சிகா மோத்வானி கடந்த 2022-ம் ஆண்டு சோகைல் கதுரியாவை திருமணம் செய்தார். சோகைலுக்கு இது 2-வது திருமணம். அவரது முதல் மனைவி ஹன்சிகாவின் நெருங்கிய தோழி. அவரது திருமணத்தை ஹன்சிகா முன்னின்று நடத்தினார். பின் சோகைல் முதல் மனைவியை பிரிந்த நிலையில் ஹன்சிகா அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி 3 ஆண்டுகளுக்கு பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் மும்பை பாந்த்ரா குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இப்போது விவாகரத்து பெற்றுள்ளனர். விவாகரத்து பெற்றாலும் கணவரிடம் இருந்து அவர் ஜீவனாம்சம் பெற மறுத்துவிட்டார்.

இந்நிலையில் விவாகரத்துக்கு பிறகு முதன்முறையாக பதிவு ஒன்றை ஹன்சிகா வெளியிட்டுள்ளார். பஞ்சாபி மொழியில் வெளியிட்டுள்ள அவரது பதிவில், எப்போதும் அதிகரித்து வரும் மகிழ்ச்சி மற்றும் அசைக்க முடியாத தைரியம் உலகம் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி யூகித்து கொண்டிருந்த போது கடினமான காலங்களில் கூட தான் நேர்மறை எண்ணத்தை கொண்டிருப்பதாக பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com