என் மலர்
சினிமா

சமந்தாவுக்கு பதில் மேகா ஆகாஷ்
தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு நடிக்கவிருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிக்க மேகா ஆகாஷ் ஒப்பந்தமாகி உள்ளார். #STR #Simbu #MeghaAkash
திரிவிக்ரம் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘அத்தாரின்டிகி தாரேதி’. பவன் கல்யாண் - சமந்தா - பிரணிதா இணைந்து நடித்த அந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் தமிழ் ரீமேக்கில் சிம்பு நடிக்க உள்ளார்.
சுந்தர்.சி இயக்கவுள்ள இப்படத்தின் கதாநாயகியாக மேகா ஆகாஷ் ஒப்பந்தமாகி உள்ளார். சமந்தா கதாபாத்திரம் தெலுங்கில் கவனம் பெற்ற நிலையில், மேகா ஆகாஷ் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளார். படப்பிடிப்பை இந்த மாத இறுதியில் தொடங்க திட்டமிட்டுள்ளனர். பெரும்பாலான காட்சிகள் ஐதராபாத்தில் படமாக்கப்பட உள்ளன.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. #STR #Simbu #MeghaAkash #AttarintikiDaredi
Next Story






