என் மலர்
சினிமா

தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உச்ச நட்சத்திரம் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. #ThaniOruvan2 #Mammootty
தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாக மோகன் ராஜாவும், நடிகர் ஜெயம் ரவியும் கடந்த வாரம் அறிவித்தனர். இந்தப் படத்திலும் ஜெயம் ரவி எஸ்.பியாக நடிக்க உள்ளார். தடயவியல் துறை நிபுணராக நயன்தாரா நடிக்கிறார். மற்றொரு நாயகியாக சாயிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
தனி ஒருவன் திரைப்படத்தின் முக்கியக் கதாபாத்திரமே அரவிந்த்சாமியின் சித்தார்த் அபிமன்யுதான். இரண்டாம் பாகம் எனும்போது, முதல் படத்திலிருந்த மாஸ் வில்லன் இன்னும் பிரமிப்பூட்டும் வகையில் இருக்க வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். இப்போது இரண்டாம் பாகத்தில் சித்தார்த் அபிமன்யுவுக்கு நிகரான ஒரு வில்லனை உருவாக்க வேண்டும் என்ற சவால் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. #ThaniOruvan2 #JayamRavi #Mammootty
Next Story