என் மலர்

  சினிமா

  இமைக்கா நொடிகள் படத்தில் அவரது நடிப்பை பார்த்து பயம் கொள்வீர்கள் - ஆர்.டி.ராஜேசகர்
  X

  இமைக்கா நொடிகள் படத்தில் அவரது நடிப்பை பார்த்து பயம் கொள்வீர்கள் - ஆர்.டி.ராஜேசகர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி இருக்கும் `இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லான நடித்துள்ள அனுராக் காஷ்யப்பின் நடிப்பை பார்த்து நீங்கள் பயப்படுவீர்கள் என்று ஆர்.டி.ராஜசேகர் கூறினார். #ImaikkaNodigal
  கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் `இமைக்கா நொடிகள்' வருகிற ஆகஸ்ட் 30-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

  ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமான இதில் அதர்வா, நயன்தாரா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா தமிழில் அறிமுகமாகிறார். அதர்வாவின் அக்காவாக நயன்தாராவும், நயன்தாராவின் கணவராக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகரும், இயக்குநருமான அனுராக் காஷ்யப் இப்படத்தின் மூலம் வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார். ரமேஷ் திலக், தேவன், உதய் மகேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார்.   படம் பற்றி பேசிய ஆர்.டி.ராஜசேகர் பேசும் பேசியதாவது, 

  படத்தின் செலவை பொருட்படுத்ததாது சுதந்திரம் அளித்த தயாரிப்பாளர் கோவிந்தராஜுக்கு நன்றி. அதர்வா இந்த படத்தில் அழகாகவும், மிகவும் ஸ்டைலாகவும் இருக்கிறார். கேமராவின் மொழியை புரிந்து கொண்டு, அதற்கேற்ப சரியாக தன்னை வெளிப்படுத்துவதிலும், நடிப்பதிலும் நயன்தாரா நிபுணத்துவம் வாய்ந்தவர். ராஷி கண்ணா திரையில் ஒரு தேவதையாக வந்து, தனது அழகால் அனைவரது மனதையும் கொள்ளையடிப்பார். இறுதியாக, அவரை பற்றி விவரிக்க சொற்கள் இல்லை, அவர் ஒரு மேதை. நீங்கள் அவரது நடிப்பை பார்த்து பயம் கொள்வீர்கள் என அனுராக் காஷ்யாப்பின் வில்லத்தனத்தை பற்றியும் பேசினார். #ImaikkaNodigal #Atharvaa #Nayanthara

  Next Story
  ×