என் மலர்
சினிமா

இந்தியாவிலேயே முதல்முறை - அதிரடியாய் படமாகும் எஸ்.கே.14
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்.கே.14 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கிய நிலையில், படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. #SK14 #Sivakarthikeyan
பொன்ராம் இயக்கத்தில் `சீமராஜா' படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், தற்போது `இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கிய நிலையில், இந்தியாவிலேயே முதல்முறையாக இந்த படத்திற்காக படத்தின் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா, அலெக்சா.எல்.எஃப் என்ற கேமராவை பயன்படுத்தி வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.
24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கிறார். கருணாகரன், யோகி பாபு, இஷா கோபிகர் பானுப்ரியா மற்றும் தொலைக்காட்சி பிரபலம் கோதண்டம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். முத்துராஜ் கலை பணிகளை மேற்கொள்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படம் உருவாகிறது. #SK14 #Sivakarthikeyan
Next Story