என் மலர்

  சினிமா

  சென்னையில் பாகுபலி வசூலை முந்திய ரஜினியின் 2.0
  X

  சென்னையில் பாகுபலி வசூலை முந்திய ரஜினியின் 2.0

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் 2.0 படத்தின் வசூல் `பாகுபலி 2' படத்தின் வசூலை முந்தியிருக்கிறது. #2Point0 #Rajinikanth #Baahubali2
  ரஜினி, அக்‌‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் நவம்பர் 29-ந் தேதி வெளியான படம் ‘2.0’. ‌ஷங்கர் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து இருந்தார்.

  ‘2.0’ படம் தமிழ் உள்பட வெளியிடப்பட்ட அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் சென்னையில் ‘2.0’ தொடர்ச்சியாக நல்ல வசூல் செய்து வந்தது. இதனால் சென்னையில் அதிக வசூல் செய்து முதலிடத்தில் இருக்கும் ‘பாகுபலி 2’ சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

  பலரும் எதிர்பார்த்தது போலவே சென்னையில் டிசம்பர் 10-ந் தேதி வரை உள்ள வசூல்படி ரூ.19 கோடியைக் கடந்தது. இதன்மூலம் ரூ.18.85 கோடி வசூல் செய்து முதலிடத்தில் இருந்த ‘பாகுபலி-2’ படத்தை 2-வது இடத்துக்கு தள்ளியது.  சென்னையில் வசூலாகி உள்ள தொகை படம் பார்ப்பதற்கு கொடுக்கப்பட்ட 3டி கண்ணாடி கட்டண தொகையும் உள்ளடக்கியது. 3டி கண்ணாடி தொகையைச் சேர்க்காமல் என்றால், 17 கோடி ரூபாயை நெருங்கி உள்ளது.

  அதைச் சேர்க்காமல் வரும் வசூலில் ‘பாகுபலி-2’ படத்தை இந்த வார இறுதிக்குள் கடக்கும் என விநியோகஸ்தர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். சென்னையில் பல திரையரங்குகளில் 3டி தொழில்நுட்பத்திலேயே திரையிடப்பட்டு வருகிறது. #2Point0 #Rajinikanth #Baahubali2

  Next Story
  ×