என் மலர்

  சினிமா

  என்ஜிகே படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
  X

  என்ஜிகே படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் `என்ஜிகே' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் இசை உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று வாங்கியுள்ளது. #NGK #Suriya
  செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் `என்ஜிகே'. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இதில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றனர்.

  ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் சவுத் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

  படத்திற்கு இசையமைக்கும் பணிகளில் யுவன் ஷங்கர் ராஜா பிசியாக இருக்கிறார். சமீபத்தில் சித் ஸ்ரீராம் பாடிய ஒரு பாடலை யுவன் ஷங்கர் ராஜா பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

  இந்த மாதத்திற்குள் முழு படப்பிடிப்பையும் முடித்துவிட்டு படத்தை கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தில் சரத்குமார், ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #NGK #Suriya

  Next Story
  ×